Type Here to Get Search Results !

ஜனனி சுரக்ஷா யோஜனா

  • ஜனனி சுரக்ஷா யோஜனா என்பது தேசிய ஊரக சுகாதார இயக்ககத்தின்கீழ் செயல்படும் மகளிருக்கான பாதுகாப்பான பேறுகாலத் திட்டமாகும். கருவுற்ற பெண்கள் மருத்துவ மனைகளில் பிரசவிப்பதை ஊக்குவித்து அதனால் பிள்ளைப் பேற்றின்போது தாய் அல்லது சேய் இறப்பைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். 
  • இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டம் செயல்படுகிறது. எனினும், மருத்துவமனைப் பிரசவங்கள் குறைவாக உள்ள மாநிலங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
  • பேறுகால உதவிக்கான தேசியத் திட்டத்தை மாற்றியமைத்து, 2005 ஏப்ரல் முதல் ஜனனி சுரக்ஷா யோஜனா செயல்படுத்தப்படுகிறது. பேறுகால உதவிக்கான தேசியத்திட்டமானது, தேசிய சமூக உதவித்திட்டத்தின் ஓர் அங்கமாக 1995 ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்பட்டது. 
  • ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த இந்தத்திட்டம் 2001-02ல் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 19 வயதுக்குமேற்பட்ட பெண்களின் இரண்டு பிள்ளைப்பேற்றுக்கு மட்டும் மாதம்தோறும் தலா ஐநூறு ரூபாய் வீதம் அப்போது வழங்கப்பட்டது. 
  • ஜனனி சுரக்ஷா யோஜனா தொடங்கிய பின்னர், இந்த வழக்கத்தை மாற்றி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், கிராமப்புறமா, நகர்ப்புறமா என்ற அடிப்படையிலும் உதவித்தொகை மாற்றி அமைக்கப்பட்டது. மாநிலங்களைப் பொறுத்தமட்டில், மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பிரிக்கப்பட்டன. 
  • ஒருமாநிலத்தின் மொத்த பிரசவங்களில் 25 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் மருத்துவமனைகளில்நிகழ்ந்தால், அவை குறைவாகச் செயல்படும் மாநிலங்கள் என்று பிரிக்கப்பட்டன. 25 சதவீதத்திற்கும் அதிகமான பிரசவங்கள் மருத்துவமனைகளில் நிகழும் மாநிலங்கள் உயர்வாகச் செயல்படும் மாநிலங்கள் என்று சொல்லப்படுகின்றன. 
  • அவ்வாறாக, உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், ஒடிஷா, அஸாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் குறைவாகச் செல்படும் மாநிலங்களாக அறியப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்கள் அனைத்தும் உயர்வாக செயல்படும் மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பின்னணி
  • நம் நாட்டில் ஆண்டுதோறும் பிள்ளைப்பேறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளால் சுமார் 56 ஆயிரம் தாய்மார்கள் உயிரிழக்கின்றனர். அதேபோல் ஆண்டுதோறும் ஒரு வயதுக்குள்ளாகவே சுமார் 13 லட்சம் சிசுமரணங்கள் ஏற்படுகின்றன.
  • இதிலும்கூட மூன்றில் இரண்டு பங்கு சிசு மரணங்கள், பிறந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே ஏற்பட்டு விடுகின்றன. இவற்றுள்ளும் சுமார் 75 சதவீதம் மரணங்கள் ஒரு வாரத்திற்குள்ளாகவும் பெரும்பாலும் பிறந்த முதல் இரண்டு நாட்களிலேயே நிகழ்ந்துவிடுகின்றன.
  • எனவே, பிள்ளைப் பேற்றின்போது தாய்மார்களுக்குப் பயிற்சி பெற்ற செவிலியர் அல்லது மருத்துவர் உதவி கிடைத்திடவும், அதன்மூலம் பிரசவகாலப் பிரச்சினைகளால் தாயும் சேயும் இறப்பதைத் தடுத்திடவும், பிரசவங்களை மருத்துவமனைகளில் நடத்திடுவதை ஊக்கப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
  • ஜனனி சுரக்ஷா யோஜனா என்ற திட்டத்தின் காரணமாகவும், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பல அமைச்சகம் செயல்படுத்தும் மற்ற திட்டங்களின் காரணமாகவும், மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
நோக்கம்
  • கருவுற்ற பெண்கள் மருத்துவ மனைகளில் பிரசவிப்பதை ஊக்குவித்து அதனால் பிள்ளைப் பேற்றின்போது தாய் அல்லது சேய் இறப்பைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.



பயனாளர்
  • வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் கருவுற்ற பெண்கள் அனைவரும், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துக் கருவுற்ற தாய்மார்களும் இதனால் பயன்பெறலாம். 
  • ஜனனி சுரக்ஷா யோஜனாவில் பயன்பெறும் அனைத்துப் பெண்களுக்கும் தாயின்வயது அல்லது குழந்தைகளின் எண்ணிக்கை என்ற நிபந்தனைகள் ஏதுமின்றி, அரசு மருத்துவமனைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பிரசவித்தால் பணஉதவி அளிக்கப்படுகிறது.
  • இத்திட்டத்தில், ASHA (Accredited Social Health Activist) பதிவு பெற்ற சமூக-சுகாதாரப் பணியாளருக்கும், அவர்கள் பென்சனை எந்த அளவுக்கு மருத்துவமனை பிரசவத்திற்கு உடன்படச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. ஜனனி சுரக்ஷா யோஜனாவில் தரப்படும் பணஉதவி, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

பண உதவித் திட்ட விவரம் (ரூபாயில்)

மாநிலங்கள்
கிராமப்பகுதி
நகர்ப்பகுதி

தாய்மார்களுக்கு
ASHA பணியாளருக்கு
தாய்மார்களுக்கு
ASHA பணியாளருக்கு
குறைவாகச் செயல்படும் மாநிலங்கள்
1400
600
1000
400
உயர்வாகச் செயல்படும் மாநிலங்கள்
700
600
600
400

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel