Type Here to Get Search Results !

20th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF




தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார் - ஆசிய போட்டிக்கு தகுதி
  • 16-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஷ்கார் மாநிலத்தில் ராய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா 14.14 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 
  • கேரள வீராங்கனை ஆன் ரோஸ் டாமி 14.56 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு தமிழக வீராங்கனை அட்சயா 15.35 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றார்.
  • தங்கப்பதக்கம் வென்ற தபிதா ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ஸ்பெயின் நாட்டின் உயர் விருது
  • கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளம் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். 22 ஆயிரத்துக்கும் அதிகமானவரகள் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஆபத்தான இடத்தில் சிக்கியிருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 71 பேர் இந்திய அரசின் மீட்புப்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.
  • இதற்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிய சேவை செய்ததற்காக ஸ்பெயின் நாட்டில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் அந்நாட்டின் மிகவும் உயர்ந்த 'கிரான்ட் கிராஸ்' (Grand Cross of Order of Civil Merit) விருதை சுஷ்மா சுவராஜ் ஏற்றுக் கொண்டார்.
  • ஸ்பெயின் வெளியுறவுத்துறை ஜோசப் போரெல்ஃப் இவ்விருதினை சுஷ்மாவுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
குத்துச்சண்டை மேம்பாட்டு மையத் தலைவராக அஜய் சிங் தேர்வு
  • சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (ஏஐபிஏ) விளையாட்டு மேம்பாட்டு மைய தலைவராக பிஎப்ஐ தலைவர் அஜய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
  • 4 ஆண்டுக்காலம் அவர் இப்பதவியை வகிப்பார்.
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய மசூத் அசாருக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்
  • காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தற்போது இவன் தலைமறைவாக இருக்கிறான்.
  • இந்த நிலையில் மசூத் அசாரை ஐ.நா. சபையில் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் தீவிரமாக உள்ளது. அதற்காக ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து பிரான்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
  • ஆனால் அதை சீனா தடுத்து விட்டது. எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது 2-வது தடவையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்னும் சில நாட்களில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. 
இந்தியா - சவுதி அரேபியா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • சவுதி இளவரசர் முகமது பின் சல்மா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மா முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
  • இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், இந்தியா, சவுதி இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.



பெங்களூரு எலகங்கா மைதானத்தில் சர்வதேச விமான கண்காட்சி துவக்கம்: இந்தியா உட்பட 31 நாடுகள் பங்கேற்பு
  • பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை திடலில் தொடங்கியது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூர், அபுதாபி மற்றும் இந்தியாவில் பெங்களூருவில் மட்டுமே பிரமாண்ட விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. 
  • எலகங்காவில் உள்ள விமான பயிற்சி படைக்கு சொந்தமான நிலத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை விமான கண்காட்சி நடக்கிறது. இவ்வாண்டு நடைபெறுவது 12வது சர்வதேச விமான கண்காட்சியாகும். இக்கண்காட்சி 24ம் தேதி வரை 5 நாள் நடக்கிறது. கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். 
மத்திய மீன்வளத்துறையின் முதல் செயலாளராக தருண் ஸ்ரீதர் நியமனம்
  • மீனவ மக்களின் நலனை பாதுகாப்பதற்காக மத்திய மீன்வளத்துறை என்னும் புதிய துறையை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகபடுத்தியது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இந்த மத்திய மீன்வளத்துறை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  • இந்நிலையில், மத்திய கால்நடைத்துறை, பால்வளத்துறை செயலாளராக பதவி வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி தருண் ஸ்ரீதர் கூடுதலாக இந்த பொறுப்பை கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு ஒப்புதல்- 1கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
  • மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில்,புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்குஅமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. புதிய மின்னணு கொள்கை என்றிருந்த திட்டம் புதிய தொலைத்தொடர்பு கொள்கை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் 2025-ம் ஆண்டுக்குள் 1 கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், 28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மின்னணு உற்பத்தி தொழில்களை உருவாக்குவது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் அடுத்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் முதலீடு கிடைக்கும் வகையில் புதிய கொள்கை வகுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனில் அம்பானி குற்றவாளி' - பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
  • ஸ்வீடனில் உள்ள நிறுவனம் ஒன்று அனில் அம்பானி மீது தொடுத்த அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  • ஸ்வீடனில் தொலைத் தொடர்பு சாதனங்களை எரிக்சன் என்ற நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து சாதங்களை வாங்கிய அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் அதற்கான தொகையை செலுத்த தவறிவிட்டது.
  • இதனால் அனில் அம்பானி மீது உச்ச நீதிமன்றத்தில் எரிக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் சமரச பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ரூ.550 கோடியை எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த ஒப்புதல் அளித்தது. அந்த தொகையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு நீதிமன்றம் கெடு அளித்தது.
  • அவ்வாறு தொகையை செலுத்த மீண்டும் தவறினால் அனில் அம்பானி உட்பட மூவரும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை பெற நேரிடும் எனவும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர்.
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு பெற்ற 2வது தொழிலதிபர் அனில் அம்பானி. இதற்கு முன்னதாக தொழிலதிபர் சுப்ரத் ராய் சஹாரா நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel