Type Here to Get Search Results !

31st MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

மார்ச் மாத லோக் அதாலத்தில் சென்னை சட்ட பணிகள் ஆணைய குழு 9 கோடி வசூல்
  • நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க தேசிய சட்ட பணிகள் ஆணைய குழு உத்தரவிட்டுள்ளது. 
  • அதன்படி சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணைய குழு செயலாளர், நீதிபதி ஜெயந்தி கடந்த மார்ச் மாதம் 6 சிறப்பு லோக் அதாலத்தை ஏற்பாடு செய்து நடத்தினார். அதில் 4ம் தேதி 3 லட்சம், 13ம் தேதி 1 கோடியே 43 லட்சத்து 39 ஆயிரத்து 183. 
  • இதேபோல் 18ம் தேதி 1 கோடியே 52 லட்சத்து 51 ஆயிரத்து 400, 20ம் தேதி 2 கோடியே 38 லட்சத்து 69 ஆயிரத்து 233 மற்றும் 27ம் தேதி நடைபெற்ற லோக் அதாலத்தில் 3 கோடியே 61 லட்சத்து 91 ஆயிரத்து 81, என மொத்தம் 9 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரத்து 897 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. 575 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 246 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயா, தேனா வங்கிகள் இனி பரோடா வங்கியாக செயல்படும்
  • விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை பாங்க் ஆப் பரோடாவுடன் இணைப்பு இன்று அமலுக்கு வருகிறது. பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் பிரச்னையை சீராக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
  • இதன் ஒரு பகுதியாக விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கி ஆகியவற்றின் இணை ப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேற்கண்ட 3 வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 
  • வங்கி இணைப்புகள் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு முடிக்கப்பட்டு விடும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி இணைப்பு பணிகள் முடிந்து, விஜயா, தேனா வங்கிகள் இன்று முதல் பாங்க் ஆப் பரோடாவாக மாறுகின்றன. 
  • விஜயா மற்றும் தேனா வங்கிகள் பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் மேற்கண்ட வங்கிகள் பாங்க் ஆப் பரோடாவாக செயல்படும். எனவே விஜயா மற்றும் தேனா வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளராக பாவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 
ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபரான ஜூசானா
  • ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த ஜுசானா காபுட்டோவா, ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • கிட்டத்தட்ட எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஜுசானா, தன்னை எதிர்த்து நாட்டின் ஆளும் கட்சி முன்னிறுத்திய வேட்பாளரான மார்ஸ் செஃபோகோவிக்கை வீழ்த்தி புதிய வரலாற்றை படைத்துள்ளார்.
  • தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் தரப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் 42 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில், ஜுசானா 58 சதவீத வாக்குகளுடன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தார்.



பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மிக்-27 ரக விமானம் விபத்து
  • இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 ரக போர் விமானம், ராஜஸ்தான் ஜோத்பூர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. இந்தியா விமானப்படையின் மிக்-27 யுபிஜி ரக போர் விமானம் இன்று காலை வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது.
  • ஜோத்பூரிலிருந்து 180 கிலோமீட்டர் தூரத்தை கடந்து சிரோகி அருகே வந்தபோது, விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. சமார்த்தியமாக செயல்பட்ட விமானி, பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார்.
நச்சுத்தன்மையற்ற தேசிய சந்தை, கண்காட்சி தொடக்கம்
  • நச்சுத்தன்மையற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
  • "நச்சுத்தன்மையற்ற உணவுகளை உண்போம் தாய்நாட்டை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளின் கீழ் இக்கண்காட்சி நேற்று முதல் 3 நாட்களுக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடக்கிறது. நச்சுத்தன்மையற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சியின் நோக்கம் நச்சுத்தன்மையற்ற நாட்டையும் பேண்தகு அபிவிருத்தி யுகத்தையும் ஏற்படுத்துவதாகும்.
ஆதாருடன், 'பான்' இணைக்க காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு
  • ஆதாருடன், 'பான்' எனப்படும், வருமானவரி கணக்கு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.'அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு, ஆதார் எண் கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்திருந்தது. 
  • அதன்படி, ஆதார் எண்ணுடன், 'பான்' கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாருடன், பான் கார்டை இணைப்பதற்காக, அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம், அவ்வப்போ நீட்டிக்கப்பட்டது.
  • ஐந்தாவது முறையாக, காலக்கெடு நீட்டிக்கப்பட்டு, 2019, மார்ச், 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. நேற்றுடன் இந்த கெடு முடிந்தது. இந்நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்காக காலக்கெடு வரும், செப்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel