Type Here to Get Search Results !

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் / Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) அல்லது என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். 
  • இச் சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. 
  • தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர்.
திட்டம்
  • இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
  • 18 வயது நிரம்பிய திறன் சாரா உடல் உழைப்பு செய்ய விரும்பும் கிராமப்புற நபர்கள், தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை கிராம பஞ்சாயத்திடம், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். 
  • கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்கு பின்னர், நபரை பதிவு செய்து, அவருக்கான, பணி அட்டையை வழங்குவார்.
  • பணி அட்டையில், நபரின் விவரங்கள், புகைப்படத்துடன் இடம் பெற்று இருக்கும். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு, உட்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
  • இத்திட்டம் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது.



திட்டத்தின் பயன்கள்
  • ஊரக ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலை நாட்டப்படும்.
  • கிராமப்புற சமூகப் பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
  • தனிநபர் இல்ல கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு கிராமப்புறங்கள் சுகாதார மேம்பாடு அடையும்.
  • ஊரக பகுதிகளில் உள்ள மக்கள் இடம் பெயர்வு குறைவதோடு அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.
  • நிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள் ஆகியவை நட்டு இயற்கை வளம் மேம்படுத்தப்படும்.
சம்பளம் அதிகரிப்பு
  • ஒரு நாளைக்கான சம்பளம் தற்போது ரூபாய் 133 லிருந்து ரூ.214.(மாநில அளவில் வேறுபாடு) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
விமர்சனம்
  • இச்சட்ட நடைமுறை திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதால் ஏழை தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைக்குழு மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை செயலாளருக்கும், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு 2014இல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தேசிய மனித உரிமைக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel