அம்மா காய்கறிக் கடைகள்
அம்மா சிறு கடன்கள் திட்டம்
- இத்திட்டம் 2013 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி முதல் செயல்படுகிறது.
- இது பசுமைப் பண்ணை நுகர்வோர் கூட்டுறவுக் கடை அல்லது தூய விவசாயக் கூட்டுறவுக் கடை என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த நியாய விலைக் காய்கறிக் கடைகள் சென்னை மற்றும் துணை நகரங்களில் சந்தை விலையை விடக் குறைவாக தூய விவசாயக் காய்கறிப் பொருட்களை விற்பனை செய்கின்றன.
- இந்த காய்கறிக் கடைகளுக்குத் தேவையான பொருட்களை அரசாங்கத் துறைகள் (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு) நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும்.
- இதன்மூலம், அரசாங்கம் தரகர்களின் இடையீட்டை ஒழித்துப் பொருட்களின் விலையை தனது கட்டுக்குள் வைத்திருக்கும்.
அம்மா சிறு கடன்கள் திட்டம்
- இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
- இத்திட்டமானது 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்காக சிறு கடன்களை அளிக்கும்.
- இதன்மூலம் வணிகர்கள் கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 5000 ரூபாய் வரை கடன்களைப் பெற முடியும். இந்த கடனுக்கான 11 சதவிகித வட்டியை அரசாங்கம் அந்த வங்கிக்குச் செலுத்தும்.
- இந்தக் கடனைப் பெற்ற வணிகர்கள் வாரத்திற்கு ரூபாய் 200 வீதம் 25 வாரங்களில் இந்தக் கடனை திருப்பிச் செலுத்தலாம்.
- 25 வாரங்களில் இந்தக் கடனை திருப்பிச் செலுத்தாத வணிகர்களிடம், செலுத்தாமல் மீதமுள்ள தொகையுடன் 4 சதவிகிதம் வட்டியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
- குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்திய வணிகர்கள் ரூ.25,000 வரை மீண்டும் கடன் பெறலாம்.
- பூக்களை விற்பனை செய்வோர், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்வோர் மற்றும் இதர சிறு வணிகர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.
- இத்திட்டத்தின் நோக்கம் வட்டிக் கடைகாரர்களிடமிருந்து உயர்ந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிறு வர்த்தகர்களுக்கு உதவுவதாகும்.