Type Here to Get Search Results !

பச்சத் லேம்பு யோஜனா

  • நாட்டின் மொத்த மின்சார தேவையில், 20%, விளக்குகள் எரியவிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், வீட்டு உபயோக விளக்குகளுக்கு, இன்கேன்டஸன்ட் பல்புகள் பயன்படுத்தப்படுகிறது. இப்பல்புகள், மிக குறைந்த மின்சார உபயோகத் திறன் கொண்டவை. இந்த பல்புகளில், 90% மின்சாரம் வெப்பமாகவும், வெறும் 10%, ஒளியூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இதற்கு மாற்றாக வந்துள்ள, காம்பெக்ட் இன்ஃபோளரஸ்ண்ட் விளக்குகள் (CFLs), மின்சார உபயோகிப்பு திறன், அதிகம் உடையது. ஒரே ஒளி அளவிற்கு, இன்கேண்டஸண்ட் பல்புகளுக்கு தேவையான மின்சாரத்தில், ஐந்தில் ஒரு பங்கே, இந்த CFLக்கு தேவைப்படுகிறது. 
  • இந்த பஞ்சத் லேம்பு யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கமே வீட்டு உபயோகத்தில் உள்ள இன்கேண்டஸ்ண்ட் பல்புகளை, CFLs விளக்கு கொண்டு மாற்றியமைப்பதாகும். இந்த திட்டமானது வீட்டு உபயோகத்திற்கு, CFLs விளக்குளை இன்கேண்டஸ்ண்ட் விளக்கு விலைக்கே அளிப்பதாகும். இப்படி கொடுக்கும்போது விலையில் ஏற்படும் வித்தியாசத்தை, கியோட்டோ நடப்படியின், கீளீன் டெவலப்மெண்டு மெக்கானீஸ்ம் (CDM) மூலம் திரும்பபெறும். இந்த திட்டமானது பிப்ரவரி 2009ல் நிறுவப்பட்டது.
  • இந்த திட்டமானது பொது மற்றும் தனியார் பங்குதாரர் முறையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய அரசு, CFLs விநியோகஸ்தர்கள், தனியார் நிறுவனம் மற்றும் மாநில அளவிலான மின் வினியோக நிறுவனங்களின் (DISCOM ) கூட்டமைப்பு கொண்டது. 
  • இந்த DISCOM செயல்முறைப்படுத்தும் பகுதியில், தரமான CFLs விளக்குகளை, வெறும் 15 ரூபாய்க்கு, இந்த விளக்கின் வினியோகஸ்தர்கள், வீட்டு உபயோகத்திற்கு விற்பனை செய்வர். DISCOM, அந்தந்த ஊரில் BEE பட்டியலிட்டுள்ள CFLs உற்பத்தியாளர் பட்டியலில் இருந்து CFL விநியோகம் செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்யும். 
  • அந்த திட்டத்தின் கீழ் 600 மற்றும் 100 வாட் இன்கேண்டஸ்ண்ட் விளக்குகளை 11-15 வாட் மற்றும் 20-25 வாட் விளக்குகளை முறையே மாற்றியமைக்கப்படும். ஒவ்வொரு வட்டாரத்திலும், மின்சார சேமிப்பை BEE கண்காணித்து வரும்.
  • தோராயமாக ஒவ்வொரு DISCOM ஏரியாவிலும், 50 இலட்ச விளக்குகள் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel