Type Here to Get Search Results !

8th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

அயோத்தி நில பிரச்னைக்கு தீர்வு காண 3 பேர் அடங்கிய மத்தியஸ்த குழு அமைப்பு
  • அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில பிரச்னைக்கு தீர்வு காண, தமிழகத்தை சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான, இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், மூன்று பேர் அடங்கிய மத்தியஸ்தர் குழுவை அமைத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் இடம்பெற்ற மூவரும், தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
  • உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு, நேற்று முக்கியமான உத்தரவை பிறப்பித்தது. உத்தரவு விபரம்: ராமஜென்ம பூமி விவகாரத்துக்கு, மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண, மூன்று நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு, உச்ச நீதிமன்ற, ஓய்வு பெற்ற நீதிபதி, இப்ராஹிம் கலிபுல்லா தலைமை வகிப்பார். 
  • இந்த குழுவில், ஆன்மிக குருவும், வாழும் கலை அமைப்பு நிறுவனருமான ரவிசங்கர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மத்தியஸ்தத்தில் புகழ் பெற்றவருமான, ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெறுவர்.
வரும் கல்வியாண்டிலிருந்து 3, 4, 5, 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்
  • தமிழகத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கும், 2019-2020- ஆம் கல்வியாண்டில் 2, 7, 10, 12 வகுப்புகளுக்கும், 2020-2021- ஆம் கல்வியாண்டில் 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி 2018-2019 கல்வியாண்டில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • இதையடுத்து 2, 7, 10, 12 வகுப்புகளுக்கான பாடநூல் தயாரிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் முடிவடையவுள்ளது. இதையடுத்து 2020-2021- ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான முதல் பருவத்துக்கான பாடநூல்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க இயலும். 
ரூ.2,100 கோடி முதலீடு: ஓலா-ஹுண்டாய் பேச்சுவார்த்தை
  • வாடகை கார் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனத்தில் 2100 கோடி டாலரை ஹுண்டாய் மோட்டார் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 
  • இதையடுத்து, இந்த முதலீடு தொடர்பான ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் மேற்கொள்ளப்படலாம். இந்த முதலீட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் நிலையில், ஹுண்டாய் நிறுவனம், இந்திய நிறுவனமொன்றில் மேற்கொள்ளும் இரண்டாவது முதலீடு இதுவாகும். இதற்கு முன்பாக, வாடகை கார் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ரெவ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஹுண்டாய் ரூ.100 கோடியை முதலீடு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிசோரம் ஆளுநர் ராஜினாமா
  • மிசோரம் ஆளுராக இருந்தவர் கும்மானம் ராஜசேகரன். இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பினார். இதனை தொடர்ந்து, அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். 
  • மேலும், அசாம் ஆளுநர் ஜகதீஷ் முக்திக்கு கூடுதலாக மிசோரம் மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடவே, இவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.



புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான விலைக்குறைப்பு இன்று முதல் அமல் 
  • புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான விலைக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 390 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் அடக்க விலையை 87% வரை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
ஐ.நா. நல்லெண்ண தூதராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்
  • ஐ.நா. ஐ.நா. நல்லெண்ண தூதராக இந்திய வம்சாவளி பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியரான பத்ம லெஷ்மி தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் யு.என்.டி.பி. எனப்படும் ஐ.நா. மேம்பாட்டு திட்ட நல்லெண்ண தூதராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பத்ம லெஷ்மி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கியது 'மிக் - 21' போர் விமானம்
  • ராஜஸ்தான் மாநிலத்தில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த, 'மிக் - 21' ரக போர் விமானம், பறவை மோதியதால் விபத்துக்குள்ளானது. விமானி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நிதித்துறை செயலராக சுபாஷ் நியமனம்
  • நிதித்துறை செயலராக, பொருளாதாரங்கள் விவகாரத்துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க்கை, 58, நியமிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனக் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு
  • தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  • மேலும் அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து அனைத்து துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel