தீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்

  • கால்நடை விவசாயிகள் லாபகரமான வகையில் பால் உற்பத்தி செய்யும் வகையில் அரசு மானியத்துடன் கூடிய தீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இப்போது கால்நடைகளின் பசுந்தீவனத் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது. எனவே தீவனப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் கடந்த 3 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
  • இந்தத் திட்டம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கால்நடைத் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது.0 Comments