Type Here to Get Search Results !

8th APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDFCURRENT

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
  • சென்னை- சேலம் இடையிலான பசுமை (எட்டு) வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் இந்தத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
  • மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 
கோவில் வளாகத்தில் கடைகள் தடை அரசாணை ரத்து
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில் வளாகத்தில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
  • இதனை எதிர்த்து வியாபாரிகள் தொடர்ந்த வழக்கில், அரசின் அரசாணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வியாபாரிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், அரசாணையை ரத்து செய்துள்ளது.



உள்நாட்டில் தயாரான தனுஷ் பீரங்கி
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, தனுஷ் பீரங்கிகள், முறைப்படி நேற்று, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.நீண்ட துாரத்தில் உள்ள இலக்கை, துல்லியமாக தாக்கும் திறனுடைய, தனுஷ் பீரங்கி, மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள, ராணுவ போர் தளவாட தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாராகியுள்ள, இந்த பீரங்கி, 38 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை, துல்லியமாக தாக்கும் திறன் உடையது. மொத்தம், 114 பீரங்கிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஒரு பீரங்கியின் விலை, 14 கோடி ரூபாய்.இந்த பீரங்கியின் சோதனை, பல கட்டங்களாக நடந்தன. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, முதல் கட்டமாக, ஆறு பீரங்கிகள், மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில், நேற்று நடந்த விழாவில், முறைப்படி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
கடன்பத்திரங்கள் மூலம் ரூ.50,000 கோடி திரட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டம்
  • விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான நிதியை கடன்பத்திரங்கள் மூலம் திரட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த 12 மாதங்களில் நீண்டகால கடன் பத்திரம் மற்றும் மூலதன கடன்பத்திரங்கள் தனிப்பட்ட முறையில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் ரூ.50,000 கோடி வரையில் நிதி திரட்டிக் கொள்ளப்படும்.
  • ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து பரிசீலித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசை வெளியீடு
  • தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா, சென்னைப் பல்கலைக் கழகங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
  • அதே நேரம், தேசிய அளவிலான கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. கடந்த முறை இந்தக் கல்லூரி 5-ஆவது இடத்தில் இருந்தது.
  • ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் நோக்கில், கல்வி நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறையை, மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது. 
  • இதில் ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் இரண்டாம் இடத்தையும், தில்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
  • கடந்த முறை 10-ஆம் இடத்தில் இருந்த சென்னை அண்ணா பல்கலைக் கழகம் இம்முறை 14-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக் கழகம் 21- ஆம் இடத்தையும், திருச்சி என்ஐடி 24- ஆம் இடத்தையும், வேலூர் விஐடி 32- ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த முறை 29-ஆம் இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக் கழகம் இம்முறை 33- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
  • மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் (47), தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (68), மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (69), பாரதிதாசன் பல்கலைக் கழகம் (86), பெரியார் பல்கலைக் கழகம் (97), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் (99) என முதல் 100 பட்டியலில் 21 தமிழக பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்துள்ளன.
  • தேசிய அளவிலான பல்கலைக் கழகங்கள் பட்டியலிலும் அண்ணா பல்கலைக் கழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த முறை 4- ஆம் இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக் கழகம், இம்முறை 7- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதுபோல கடந்த முறை 18 -ஆவது இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக் கழகம் இம்முறை 20- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
  • மாநிலக் கல்லூரி 3- ஆம் இடம்: தேசிய அளவில் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியிலில் சென்னை மாநிலக் கல்லூரி 3- ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்தக் கல்லூரி கடந்த ஆண்டு 5-ஆம் இடத்தில் இருந்தது.
  • அதேபோல லயோலா கல்லூரி (6), எம்.சி.சி. (13) என மொத்தம் 35 தமிழகக் கல்லூரிகள் முதல் 100 தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. இதில் கோவை அரசுக் கல்லூரி 33- ஆம் இடத்தையும், சென்னை ராணி மேரி கல்லூரி 40- ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • பொறியியல் கல்லூரிகள்: பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கடந்த முறை 8- ஆவது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக் கழகம் இம்முறை 9- ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.



டில்லி மாசு : நகராட்சிகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்த மாநில அரசு
  • டில்லியில் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து வருகிறது. உலக நகரங்களில் மிகவும் அதிகமாக மாசடைந்த நகரங்களில் டில்லியும் ஒன்றாக உள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. டில்லி வாழ் மக்களான சதீஷ்குமார் மற்றும் மகாவீர் சிங் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசுக்கு எதிராக மனு அளித்தனர்.
  • இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது தீர்ப்பில் மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்காத டில்லி அரசை கடுமையாக கண்டித்தது. அத்துடன் டில்லியின் வட கிழக்கு பகுதிகளில் குறிப்பாக முண்டிகா, திக்ரி கலன், ரன்ஹோலா வில் ஏராளமான தோல், பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட பொருட்கள் கொளுத்தப் படுவதால் கடும் மாசு ஏற்படுவதாக குற்றம் சாட்டிய தீர்ப்பாயம் டில்லி மாந்ல அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்தது.
இரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா
  • மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை.
  • இரானின் சர்வதேச அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தது முதல் இவ்விருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
  • இரானின் பாதுகாப்புப் படையையே பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததன் மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் மேலதிக தடைகளை விதிக்க முடியும். இதன் காரணமாக இரானின் தொழில்துறை பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
மாலத்தீவில் நடந்த தேர்தலில் எம்.டி.பி., கட்சி அமோக வெற்றி
  • மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் தற்போதைய அதிபர் முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி அமோக வெற்றிப்பெற்றது.
  • இந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாடு மாலத்தீவு. அங்கு நீண்டகால ராணுவ ஆட்சிக்கு பிறகு கடந்த 2008-ம் ஜனநாயக முறைப்படி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் மாலத்தீவு ஜனநாயக கட்சியின் (எம்.டி.பி.) தலைவர் முகமது நஷீத் வெற்றிப்பெற்று அதிபரானார்.
  • அவரை எதிர்த்து எம்.டி.பி. கட்சியின் துணைத் தலைவர் முகமது சோலி களம் இறங்கினார். இதில் யாரும் எதிர்பாராதவிதமாக முகமது சோலி அமோக வெற்றிப்பெற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டதும், முகமது நஷீத் நாடு திரும்பினார். இந்த நிலையில், 87 இடங்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது.
  • ஆனால் எம்.டி.பி. கட்சி 3-ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றது. அதவாது முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி மொத்தம் உள்ள 87 இடங்களில் 50 இடங்களில் எம்.டி.பி. கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel