Type Here to Get Search Results !

மத்திய அரசின் திட்டங்கள் ஒரு பார்வை

1. பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா
2. சசாக் கிசான் யோஜனா
3. சேவா போஜ் யோஜனா
4. அடல் புஜல் யோஜனா
5. சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா
6. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா
7. பிஜு ஸ்வஸ்த்ய கல்யாண யோஜனா
8. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா
9. வன் தன் யோஜனா
10. சஷாட் மஹிலா யோஜனா
11. சஞ்சார் கிராந்தி யோஜனா
12. சுகன்யா சம்ரிதி யோஜனா
13. சூரியசக்தி கிசான் யோஜனா
14. முக்கிய மந்திரி ஜன் கல்யாண் (சம்பல்) யோஜனா
15. ஆச்சாரியா பால்சாஸ்திரி ஜம்பேகர் சம்மன் யோஜனா
16. சுவஸ்திய சுரக்ஷா யோஜனா
17. அயுஷ்மன் பாரத் யோஜனா
18. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா
19. பரம்மாபரகத் கிருசி விகாஸ் யோஜனா
20. பி.எம் கெளசல் விகாஸ்யோஜனா
21. சவுர் சுஜாலாயோஜனா
22. கங்கா ஹரிடீமா யோஜனா
23. பிரதான மந்திரி ஜான் ஆரோக்கி யோஜனா 
24. முக்கிய மந்திந்திரி கிசான்யோ பத்ஹோத்ரி சோலார்யோஜனா
25. பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா
26. பிஜ்லி பில் மஃபி யோஜனா
27. சஞ்சார் கிராந்தி யோஜனா
28. கன்யா வான் சம்ருதி யோஜனா
29. பிரதான் மந்திரி ஸ்வஸ்த்யா சரக்ஷா யோஜனா 
30. கோபபந்து சமாதிகா ஸ்வாஸ்த்யா பீமா யோஜனா
31. முக்கிய மந்திரி கன்யா உத்தன் யோஜனா
32. பிரதம மந்திரி ஜான் அரோயா யோஜனா
33. பைரன் சிங் ஷெகாவத் அந்தோதயா ஸ்வரோஜ்கர்யோஜனா
34. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா 
35. பிரதான் மன்மோகன் கிருஷி சின்சாயி யோஜனா
36. தீன் தயால் உபாத்யாய் கிராமின் கவுசல் யோஜனா
37. பாவென்டர் பார்பாயி யோஜனா'
38. மஹிந்திரா கிராமிய பாரத் மற்றும் நுகர்வு யோஜனா
39. மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா
40. ஆயுஷ்மான் பாரத் யோஜனா

தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்
  • தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத் திட்டம்) கீழ் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் மற்றும் அடிமட்ட நிலையில் உள்ள குடும்பங்கள் (Vulnerable Families) பயன்பெறும் வகையில் அரசு நிதியுடன் செயல்படும் உலகிலேயே மிகப் பெரிய சுகாதார திட்டம் தொடங்கப்படும். 
  • இத்திட்டத்தின் கீழ் 2வது மற்றும் 3வது நிலை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். இத்திட்டம் மூலம் 50 கோடி பேர் பயன்பெறுவர்.
பசுமை திட்டம்
  • ஆப்பரேஷன் ஃப்ளட் (operation flood) வரிசையில் 500 கோடி நிதி உதவியுடன் தொடங்கப்படும். இத்திட்டமானது விவசாய பொருள் உற்பத்தி நிறுவனங்கள் (Farmers Producers Organisations), பதப்படுத்தும் வசதிகள், விவசாய தளவாடங்கள் மற்றும் வல்லுனர் மேலாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும்.
  • உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவை பெரும் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் போது அவற்றை கட்டுக்குள் கொண்டு வர இத்திட்டம் விவசாயிகளுக்கு உதவுகிறது.
  • விலை நிர்ணயம் செய்யும் இத்திட்டமானது, விவசாயிகள் அவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதை, உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டின் முடிவில் இரட்டிப்பாக்குதலாகும்.
ஏகலைவா பள்ளி
  • இப்பள்ளியானது பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக, நவோதயா பள்ளிகளின் வரிசையில் 2022ல் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் இந்த மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும். இப்பள்ளிகள் 20000 பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், சதவிகிதத்திற்கு அதிகமான பழங்குடியினப் பகுதிகளிலும் ஏற்படுத்தப்படும்.
  • இந்த பள்ளிகள் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் ஒரு பகுதியாக செயல்படும். இப்பள்ளிகள் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சியை வழங்கும். மேலும் இப்பள்ளிகள் உள்ளூர் கலை & பண்பாட்டை காப்பதற்கு பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் கல்வியில் அமைப்பு திட்டம்
  • இத்திட்டமானது அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டது. வரும் 4 ஆண்டுகளில் 1 லட்சம் கோடியை முதலீடாகக் கொண்டு இத்திட்டம் துவங்கப்படும். இந்த நிதியானது வங்கியல்லாத நிதி நிறுவனமான மறுகட்டமைக்கப்பட்ட உயர்கல்வி நிதியளிப்பு முகமை மூலம் அளிக்கப்படும்.
பிரதம மந்திரி ஆய்வுதவித் தொகைத் திட்டம்
  • இது 1000 பி.டெக் மாணவர்களுக்கு அவர்கள் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மற்றும் இந்திய அறிவியல் நிறுவனங்களில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள, அதிக உதவித் தொகைகளை வழங்கி அதன் மூலம் உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை (Cutting Edge) ஏற்படுத்த வழிவகுக்கிறது.
  • இது இந்தியாவில் சிறந்த ஆராய்ச்சி மேற்கொள்வதையும், இந்திய கல்வி நிறுவனங்களை உலகத் தரத்தில் மேம்படுத்தி உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்டது.
  • கால்நடை வளர்ப்பவர்களுக்கும், மீனவர்களுக்கும் விவசாய கடன் அட்டை திட்டம்
  • இத்திட்டமானது கால்நடை வளர்ப்பவர்களுக்கும், மீனவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் இவர்களுக்கு எளிதில் கடன் கிடைப்பதற்கு வகை செய்யும். கிராமப்புறங்களிலுள்ள பால் உற்பத்தித் தொழில் செய்யும் மக்களுக்கும், மீனவர்களுக்கும் நிதி அளிப்பதற்காக இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
மலிவான வீட்டுவசதி நிதியம் (AHF)
  • தேசிய வீட்டு வசதி வங்கியின் கீழ் இந்த நிதியம் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கான நிதி முதன்மைத் துறைக்கான கடன் வழங்கும் நிதியில் மீதம் இருப்பதைக் கொண்டும், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான சேவைப் பத்திரங்கள் கொண்டும் அளிக்கப்படும். 
  • இந்த நிதி மூலம் கிராமப்புறங்களில் 1 கோடி வீடுகள் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டித்தரப்படும்.

கோபர் – தன் யோஜனா
  • செயலாற்றத் தூண்டும் கரிம உயிரி-வேளாண் வள நிதித் திட்டம் எனவும் அழைக்கப்படும் கோபர் – தன் யோஜனா திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த திட்டமிடுகிறது. 
  • இத்திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் மாட்டு சாணம் ஆகியவற்றின் திடக்கழிவுகள் உரம், உயிரிவாயு – அழுத்தப்பட்ட உயிரி இயற்கை எரிவாயு போன்றவையாக மாற்றப்படும்.
தேசிய மூங்கில் திட்டம்
  • நாட்டில் தொழிற்சாலை என்ற பிரிவின் கீழ் மூங்கில் உற்பத்தியை மேம்படுத்திட 1290 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும். இத்திட்டம் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களுக்குப் பேருதவியாய் இருக்கும்.

ஜன் தன் யோஜனா
  • இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கை ஏற்படுத்தி தரும் திட்டமாகும். 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
  • இந்த வங்கி கணக்கு மூலம் ரூபே டெபிட் கார்ட் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள சிறப்பு விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. 30,000 ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.
மேக் இன் இந்தியா
  • இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற தொடங்கப்பட்ட திட்டம்.
  • மத்திய அரசின் தகவல் படி இத்திட்டத்தால் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு 48% . 25 துறைகளை பட்டியலிட்டு இந்தியாவில் தயாரிக்க வாருங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
திறன் மிகு இந்தியா
  • 2022-ஆம் ஆண்டிற்குள் 40 கோடி இந்தியர்களை பல்வேறு துறைகளில் திறமை மிக்கவர்களாக மாற்றுவோம் என்று இலக்கோடு தொடங்கப்பட்ட திட்டம்.
தூய்மை இந்தியா
  • 2019-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்பது இலக்கு. 2019-ம் ஆண்டிற்குள் 1 கோடி கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்கிற இலக்கும் இந்த திட்டத்தில் உள்ளது.

இந்திர தனுஷ்
  • மஞ்சள் காமாலை, காச நோய், போலியோ போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசி போடுவதற்காக தொடங்கப்பட்ட திட்டம். முதல்கட்டமாக நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட மாவட்டங்கள் 201
முத்ரா திட்டம்
  • சிறுகுறு தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கவும், மேம்படுத்தவும் வங்கி கடன் வழங்குவதற்காக 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
  • சிசு, கிஷார், தருண் ஆகிய மூன்று பிரிவுகளில் சிறு முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் இந்தியா
  • பொருளாதார அறிவை வளர்க்கவும் இந்திய சமூகத்துக்கு டிஜிட்டல் சேவையை அளிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது. 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக அறிவித்தார்.
  • திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தனது புரொபைல் படத்தை இந்தியாவின் மூவர்ண கொடியோடு சேர்த்து இருந்த படமாக மாற்றிக் கொண்டார்.
ஸ்மார்ட் சிட்டி
  • நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதே ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம்.
  • பொருளாதார வளர்ச்சி, சுத்தமான காற்று, போக்குவரத்து வசதிகளும் இதில் அடங்கும். 2015-16 பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.48,000 கோடி.
  • தமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel