Type Here to Get Search Results !

3rd, 4th, 5th, 6th and 7th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF




பசு பாதுகாப்பிற்கான ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பசுப் பாதுகாப்பிற்கான ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பசுக்களை பாதுகாக்கவும், அவை கொல்லப்படுவதை தடுக்கவும் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் பசுக்களை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிகையை மேம்படுத்தவும், இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும் 'ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்' என்ற ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. தற்போது அந்த ஆணையத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஆணையத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் பயனடைவர் என்று றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆணையம் கால்நடை மருத்துவம், விலங்குகள் அறிவியல், விவசாய பல்கலைக்கழகம், மத்திய-மாநில அரசுக்களின் இனப்பெருக்கம், உயிர்வாயு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பசுபாதுகாப்பிற்கான சட்டங்களை முறையாக அமல்படுத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு தற்போது நடந்து முடிந்த இடைக்கால பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது
  • கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதேபோல் 2019-20ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (ஜிடிபி) 7.4 ஆக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. 2019-20 நிதியாண்டின் முதல் அரையாண்டில் பணவீக்க விகிதம் 3.2 முதல் 3.4 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் மூன்றாம் காலாண்டில் 3.9 சதவீதமாக அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.



தாய்லாந்து நடந்த பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு தங்கம்
  • இந்திய பளுதூக்கும் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு (24). மணிப்பூரை சேர்ந்த இவர் கடந்த 2017ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். கோல்டு கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு 196 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.
  • காயத்தினால் அவதிப்பட்ட அவர் கடந்த 9 மாதமாக எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. தற்போது தாய்லாந்து நாட்டில் நடந்த ஈ.ஜி.ஏ.டி. கோப்பைக்கான பளுதூக்குதல் போட்டியில் அவர் கலந்து கொண்டார்.
  • இதில், 49 கிலோ எடை பிரிவில் மீராபாய் சானு மொத்தம் 192 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பானின் மியாகே ஹிரோமி (183 கிலோ) வெள்ளிப்பதக்கமும், பப்புவா நியூ கினியாவின் லாவோ டிக்கா தவுவா (179 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ரஞ்சி கோப்பை: சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது விதர்பா
  • இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஆட்டம் நாக்பூரில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் விதர்பா 312 ரன்களையும், செளராஷ்டிரா அணி 307 ரன்களையும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய விதர்பா 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
  • இதைத் தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் செளராஷ்டிர அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 
  • இறுதியில் 58.4 ஓவர்களில் 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது செளராஷ்டிரா. 
  • தொடர்ந்து 2-ஆவது முறையாக சாம்பியன்: 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற விதர்பா, தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்டத்தை வென்றது. ரஞ்சி கோப்பை வரலாற்றில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டாவது முறையாக பட்டம் வெல்லும் 6-ஆவது அணி விதர்பாவாகும்.
  • மூத்த வீரரான வாசிம் ஜாபர் மும்பை அணியில் இருந்த போது 8 முறை ரஞ்சி பட்டத்தை வென்றார். பின்னர் விதர்பா அணியில் இருந்து தொடர்ந்து 2-ஆவது பட்டத்தை வென்றார். முதன்முறையாக பட்டம் வெல்லும் செளராஷ்டிராவின் கனவு நனவாகவில்லை.



உலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயர் பரிந்துரை
  • உலகி வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
  • கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வந்த ஜிம் யோங் கிம் கடந்த மாதம் திடீரென பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அவரது பதவி விலகல் அமலுக்கு வந்துள்ளதையடுத்து புதிய தலைவரை நியமிக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தன. 
  • இந்த நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயரை அதிபர் டிரம் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க கருவூல துறையில் சர்வதேச விவகாரங்களுக்கான செயலராக மல்பாஸ் தற்போது பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ரூ 24,420,00,00,000..1195 இந்தியர்கள்.பட்டியலை வெளியிட்ட சுவிஸ் வங்கி
  • சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் பதுக்கிவைத்துள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகிக்கொண்டே இருந்த நிலையில் சுவிஸ் வங்கி நிர்வாகம் பணம் வைத்துள்ளவர்களின் பெயரை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலை பல்வேறு பத்திரிக்கை அமைப்புகள் ஒன்றிணைந்து வெளியிட்டனர்.
  • அதில் தெரியவந்துள்ளா விவரங்கள் படி கடந்த 2006-07 ஆம் ஆண்டில் 1,195 சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளதாகவும் , அவர்கள் வைத்துள்ள கணக்கின் படி மொத்த ரூபாய்.24,420 கோடிக்கு என்றும் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் தெரியவந்துள்ளதில் இவர்களில் 276 பேர் கணக்கில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக பணம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
GSAT-31: விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்-31' செயற்கைக்கோள்
  • தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட் - 31 என்ற 40-வது செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவ திட்டமிட்டது. இதன்படி பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் - 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
  • 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் தகவல் பரிமாற்றம், பெருங்கடல் ஆய்வு குறித்த தகவல்களை அளிக்கும். தொலை தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, இந்த செயற்கைக்கோள் உதவும். தகவல் தொடர்பு சேவைகளுக்கான, 'ஜிசாட்-31' செயற்கைக்கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
  • பூமியில் இருந்து 14,638 கிலோ மீட்டர் தொலைவில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. செல்போன் சேவை, டி.டி.ஹெச் சேவை, டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, தொலைக்காட்சி இணைப்பு போன்ற பயன்பாட்டிற்கு இந்த செயற்கைக்கோள் உதவும். இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகும்.
  • முன்னதாக, இந்தியாவில் இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க உருவாக்கப்பட்ட ஜி சாட்-11 எனும் அதி நவீன செயற்கைக் கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரைன்-5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பரில் செலுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel