Tuesday, 7 May 2019

7th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

வெளிநாட்டு வாழ் தமிழருக்கு ஐநா சார்பில் சிறப்பு விருது
 • தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் ரவிசந்திரன் தற்போது ஐக்கிய அரபு எம்ரேட்சின் தலைநகரான‌ அபுதாபியில் பல்கலைகழகத்தில் இணை பேராசிர்யாராக பணியாற்றி வருகிறார். 
 • இவர் ஆசிரிய பணியோடு சர்வதேச அளவில் உலக மேம்பாட்டுக்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் 3 ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்களை ஐநாவின் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் நடத்திய போட்டியில் சமர்பித்திருந்தார். 
 • இத்திட்டம் மக்களிடம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு இவரின் இரண்டு திட்டங்கள் சிறந்த திட்டங்களாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது ஐநாவின் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் சார்பில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய‌ world summit on information society (WSIS 2019 ). உலக உச்சி மாநாட்டின் போது ரவிசந்திரனுக்கு வழங்கப்பட்டது. 
 • தேர்வு செய்யப்பட்ட இரண்டு ஆராய்ச்சி திட்டங்களில் சென்னையின் கல்வி நிறுவனத்தின் மூலம் நிலையான‌ கல்வி என்ற கட்டுரையும் மற்றும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக‌ தொழில் முனைவோர் வளர்சிக்கும் , கிராமப்புற பெண்களின் தொழில் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் உருவாக்கப்பட்ட கட்டுரையும் ஆகிய இரண்டு கட்டுரைகளும் விருதுக்கு தேர்வு செய்யப்ப்பட்டது.
ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் மியான்மர் சிறையில் இருந்து விடுவிப்பு
 • மியான்மரில் 2017-ஆம் ஆண்டு மியான்மர் ராணுவமும், ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களும் போரிடுவது தொடர்பான உள்நாட்டு பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்டதாக சிறையில் அடைக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த 2 பத்திரிகையாளரையும் தற்போது மியான்மர் அரசு விடுவித்துள்ளது.
 • மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக கூறி அவர்கள் இருவருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் கடந்தண்டு செப்டம்பர் மாதம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
 • மியான்மரில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மியான்மர் ராணுவத்துக்கும், ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தின் பொழுது, ரஹின் மாகாணத்தில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன்(32) மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவரும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். அப்பொழுது அந்தப் பகுதியில் ராணுவம் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தார்கள்.
டி-90 பீஷ்மா பீரங்கிகளை இந்திய ராணுவத்தில் இணைக்க முடிவு
 • தற்போதைய நவீன சூழலுக்கு ஏற்ப, ராணுவத்தையும் நவீனப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு, இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக, 13 ஆயிரத்து 448 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 464 T-90 பீஷ்மா பீரங்கிகளை, ராணுவத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
 • ரஷ்ய நாட்டு ராணுவத்தில், முதன்மையானதாக பயன்படுத்தப்படும் T-90 வகை பீரங்கிகளை, இந்திய ராணுவத்திலும் சேர்க்கும் வகையில், 2007ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
 • இதன்படி, ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்பங்களை பெற்று, T-90 பீரங்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் தயாரிக்கப்பட உள்ள இந்த பீரங்கிகளுக்கு, T-90 பீஷ்மா பீரங்கிகள் எனப் பெயரிடப்பட்டு உள்ளன.எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம் : சீனாவுடன் கை கோர்க்கும் இந்தியா
 • கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியாவுடன் சீனா இணைந்து ஒரு புதிய ஒப்பந்தத்தை அமைத்துள்ளது.
 • ஈரான் நாட்டில் இருந்து இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தன. அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்த்தத்தை ஈரான் முறித்துக் கொண்டதால் அமெரிக்கா ஈரானுக்கு வர்த்தக தடை விதித்துள்ளது. அத்துடன் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியை முடித்துக் கொள்ள ஆறு மாத கால அவகாசம் கொடுத்தது. அந்த அவகாசம் இம்மாதம் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
 • இனி ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இனி மேல் தொடர அனுமதி கோரியதை அமெரிக்கா மறுத்து விட்டது. அத்துடன் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளதால் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்க உறுதி அளிக்கவும் அமெரிக்கா மறுத்துள்ளது.
 • கச்சா எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் பெரும் பங்கு வகிக்கின்றன. தற்போதைய நிலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மேற்காசிய நாடுகள் கூடுதலாக பிரிமியம் கட்டணம் வசூலித்து வருகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது. அது பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலையை கடுமளவில் உயர்த்தி விடுகிறது.
 • இதற்கு தீர்வு காண இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து புதிய ஒப்பதத்தை உருவாக்கி உள்ளன. அந்த ஒப்பந்தப்படி இனி எண்ணெய் இறக்குமதி நாடுகள் பேரம் பேச மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து சீன அதிகாரி ஒருவர் இது இருநாடுகளுக்கு இடையில் ஆன வர்த்தக உறவு மேம்பாட்டுக்கு ஒரு ஆரம்பமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்வதேச துப்பாக்கிச்சூடு தொடர் : அன்மோல் ஜெயின் - ஈஷா சிங் இணை வெண்கலம்
 • சர்வதேச லிபரேஷன் தொடரின் துப்பாக்கிச்சூடு போட்டி நடைபெற்றது. இதில் கலப்பு இரட்டையர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்தியா சார்பாக அன்மோல் ஜெயின் – ஈஷா சிங் இணை முன்னேறியது. 
 • இறுதிப் போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட இந்த இணை, ஆட்டத்தின் முடிவில் 776 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்று சாதித்தது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment