Saturday, 2 March 2019

1st MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF
வாகா எல்லையில் அபிநந்தன்: இந்தியாவிடம் சற்றுமுன் ஒப்படைத்த பாகிஸ்தான்
 • கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானங்கள் எல்லை தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. 
 • ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதலின் போது பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சிக்கினார். நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்தார். 
 • அந்த வகையில் இன்று 9 மணிக்கு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் வாகை எல்லைக்கு அழைத்து வந்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளார்.
காஷ்மீர் குறித்த விதி எண் 370 ல் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 • பாஜக அமைச்சரவையின் இறுதிக் கூட்டம் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில் நடந்தது. இதில் பாஜக அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர். அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370ல் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள்து.
 • அரசியலமைப்பு சட்ட விதி எண் 370ன் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த விதியின் கீழ் அம்மாநிலத்துக்கு பல சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த விதியில் திருத்தங்கள் செய்து தலித் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளன.
 • மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதல் ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஜனாதிபதியும் இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு இந்த திருத்தங்கள் சட்டபூர்வமாக அமுலாக்கப்படும்.
ரூ.40,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

 • தமிழகத்தில் ரூ.40,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக கன்னியாகுமரியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். 
 • இதில்,ரூ.250 கோடி ரூபாய் மதிப்பில், பாம்பனில் புதிய பாலம்;ரூ.208 கோடி மதிப்பில் தனுஷ்கோடி - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் பாதை; மதுரையில் இருந்துசென்னை எழும்பூர்வரை தேஜஸ் ரயில்மதுரை - செட்டிகுளம்,செட்டிகுளம் - நத்தம் இடையே நான்கு வழிச்சாலை திட்டம் கன்னியாகுமரியில் போக்குவரத்து அருங்காட்சியக திட்டம், சாலை பாதுகாப்பு பூங்கா, ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
 • கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், பார்வதிபுரம் பகுதி மேம்பாலங்கள், மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம்,பணகுடி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை திட்டம் ஆகியவற்றைநாட்டுக்கு பிரதமர் மோடிஅர்ப்பணித்தார்.
விஜய்சேதுபதி - பிரியாமணி உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

 • பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது, தமிழக அரசு சார்பாக வழங்கப்பட உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது 2011 - 2018 ஆம் ஆண்டுகளுக்கு உட்பட்டு விருது பெறுவோர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
 • இந்த பட்டியலில் 20 திற்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் பெயர் இடம்பெற்றுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. மேலும் நடிகர்கள் கார்த்தி, பிரசன்னா, பொன்வண்ணன், பிரபு தேவா, சரவணன், ராஜசேகர்,ஆர்.ராஜிவ், பாண்டு,ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், சித்ராலட்சுமண, ஸ்ரீகாந்த் நகைச்சுவை நடிகர்கள் சந்தானம் , சூரி , எம்.எஸ் பாஸ்கர், தம்பிராமயைா, சிங்கமுத்து, ஆகிய நடிகர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 • நடிகைகளில்... பிரியாமணி, குட்டிபத்மினி, நளினி, குமாரி காஞ்சனா தேவி, பழம் பெரும் நடிகை பி.ஆர். வரலட்சுமி, சாரதா, ராஜஸ்ரீ, புலியூர் சரோஜா, நிர்மலா பெரியசாமி, பரதநாட்டிய கலைலுர் பிரியா முரளி, உட்பட 201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் கும்பமேளா விழா

 • உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 15ம் தேதி கும்பமேளா திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்து வருகின்றனர். 
 • அந்த வகையில் இந்த விழாவையொட்டி, கின்னஸ் சாதனை முயற்சியாக, பிரயாக்ராஜ் நகரில், கொல்கத்தா -டெல்லி தேசிய நெடுஞ்சாலையில், ஒரே நேரத்தில் நேற்று 500 பேருந்துகள் இயக்கப்பட்டன.
 • இதற்காக சுமார் 3.2 கி.மீ. தொலைவுக்கு பேருந்துகள் அணி வகுக்கப்பட்டு இயக்கப்பட்ட நிகழ்வு, உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.ஆதார் பயன்பாட்டுக்கு அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 • பிரதமர் வீட்டில் நேற்று மாலை மத்திய மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆதார் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே இதற்கான மசோதா கடந்த ஜனவரி 4ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப் படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அவசர சட்டம் பிறப்பிக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
 • மேலும், அரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள மான்தியில் (Manethi ) ஒரு புதிய எய்ம்ஸ் அமைப்பை நிறுவுவது தொடர்பான அறிவிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
 • அத்துடன, மென்பொருள் தயாரிப்புகளில் ஒரு தேசிய கொள்கை மற்றும் ஒரு புதிய கனிமக் கொள்கை 2019 ஆகியவற்றை அங்கீகரித்தல் போன்ற முக்கியமான விவகாரங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • தொலைத் தொடர்பு சட்டத்தின் படி வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் ஆதார் அட்டையை தொடர்ந்து சுயவிருப்பத்தின் பேரில் அடையாள ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். ஆதார் இல்லை என்பதற்காக யாருக்கும் எந்த வித சேவையும் மறுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடை

 • காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 
 • பின்னர் அவர்களை கைது செய்து, அவர்களின் வீடுகளின் சோதனை நடத்தப்பட்டது.இதில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை 12 நிர்வாகிகள் உட்பட கைது செய்யப்பட்டனர்.
 • மேலும் அங்கு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, அங்கு செயல்பட்டு வரும் ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கத்துக்கு இப்போ து தடை விதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
15வது நிதிக் குழு உறுப்பினராகஅஜய் நாராயண் ஜா நியமனம்

 • மத்திய நிதித் துறை முன்னாள் செயலர், அஜய் நாராயண் ஜா, 15வது நிதிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர்,1982ம் ஆண்டு, மணிப்பூர், ஐ.ஏ.எஸ்., பிரிவைச் சேர்ந்தவர். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்,ஒய்.வி.ரெட்டி தலைமையிலான,14வது நிதிக் குழுவில்,செயலராக பணியாற்றியவர். 
 • திட்டக் குழு முன்னாள் தலைவர், என்.கே.சிங் தலைமையில், 2017, நவம்பரில், 15வது நிதிக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, 2020- - 25 வரையிலான காலத்தில், மத்திய - மாநில அரசுகளின் நிகர வரி வருவாய் பகிர்வு குறித்த பரிந்துரைகளை வழங்கும். இக்குழு உறுப்பினராக இருந்த, சக்திகாந்த தாஸ், 2018, டிச., 11ல், ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, காலியாக இருந்த உறுப்பினர் பதவிக்கு, அஜய் நாராயண் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment