Type Here to Get Search Results !

தட்பவெப்ப மாற்றம்




தட்பவெப்ப மாற்றத்திற்கான காரணம்

  • பூமியின் காலநிலையில் ஏற்படும் வெப்ப விளைவுகளுக்கு காரணம் மனிதனின் செயல்களே ஆகும். தொழிற்சாலை மற்றும் நிலக்கரி சார்ந்த தொழிற்கூடங்களிலிருந்து வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களான மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு ஆகியவை காற்று மண்டலத்துடன் கலப்பதால் புவியின் வெப்பநிலையில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.
  • கடந்த நூற்றாண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்கள் வெளிவிடப்பட்டுள்ளதால், வளி மண்டலம் அதிக வெப்பமடைவதோடு பூமியின் வெப்ப நிலையும் உயர்ந்து புவியில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.
  • பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு போன்ற கற்படி எரிசக்தி மூலாதாரங்கள் கண்டறியப்படுவது, எரிப்பது, காடழித்தல், ஈரநில விவசாயம், கால்நடைகள் போன்றவை பசுமை இல்ல வாயுக்களின் மூலாதாரங்கள்.
  • சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில், பூமியில் மட்டுமே உயிர்கள் வாழக்கூடிய ஆதாரம் உள்ளது. பூமியின் தனித்துவமான சூழல் காரணமாக படிப்படியான பரிணாம முன்னேற்றங்களைக் கண்டு உயிர் கோளம் உருவாக காரணமானது. நீர், வாயு மண்டலத்தில் பிராணவாயு மற்றும் பூமி மேற்பரப்பில் சரியான வெப்பநிலை ஆகியவை பூமியில் உயிர்கள் தோன்ற காரணமானது.
  • புவியின் வாயு மண்டலத்தில் 78 சதவிகிதம் நைட்ரஜனும், 21 சதவிகிதம் பிராணவாயுவும் மற்றும் 0.036 சதவிகிதம் கரியமிலவாயுவும் உள்ளது. இவ்வாயு மண்டலம் உயிர் வாழவும் தொடரவும் முக்கியமானது. பிராணவாயு சுவாசிப்பதற்கு பயன்படுகிறது. கரியமிலவாயு தாவரங்களை ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்துவது மட்டுமல்லாது பூமியின் வெதுவெதுப்பான சூழலை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • சூரியனில் இருந்து வரும் சக்தியில் 30 சதவிகிதம் மீண்டும் வானை நோக்கி பிரதிபளிக்கப்பட்டு எஞ்சியது பூமியை அடைந்து காற்றை, கடலை, நிலத்தை மற்றும் பூமியின் மேற்பரப்பை வெதுவெதுப்பாக்கி சராசரி வெப்பநிலையை 15 டிகிரியாக இருக்க உதவுகிறது. அதேபோல் கரியமில வாயு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை புவி பரப்பில் வெப்பத்தை மறு உமிழ்வு செய்து வெப்பநிலை உயர காரணமாகிறது.
  • இத்தகைய வாயுக்களை பசுமை இல்ல வாயு என்கிறோம். கரியமிலவாயு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பால் வாயு மண்டலத்தில் வெப்ப நிலை அதிகரிக்கிறது. வாயு மண்டலத்தில் அதிகரிக்கும் வெப்பத்தால் உயிர் கோளத்திலும் உயிர்கள் மீதும் பல்வேறு பட்ட பாதிப்புகள் உண்டாகும் சாத்தியக்கூறுகள் உள்ளன.



தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம்

  • கடல் மட்டம் உயர்விலிருந்து உயிர்களின் அழிவுவரை தட்பவெப்ப மாற்றம் மனித இனத்தை மட்டுமல்லாது பூமியின் சுற்றுச்சூழலையும் பலவழிகளில் பாதிக்கிறது. பெரும் வெள்ளம், கடும் வறட்சி, புயல், மற்றும் மோசமான தட்பவெப்ப நிலை இன்றைய உலகம் முழுவதும் காணப்படுகிறது.
  • சென்ற நூற்றாண்டிலேயே பூமியின் வெப்பம் 0.6முநீ மேல் உயர்ந்துள்ளது. எதிர்வரும் பத்து ஆண்டுகளில் இந்த நிலைமை மேலும் மாறலாம். எதிர்காலத்தில் பூமியின் வெப்பநிலை 1.4முநீ முதல் 5.8முநீ வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மனித செயல்களால் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள் எண்ணற்கறிய அளவில் பருவமாற்றங்களையும் புவி மாற்றங்களையும் ஏற்படுத்தலாம். இத்தகைய விளைவுகள் சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூகம் மற்றும் பல்வேறு காரணிகளையும் உட்கொண்ட கூட்டு விளைவாக மனித இனம் மற்றும் உயிர்களின் மீது தாக்கமாக விடியும் அபாய நிலை உள்ளது.
தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தின் சில உலகளாவிய விளைவுகள்

  • வானிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகளால் ஏற்படும் வறட்சி, வெள்ளத்தினால் ஏற்படும் உணவு பற்றாக்குறை.
  • கடல்மட்ட உயர்வு - கரையோரம் வசிப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல்.
  • வெப்ப மண்டல பகுதிகளில் கொடிய நோய்கள் அதிகரிப்பு.
  • உயிர் வகைகளின் அழிவு, வேகமாதல்.
  • பெரும்பாலான நாடுகளில் நிலை தடுமாறும் பொருளாதாரம்.
கடல் மட்ட உயர்வு மற்றும் வெள்ளப்பெருக்கு

  • பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பால் பனிக்கட்டிகள் உருகுதல் மற்றும் பெருங் கடலில் ஏற்படும் வெப்ப நிலை மாற்றத்தினாலும் கடலின் மட்டம் உயருகிறது. கடல்மட்ட உயர்வால் வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது.
உடல் நலம்

  • வெப்பம் சம்பந்தமான நோய்கள், பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பால் ஏற்படலாம். அதிகமான பூமியின் வெப்பநிலையால் தவிர்க்க முடியாத காலரா, டெங்கு, மலேரியா ஆகிய தொற்று நோய்கள் மிகவும் அதிகமாக பரவும் என கணிப்புகள் கூறுகின்றன.
விவசாயம்

  • வெப்பநிலை உயர்வு மற்றும் வறட்சி, விவசாய உற்பத்தியையும் விவசாய உற்பத்தியின் தன்மையையும் பாதிக்கிறது. இந்த தட்பவெப்ப மாற்றம் பல வானிலை மாற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக விளைதல் பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இந்த வெப்ப நிலை அதிகரிப்பால் பூச்சித்தாக்கம் அதிகமாகவும் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படக் கூடும்.
வனஉயிரினங்கள்

  • தட்பவெப்ப மாற்றமும் புவி வெப்பமடைதலும் வனவாழ் உயிரினங்களுக்கு பெருத்த ஊறுகளை விளைவிக்கும். ஆர்ட்டிக் மற்றும் அண்டார்ட்டிக்காவில் வெப்ப நிலை உயர்வால் பனிக்கட்டி பகுதிகள் பாதிக்கப்பட்டு உயிரினங்களுக்கும் வாழ்விடங்களுக்கும் பெருத்த சேதம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.



வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் பின் தங்கிய நிலை

  • தட்பவெப்ப மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளை உலகம் முழுவதும் உணரப்பட்டாலும், அதனால் பெரிதும் பாதிக்கப்படுவது வளர்ந்து வரும் நாடுகளே.
  • ஏழை நாடுகள் அதிக இன்னலுக்குள்ளாவது, அந்நாடுகளின் பொருளாதாரம் இயற்கை வளங்களை சார்ந்ததாக உள்ளதும்,
  • பாதிக்கப்படும் பகுதிகளில் அதிக மக்கள்தொகை இருப்பதும்,
  • அதிக பற்றாக்குறை காணப்படுவதும்,
  • போதிய உள்கட்டமைப்பு வசதியின்மையும், இயற்கை சீற்றத்தை சமாளிக்க வசதியின்மையும், போன்றவை காரணமாகும்.
  • தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளே அதிகமாக பசுமை இல்ல வாயுக்களை வெளியிட காரணமாக இருக்கின்றன. அவை உலகளாவில் 20 சதவிகிதம் இருந்தாலும் 80 சதவிகிதம் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிட காரணமாகின்றன.
  • எதிர்பாராதவிதமாக மற்ற நாடுகளைப்போல இந்தியாவும் புவிவெப்பமாதலினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஒன்றாகும்.
  • ஐக்கிய நாடுகளின் குழும அறிக்கையில், இமயமலையின் பனிக்கட்டிகள் உருகத்தொடங்கி உள்ளது எனவும், 2035ம் ஆண்டிற்குள் அவை மறைந்துவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் தெரிவிக்கிறது.
  • கடந்த 1990-லிருந்து பத்தாண்டுகள் மிக வெப்பமான ஆண்டாகவும் 1998ம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டது.
  • ஒரு மீட்டர் கடல்மட்ட உயர்வு இந்தியாவில் 7 மில்லியன் மக்கள் இடம் பெயர காரணமாகும்.
  • தண்ணீர் பற்றாக்குறையால் 50 கோடி மக்கள் பாதிப்படையலாம்.
  • குளிர்கால மழையளவு இந்திய துணைக்கண்டத்தில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அடுத்த முப்பது வருடங்களுக்குள் முப்பது சதவிகித உணவு உற்பத்தி குறையலாம்.
  • கடல் மட்டம் 40 சென்டிமீட்டர் வரை உயரலாம் அதனால் 50 மில்லியன் மக்கள் வீடுகளை இழக்க நேரிடலாம்.
  • தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்புகள் உள்ளது.
  • நாட்டின் பெரும் பகுதி பல்லுயிர் பண்மம் பேராபத்திற்கு உள்ளாகவும் வெப்ப நிலை 1.5முநீ முதல் 2.5முநீ அதிகரித்தால், 25 சதவிகித தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் அழிவை நோக்கி செல்ல ஏதுவாகும்.
  • விவசாயம் பொய்த்தல், மகசூல் ஏமாற்றம், ஆகியவற்றால் உணவு பற்றாக்குறை நாட்டில் ஏற்படலாம்.
  • இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் வெப்ப நிலை 2.5முநீ முதல் 5முநீ வரை உயரலாம்.
  • அதீத வெப்பமும், குளிரும் மற்றும் மிகையான மழையளவும் (மேற்கு கடற்கரை மற்றும் மத்திய மேற்கு பகுதியில்) ஏற்படலாம்.
  • பெருவாரியான மாநிலங்களில் மலேரியா அதிகரிக்கும். குறிப்பாக நாட்டின் வடபகுதியில் அதிகமாகவும், தென்பகுதியில் குறைந்தும் காணப்படும்.
  • வெள்ளம், வறட்சி அதிகமாகலாம். விவசாய மகசூல் குறையலாம். காடுகள் அழிவு மற்றும் பல சுற்றுச்சூழல் பிரச்னைகளாலும் மக்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.
  • சுருக்கமாக கூறினால் இந்தியர்கள் பல கோணங்களில் பாதிப்படையலாம். உடல்நலம் பாதித்தல், விவசாயம் பொய்த்தல், வளமிழந்த இயற்கை கேடான சமூக நலம் என பண்முக இன்னல்களால் அவதிப்படுவர்.
என்ன செய்ய முடியும்?

  • இந்த சூழ்நிலையில் வளர்ந்த நாடுகளை குறைகூறுவதோடு அல்லாமல் இந்தியா போன்ற வளரும் நாடுகள் உண்மை நிலையினை ஏற்றுக்கொண்டு தட்பவெப்ப மாறுபடுதலை தடுக்கும் முறைகளில் பெரும் பங்கை மேற்கொள்வது அவசியமாகும்.
  • தட்பவெப்ப மாற்றம் நம் வாழ்க்கை மற்றும் சுற்றுப்புறத்தை மட்டும் தாக்கவில்லை. இவற்றின் எதிரொலியாக பிற்கால சந்ததியினருக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
  • உலகளவில் அரசாங்கங்களும், அறிவியலாளர்களும், தொழிலதிபர்களும், சிந்தனையாளர்களும், தட்பவெப்ப மாற்றத்தை தடுக்க பல வழிமுறைகளை செய்து வருகின்றனர். பசுமை இல்ல வாயுக்களை குறைப்பது முதல், கொள்கை ரீதியான செயல் திட்டங்கள் என பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அனைத்தும் உலக நன்மைக்கு வழி செய்யும் என்று நம்புவோமாக.



தட்பவெப்ப மாற்ற தடுப்பு- தனிமனித செயல்பாட்டின் மகத்துவம்

  • நம் அன்றாட வாழ்க்கையில் சூழலுக்குகந்து செயல்களை செய்வதால் சக்தி மூலாதாரங்களை காக்க உதவமுடியும். சரியான நோக்கங்களை கொண்ட செயல்கள் செய்வது, குறைவான நுகர்வு, புலால் உண்ணாமை, நடைப்பயணங்கள் மற்றும் வளங்களை வீணாக்காமை ஆகியவை சிறந்த ஆரோக்கியம் மட்டுமல்லாது தட்பவெப்ப மாற்றத்தைக் குறைக்கவும் உதவும்.
  • குறைவான தொலைவிலுள்ள வேலை மற்றும் கடைகளுக்கு நடை பயணம், பொது போக்குவரத்தை பயன்படுத்துதல் மற்றும் குறைவான எரிசக்தி மூலம் இயங்கும் வாகனங்களை உபயோகிக்க முயற்சிக்க வேண்டும்.
  • வீட்டில் பயன்படுத்தப்படும் எரிசக்தி மூலங்களை சரியாக பராமரிக்க வேண்டும்
  • மின்சார நீர் சூடேற்றிக்குப் பதிலாக சூரிய சக்தி மூலம் தண்ணீரை சூடேற்ற முயற்சிக்க வேண்டும்
  • சக்தியை சேகரிக்கும் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்
  • தேவையற்ற விளக்குகளை அணைக்க வேண்டும்
  • தேவையற்ற வெளிப்புற மற்றும் அழகு படுத்தக்கூடிய விளக்குகளின் பயன்பாட்டை தவிர்த்தல் வேண்டும்.
  • பயன்படுத்தாத மின்சாதனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்
  • அருகாமையில் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சமுதாயம் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
  • காய், கனித் தோட்டம் அமைத்தல் நலம்.
  • தேவையற்ற கழிவுகள் மற்றும் மீதமுள்ள உணவுகளைக் கொண்டு உயிர் உரங்களை தயாரிக்க வேண்டும்
  • மனித செயல்களால் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள் எண்ணற்கறிய அளவில் பருவமாற்றங்களையும் புவி மாற்றங்களையும் ஏற்படுத்தலாம். இத்தகைய விளைவுகள் சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூகம் மற்றும் பல்வேறு காரணிகளையும் உட்கொண்ட கூட்டு விளைவாக மனித இனம் மற்றும் உயிர்களின் மீது தாக்கமாக விடியும் அபாய நிலை உள்ளது.
  • மேற்கூறிய சில யோசனைகளை கையாண்டாலே இப்பூமியை மேலும் வெப்பமடைவதிலிருந்து காப்பாற்ற முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel