Type Here to Get Search Results !

பிரதான் மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷ யோஜனா (Pradhan Mantri Swasthya Suraksha Yojana)

  • முன்மாதிரி கிராமத் திட்டம் ( Sansad Adarsh Gram Yojana - ) ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதியத் திட்டமாக இந்திய அரசால் 2014 இல் தொடங்கப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம் விவசாயம், கைத்தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிலுள்ள கிராமங்கள் மேம்படுத்தப்படும்.
  • மூன்று கிராமங்களை எடுத்து, அவற்றை முன்மாதிரி கிராமங்களாக இத்திட்டத்தின் மூலம் மேம்படுத்திய பின்னர், நாடெங்கும் உள்ள பிற கிராமங்களிலும் இத்திட்டம் செயற்படுத்தப்படும்.
18 அம்ச வழிகாட்டுதல்கள்

"முன்மாதிரி கிராமம்' திட்டம் தொடர்பான 18 அம்ச வழிகாட்டுதல்களை பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகம், கிராமப் பஞ்சாயத்து ஆகியவை இணைந்து கடைப்பிடிக்க வேண்டிய இந்த வழிகாட்டுதல்களின் விவரம் வருமாறு:


காந்தியின் "சுயராஜ்ஜிய'க் கொள்கையைக் கடைப்பிடித்தல்.
மிக ஏழை, நலிவடைந்தோருக்கு பயன் கிடைத்தல்.
கிராமத்தைத் தேர்வு செய்ய ஒரு மாத கால அவகாசம்.
சமவெளியில் 3,000-5,000, மலை, பழங்குடியினர் பகுதியில் 1000-3000 என மக்கள் தொகை உள்ள கிராமத்தைத் தேர்வு செய்தல்.
பஞ்சாயத்து, மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து திட்ட அறிக்கை தயாரித்தல்.
நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி, செலவினம் தொடர்பாக மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறைச் செயலர் தலைமையிலான தேசியக் குழுவுடன் ஆலோசனை நடத்துதல்.
மக்கள் பங்களிப்புடன் வெளிப்படையாகச் செயல்படுதல்.
கிராமப் பஞ்சாயத்துகள், மக்கள் ஆதரவுடன் அமலாக்கம்.
உள்ளூர், சமூக, கலாசாரங்களுக்கு மதிப்பளித்தல்.
தன்னார்வ, ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறுதல்.
சுகாதாரம், சமூக, மனித வளம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அடிப்படை வசதிகள், சமூகப் பாதுகாப்பு, நல்லாளுகைத் திட்டங்களை வகுத்தல்.
சாலை, குடிநீர், சுகாதார அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க உத்தி வகுத்தல்.
நவீன தொலைதொடர்பு, தொழில்நுட்ப வசதிகள், வேளாண் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்குதல்.
தனியார், தன்னார்வ அமைப்புகள், கூட்டுறவுத் துறைகளின் ஒத்துழைப்பைப் பெறுதல்.
திட்ட செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்தல்.
திட்டத்தின் நன்மை பற்றி பிரசாரம் செய்தல்.
திட்ட அமலாக்கத்துக்குப் பிந்தைய தேவைகளை ஆராய்தல்.
திட்ட முடிவில் மதிப்பீட்டு அறிக்கை தயாரித்தல்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel