Type Here to Get Search Results !

31st MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

இராஜராஜ சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
  • திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராஜராஜ சோழன் ஆட்சி காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி கோவில் பாறையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டானது இராஜராஜசோழனின் 2 ஆம் ஆட்சியாண்டான 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் நக்கன் மாதானியன் என்பவன் 45 ஆடுகள் தானமாக அளித்த செய்தி கல்வெட்டாக உள்ளதகாவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
  • பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர் களுக்கு, நேற்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பிரதமரின் நம்பிக்கையை பெரிதும் பெற்ற,அமித் ஷாவுக்கு, உள்துறையும், நிர்மலா சீதாராமனுக்கு, முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறையும் ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளன. 
  • உள்துறை அமைச்சராக இருந்த, ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • பிரதமராக மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்றார்.அவருடன், ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட, 24 பேர், கேபினெட் அமைச்சர்களாகவும், ஒன்பது பேர், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். 
  • பெருமைபணியாளர் விவகாரம், பொதுமக்கள் குறை தீர்ப்பு, அணுசக்தி, விஞ்ஞானம், முக்கிய கொள்கை முடிவுகள், பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத, மற்ற இலாகாக்களின் பொறுப்பு களை, பிரதமர் நரேந்திர மோடி கவனிப்பார்.
  • கடந்த அமைச்சரவையில், உள்துறை அமைச்ச ராக பதவி வகித்த, ராஜ்நாத் சிங்கிற்கு, தற்போது, ராணுவ இலாகா ஒதுக்கப்பட்டு உள்ளது. 
  • பிரதமர் மோடியின் பெரும் நம்பிக்கையை பெற்றவரும், அவரது விசுவாசியுமான, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவுக்கு, உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அருண் ஜெட்லி வகித்து வந்த, முக்கியத்துவம் வாய்ந்த நிதித் துறை, தமிழகத்தைச் சேர்ந்தவரும், முந்தைய அமைச்சரவையில், ராணுவ அமைச்சராக இருந்தவருமான, நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நாட்டின், முதல், முழு நேர, பெண் நிதி அமைச்சர் என்ற பெருமை, நிர்மலாவுக்கு கிடைத்துள்ளது. 
  • அனுராக் தாக்கூர், நிதித்துறை இணை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னாள் மத்திய வெளி யுறவு துறை செயலரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான, எஸ்.ஜெய்சங்கருக்கு, வெளியுறவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஸ்மிருதி இரானிக்கு, ஏற்கனவே கவனித்த வந்த, ஜவுளித் துறையுடன், கூடுதலாக, மேனகா கவனித்து வந்த, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • கடந்த அமைச்சரவையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில், சிறப்பாக செயல் பட்ட, பா.ஜ., மூத்த தலைவர், நிதின் கட்கரிக்கு, இந்த முறையும், அதே இலாகா கொடுக் கப்பட்டு உள்ளது. கூடுதலாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் ஆகிய இலாகாக்களும், அவரிடம் தரப்பட்டு உள்ளன.
  • பியுஷ் கோயலுக்கு, ரயில்வே துறையுடன் சேர்த்து,வர்த்தகம் மற்றும் தொழில் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • பியுஷ் கோயலிடமிருந்த நிலக்கரி துறை, பிரகலாத் ஜோஷிக்கு தரப்பட்டு உள்ளது.
  • பார்லிமென்ட் விவகார துறையையும், இவர் கவனிப்பார்.ரவி சங்கர் பிரசாத்துக்கு, அவர் ஏற்கனவே வகித்து வந்த சட்டம், தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளன. 
  • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, ஜல சக்தி துறை, கஜேந்திர சிங், ஷெகாவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தர்மேந்திர பிரதான், பெட்ரோலிய துறையை தக்க வைத்துள்ளார். உருக்கு துறையையும், இவர் கூடுதலாக கவனிக்க உள்ளார்.உத்தரகண்ட் முன்னாள் முதல்வர், ரமேஷ் பொக்கிரியாலுக்கு, முக்கியத்துவம் வாய்ந்த, மனிதவளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • லோக்ஜன சக்தி கட்சி தலைவர், ராம்விலாஸ் பஸ்வான், நுகர்வோர் விவகாரத்துறை அமைச் சராக தொடர்கிறார்.
  • விவசாய துறை, நரேந்திர சிங் தோமருக்கும், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, பிரகாஷ் ஜாவேடகருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 
  • கர்நாடகாவைச் சேர்ந்த, சதானந்த கவுடா, உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • ஹர்ஷவர்த்தனுக்கு,சுகாதார துறையும், அகாலி தளத்தின், ஹர்சிம்ரத் கவுருக்கு, உணவு பதப்படுத்துதல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. 
  • சமூக நீதித்துறை, தவார் சந்த் கெலாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • உள்நாட்டு விமான போக்கு வரத்து துறைக்கு, தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சராக, ஹர்தீப்புரி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டை பாதுகாப்போருக்கு மோடி முதல் கையெழுத்து விவசாயிகள் ஓய்வூதியத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
  • பயங்கரவாதிகள் மற்றும் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள், தாக்குதலில், உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு, தேசிய பாதுகாப்பு நிதியத்தின் கீழ், கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
  • ஆண் குழந்தைக்கு,மாதம், ரூ.2,000ம், பெண் குழந்தைக்கு, ரூ.2,250ம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த உதவி தொகையை, ஆண் குழந்தைக்கு, ரூ.2,500 ஆகவும், பெண் குழந்தைக்கு,ரூ. 3,000 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
  • விவசாயிகளுக்கு ரூ.6,000கடந்த பிப்., 1ல், மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அதில், 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள, 12 கோடி விவசாயிகளுக்கு, ஆண்டு தோறும், மூன்று தவணைகளில், 6,000 வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டது.
  • சிறு வர்த்தகர்கள், சுயவேலை செய்பவர்கள், கூலி தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், இந்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. 'இந்த திட்டத்தின் கீழ், 18 - 40 வயதுக் குட்பட்டவர்கள் யாரும் சேரலாம். 'இவர்கள், தினமும், 2 ரூபாய் செலுத்தினால் போதும். 
  • 60 வயது முடிந்த பின், இவர்களுக்கு, மாதம் குறைந்தது, 3,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங் கப்படும்' என, அமைச்சர் தோமர் தெரிவித்தார்.



திறந்தநிலை பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் நியமனம்
  • தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் கே.பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நீண்ட ஆசிரியர் பணி அனுபவம் கொண்ட கே.பார்த்தசாரதி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மட்டும் 22 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராகப் பணியாற்றியவர். முதியோர் கல்வியில் இவருக்குள்ள சிறந்த அனுபவம் மூலம், திறந்தநிலை பல்கலைக்கழக கற்பித்தல் முறையையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய திறனையும் அவர் பெற்றிருக்கிறார். 
பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக குறைந்தது
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 5.8 சதவீதமாக சரிந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் இதுமிகவும் மோசமான சரிவாகும். வேளாண்மைத் துறை, உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கமே இந்த சரிவுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2018-19 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக இருந்தது. இது கடந்த நிதியாண்டைவிட குறைவாகும். கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருந்தது. 
  • கடந்த 2014-15-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவுக்கு குறைந்துள்ளது. இதற்கு முன்பு 2013-14-இல் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதமாக இருந்தது. 
புற்று நோய் மருத்துவமனைக்கு தர சான்று; தமிழகத்தில் முதல்முறையாக காஞ்சிபுரத்திற்கு வழங்கப்பட்டது
  • டில்லியில் உள்ள தேசிய மருத்துவமனைகள் தரக்கட்டுப்பாடு வாரியம், 'ப்ரி என்ட்ரி லெவல் அக்ரிடிட்டேஷன்' எனும் ஆரம்ப நிலை தர சான்றிதழை, காஞ்சிபுரம் அண்ணா புற்று நோய் மருத்துவமனைக்கு, தமிழகத்தில் முதல்முறையாக வழங்கியிருக்கிறது.
  • கல்லுாரியுடன் இயங்கும் மருத்துவமனைகளில், தமிழக அளவில், இந்த மருத்துவமனைக்கே முதன் முதலாக இந்த தரச்சான்றிதழ் கிடைத்ததாக, மருத்துவமனை இயக்குனர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  • மருத்துவமனையின் சுகாதாரம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவை, ஆய்வக செயல்பாடுகள் உள்ளிட்டவை அடிப்படையாக வைத்து, இந்த தரச்சான்று வழங்கப்படுகிறது.



அதிநவீன போர் விமானத்தின் முதல் பெண் விமானி பி- சாதித்த மோகனா சிங்
  • இந்திய இராணுவத்தில் உள்ள விமானப் படையில் பெண்களைப் பணியமர்த்த, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்தது. இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டில் இந்திய விமானப் படையில் பவானா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி ஆகிய மூன்று பெண்கள் அதிகாரிகளாகப் பணியமர்த்தப்பட்டார்கள். 
  • இவர்களுக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. 
  • இவர்களில் அவானி சதுர்வேதி, இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, மோகனா சிங் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.பயிற்சி நிறைவடைந்த நிலையில், அவர் தனியாக போர் விமானத்தை இயக்கியிருக்கிறார்.
ஜல சக்தி துறை உருவாக்கினார் பிரதமர்
  • பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி, அவர் பதவியேற்றதும் 'ஜல சக்தி' எனும் நீர்வளத்துறையை உருவாக்கி, மந்திரியை நியமித்துள்ளார்.
  • பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது, குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்குவதை உறுதி செய்வதற்காக 'ஜல சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இதற்காக தனி துறை உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி மோடி மந்திரி சபை நேற்று பொறுப்பேற்றபோது, ஜல சக்தி துறை உருவாக்கப்பட்டது. அந்த துறையின் மந்திரியாக கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையை மறுசீரமைத்து இந்த புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையும் இந்த துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்ட விகிதம் 6.1 சதவீதத்தை எட்டியது
  • கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்ட விகிதம் 6.1 சதவீதத்தை எட்டியுள்ளது.
  • மத்திய கேபினட் பொறுப்பேற்றுக் கொண்ட அன்று மத்திய தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நகர்ப்புற இளைஞர்கள் 7.8 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளனர். கிராமப்புறங்களில் 5.3 சதவீதத்தினர் வேலை இழந்துள்ளனர்.
  • கடந்த 2017-18-ம் ஆண்டில் வேலை இல்லா திண்டாட்டம் 6.1 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இது அதிகமாகும்.
  • இந்தியாவில் 6.2 சதவீத ஆண்களும், 5.7 சதவீத பெண்களும் வேலை இழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
  • புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 484 பக்கங்களில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. 
  • புதிய கல்வி கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம். nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை அனுப்பலாம்.
புதிய கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு
  • கடற்படை தளபதியாக இருந்த சுனில் லம்பா ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய கடற்படைக்கு புதிய தளபதியாக கரம்பீர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
  • இந்நிலையில், புதிய கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் டெல்லியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் நடந்த விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் புதிய தளபதியாக பொறுப்பேற்றார்.
ஐ.நா. உதவி பொது செயலாளராக இந்திய பெண் ஒருவர் நியமனம்
  • ஐ.நா. உதவி பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். 
  • ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை, கூட்டு ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக அவர் செயல்படுவார் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel