Type Here to Get Search Results !

செல் பிரிதல் வகைகள்




செல் பிரிதல்
  • பொதுவாக மைடோசிஸிஸ் செல் பிரிதலின்போது போது, க்ரோமடிட்ஸ் இரண்டும் இரு செய் செல்கள் என பிரிக்கப்படுகின்றன. குன்றல் செல் பிரிதலின்போது ஒரு டிப்ளோயிட் செல்கள் (2N) குரோமோசோம்கள் ஒரு முறை ஒரு டி.என்.ஏ இரட்டிப்பாகிறது. 
  • நான்கு ஏப்ளோயிட் செல்கள் (1N), உயிரணு செல்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கு இரண்டு சுற்று உயிரணுப் பிரிவுகளுக்குள் செல்கின்றன. இது அதிகமான நிறமூர்த்தங்கள் டி.என்.ஏவின் மறுசீரமைப்பை ஊக்குவிக்கும். 
  • புற்றுநோயில், மயோடிக் ஒத்திசை குரோமோசோம்கள் உள்ளன. குன்றல் செல் பிரிதலின்போது, ஒத்திசை குரோமோசோம் ஒரு புள்ளியில் சேர்கிறது. இதற்கு கயாஸ்மேட்டா என்று பெயர். கயாஸ்மேட்டா ஒத்திசை குரோமோசோம்கள் டிஎன்ஏவை ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொள்கின்றன. இதற்கு குறுக்கெதிர் மாற்றம் என்று பெயர். 
  • மைடாஸிஸ் செல் பிரிதலின் போது 2N டிப்ளாய்டு செல் 1குன்றல் செல் பிரிதலுக்கு உட்படுன்போது இரு சுழற்சியின் அடிப்படியில் குரோமோசோம்கள் எண்ணிக்கைகள் 2 N டிப்ளைடு செல்கள் குறைக்கப்பட்டு 4ஆப்ளைடு செல்கள் உருவாகிறது.
செல் பிரிதல் நிலைகள்
  1. காரியோகைனசிஸ் (அல்லது) உட்கரு பிரிவு
  2. சைட்டோகைனசிஸ் (அல்லது) சைட்டோபிளாசப் பிரிவு
செல் பிரிதல் வகைகள்
  • செல் பிரிதல் வகைகள் செல் பிரிதல் என்பது சிக்கலான நிகழ்ச்சி. இதில் செல் பொருட்கள், சேய் செல்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. உயிரினங்களில் செல்பகுப்பு மூன்று வகைபடும். அவையாவன
  1. ஏ மைட்டாஸிஸ்
  2. மைட்டாஸிஸ்
  3. மியாஸிஸ்
1. ஏமைட்டாசிஸ்
  • ஏமைட்டாசிஸ் அல்லது நேர்முகச் செல் பிரிவு
  • இவ்வகை செல் பிரிதல் ஒருசெல் உயிரினங்களில் நடைபெறுகிறது.
  • இப்பிரிவிற்கு செல்லில் பிற உறுப்புகள் உதவுவது இல்லை
  • இரு உட்கருக்களுக்கும் இடையில் சைட்டோபிளாஸம் குறுகி செல் இரண்டாகப் பிரிந்துவிடுகிறது.
2. மைட்டாஸிஸ்
  • W.பிளெம்மிங் என்பவர் 1882 ஆம் ஆண்டு மைட்டாஸிஸ் செல் பகுப்பை விவரித்தார். அதே ஆண்டில் ஸ்ட்ராஸ்பர்கர் தாவரங்களில் மைட்டாஸிஸ் நிகழும் விதத்தை விவரித்தார்.
  • தாவரங்களில் தண்டு மற்றும் வேர் நுனிகளில் மைட்டாஸிஸ் செல் பகுப்பு மிக செயல் திறனுடன் நடைபெறுகிறது. மேம்பாடு அடைந்த விலங்குகளிலும் மைட்டாஸிஸ் செல் பகுப்பு பரவலாக நடைபெறுகிறது. 
  • மைட்டாடிக் செல் சுழற்சி ஒரு நீண்ட இடை நிலையையும் (interface) குறுகிய M நிலையையும் ( மைட்டாடிக் நிலை- இதில் புரோ நிலை, மெட்ட நிலை, அனா நிலை மற்றும் டீலோநிலை ஆகியவை உள்ளன), சைட்டோகைனஸிஸையும் உடையது. இடைநிலை மற்றும் M நிலை ஆகியவற்றின் நடைபெறும் நேரம் பல விதமான செல்களில் வேறுபடுகிறது.
மைட்டாடிக் நிலை
  1. புரோ நிலை
  2. மெட்ட நிலை
  3. அனா நிலை
  4. டீலோநிலை
புரோ நிலை
  • குரோமாட்டின் வலைபின்னல் சுருங்க ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு குரோமோசோமும் தனித்து ஒரு நூல் போல் காட்சி அளிக்கிறது. ஒவ்வொரு குரோமோசோமும் இப்போது இரண்டு குரோமேட்டிகளை உடையது. அவை ஒன்றுக்கொன்று அருகருகே உள்ளன. 
  • அவைகளை சென்ட்ரோமியர் ஒன்றாகப் பிணைகிறது. நியூக்ளியஸ் மெதுவாக மறைய ஆரம்பிக்கிறது.



மெட்ட நிலை
  • நியூக்ளியஸ் உறை மற்றும் நியூக்ளியோலஸ் மறைய ஆரம்பிப்பது மெட்டா நிலையின் ஆரம்பத்தைக் குறிக்கும். குரோமோசோம்கள் இன்னும் சுருங்கி தடிமனாகிறது. இறுதியாக குரோமோசோம்கள் கூட்டு நுண்ணோக்கியில் தெளிவாக தெரிகின்றன. 
  • குரோமோசோம்கள் செல்லின் மையப் பகுதியில் அமைகின்றன. சென்ட்ரோமியர்கள் செல்லின் மையப் பகுதியில் வந்து அமைந்து மெட்டா நிலை தட்டு அல்லது மையத் தட்டை தோற்றுவிக்கின்றன.
  • ஒரு குரோமோசோமின் இரண்டு குரோமேட்டிடுகளில் ஒன்று ஒரு துருவத்தையும் மற்றொன்று மற்றொரு துருவத்தையும் நோக்கி உள்ளது.
அனா நிலை
  • சென்ட்ரோமியரின் பகுப்பு அனா நிலையின் ஆரம்பத்தை குறிக்கிறது. ஸ்பின்டில் இழைகள் சுருங்க ஆரம்பிக்கின்றன. இதனால் இரண்டு குரோமோசோம் தொகுப்புகளும் எதிர் எதிர் துருவங்களுக்கு இழுக்கப்படுகின்றன. 
  • இவ்வாறு இழுக்கப்படும் போது V அல்லது J அல்லது I வடிவத்தை அடைகின்றன. சென்ட்ரோமியர் துருவத்தை நோக்கி முன் செல்கையில் குரோமோசோம்களின் புயங்கள் மெதுவாக நகர்கின்றன.
டீலோ நிலை
  • அனா நிலை இறுதியில் குரோமோசோம்கள் எதிர் எதிர் துருவத்தை அடைந்து நீள ஆரம்பக்கின்றன. அவை மெல்லியதாக மாறி கண்ணுக்குப் புல்ப்படாமலும் போகின்ற. 
  • நியூக்ளியஸ் உறை மற்றும் நியூக்ளியோலஸ் மறுபடி தோன்றுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு துருவத்துலும் ஒரு சேய் செல் என இரண்டு செல்கள் தோன்றுகின்றன.
3. மியாசிஸ்
  • மியாசிஸ் வேறுபெயர் - குன்றல்பிரிவு 
  • பால் முறை இனப்பெருக்கத் திற்கென இச்செல்பிரிதல் நடைபெறும்
  • இயல்பாக உட்கருவில் குரோமோசோம்கள் இணைகளாக அமைந்திருக்கும் பெயர் - டிப்ளாயிடு எண்ணிக்கை (2n)
  • இனப்பெருக்க செல்களில் மியாசிஸ் செல் பிரிதலால் எண்ணிக்கை - n
  • n எண்ணிக்கை பெயர் - ஹாப்ளாயிடு
  • முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை என இரு மியாசிஸ் நிலைகளில் நடைபெறும்
நோபல் பரிசு 
  • செல் பிரிதல் மற்றும் மறுசுழற்சியை கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • இந்த பரிசு ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மனித உடலில் செல்கள் எவ்வாறு பிரிகிறது? தனது உள்ளடக்க பொருட் களை எவ்வாறு மறுசுழற்சி செய்துகொள்கிறது? என்பதை யோஷினோரி துல்லியமாக கண்டறிந்தார்.
  • இதன் மூலம் புற்றுநோய், பார்கின்சன், நீரிழிவு போன்ற நோய்களுக்கான காரணம் மற்றும் அவற்றுக்கான நிவாரணம் குறித்து அறிந்து கொள்ள வசதி ஏற்பட்டு உள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்புக்காக யோஷினோரி ஒசுமிக்கு நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel