- தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் (National Biodiversity Authority, NBA)இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணை (2002)யை செயல்படுத்தும் நோக்கத்துடன் 2003ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இது 1992ஆம் ஆண்டில் பல்லுயிர்ப்பரவல் மாநாட்டில் கலந்துகொண்டு கையொப்பமிட்டதை அடுத்து எடுக்கப்பட்ட செயலாகும்.
- புவியில் வாழும் அனைத்து உயிர் வகைகளின் மொத்த தொகுப்பே பல்லுயிர்பரவல் எனப்படும். உலகின் மிகப்பெரிய பல்லுயிர் வளம் மிக்க 12 நாடுகளில் நம் இந்திய நாடும் ஒன்றாகும்.
- உலகின் மொத்த நிலபரப்பில் 2.5 சதவீதம் உள்ள நம்நாட்டில், உலகில் காணப்படும் உயிர் வகைகளில் 7.8 சதவீதம் இங்கு காணப்படுகின்றது. மேலும் நம்நாடு பாரம்பரியம் மற்றும் கலாச்சார அறிவாண்மை மிக்கதாகும்.
- 1992, உலகின் பல்லுயிர்பரவல் மாநாட்டில் இந்தியா பல்லுயிர்பரவல் ஓப்பந்தம் நிபந்தனை 3 மற்றும் 15ன்படி, தேசிய சட்டத்திட்டத்திற்று உட்பட்டும் பரஸ்பர ஒப்பந்தத்தின்படியும் மக்கள் தங்கள் நாட்டின் உயிர்வளங்களை முறையாக பகிர்ந்து பயன்படுத்துவதற்கும் பிற நாடுகளும் இந்நாட்டு மரபியல் வளங்களை பெற வசதி செய்து தரவும் இக்கூட்டமைப்பு அறிவுறுத்துகிறது.
- பல்லுயிர்ப்பரவல் ஒப்பந்தம் நிபந்தனை 8(j))ன்படி, பாரம்பரிய அறிவாண்மை, செயல்முறைகள், புதிய யுக்திகள், மற்றும் சரிசம பகிர்வின் மூலம் நாட்டின் உயில் வளங்கள் பாதுகாப்பதிலும் நிலையான பயன்பாடு அடைவதிலும் அந்நாட்டு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
- பல்லுயிர்பரவல் என்பது பல்வித நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் உள்ளடக்கிய பல்துறை சார்ந்த நெறிமுறையாகும். ஒன்றிய அரசு, மாநில அரசுகள், தன்னாட்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற அனைத்துமே பல்லுயிர்பரவலின் பயனாளிகள் ஆவர்.
- இந்தியா முக்கிய கொள்கையாக உட்புகுத்தி கொண்டிருந்த, முக்கிய சவாலாக விளங்கிய 'சரிசம பகிர்வு' பெறுதலின் நோக்கங்கள் பல்லுயிர்பரவல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.
- பயனாளிகன் பங்கேற்புடன் பல்வித தீவிர ஆலோசனைகள் நடத்தியபிறகு, ஒன்ரிய அரசு கீழ்க்கண்ட முக்கியம்சங்களை உள்ளடக்கிய பல்லுயிர்ப்பரவல் சட்டத்தை 2002ம் வருடம் அமுலுக்கு கொண்டுவந்தது.
- நாட்டின் உயிர் வளங்கள் மற்றும் அதன் சார்ந்த அறிவாண்மையை பெறுவதற்காண சரிசம பகிர்வு முறையை ஒழுங்குமுறைப்படுத்துதல்.
- பல்லுயிர்பரவல் பாதுகாப்பும் நிலையான பயன்பாடும்.
- பல்லுயிர்ப்பரவல் சார்ந்த அந்நாட்டு மக்களின் பாரம்பரிய அறிவாண்மையை போற்றி பாதுகாத்தல்.
- பல்லுயிர் வளம் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடு சார்ந்த பாரம்பரிய அறிவாண்மையைப் பெற்றுள்ள அந்நாட்டு மக்களுடன் இனைந்து பயனை பகிர்ந்து கொள்ளுதல்
- 'பாரம்பரிய பல்லுயிர்பரவல்' பகுதியாக அறிவிப்பதன் மூலம், சிலமுக்கிய இடங்களின் பல்லுயிர் வளத்தை முறையாக பாதுகாத்தலும் அப்பகுதியினை மேம்படுத்தலும்.
- அச்சுறுத்தப்படும் உயிர்வகைகளை பாதுகாத்தலும் மறுவாழ்வளித்தலும்.
- பல்வித நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்ளடக்கிய தனிப்பட்ட குழுக்கள் அமைத்து பல்லுயிர்பரவல் சட்டத்தை அமுலாக்குதல்.
தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம்
April 07, 2019
0
Tags