Type Here to Get Search Results !

பசுமை வீடு திட்டம்




  • ஏழைகளின் வீடுகளுக்கான தேவையை நிறைவு செய்யும் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தமிழக அரசின் முன்னோடி திட்டம் ஆகும்.
  • நமது நாட்டிலேயே 300 சதுர அடி பரப்பளவில் சூரிய மின்சக்தி விளக்குகளுடன் கூடிய வீடுகள் வழங்குவது இதுவே முதன் முறையாகும்.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்
  • ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும்மக்கள் அனைவரும் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் பெற தகுதியானவர்கள்.
  • ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில், ரூ.2.10 இலட்சம் அலகுத் தொகையுடன் மாநில அரசின் முழு நிதி உதவியுடன் கட்டப்படுகிறது.
  • ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகியவசதிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கட்டப்படுகிறது.
  • ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி சக்தியில் எரியும் அடர்குறு விளக்குகள் (5) அமைக்கப்படும். இவை படுக்கை அறை, வசிக்கும் அறை, சமையல்அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகிய பகுதிகளில் ஒரு விளக்கு வீதம் அமைக்கப்படும். பயனாளிகளின்
  • விருப்பத்தின்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மின் இணைப்பு பெறும் விருப்பத்திற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • வீடுகள் கட்டும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 110 சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணியை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை செயல்படுத்தும்.
  • பசுமை வீடுகள், பயனாளிகளின் குடியிருப்பு அமைந்துள்ள இடம் (அவன்/அவளின் வசிப்பிடத்தை மாற்றியமைத்து) அல்லது கிராம ஊராட்சியின் பிற பகுதியில் அமைந்துள்ள பயனாளிக்குச் சொந்தமான
  • இடங்களில் கட்டித்தரப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கென நில எடுப்புகள் ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப் பட்டா அல்லது சரியான நில உரிமை உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியானவர்கள் ஆவர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel