Type Here to Get Search Results !

போர் கைதிகளை பாதுகாக்கும் ஜெனீவா ஒப்பந்தம் என்ன? GENEVA PACT


  • போரின் போது, எதிரி நாட்டிடம் சிக்கும் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 1929ல், உலக நாடுகள் கூடி, ஜெனீவா ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கின. 
  • இதில், போர் கைதிகளாக சிக்கும் வீரர்களை எவ்வாறு நடத்த வேண்டும்; அவர்களுக்கு என்ன மரியாதை அளிக்க வேண்டும் என்பது குறித்து, விதிகள் உருவாக்கப்பட்டன.இரண்டாம் உலகப்போரின் போது, ஜெனீவா ஒப்பந்தத்தில் பல்வேறு குறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
  • அதன் பின், ஒப்பந்தத்தில் உள்ள குறைகளை நீக்க, பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதையடுத்து, 1949ல், போர் கைதிகள் நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டு, பல்வேறு சீர்திருத்தங்கள், ஜெனீவா ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டன. 
  • அதன் விபரம்: * போர் கைதிகளை, எந்தவொரு நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தக் கூடாது; அவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடாது; கைது மட்டுமே செய்ய வேண்டும்* கைது செய்யப்பட்ட வீரர்கள், எந்த பதவியில் இருக்கின்றனரோ, அதற்குரிய மரியாதையை, அவருக்கு வழங்க வேண்டும்* உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, அவரை துன்புறுத்தக் கூடாது. 
  • சர்வதேச மனித உரிமை சட்டப்படி, கைது செய்யப்பட்ட வீரர்கள், தங்குவதற்கு இடம், உடை, உணவு, உரிய மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்* கைது செய்யப்பட்ட வீரர்களை, ஏழு நாள் முடியும் போது, அவர்களது நாட்டிற்கு திரும்ப அனுப்ப வேண்டும் அல்லது போர் முடிந்த உடன் திரும்ப ஒப்படைக்க வேண்டும். 
  • ஏனென்றால், அவர் மீண்டும் படையெடுத்து வரக் கூடாது என்பதற்காக, இந்த கைது மேற்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel