Type Here to Get Search Results !

பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத் திட்டம்)

  • ஒரு தேசம் ஒரே திட்டம் என்ற சிந்தனையின் அடிப்படையில் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து திட்டங்களிலும் உள்ள சிறப்பான கூறுகளை எடுத்துச் சேர்த்தும், பலவீனமான குறைபாடுகளுள்ள கூறுகளை நீக்கிவிட்டும் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 
  • தற்போது நடைமுறையிலுள்ள தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டத்தையும், மாற்றம் செய்யப்பட்ட அதன் இன்னொரு வடிவத்தையும் நீக்கிவிட்டு இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

நோக்கங்கள்
  • இயற்கை இடர்கள், பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றினால் பயிர்கள் விளையாமல் போகும் நிலையில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கவும், காப்பீட்டு வசதியை ஏற்படுத்தி தரவும் இது வந்துள்ளது.
  • விவசாயிகளின் வருமானம் பாதிப்படையாமல் பாதுகாத்து அவர்கள் விவாசயத்தை தொடர்ந்து செய்துவருவதற்கு உதவுகிறது.
  • விவசாயிகள் புதுமையான நவீன வேளாண் நடைமுறைகளை கையாளுவதை ஊக்குவித்தல்.
இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
  • காரிப் பருவப் பயிர்களுக்கு 2%, ரபி பருவப் பயிர்களுக்கு 1.5% என்ற வீதத்தில் ஒரே சீரான காப்பீட்டுக் கட்டணம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும். 
  • ஆண்டுப் பயிர்களான பணப் பயிர்கள், தோட்டடக் கலைப் பயிர்கள் ஆகியவற்றிற்கு 5% காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் காப்பீட்டுக் கட்டணம் மிகக் குறைவானவை. எனவே, மீதி கட்டணத்தை அரசாங்கம் செலுத்திவிடும். இயற்கைப் பேரிடர்களால் பயிர் இழப்புகள் ஏற்படும்போது விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.
  • அரசாங்கம் வழங்கக்கூகூய மானியங்களுக்கு உச்சவரம்பு ஏதுமில்லை. காப்பீட்டுக் கட்டண பாக்கி 90% இருந்தாலும்கூட அதை அரசே ஏற்கும்.
  • பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத்திட்டம் இதற்கு முன்பு இருந்த வேளாண் காப்பீட்டு தேசியத்திட்டம், மாற்றியமைக்கப்பட்ட வேளாண் காப்பீட்டு தேசியத் திட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டமாகும். இந்தத் திட்ட செயலாக்கத்தில் சேவை வரிக்கு விலக்கு தரப்பட்டுள்ளது. புதிய திட்டம் காப்பீட்டுக் கட்டணத்தில் விவசாயிகளுக்கு 75 முதல் 80% மானியத்தை உறுதி செய்யும்.
முந்தைய திட்டங்களுடன் ஒப்பீடு

வரிசை எண்
கூறுகள்
வேளாண் காப்புறுதி தேசியத்திட்டம் NAIS 1999
திருத்தியமைக்கப் பட்ட வேளாண் காப்புறுதி தேசியத் திட்டம் MNAIS 2010
பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம்
1
காப்பீட்டுக் கட்டண விதிம்
குறைவு
அதிகம்
வேளாண் காப்புறுதி தேசியத்திட்டத்தை விடவும் குறைவு (விவசாயி செலுத்தும் காப்புறுதிக் கட்டணத்தைப்போல 5 மடங்கு கட்டணத்தை அரசு செலுத்தும்.
2
ஒரு பருவம் ஒரு காப்பீட்டுக் கட்டணம்
உண்டு
இல்லை
உண்டு
3
காப்பீட்டுத் தொகை வழங்கல்
முழுத்தொகை
வரம்புக்குட்பட்டது
முழுத் தொகை
4
நலனுக்கான தொகை வழங்கல்
இல்லை
உண்டு
உண்டு
5
உள்ளூர் இடர்களுக்கான காப்பீடு
இல்லை
ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு.
ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பயிர் மூழ்கிப்போதல்
6
அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கான காப்பீடு
இல்லை
கடலோரப் பகுதிகள் - புயல் மழைக்கு உண்டு
தேசம் முழுவதும் புயல் மழைக்கும், எதிர்பாராத மழைக்கும்
7
விதைப்பு நின்று போனதற்கான இழப்பீடு
இல்லை
உண்டு
உண்டு
8
இழப்பீடு விரைவாக வழங்குவதற்கு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்
இல்லை
பயன்படுத்தும் நோக்கம் இருந்தது
நிச்சயமாக உண்டு.
9
விழிப்புணர்வு
இல்லை
இல்லை
உள்ளது. (காப்பீட்டை இருமடங்காக்கும் இலக்கு உள்ளது.)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel