Type Here to Get Search Results !

மத்திய பட்ஜெட் 2018 - 2019

  • 2018-19ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1, 2018 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • இது சுதந்திர இந்தியாவின் 88-வது மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 5வது பட்ஜெட் தாக்கல் ஆகும்.
  • இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பண மதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துதல் என்ற இரண்டு பெரிய நிதித் தீர்மானங்களுக்குப் பிறகு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகும்.
  • இது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் இறுதி (2018-19ம் நிதி ஆண்டிற்கான 2018ம் ஆண்டு பட்ஜெட்) முழுமையான பட்ஜெட் தாக்கலாகும்.
  • 2018ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டமானது பொருளாதாரத்தை வழி நடத்திச் செல்லும் துறைகளாக விவசாயம், உள்கட்டமைப்பு, நிதியியல், பொது சேவைகள் போன்ற பல்வேறு துறைகளை அடையாளம் காட்டியுள்ளது.

பொருளாதார நிலை

  • பொருளாதாரமானது 8% வளர்ச்சியை அடைய உறுதியாக உள்ளது.
  • உற்பத்தி, சேவைகள் மற்றும் ஏற்றுமதி ஆகியவை மீண்டும் நல்ல வளர்ச்சிப் பாதையை திரும்ப அடைந்திருக்கிறது.
  • 2017-18ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்3% வளர்ச்சியை அடைந்திருப்பது பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறியாகும்.
  • நடப்பு நிதிநிலை ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி விகிதம்2% – 7.5% என்ற அளவில் இருக்கும்.
  • ஊரகப் பொருளாதாரத்தில் விவசாயம் மற்றும் சமுதாய அடிநிலை வகுப்பினரின் நிலை
  • பெரும்பான்மையான குறுவை சாகுபடி பயிர்களைப் போல அறிவிக்கப்படாத அனைத்து கோடைப் பருவ பயிர்களுக்கும் அதன் உற்பத்தி விலையை விட5 மடங்கு குறைந்த பட்ச ஆதரவு விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.
  • 2014-15ம் ஆண்டில்5 லட்சம் கோடியாக இருந்த விவசாயத்திற்கான வங்கிக் கடனானது 2018 – 19ம் ஆண்டில் 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மொத்தம் ரூ. 10000 கோடி ரூபாய் நிதித்தொகுப்பைக் கொண்டு மீன்பிடித்தல், மீன் வளர்ப்பு நிதியம் மற்றும் கால்நடை பராமரிப்பு நிதியம் அமைக்கப்படும்.
  • ரூ. 500 கோடி நிதியைக் கொண்டு வேளாண்மைக்காக ஆப்பரேஷன் கிரீன் எனும் புதிய விவசாயத் திட்டம் தொடங்கப்படும்.
  • நாட்டிலுள்ள 86% சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக 22,000 கிராமப்புற சந்தைகளை உருவாக்கி அவற்றை கிராமப்புற விவசாய சந்தைகளாக மேம்படுத்துதல்.
  • விவசாய சந்தை உட்கட்டமைப்பு நிதிக்காக ரூபாய் 2000 கோடி ஒதுக்கீடு.
  • உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்திற்கான நிதி 1400 கோடியாக இரட்டிப்பாக்கி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் தொகையானது கடந்த ஆண்டின் 42,500 கோடியிலிருந்து 2019ம் ஆண்டில் 75,000 கோடியாக உயர்த்தப்படும்.
  • தேசிய வாழ்வாதாரத் திட்டத்திற்கு 5750 கோடியும், நிலத்தடி நீர் பாசனத் திட்டத்திற்கு 2600 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச LPG இணைப்பு 8 கோடி ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும்.
  • 2022ல் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டு கிராமப்புறப் பகுதிகளில் 1 கோடிக்கும் மேலான வீடுகள் கட்டித் தரப்படும்.
  • 321 கோடி தனிமனித வேலை நாட்கள், 3.17 லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு கிராமப்புற சாலைகள், 51 லட்சம் புதிய கிராமப்புற வீடுகள், 1.88 கோடி கழிப்பறைகள், 1.75 கோடி புதிய வீடுகளுக்கான மின் இணைப்புகள் ஆகியவற்றிற்கான திட்டங்கள் உள்ளன.
கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு

  • 2018 பட்ஜெட்டானது குழந்தைகள் பள்ளி (Pre-nursery School) முதல் 12ம் வகுப்பு வரையுள்ள கல்வியைக் கூறுபடுத்தாமல் ஒட்டுமொத்தமாக நடத்த அறிவுறுத்துகிறது.
  • சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக38 லட்சம் கோடி செலவிட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆசிரியர் மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த பி.எட். திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து பள்ளிகளும் படிப்படியாக கரும்பலகையில் இருந்து டிஜிட்டல் பலகையாக மேம்படுத்தப்படும்.
  • உள்கட்டமைப்பைப் புத்துயிராக்குதல் மற்றும் கல்வியின் அமைப்பு (Revitalising of Infrastructure and System of Education – RISE) திட்டமானது 2019ம் ஆண்டு துவங்கப்படும்.
  • 2 முழுமையான திட்டமிடுதல் மற்றும் கட்டிடக்கலை பள்ளிகளை உருவாக்குதல்.
  • ஒவ்வொரு பழங்குடியின மண்டலத்திலும், அனைத்துப் பழங்குடியின மாணவருக்கும் 2022 ம் ஆண்டிற்குள் ஏகலைவா உறைவிடப்பள்ளி அமைக்கப்படும்.
  • உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்காக அடுத்த 4 வருடங்களில் 1 லட்சம் கோடி முதலீடு.
தேசிய சமூக உதவித் திட்டத்திற்கு 9975 கோடி நிதி ஒதுக்கீடு

  • 10 கோடி ஏழை மற்றும் அடிமட்ட நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அரசால் நிதியளிக்கப்படும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்று கருதப்படும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்படும்.
  • இத்திட்டத்தின் (NHPS) கீழ் 2வது மற்றும் 3வது நிலை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 50 கோடி பேர் பயன் பெறுவர்.
  • காசநோயின் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கை, மற்ற நோயின் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. அதனால் அரசாங்கம் 600 கோடி ரூபாயில் அனைத்து காசநோயாளிகளுக்கும் ஊட்டச்சத்து உணவு வழங்கும்.
  • தற்போது உள்ள மாவட்ட மருத்துவ மனைகளை மேம்படுத்தி குறைந்தபட்சம் 3 பாராளுமன்ற தொகுதிக்கு 1 மருத்துவக் கல்லூரி என்ற விகிதத்தில் 24 புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படும்.
  • கங்கையை தூய்மைப்படுத்துவதற்காக 187 திட்டத்திற்கு அனுமதி வழங்கிய நிலையில் அவற்றில் 47 திட்டங்கள் முடிவடைந்துள்ளன. கங்கை நதிக்கரையானது திறந்தவெளி மலம் கழிப்பதில் இருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர, சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு

  • (MSME) நடுத்தர சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும் விதமாக 3794 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2018-19ம் ஆண்டில் முத்ரா யோஜனா திட்டத்திற்கு 3 லட்சம் கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
  • துணிகர முதலீட்டு நிதிகளையும், ஏஞ்சல் முதலீட்டாளர்களின் வளர்ச்சியையும் உயர்த்துவதற்கு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • இந்த ஆண்டு 70 லட்சம் அமைப்புகள் உருவாக்கப்படும்.
  • அரசின் அனைத்துக் துறைகளிலும் உள்ள புதிய தொழிலாளர்களுக்கு அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர் வைப்பு நிதியில் அரசு 12 சதவீதப் பங்களிப்பை செலுத்தும். ஜவுளித் துறைக்கு 7148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தற்போதிலிருந்து பெண் தொழிலாளர்களுக்கு அவர்களின் முதல் மூன்று வருடகால பணிக் காலத்தில், வைப்பு நிதியில் அவர்களின் பங்கு 8 சதவிகித அளவிற்கு குறைக்கப்படும். அதே சமயம் வேலை வழங்குநரின் பங்களிப்பு குறைக்கப் படாது.
  • உள்கட்டமைப்பு வசதிக்கான நிதி ஒதுக்கீடு 9 லட்சம் கோடியாக அதிகரிப்பு. 10 அதி முக்கிய சுற்றுலாத் தலங்களை அடையாள சுற்றுலாத்தலங்களின் சின்னமாக மேம்படுத்துதல். 5,35,000 கோடி மதிப்பில் முதல் கட்டமாக 35,000 கி.மீ சாலை ஏற்படுத்துதல்.
இரயில்வே

  • இரயில்வேயின் மூலதன செலவிற்கு 1,48,528 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு இரயில் பல்கலைக்கழகம் குஜராத்திலுள்ள வதோதராவில் துவங்கப்பட உள்ளது.
  • 4000 கி.மீ கொண்ட மின்மயமாக்கப்பட்ட இரயில் பாதை அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • சரக்குப் போக்குவரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு வழிதடங்கள் அமைக்கும் பணியை நிறைவு செய்தல்
  • நடப்பு நிதி ஆண்டில் 3600 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட இரயில் பாதைகளை புதுப்பிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 600 முக்கிய இரயில் நிலையங்களை மேம்படுத்துதல் (Redevelopment).
  • மும்பை நகர உள்ளூர் இரயில் திட்டத்திற்கு 11,000 கோடி ரூபாய் மதிப்பில் 90 கி.மீ தூரத்திற்கு இரட்டை வழித்தடம் ஏற்படுத்துதல்.
  • மும்பை புறநகர் இரயில் திட்டத்திற்கு கூடுதலாக 150 கி.மீ. பயணப் பாதை திட்டம் இடப்பட்டுள்ளது.160 கி.மீ புறநகர் வழித்தடம் பெங்களூருவில் மெட்ரோவிற்காக அமைக்ப்படும்.
வான்வழிப் போக்குவரத்து

  • ஒரு ஆண்டில் 100 கோடி பயணிகளை கையாளும் விதமாக விமான நிலையங்களின் திறனை 5 மடங்குக்கும் மேலாக அதிகரித்தல்.
  • பிராந்திய இணைப்பிற்காக, 56 பயன்பாட்டிலில்லாத விமான நிலையங்கள், 31 புதிய ஹெலிபேடுகள் ஆகியவற்றை இணைத்தல்.
  • இத்துறையிலுள்ள அனைத்து நிதி சேவைகளையும் ஒழுங்குபடுத்த ஒன்றுபட்ட ஆணையத்தை அமைத்தல்.
டிஜிட்டல் பொருளாதாரம்

  • செயற்கை நுண்ணறிவில் ஒரு தேசிய அளவிலான திட்டத்தை உருவாக்க நிதி ஆயோக் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது Cyber-Physical அமைப்புகளுக்கான திட்டத்தைத் துவங்க உள்ளது.
  • டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கான நிதி 3073 கோடியாக இரட்டித்து ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 5 கோடி கிராமப்புற மக்களுக்கு இணைய வசதிக்காக 5 லட்சம் wi-fi hotspot வசதியினை ஏற்படுத்துதல்.
  • தொலை தொடர்புத் துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மற்றும் மேம்படுத்துவதற்காக 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு

  • சென்ற ஆண்டு74 லட்சம் கோடியாக இருந்த பாதுகாப்பு பட்ஜெட்டானது 2.95 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
  • 2 பாதுகாப்புத் தொழிலக உற்பத்திப் பாதைகள் (Defence Industrial Production corridor) அமைத்தல்.
  • ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் திறன்களை அதிகரிக்கவும், இராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
  • பாதுகாப்புத் தளவாடங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஊக்கம் தரும் விதத்தில் தொழிற்துறைக்கு நட்புரீதியான விதத்தில் புதிய ராணுவத் தளவாட உற்பத்திக் கொள்கை (2018) ஒன்று அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பங்குவிலக்கல் மற்றும் தங்கம்

  • பங்கு விலக்கலுக்கான இலக்கு 72,500 கோடியாக இருந்தது; இது 1 லட்சம் கோடியாக உயருமென எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2018-19 ஆம் ஆண்டிற்கான புதிய பங்கு விலக்கல் இலக்கானது 80,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேசிய காப்பீட்டு நிறுவனம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், ஓரியண்டல் இந்தியா காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இணைக்கப்பட்டு ஒரே நிறுவனமாக செயல்படும்.
  • தங்கத்தை சொத்தாக மாற்றும் விதமாக விரிவான தங்கக் கொள்கை வகுக்கப்படும்.
  • நுகர்வோருக்கு எளிதான மற்றும் ஒழுங்கு முறைபடுத்தப்பட்ட தங்க பரிமாற்றுக்கான வியாபாரத் திறன் வாய்ந்த அமைப்பை நாட்டில் ஏற்படுத்துதல்.
  • மக்கள் சிரமமற்ற தங்க வைப்பு கணக்கை (Gold Deposite Account) தொடங்கும் வகையில் தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும்.



ஊதியம்

  • ஜனாதிபதிக்கு ரூ 5 லட்சம் ஊதியம்
  • துணை ஜனாதிபதிக்கு ரூ 4 லட்சம் ஊதியம்
  • மாநில ஆளுநருக்கு மாதத்திற்கு ரூ. 3.5 லட்சம் ஊதியம்
  • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் தானாக மாற்றியமைக்கும் விதமாக சட்டம்.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாட 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி மேலாண்மை

  • செலவினங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டுத் தொகையானது ரூபாய் 57 லட்சம் கோடி.
  • திருத்தப்பட்ட நிதிப்பற்றாக்குறை மதிப்பீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்5% ஆகும்.
  • மத்திய அரசின் கடனானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% ஆக குறைக்கப்படுதல்.
வரிவிதிப்பு பெரு நிறுவனம் / தனிநபர் / சுங்கவரி

  • மத்திய அரசின் மொத்த செலவினம்57 லட்சம் கோடியாக இருக்கும். 2018-2019 நிதி ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.3% ஆக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மாத சம்பளம் பெறும் தனிநபர் வருமான வரிவிதிப்பில் மாறுதல் இல்லை. 2016-17ம் ஆண்டில்6% இருந்த நேரடி வரி வருவாயானது, 2017-2018 (ஜனவரி 5 2018 வரை) நிதி ஆண்டில் 18.7% ஆக உயர்ந்துள்ளது.
  • தனிநபர் வருமான வரியிலிருந்து கூடுதலாக 90,000 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் திறம்பட வரி செலுத்துவோர் எண்ணிக்கை47 லட்சம் கோடியிலிருந்து 8.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
  • விவசாய உற்பத்தி நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்ட, 100 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • ரியல் எஸ்டேட் துறை – அசையா சொத்துக்களின் பரிவர்த்தனையில் எவ்வித மாற்றமுமில்லை. இந்த நிபந்தனை எங்கு நிலமதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் மிகாமல் உள்ளதோ அங்கு மட்டும்.
  • 250 கோடி ரூபாய் வரை வருமானமீட்டும் நிறுவனங்களுக்கு 25% ஆக கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துப் படித்தொகை மற்றும் மருத்துவ செலவினங்கள் போன்றவற்றிற்கு தற்போது வழங்கப்படும் விதிவிலக்கிற்கு பதிலாக அனைவருக்கும் நிலையாக 40,000 ரூபாயை கழித்தல்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகப்படுத்தப்பட்ட பயண சலுகைகள் தொடர முன்மொழியப்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேஷன் வரி மீதான கல்வி மற்றும் சுகாதார தீர்வை (Cess) 4% ஆக அதிகரிப்பட்டுள்ளது.
  • சர்வதேச நிதிச்சேவை மையங்களில் இயங்கிவரும் பங்குச்சந்தைகளில் வர்த்தகத்தை ஊக்குவிக்க சர்வதேச நிதிச்சேவை மையங்களுக்கு அதிகப்படியான சலுகைகள்.
  • மூலதன ஆதாய வரியிலிருந்து சில வெளிநாடுவாழ் இந்தியர்களால் பரிமாற்றிக் கொள்ளப்படும் பங்குகள், பத்திரங்கள் மற்றும் சர்வதேச நிதிச் சேவை மையங்களில் செயல்படும் வரி செலுத்தும் பெரு நிறுவனங்களல்லாதவை ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச மாற்றுவரி (Minimum Alternative Tax – MAT) மற்ற பெருநிறுவனங்களுக்கு விதிக்கப்படும் MATன் சமவிகிதத்தில் 9 சதவிகித சலுகை விகிதத்தில் விதிக்கப்பட வேண்டும்.
  • அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணமாக செலுத்தும் முறைக்கு அனுமதி இனி கிடையாது. நீண்ட கால மூலதன ஆதாயம் சீர்செய்யப்படும்.
  • விலைக்குறியீட்டுப் பயன்களை தவிர்த்து (Indexation Benefits) ரூ.1 லட்சத்தை விட அதிகமான நீண்டகால மூலதன ஆதாயத்திற்கு, 10% அளவிலான வரி விதிப்பு ஆனாலும் ஜனவரி 31, 2018 வரையிலான அனைத்து ஆதாயங்களுக்கும் சட்ட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது (Without allowing any indexation benefits).
  • விகித பங்கு சார்ந்த பரஸ்பர நிதி மூலம் பகிரப்படும் வருமானத்திற்கு 10% வரியை அறிமுகப்படுத்த திட்டம்.
மொபைல் போன் மீதான சுங்கவரி 20% அதிகரிப்பு



  • தொலைக்காட்சிப் பெட்டியின் குறிப்பிட்ட சில உதிரி பாகங்களுக்கு 15% ஆக சுங்கவரி அதிகரிப்பு.
மூத்த குடிமக்களுக்கான சலுகைகள்

  • வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையத்தில் வைப்பு நிதி மூலம் பெறப்படும் வட்டி வருவாய் (Interest Revenue) மீதான வரி விலக்கானது 10,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வருமானம் பெரும் இடத்தில் செய்யப்படும் வரிக்குறைப்பை (Tax Deducted at Source – TDS) பிரிவு 194Aவின் கீழ் கழிக்க வேண்டியதில்லை.
  • இந்த சலுகையானது அனைத்து நிரந்தர வைப்பு நிதி மற்றும் தொடர் வைப்பு நிதி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் வட்டிக்கும் பொருந்தும்.
  • பிரிவு-80D யின் கீழ் விலக்களிக்கப்படும் சுகாதார காப்பீட்டிற்கான (பிரீமியம்) தொகை 30,000 ரூபாயிலிருந்து 50000 ரூபாயாக அதிகரிப்பு.
  • ஒரு சில குறிப்பிட்ட கடுமையான வியாதிகளுக்கான மருந்து செலவிற்கான வரிவிலக்கானது (மூத்த குடிமக்களுக்கு) 60,000 லிருந்து 1 லட்சம் வரையும், மிக மூத்த குடிமக்களுக்கு 80,000 லிருந்து 1 லட்சம் வரையும், மற்றும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் 1 லட்சம் வரையும் பிரிவு 80 DDBயின் கீழ் உயர்த்தப்பட்டுள்ளது.
  • பிரதம மந்திரி வய வந்தனாத் திட்டத்தை 2020-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மூத்த குடிமகன் ஒருவருக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள5 லட்சம் என்ற முதலீட்டு அளவானது 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel