Type Here to Get Search Results !

10th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்
  • உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. 
  • கடந்த மூன்று ஆண்டுகளாக தனி அதிகாரிகளை நியமனம் செய்து உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் நடைபெற்று வந்தன. இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்து வந்தது. 
  • ஏற்கனவே தொகுதி, வார்டு மறுசீரமைப்பு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடித்துவிட்ட நிலையில் வாக்காளர் பட்டியலை சரி செய்வத்றகான பணிகளை மேற்கொண்டு வந்தது.
  • இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 
  • அதனடிப்படையில் மாவட்ட வாரியாகவும் ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கியும், வாக்குச்சாவடியின் எண், வாக்குச்சாவடியின் பெயர், வாக்குச்சாவடியின் வகை உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
  • அதில் வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், தந்தை பெயர், வீட்டு எண், வயது, மாநிலம் ஆகியவை எவ்வாறு குறிப்பிடப்பட வேண்டும் என பல்வேறு வழிமுறைகளும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்து வந்த நிலையில வாக்காளர் பட்டியலை சரி செய்வதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருப்பதன் மூலமாக இந்த ஆண்டுக்குள் தமிழகத்தில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 
தொலைநிலை படிப்புகளை வழங்க கூடுதலாக 3 கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி: தமிழகத்தில் 8 பல்கலைக்கழகங்களின் படிப்புகள் மட்டுமே செல்லும்
  • தொலைநிலை படிப்புகளை வழங்க தமிழகத்தில் கூடுதலாக 3 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அனுமதி அளித்துள்ளது.
  • அதன் மூலம், தமிழகத்தில் உள்ள 8 பல்கலைக்கழகங்கள் வழங்கும் தொலைநிலை படிப்புகள் மட்டுமே செல்லுபடியாகும். பிற அரசு அல்லது தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தொலைநிலை படிப்புகளை வழங்க இயலாது.
  • அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.
  • எந்தெந்த பல்கலைக்கழகங்கள் நடத்த முடியும்: இதனால் தமிழகத்தைப் பொருத்தவரை, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியை பெற்றன.
  • அதன் பின்னர், 2018 டிசம்பர் 31-ஆம் தேதி இரண்டாவது பட்டியலை யுஜிசி வெளியிட்டது. அந்தப் பட்டியலின்படி சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களுக்கு 2022-23-ஆம் கல்வியாண்டு வரை தொலைநிலைப் படிப்புகளை வழங்க அனுமதி அளித்தும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு 2019-20-ஆம் கல்வியாண்டு வரை அனுமதி அளித்தும் அறிவித்திருந்தது.
  • அதாவது, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சென்னை ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய 3 கல்வி நிறுவனங்களுக்கும் இப்போது அனுமதி அளித்துள்ளது. 
  • எனவே, 2019-20-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் இந்த 8 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலை படிப்புகளை வழங்க முடியும்.



உலகத் தரவரிசையில் 8ம் இடம்பெற்ற ஐதராபாத் சர்வதேச விமான நிலையம்
  • தெலுங்கானா தலைநகரிலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், உலகின் மிகச்சிறந்த 10 விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
  • முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற இந்தியாவின் ஒரே விமான நிலையம் இதுதான்.
  • நேரம் தவறாத சேவை, சேவையின் தரம், உணவு மற்றும் பொருட்களை வாங்குவதற்கான அதிக வாய்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில்தான் ஒரு விமான நிலையத்திற்கு தர மதிப்பீடு வழங்கப்படுகிறது.
  • இதில் முதல் அம்சத்திற்கு 60% மதிப்பெண்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அம்சங்களுக்கு தலா 20% மதிப்பெண்களும் வழங்கப்படும்.
  • கத்தார் நாட்டின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தையும், ஜப்பானின் டோக்கியோ சர்வதேச விமான நிலையம் இரண்டாமிடத்தையும், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையம் மூன்றாமிடத்தையும் பெறுகின்றன.
இந்தியா-பிரான்ஸ் இடையே கடற்படை கூட்டுப் பயிற்சி நிறைவு
  • இந்தியப் பெருங்கடல் பகுதியில் தங்களது பலத்தை அதிகரிக்கும் வகையில், இந்தியா-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து, இதுவரை இல்லாத அளவில் நடத்திய மிகப்பெரிய கூட்டுப்பயிற்சி (வருணா) வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
  • இந்தியப் பெருங்கடலில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சியில் இரு நாட்டு தரப்பிலும் தலா 6 போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் பயன்படுத்தப்பட்டன.
தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய இயக்குநராக சாந்தகுமார் நியமனம்
  • குஜராத்தின் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் (ஜிஎன்எல்யூ) புதிய இயக்குநராக தமிழரான முனைவர் எஸ்.சாந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இவர் வரும் ஜூலை முதல் பதவி ஏற்க உள்ளார்.மத்திய பல்கலைக்கழகமான இதில் தற்போது முனைவர் என்.பீமல் பட்டேல் தொடர்ந்து இரண்டாம் முறை இயக்குநராக உள்ளார். இவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பரில் முடிவுக்கு வந்தது.



அயோத்தி வழக்கில் சமரசம் ஏற்படவில்லை மத்தியஸ குழுவிற்கு மேலும் அவகாசம் உச்ச நீதிமன்றம் அதிரடி
  • அயோத்தி பிரச்சனையில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் சமரசம் ஏற்படாததால் மத்தியஸ குழுவிற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
  • அயோத்தி பாபர் மசூதி பிரச்சனையில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் சமரசம் ஏற்படாததால் மத்தியஸம் பேச, 3 பேர் கொண்ட குழு சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டது. 
  • இரண்டு மாதங்களாக நடந்த மத்தியஸ பேச்சுவார்த்தை பாதி முடிந்துள்ள நிலையில் இன்று இந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற விசாரணை நடந்தது.முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு செயல்பட்டது. 
  • ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழு 4 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அதன்பின் 8 வாரத்திற்குள் பேச்சுவார்த்தையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட் ஆய்வு செய்து இறுதி தீர்ப்பை அளிக்கும், என்று கூறியது.
  • சமரசத்தை பாதியில் முடிக்க வேண்டாம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். கூடுதல் அவகாசம் தருகிறோம் என்று நீதிபதிகள் கூறினர். இதனால், அயோத்தி வழக்கில் சமரச குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியஸ்த குழு கோரிக்கையை ஏற்று, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு வரி அதிகரிப்பு
  • உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலை வாய்ப்புகளை திருடி வருவதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அவர், இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறார்.
  • டிரம்பின் நடவடிக்கையால் சீனாவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரியை அதிகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தகப்போர் நடைபெற்று வருகிறது.
  • எனினும் இந்த வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. இதில் அதிக முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் சீன பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு மேலும் வரி விதிப்பை அதிகரித்து நேற்று டிரம்ப் நிர்வாகம் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு 100வது வெற்றி: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சிஎஸ்கே
  • தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு இது 100வது வெற்றி. அதுபோல டெல்லி அணிக்கு இது 100வது தோல்வி. அதே நேரத்தில் 8வது முறையாக பைனலிலும் நுழைந்துள்ளது.
  • ஐபிஎல் தொடரின் 2வது தகுதிச்சுற்றுப்போட்டி இன்று விசாகப்பட்டினம் ஒய்எஸ்ஆர் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. 
  • டெல்லி அணி 9 விக்கெட்டை இழந்தது டெல்லி அணி 147 ரன்களை எடுத்துள்ளது.
  • சிஎஸ்கே அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
  • ஆட்ட நாயகனாக டுபிளசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel