Type Here to Get Search Results !

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் / INDIAN INSTITUTE OF TECHNOLOGY

  • இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் / INDIAN INSTITUTE OF TECHNOLOGY: இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (இ. தொ. க) (Indian Institutes of Technology, IITs) இந்திய நாடாளுமன்றத்தினால் நிறுவப்பட்டு, நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல், நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட கல்விநிலையங்கள். 
  • முதலில் இந்தியாவில் கரக்பூர், பம்பாய் (இப்பொழுது மும்பை), கான்ப்பூர், மதராசு (இப்பொழுது சென்னை), தில்லி ஆகிய ஐந்து இடங்களில் நிறுவப்பட்டன. இப்பொழுது இவை பதிமூன்று தன்னாட்சி பெற்ற கல்விக்கூடங்களாக விளங்குகின்றன. 
  • 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலையான பின்னர் இந்தியாவின்பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக ஒரு திறமைமிக்க மனிதவளத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும் பொறியாளர்களையும் உருவாக்க இக் கழகங்கள் உருவாயின.
  • இதனை உலக தரத்தில் உருவாக்க முதல் கல்வி அமைச்சரானஅபுல் கலாம் ஆசாத்அவர்களால் உருவாக்கப்பட்டது. பொதுவான பேச்சு மொழியில் இவை ஐ.ஐ.டி எனவும் இவற்றில் படித்தவர்கள் ஐ.ஐ.டியர் எனவும் விளிக்கப்படுகிறது.
  • இக் கழகங்கள் தொடங்கிய வரிசையில் அமைக்கப்பட்டுள்ள இடங்கள்: கரக்பூர் (1950; இ. தொ.கவாக 1951), மும்பை (1958), சென்னை (1959), கான்பூர் (1959), தில்லி (1961; இ. தொ.கவாக 1963), குவகாத்தி(1994), ரூர்க்கி (1847; இ. தொ.க-வாக 2001), புவனேசுவர் (2008), காந்திநகர் (2008), ஐதராபாத் (2008), பட்னா(2008), பஞ்சாப் (2008) மற்றும் இராசத்தான் (2008).
  • இந்திய அரசு மேலும் மூன்று இ.தொ.கழகங்களை இந்தூர், மண்டி, மற்றும் (பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை மாற்றி) வாரணாசி ஆகிய இடங்களில் திறக்க அறிவித்துள்ளது. 
  • சில இ.தொ.கழகங்கள் யுனெசுக்கோ, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் சோவியத் கூட்டமைப்பு பண மற்றும் நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இ.தொ.கவும் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகம்.
  • இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மூலம் இவற்றின் பட்டப்படிப்பு நுழைவு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. ஓர் ஆண்டில் ஏறத்தாழ 4000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 
  • பட்டமேற்படிப்பிற்கான மாணவர்கள் மேற்கொள்ளவிருக்கும் துறையினைப் பொறுத்து பட்டதாரி பொறியியல் நாட்டம் தேர்வு (GATE), JMET, JAM மற்றும் CEED மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 
  • பட்டபடிப்பில் ஏறத்தாழ 15,500 மாணவர்களும் பட்டமேற்படிப்பில் 12,000 மாணவர்களும் இந்தக் கழகங்களில் படிக்கின்றனர். தவிர ஆய்வு செய்யும் முனைவர்பட்ட மாணவரும் உள்ளனர். 

ENGLISH

  • INDIAN INSTITUTE OF TECHNOLOGY: Indian Institutes of Technology (IITs) (Indian Institutes of Technology, IITs) established by the Parliament of India and declared as essential educational institutes of the country, educational institutions with the purpose of excellent higher education in engineering and technical education.
  • Originally established in five places in India namely Kharagpur, Bombay (now Mumbai), Kanpur, Madras (now Chennai) and Delhi. Now these are thirteen autonomous institutes.
  • After India's independence in 1947, these institutes were formed to produce scientists and engineers with a view to developing a skilled manpower for the economic and social development of India.
  • It was developed by Abul Kalam Azad, the first education minister to make it world class. In common parlance these are known as IITs and those who study in them are known as IITers.
  • These institutes were established in the order of origin: Kharagpur (1950; ED 1951), Mumbai (1958), Chennai (1959), Kanpur (1959), Delhi (1961; ED 1963), Guwahati (1994). , Roorkee (1847; E. T.K.-Vaga 2001), Bhubaneswar (2008), Gandhinagar (2008), Hyderabad (2008), Patna (2008), Punjab (2008) and Rajasthan (2008).
  • The Government of India has announced the opening of three more IT institutes at Indore, Mandi, and (replacing Banaras Hindu University) Varanasi.
  • Some NGOs have been set up with financial and technical assistance from UNESCO, Germany, the United States of America and the Soviet Union. Each ETH is an autonomous university.
  • Admission to these degrees is consolidated through the Indian Institute of Technology Integrated Entrance Test. Approximately 4000 students are selected in a year.
  • Students for graduation are selected through Graduate Engineering Aptitude Test (GATE), JMET, JAM and CEED depending on the field of study.
  • Approximately 15,500 undergraduate students and 12,000 postgraduate students study in these institutions. Besides, there are also doctoral students doing research.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel