Type Here to Get Search Results !

எம்.பி.க்கள் மாதிரி கிராமத் திட்டம் / சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (Sansad Adarsh Gram Yojana -SAGY)

பிரதமரின் வேண்டுகோள்
  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிரி கிராமத் திட்டமான சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்து தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.
  • "நமது நாட்டில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் அது வினியோக அடிப்படையில் இருப்பதுதான். ஒரு திட்டம் லக்னோவுக்காக தொடங்கப்பட்டால் அது பிற இடங்களிலும் திணிக்கப்படுகிறது. இதை மாற்றும் வகையில் விநியோக அடிப்படையில் அல்லாமல் தேவையின் அடிப்படையில் வளர்ச்சியை கொண்டு செல்வது தான் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டம். ஏனென்றால் இப்போதைய அவசிய தேவை கிராமங்களின் வளர்ச்சிதான்."
நோக்கம்
  • சன்சத் ஆதர்ஷ் திட்டம் 2014ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கப்பட்டது. மாதிரி கிராமம் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
திட்ட செயல்பாடு
  • இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு எம்பியும் ஒரு கிராமத்தினை தத்தெடுப்பார். சமூக மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சிகளை செய்துகொள்ள வழிகாட்டப்படும். உள்ளுர் வளர்ச்சி மற்றும நிர்வாகத்தில் ஆதர்ஷ் கிராமம் மற்ற கிராமங்களுக்கு மாதிரி பள்ளியாக இருக்கும்.
  • கிராம மக்களின் ஒத்துழைப்புடனும் அறிவியல் தளவாடங்களின் உதவியுடனும், கிராம வளர்ச்சித் திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் உருவாக்கப்படும். அதன் பிறகு முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாநில அரசின் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தொடர்ந்து மாநில அளவிலான அதிகாரக்குழு, அதை ஆய்வு செய்யும். தேவைப்பட்டால் சில மாற்றங்களை பரிந்துரைக்கும். அதன் பிறகு முக்கியத்துவம் அடிப்படையில் நிதி ஆதாரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
நடவடிக்கைகள்
  • 2016ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தினை மாதிரியாக மேம்படுத்துகிறார்.
  • ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாளராக இருந்து ஒருங்கிணைத்து உள்ளுர் அளவில் பணிகள் மேற்கொள்வது பற்றி கண்காணிக்கிறார். மத்திய ஊரக வளர்ச்சித் துறையானது, 653 பொறுப்பு அதிகாரிகளுக்கு இந்திய அளவில் 9 மண்டல அளவில் பயிற்சி திட்டத்தினை நடத்தியுள்ளது. 
  • இத்திட்டத்திற்காக தேசிய அளவில் கருத்துப்பட்டறை கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர்- 23 முதல் 24 வரை போபாலில் ஊரக வளர்ச்சித் துறையால் நடத்தப்பட்டது. இது தவிர கிராம வளர்ச்சித் திட்டம் எப்படி நடைபெறுகிறது என்பதை கண்காணிக்க 35 குறியீடுகள் கொண்ட பஞ்சாயத் தர்பான் என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளது.
ஜம்மு காஸ்மீர்
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் திரேகாம் வட்டத்தில் உள்ள லாடர்வான் என்ற கிராமத்தில், பெரும்பாலான மக்களின் தொழில் விவசாயம். இங்கு விவசாயத்தினை அறிவியல் ரீதியாக மேம்படுத்த ஏதுவாக 379 விவசாயிகளின் செல்போன் எண்கள் விவசாய அறிவியல் மையமான கிரிஷி விஞ்ஞான் கேந்திராவான கே.வி.கே. என்ற அமைப்புடன் இணைக்கப்பட்டது. 
  • இதன் மூலம் விவசாயிகளுக்கு வானிலை பற்றியத் தகவல்கள், பயிர் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் முஸாபர் உசேன் பெய்க் வழிகாட்டுதல் படி மேற்கொள்ளப்பட்டது.
  • இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஒழுங்காக விவசாய ஆலோசனைகள் செல்போனில் கிடைக்கின்றன. இதில் அறிவியல் ரீதியில் விதைப்பு முறை குறித்த சிக்கலான விவரங்கள், மண் பரிசோதனை, பயிர் பாதுகாப்பு, வேளாண் நடைமுறைகள், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள், சந்தை விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் விவசாயிகளுக்கு சென்றடைகின்றன. 
  • இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விவசாயம் சார்ந்த முடிவுகளையும், சந்தைப் படுத்துதல் நடவடிக்கைகளையும் தீர்மானித்துக் கொள்ள முடிகிறது.



தமிழ்நாடு
  • தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவ மங்கலம், கிராமம் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனால் சன்சத் கிராம வளர்ச்சித்திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அவர், இந்த கிராமத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சில வழிகளை கண்டறிந்துள்ளார். 
  • அதாவது கயிறு, தோல் மற்றும் தேங்காய் சார்ந்த தொழில் பயிற்சி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று அவர் கூறியிருக்கிறார். மாவட்ட நிர்வாகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு நாடாளுமன்ற உறுப்பினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். இது தவிர இந்திய கயிறு வாரியம், தென்னை வளர்ச்சி வாரியம், மத்திய தோல் ஆராய்ச்சி மையம், ஆகியவற்றின் சிறப்பு பயிற்சிக்காக வாய்ப்பினையும் அவர் பெற்றுத் தந்துள்ளார்
  • இதன் மூலம் சிறந்த தொழில் முனைவோரை உருவாக்குவதற்காக 2 மாத கயிறு திரிப்பு பயிற்சிக்கும் அவர் ஏற்பாடு செய்துள்ளார். 120 பெண்கள் கயிறு திரிப்பு பயிற்சியும், 117 பேர் தோல் பொருள் தயாரிப்பு பயிற்சியும், 27 பேர் தென்னை சார்ந்த மேம்பாட்டு பயிற்சியும் பெறுகின்றனர் இவர்கள் பயிற்சி முடிந்ததும், அவர்கள் சுயமாக தொழில் புரிந்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel