Tuesday, 5 March 2019

4th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
 • சென்னையில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில், விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
 • சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி, இந்தத் திட்டத்துக்காக வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 43 ஆயிரத்து 631 கட்டுமானத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ், இயங்கும் 400 அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 
ஒரே நாடு-ஒரே அட்டை
 • பொது போக்குவரத்தில் ஒரே நாடு - ஒரே அட்டை திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார். போக்குவரத்து துறை முழுவதையும் மின்னணு மயமாக்கும் இந்த திட்டத்தின் கீழ் தேசிய அளவில் பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் கட்டணம் செலுத்துவது, சுங்க கட்டணம் செலுத்துவது, மெட்ரோ ரயில் கட்டணம், ரயில் நிலையங்களில் நடைபாதை கட்டணம் ஆகியவற்றை இந்த அட்டையை பயன்படுத்தி செலுத்த முடியும்.
ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ள ஐடிபிஐ வங்கிக்கு அனுமதி
 • ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய நிலையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடையை விதித்தது. இந்தப் பொருளாதாரத் தடைகள் கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி முதல் முழுவீச்சில் அமலுக்கு வந்தன.
 • மேலும், ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்து வந்தது. இது இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பாதிக்கும் என்று கருதப்பட்டது. 
 • இந்தியா-ஈரான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மதிப்பு சுமார் ரூ.96,600 கோடியாக உள்ளது. இதில், ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.17,500 கோடி ஆகும். 
 • இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளுக்கான பரிவர்த்தனைகளைக் கையாள ஐடிபிஐ வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 • ஏற்கெனவே, யூகோ வங்கி இந்தப் பரிவர்த்தனைகளைக் கையாண்டு வருகிறது.
ரஷ்யாவிடமிருந்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பலை வாங்குகிறது இந்தியா
 • அகுலா வகை நீர் முழ்கிக் கப்பலைப் போல் 2 கப்பல்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஏற்கெனவே வாங்கியிருக்கிறது.
 • அதன்பிறகு சக்ரா 3 நீர்முழ்கிக் கப்பலை 5.5 பில்லியன் டாலருக்கு வாங்க கடந்த ஆண்டு இறுதி செய்யப்பட்டது.
 • இதற்கான ஒப்பந்தம் மார்ச் 7-ம் தேதி கையெழுத்தாகும். இந்த நீர்மூழ்கிக் கப்பல் 2025-ம் ஆண்டு தயாராகும். 2012-ம் ஆண்டு வாங்கப்பட்ட சக்ரா 2-க்கு மாற்றாக இந்த நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும்.
 • எதிரிகள் கண்டுபிடிக்கப்பட முடியாத அளவுக்கு தண்ணீருக்குள் பல மாதங்கள் இருக்கும் திறன் கொண்டதாக இருக்கும். அணு ஆயுதம் மட்டுமின்றி, வழக்கமான ஆயுதங்களையும் பயன்படுத்த ஏதுவாக சக்ரா 3 வடிவமைக்கப்படும்.மனைவிகளை தவிக்க விட்டு ஓடிய 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து மத்திய அரசு அதிரடி
 • மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இந்தியர்கள் 45 பேரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
 • நோடல் ஏஜென்ஸி என்ற அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில்,மொத்தம் 45 பேர் இப்படி மனைவிமார்களை கைவிட்டு அந்தந்த நாடுகளில் வாழ்ந்து வருவது தெரியவந்தது.
 • ஆனால் இந்த சட்டம் இன்னும் அமலாக்கம் செய்யப்படவில்லை என்பது கவலை அளிக்கிறது. எனினும் இதில் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தம் 45 பேர் இதுவரை கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். இதையடுத்து அவர்களின் பாஸ்போர்ட்களும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன" என்றார்.
இந்தியாவுக்கு முதலிடம் நுகர்வோர் நம்பகத்தன்மை ஆய்வில் தகவல்
 • உலகளாவிய நுகர்வோர் நம்பகத்தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய நுகர்வோர் நம்பகத்தன்மை தொடர்பாக சமீபத்தில் நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமாக 64 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 32000க்கும் மேற்பட்ட மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
 • 2018ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், இந்தியா 133 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிலிப்பைன்ஸ் 131 புள்ளிகளையும், இந்தோனேசியா 127 புள்ளிகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
டொனால்ட் டிரம்ப்: இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து"
 • இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல பில்லியன்கணக்கான அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 • வளர்ந்து வரும் நாடு என்ற அடிப்படையில், 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இறக்குமதிக்கு சுங்க வரிவிதிப்பற்ற சலுகையை இந்தியா அனுபவித்து வருகிறது. ஆனால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா மிக அதிகளவிலான வரியை விதித்து வருகிறது. 
 • ஜிஎஸ்பி என்னும் அமெரிக்காவின் இறக்குமதி சலுகை திட்டத்தில் அதிக பயனை பெறும் நாடாக இந்தியா விளங்கி வரும் சூழ்நிலையில், டிரம்ப் எடுத்துள்ள இந்த நடவடிக்கை அவர் அமெரிக்க அதிபராக கடந்த 2016ஆம் ஆண்டு பதவியேற்றத்திலிருந்து இந்தியா மீது எடுக்கப்படும் மிகப் பெரிய கொள்கை முடிவாக இருக்கும்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment