Type Here to Get Search Results !

TNPSC TAMIL NOTES 2019 -அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
  • இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு
  • இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை
  • இயற்கை வாழ்வில்லம் – திருக்குறள்
  • இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை
  • இயற்கை தவம் – சீவகசிந்தாமணி
  • இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்
  • இயற்கை அன்பு – பெரிய புராணம்
  • இயற்கை இறையருள் – தேவாரம், திருவாசகம், திருவாய்மொழிகள்
  • கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை, நூற்றைம்பது கலி
  • புறநானூறு – தமிழ்க் கருவூலம்
  • பட்டினப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
  • பரிபாடல் – பரிப்பாட்டு
  • மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை
  • திருமுருகாற்றுப்படை – முருகு, புலவராற்றுப்படை
  • முல்லைப்பாட்டு – நெஞ்சாற்றுப்படை
  • திருக்குறள் – முப்பால், முப்பானூல், தெய்வ நூல், தமிழ் மறை, பொய்யாமொழி, வாயுரை வாழ்த்து, பொதுமறை, உத்திரவேதம், திருவள்ளுவப் பயன், ஈரடி வெண்பா
  • நாலடியார் – நாலடி நானூறு, வேளாண் வேதம்
  • முதுமொழிக் காஞ்சி – அறவுரைக் கோவை
  • கைந்நிலை – ஐந்திணை அறுபது
  • திருப்பாவை – பாவைப்பாட்டு
  • திருவாய்மொழி – திராவிட வேதம்
  • பெரிய புராணம் – அறுபத்து மூவர் புராணம், திருத்தொண்டர் புராணம்
  • நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் – திராவிட வேதம், வைணவர்களின் தமிழ் வேதம்
  • திருமந்திரம் – தமிழ் மூவாயிரம்
  • கருணாமிர்த சாகரம் – இசைப் பேரிலக்கணம்
  • மூதுரை – வாக்குண்டாம்
  • வெற்றி வேற்கை – நறுந்தொகை
  • நேமிநாதம் – சின்னூல்
  • ஏலாதி – குட்டித் திருக்குறள்
  • திருக்கயிலாய ஞான உலா – ஆதியுலா, ஞான உலா
  • பழமொழி – மூதுரை, முதுமொழி, உலக வசனம், பழமொழி நானூறு
  • பன்னிரு பாட்டியல் – வெண்பாப் பாட்டியல்
  • சிவஞான போதம் பேருரை – சிவஞான மாபாடியம்
  • இலக்கண விளக்கம் – குட்டித் தொல்காப்பியம்
  • திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி – குட்டித் திருவாசகம்
  • பெருங்கதை – கொங்கு வேளிர் மாக்கதை
  • கம்பராமாயணம் – வழிநூல்
  • சிலப்பதிகாரம் – தமிழின் முதல் காப்பியம், முதல் நூல், முத்தமிழ்க் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், சமுதாயக் காப்பியம், தமிழரின் தேசியக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம், வழிநூல் என்னும் நூல் வகையுள் முதல் நூல்
  • மணிமேகலை – மணிமேகலைத் துறவு
  • சீவகசிந்தாமணி – மண நூல்
  • நீலகேசி – நீலம், நீலகேசித் தெருட்டு
  • கலிங்கத்துப்பரணி – தென்தமிழ் தெய்வப்பரணி
  • திருக்கோவையார் – இராசாக் கோவை
  • குறவஞ்சி – குறம், குறவஞ்சி நாடகம், குறவஞ்சி நாட்டியம்
  • உலா – உலாப்புறம்
  • தாயுமானவர் பாடல்கள் – தமிழ்மொழியின் உபநிடதம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel