TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 84
சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி இந்த மண்ணுக்கு தமிழ்நாடு என்ற பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து சங்கரலிங்கனார் விருதுநகர் தேசபந்து திடலில் 27.7.1956-இல் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தை தொடங்கினார்.
அண்ணா, ம.பொ.சி. , ஜீவா, கக்கன் போன்றவர்கள் தியாகி சங்கரலிங்கனாரை சந்தித்து உண்ணா நோன்பைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டும் தான் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் உறுதியாக இருந்ததால் 76 நாள்கள் கடந்த நிலையில் 13.10.1956-இல் உயிர் துறந்தார்.
இதையடுத்து, 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றுவதற்கான சட்டத்திருத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நாடாளுமன்றத்தில் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கான சட்டமுன்வடிவு 23.11.1968-இல் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பெயர் சூட்டுவிழா 1.12.1968-இல் சென்னை பாலர் அரங்கில் நடைபெற்றபோது உடல் நலிவுற்ற நிலையிலும் அன்றைய முதல்வர் அண்ணா உரை நிகழ்த்தினார்.
பின்னர் தமிழ்நாடு பெயர் மாற்றம் 14.01.1969 ல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.