Type Here to Get Search Results !

16th,17th,18th & 19th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF




சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்: முதல்வர் அறிவிப்பு
  • தமிழ்த்தாய் விருது புவனேசுவரம் தமிழ்ச் சங்கத்துக்கும், கபிலர் விருது மி.காசுமானுக்கும், உ.வே.சா.விருது நடன காசிநாதனுக்கும், கம்பர் விருது க.முருகேசனுக்கும் அளிக்கப்படும். 
  • சிலம்பொலி செல்லப்பன்: சொல்லின் செல்வர் விருது ஆவடிக்குமாருக்கும், ஜி.யு.போப் விருது கோ.சந்திரசேகரன் நாயருக்கும், உமறுப்புலவர் விருது நசீமா பானுவுக்கும், இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பனுக்கும், அம்மா இலக்கிய விருது உலகநாயகி பழனிக்கும், சிங்காரவேலர் விருது பா.வீரமணிக்கும் அளிக்கப்படும்.
  • கவிஞர் வைரமுத்து மகன்: முதலமைச்சர் கணினி தமிழ் விருது வை.மதன் கார்க்கிக்கு (கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை) அளிக்கப்படும். இந்த விருதுகளில் தமிழ்த்தாய் விருது ரூ.5 லட்சத்துடன் பாராட்டுக் கேடயம், சான்றிதழ் அடங்கியதாகும். மற்ற விருதுகள் ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், பொன்னாடை மற்றும் தகுதியுரை அடங்கியதாகும்.
  • சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள்: கடந்த ஆண்டுக்கான (2018) சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, அரிமா மு.சீனிவாசன், குப்புசாமி, மருத்துவர் அக்பர் கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செந்தில்குமார் என்ற கிரிதாரிதாஸ், பழனி அரங்கசாமி, எஸ்.சங்கரநாராயணன், ச.நிலா ஆகியோருக்கும் அளிக்கப்பட உள்ளன. இந்த விருது ஒவ்வொன்றும் தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், தகுதியுரை, பொன்னாடை ஆகியன அடங்கியதாகும்.
  • 2018-ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டின் ஜீவகுமாரனுக்கும், இலக்கண விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசனுக்கும், மொழியியல் விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ச.சச்சிதானந்தத்துக்கும் அளிக்கப்படும். இந்த விருதுகள் ஒவ்வொன்றும் தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், தகுதியுரை, பொன்னாடை அளிக்கப்படும்.
  • தமிழ்ச் செம்மல் விருது: மாவட்டங்களில் தமிழ்ப் பணி ஆற்றி வருவோருக்காக 32 மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு விருதுகள் அளிக்கப்பட உள்ளன. அதன்படி, யு.எஸ்.எஸ்.ஆர்.கோ.நடராஜன் (சென்னை), அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர்), இதயகீதம் ராமானுஜம் (காஞ்சிபுரம்), சிவராஜி (வேலூர்), கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி), சம்பந்தம் (திருவண்ணாமலை), செ.வ.மதிவாணன் (விழுப்புரம்), இரா.சஞ்சீவிராயர் (கடலூர்), பெ.ஆறுமுகம் (பெரம்பலூர்), அ.ஆறுமுகம் (அரியலூர்), ஆ.கணபதி (சேலம்), பொ.பொன்னுரங்கன் (தருமபுரி), முனைவர் சி.தியாகராசன் (நாமக்கல்), வெ.திருமூர்த்தி (ஈரோடு), கவிமாமணி வெ.கருவைவேணு (கரூர்), முனைவர் மா.நடராசன் (கோவை), மு.தண்டபாணிசிவம் (திருப்பூர்), கோ.கந்தசாமி (நீலகிரி), வீ.கோவிந்தசாமி (திருச்சி), மு.முத்து சீனிவாசன் (புதுக்கோடை), முனைவர் சே.குமரப்பன் (சிவகங்கை), த.உடையார்கோயில் (தஞ்சாவூர்), நா.சக்திமைந்தன் (திருவாரூர்), மு.மணிமேகலை (நாகப்பட்டினம்), சுப்பையா (ராமநாதபுரம்), இலக்குமணசுவாமி (மதுரை), வதிலைபிரபா (திண்டுக்கல்), சு.குப்புசாமி (தேனி), க.அழகர் (விருதுநகர்), பே.ராஜேந்திரன் (திருநெல்வேலி), ப.ஜான்கணேஷ் (தூத்துக்குடி), கா.ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி).
உபரி மின்சக்தி விற்பனை: தேசிய புனல் மின் நிறுவனத்துடன் என்எல்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் உபரியாக உள்ள மின்சக்தியை தென் மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் வகையில், தேசிய புனல் மின் நிறுவனத்துடன் என்எல்சி இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 
தூய்மை இந்தியா திட்டத்தில் தேசிய அளவில் கும்பகோணம் நகராட்சிக்கு 3-வது இடம்
  • மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் கும்பகோணம் நகராட்சி தேசிய அளவில் 3-வது இடம் பெற்றுள்ளது. இதற்காக சான்றிதழ், விருது, ரூ.5 லட்சம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியா முழுவதும் 500 நகராட்சிகளில் கையாளப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு வசதி துறை அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.
  • இதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்கட் நகராட்சி முதலிடமும், அம்பிகாபூர் நகராட்சி 2-ம் இடமும், கும்பகோணம் நகராட்சி 3-ம் இடமும் பிடித்தன. இதற்கான விருது வழங்கும் விழா கடந்த 15-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. 
சர்வதேச குத்துச்சண்டை இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர்
  • சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 51 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நிக்ஹாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மாக்னோவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 
  • 54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீனாகுமாரி தேவி 3-2 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை அய்ரா வில்லிகாஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஜோகோவிச், சைன் பைல்ஸ் ஆகியோருக்கு லாரஸ் விளையாட்டு விருது
  • லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை விருது டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • ஆண்டின் எதிர்பாராத திருப்புமுனை-நவோமி ஒஸாகா (ஜப்பான், டென்னிஸ்). மீண்டு வந்த வீரர்-டைகர் வுட்ஸ் (அமெரிக்கா, கோல்ஃப்).
  • ஆண்டின் சிறந்த அணி-பிரான்ஸ் கால்பந்து அணி (பிஃபா உலக சாம்பியன்).
  • சிறந்த செயல்திறன் மிக்க வீரர்-சோ கிம் (அமெரிக்கா, ஸ்னோபோர்டிங்).
  • சிறந்த மாற்றுத்திறனாளி வீரர்-ஹென்ரைட்டா பார்ஸ்கோவா (ஸ்லோவோக்கியா, மலையேறும் வீராங்கனை).
  • வாழ்நாள் சாதனையாளர் விருது-ஆர்சென் வெங்கர் (பிரான்ஸ், கால்பந்து).
  • விதிவிலக்கு சாதனை விருது-எய்ட் கிப்சோ (கென்யா, மாரத்தான்)
  • சிறந்த விளையாட்டு தொண்டு நிறுவனம்-யுவா (இந்தியா).
திருச்சி முக்கொம்பில் புதிய கதவணை அமைக்க முதல்வர் அடிக்கல்
  • திருச்சி முக்கொம்பு மேலணையில் ரூ.387.60 கோடியில் புதிய கதவணை கட்ட முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். 
  • புதிய கதவணை அமைக்கும் பணி 24 மாத காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு கொள்ளிடம் கதவணையை ரூ.38.85 கோடியில் பலப்படுத்தும் பணிக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். கடந்தாண்டு செப்டெம்பர் 22ல் முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் 9 கதவணைகள் அடித்து செல்லப்பட்டன.
பழனி அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய வகைக் காசுகள் கண்டெடுப்பு
  • பழனி அருகே ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட அரிய வகை காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக் காசுகள் கோப்பரகேசரி வர்மன் முதலாம் இராஜராஜா சோழன் கால காசுகளாகும். 
  • தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் ராஜராஜ சோழன் கி.பி 985 ஆம் ஆண்டு அருள்மொழிவர்மர் என்ற பெயருடன் ஆட்சிப் பொறுப்பேற்று கி.பி.1014 முடிய 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தார். 
  • கி.பி 993இல் இலங்கையின் மீது படையெடுத்து இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.இலங்கை போரில் வெற்றி பெற்றதை குறிக்கும் வகையில் இந்த காசுகளை வெளியிட்டுள்ளார். தங்கம் மற்றும் செம் பினால் வெளியிடப்பட்ட இந்தக்காசுகள் இலங்கை சோழ சாம்ராஜ்ய த்தின் ஒரு பகுதி என்பதை குறிக்கிறது.1 .5. செ.மீ விட்டமும் 0.5. மி.மீதடிமனும் கொண்ட இந்த காசுகள் ஒழுங்கற்ற வட்ட வடிவம் கொண்டுள்ளது.
  • நாணயத்தின் ஒரு பக்கம் போர்வீரர்கள் வேலுடன் இருப்பது போலவும் மற்றொரு புறம் இராஜராஜ சோழனின் முத்திரை பொறிக்கப் பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டவை.இராஜஇராஜ சோழனின் இந்த காசுகள் பழனிப் பகுதியில் பரவலாக கிடைக்கின்றது.



அரசாணையை பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்ய முடியாது; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு: உயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்தா குழுமத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை
  • வழக்கில் நீதிபதி ஆர்.பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. 'தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு இல்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
  • இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பா யத்தின் அதிகார வரம்பை மட்டுமே கணக்கில் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள் ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான சாதக, பாதங்கள் எதையும் கணக்கில் கொள்ளவில்லை. எனினும், இத்தீர்ப்பைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தொடர்ந்து அமலில் இருக்கும்.
மியான்மரில் தமிழ்ப் பல்கலை. மூலம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி
  • மியான்மர் நாட்டில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் தமிழ் இலக்கிய - இலக்கணப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
  • இந்நிலையில் இத்திட்டத்தை, தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலமாக நிறைவேற்றிட உதவும் வகையில் ரூ. 7 லட்சத்தை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்தார். 
  • மியான்மர் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இப்பயிலரங்கில் ஏறத்தாழ 135 தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இலக்கிய - இலக்கணப் பயிற்சிகளும், 100 இளந்தமிழ் மாணவர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதில், மியான்மரின் 7 மாகாணங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
சந்திரனில் ஆய்வு நடத்த முதல்முறையாக விண்கலத்தை அனுப்பும் இஸ்ரேல்
  • சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. இந்திய நேரப்படி வரும் 22-ந் தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது. சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. 
  • அவற்றில் சீனா சந்திரனின் பின்புறத்தில் கடந்த ஜனவரி 3-ந்தேதி இறக்கி ஆய்வு மேற்கொண்டது. இந்த நிலையில் இஸ்ரேல் முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறது. 'பெரிஷீட்' எனப்படும் இந்த விண்கலம் 585 கிலோ எடை கொண்டது. இந்த விண்கலம் தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு ஏவப்படுகிறது. 
விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு: அமைச்சர் செங்கோட்டையன்
  • தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.



5,125 பெட்ரோல் பங்க்குகள் ஐகோர்ட் இடைக்கால தடை
  • ''புதிதாக 5,125 பெட்ரோல் நிலையங்கள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக வருவாய்த்துறை செயலர், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
புட்பால் ரத்னா' விருது பெற்ற முதல் இந்திய கால்பந்து வீரர் பெருமையை அடைந்த சுனில் சேத்ரி
  • அண்மையில் தான் நட்சத்திர கால்பந்து வீரர் சுனில் சேத்ரிக்கு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை பெறும் 6-வது கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றார் அவர். இந்த நிலையில் தற்போது அவருக்கு 'புட்பால் ரத்னா' விருதும் வழங்கப்பட்டு உள்ளது. 
  • ஜவார்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் டெல்லி கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஷாஜி பிரபாகரன் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளார். முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த விருதினை பெறும் முதல் இந்திய கால்பந்து வீரர் என்ற பெருமையையும் அவர் அடைந்து உள்ளார்.
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ரயில்வே சாம்பியன்
  • ஹரியாணா மாநிலம் ஹிஸாரில் நடைபெற்று வந்த இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு ரயில்வே, மத்திய பிரதேச அணிகள் தகுதி பெற்றன. 
  • இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது ரயில்வே.
  • தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
  • முன்னதாக திங்கள்கிழமை காலை நடைபெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் ஹரியாணா அணி 3-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பெற்றது.
தேசிய நடை ஓட்டப்பந்தயம்: ஜிதேந்தர் முதலிடம்
  • தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 6-ஆவது தேசிய நடை ஓட்டப்பந்தயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜிதேந்தர் ஆடவர் 50 கி.மீ பிரிவில் முதலிடம் பெற்றார்.
  • 50 கி.மீ பிரிவில் ராஜஸ்தான் வீரர் ஜிதேந்தர் சிங் 4 மணி, 23 நிமிடம், 23 விநாடிகளில் கடந்து முதலிடம் பெற்றார். குஜராத் ஜோஷி சாகர், ஹரியாணாவின் பவன்குமார் இரண்டு, மூன்றாவது இடங்களைப் பெற்றனர். 10 கி.மீ ஆடவர் பிரிவில் சுராஜ் பன்வார் (உத்தரகாண்ட்), ஜூனத் (ஹரியாணா), பார்மன் அலி (உபி) முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். மகளிர் பிரிவில் ரோஹி பாட்டீல் (உத்தரகாண்ட்), சுவப்னா (ம.பி), குர்ப்ரீத் கெளர் (பஞ்சாப்) முதல் மூன்றிடங்களைப் பெற்றனர்.
இரானி கோப்பையை வென்றது விதர்பா
  • நாக்பூரில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்களும் விதர்பா அணி 425 ரன்களும் எடுத்தன. 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 107 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 
  • அப்போது விதர்பா அணி 103.1 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழ்நிலையில் ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள இரு அணியின் கேப்டன்களும் ஒப்புக்கொண்டனர். இதைஅடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக அக்சய் கர்னிவார் தேர்வானார்.
  • முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் மூலம் விதர்பா அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் இரானி கோப்பையை தக்கவைத்துக் கொண்ட 3-வது அணி என்ற பெருமையை பெற்றது விதர்பா. இதற்கு முன்னர் கர்நாடகா, மும்பை அணிகள் இரு முறை கோப்பையை தக்கவைத்திருந்தன. 
  • இதற்கிடையே இந்த ஆட்டத்தில் கிடைத்த பரிசுத் தொகையை புல்வாமா தீவிரவா தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்குவதாக விதர்பா கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.



தேசிய சீனியர் பாட்மிண்டன்: சாய்னா நெவால், செளரவ் வர்மாவுக்கு சாம்பியன் பட்டம்
  • குவாஹாட்டியில் 83-ஆவது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், அதன் இறுதிச் சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. 
  • மகளிர் பிரிவில் வைரிகளான சாய்னா நெவால்-பி.வி.சிந்து ஆகியோர் மோதினர். பரபரப்பாக அனலைக் கிளப்பும் ஆட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியன் சாய்னா முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். தனது வலுவான ஷாட்களால் சிந்துவை திணறடித்தார். இறுதியில் 21-18, 21-15 என்ற கேம் கணக்கில் அபார வெற்றி பெற்று தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். சாய்னாவுக்கு இது நான்காவது தேசிய சாம்பியன் பட்டமாகும்.
  • செளரவ் வர்மா சாம்பியன்: ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் முன்னாள் சாம்பியன் செளரவ் வர்மாவும்-ஆசிய ஜூனியர் சாம்பியன் லக்ஷயா சென்னும் மோதினர். இந்த ஆட்டமும் ஒருதலைபட்சமாகவே அமைந்தது. செளரவ்வர்மா தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் 21-18, 21-13 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார். இது அவர் வெல்லும் மூன்றாவது தேசிய சாம்பியன் பட்டமாகும்.
  • இரட்டையர் பிரிவு: ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி-சிராக் ஷெட்டி இணை 21-13, 22-20 என அர்ஜுன் எம்.ஆர்-ஷிலோக் ராமச்சந்திரன் இணையை வென்று பட்டம் வென்றது.
தேசிய நடைஓட்டம்: இர்ஃபான், செளம்யா முதலிடம்
  • 6-ஆவது ஓபன் தேசிய நடைஓட்ட சாம்பியன் போட்டி சென்னையில் தொடங்கியது. இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். ஆடவர் பிரிவில் கேரளத்தைச் சேர்ந்த கே.டி.இர்ஃபான் 1 மணி, 26 நிமிடம் 18 வினாடிகளில் 20 கி.மீ தூரத்தை கடந்து பட்டம் வென்றார். தேவேந்தர் சிங் (ஹரியாணா), சந்தீப்குமார் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை வென்றனர்.
  • மகளிர் பிரிவில் கேரள வீராங்கனை பி.செளமியா 1 மணி 40 நிமிடம் 25 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து பட்டம் வென்றார். பிரியங்கா (உபி), ரவீனா (ஹரியாணா) இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றனர்.
சவுதி இளவரசருக்கு "நிஷான் இ பாகிஸ்தான்" என்ற விருது அளிக்கப்பட்டது
  • கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றார். அவரது அழைப்பின் பேரில் சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இருநாள் அரசுமுறை பயணமாக இஸ்லாமாபாத் வந்துள்ளார். அவரது முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையில் இன்று சுமார் 2 ஆயிரம் கோடி டாலர் அளவிலான 8 புதிய ஒப்பந்தங்கள் கையொழுத்தானது.
  • இன்று மாலை பாகிஸ்தான் அதிபர் மாளிகைக்கு சென்ற முஹம்மது பின் சல்மான் அல் சவுத் அதிபர் ஆரிப் ஆல்வி-யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிபர் ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'நிஷான் இ பாகிஸ்தான்' விருதினை சவுதி இளவரசருக்கு வழங்கி கவுரவித்தார்.
இந்தியா- மொராக்கோ இடையே புதிய ஒப்பந்தங்கள் சுஷ்மா முன்னிலையில் கையொப்பமானது
  • அரசுமுறை பயணமாக மொராக்கோ நாட்டுக்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பவுரிட்டாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
  • மேலும், இருதரப்பிலும் வர்த்தகரீதியான விசாக்கள் வழங்குவதை எளிமையாக்கும் நடைமுறை, குறைந்த செலவில் வீடுகள் கட்டும் திட்டம், இளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் மொராக்கோவும் இனி இணைந்து செயலாற்றும் வகையில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் இன்று கையொப்பமானது.
டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பான் பரிந்துரை
  • அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது வடகொரியா. இதற்கு தீர்வுகாணும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இந்த நிலையில் வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று, டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரை செய்துள்ளார். 



முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு ஒப்புதல்
  • டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி 
  • தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர் களிடம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, "முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்
  • கடந்த ஆண்டு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் ஒப்புதலுக் காக இந்த மசோதா காத்திருக்கிறது. வரும் ஜூன் 3-ம் தேதி நடப்பு மக்களவையின் காலம் முடிவடைவதால் இந்த மசோதா காலாவதியாகிவிடும். 
  • எனவே, முத்தலாக் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்து அதற்கு தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓராண்டுக்குள் 3-வது முறையாக இந்த அவசரச் சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர் களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது. இதன்மூலம் 1.1 கோடி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர். 2019, ஜனவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
'சிட்பண்ட்' அவசர சட்டம் அமைச்சரவை ஒப்புதல்
  • சிட்பண்ட்' மோசடியை தடுக்கும் வகையில், முறைசாரா முதலீட்டு திட்டங்கள் அவசர சட்டத்தை அமல்படுத்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த அவசர சட்டத்தின்படி, மோசடி செய்வோருக்கு சிறை தண்டனை மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும். மேலும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பச் செலுத்தவும், இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு ராணுவ ஆராய்ச்சி மையத்தில் அப்துல் கலாம் சிலையை திறந்து வைத்த நிர்மலா சீதாராமன்
  • பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சில ஆண்டுகள் பணியாற்றினார். 
  • அப்போது அவரது அரிய முயற்சிகளால் பல்வேறு நவீனரக ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அப்துல் கலாம் சிலையை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாரமன் இன்று திறந்து வைத்தார்.
டெல்லி - காஸியாபாத் - மீரட் இடையே ரூ.30,274 கோடியில் புதிய போக்குவரத்து திட்டம்
  • ஆர்.ஆர்.டி.எஸ் புதிய போக்குவரத்து திட்டத்துக்கு ரூ.30,274 கோடி நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி - காஸியாபாத் - மீரட் இடையே 82.15 கி.மீ தூரம் புதிய போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ 2,900 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்
  • பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் சுமார் 2,900 கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.மேலும் பிரதமர் மோடி ரவி தாஸ் மேலும் வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக கவிஞரான ரவிதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் அவரது ஜென்ம வளர்ச்சித் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்குப் பிறகு வாரணாசி வாரணாசியில் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி பேசுகின்றார்.
மத்தியஅரசுக்கு இடைக்கால டிவிடென்டாக ரூ.28ஆயிரம் கோடி வழங்கும் ரிசர்வ் வங்கி
  • இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக (டிவிடென்ட்) ரூ.28,000 கோடிவழங்க தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி யின் மத்தியக் குழு கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
  • மேலும், கடந்த 2017-18 (ஜூலை-ஜூன்) நிதியாண்டில் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரூ.30,663 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது ஆண்டாக உபரித் தொகையை ரிசர்வ் வங்கி வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூர்- ஏரோ இந்தியா 2019 கண்காட்சி நாளை தொடக்கம்
  • கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மத்திய பாதுகாப்பு துறை சார்பில், ஏரோ இந்தியா - 2019 என்ற பெயரில் நடக்கும் சர்வதேச விமான கண்காட்சி நாளை தொடங்கி 24ம் தேதி வரை நடக்க இருக்கிறது.
  • பெங்களூருவில் அமைந்துள்ள எலஹங்கா விமான படை தளத்தில் நடக்கும் இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் கலந்து கொள்கின்றன. பாதுகாப்பு கருதி விமான கண்காட்சி நடைபெறும் பகுதிகளில் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel