Type Here to Get Search Results !

பிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான்

  • பத்தாயிரம் ஆண்டில் சர்வதேச அரங்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை பெறுவளர்ச்சி இலக்குகளை எட்ட இந்தியா முயன்று வருகிற வேளையில், 2015 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில், பிள்ளைப்பேற்றின் போது தாய்மார்கள் உயிரிழப்பதைக் குறைக்கும் பணி முக்கியத்துவம் பெறுகிறது. 
  • ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது. எனவே, கருவுற்ற ஒவ்வொரு தாய்க்கும் சிறப்புக்கவனம் தேவை. முன்கூட்டிய அறிகுறிகள் தோன்றியும் அல்லது தோன்றாமலும், உயிருக்கு ஆபத்தான நிலை கருவுற்ற பெண்களுக்கு ஏற்படலாம். எனவே பிள்ளைப் பேற்றின் போது உயிராபத்தான சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க கருவுற்ற ஒவ்வொரு தாய்க்கும் தரமான மருத்துவ சேவை அளிக்க வேண்டும்.
  • அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் காரணமாக கருவுற்ற தாய்மார்களின் நலன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பிள்ளை பேறு நடப்பது அதிகரித்துள்ளதுடன், பிள்ளைப்பேற்றுக்கு முந்தைய கவனிப்புப் பெறுவோரின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. 
  • சமீபத்திய கணக்கெடுப்புகளின் படி நம் நாட்டில் 78.7 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறகின்றன. எனினும், கருவுற்ற முதல் மூன்று மாத காலத்திற்குள்ளான மருத்துவ கவனிப்பைப் பெறுகின்ற பெண்களின் எண்ணிக்கை 61.8 சதவீதம் மட்டுமே பிள்ளை பேற்றுக்கு முந்தைய முழுமையான மருத்துவ கவனிப்பை (100 IFA மாத்திரைகள், இரண்டு டெடனஸ் டாக்ஸாய்டு ஊசிகள், குறைந்தது மூன்று முறை பரிசோதனைகள்) வெறும் 19.7 சதவீதப் பெண்கள் மட்டுமே பெறுகின்றனர்.
  • கருவுற்ற காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் பற்றிய வழிகாட்டல்கள், அவ்வாறு எடுத்துக்கொள்வதற்கு ஆதரவு அளிக்கவும் கண்காணிக்கவுமான ஏற்பாடுகள், நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு இதற்கென சிறப்புத் தொடர்பயிற்சிகள், கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நாள் போன்ற ஏற்பாடுகள் உள்ளிட்டவை இருந்த போதிலும், கருவுற்ற பெண்களுக்கான மருத்துவ சேவைகள் முழுமையாகச் சென்று அடையவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும். 
  • தற்சமயம் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால், அதில் 167 தாய்மார்கள் உயிரிழந்துவிடுகின்றன. இது மிகவும் அதிகமாகும். கருவுற்ற சமயத்திலும் குழந்தைப்பிறப்பின் போதும் நேரிடும் அபாயங்களைத் தக்கசமயத்தில் கண்டறிந்தால், தாயின் இறப்பைத் தடுத்துவிடலாம். தடுக்கக்கூடிய ஐந்து காரணங்களால் ஏற்படும் தாயின் மரணத்தை தடுக்க கருவுற்ற பெண்களுக்குத் தக்க மருத்துவப் பரிசோதனைகளும் சேவையும் அளிக்கப்பட வேண்டும்.
  • இந்த நோக்கத்திற்காக மத்திய அரசு தொடங்கிய திட்டம் தான் பிரதான் மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான். இத்திட்டப்படி நாடு முழுவதும் கருவுற்றப் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் மகப்பேற்றுக்கு முந்தைய மருத்துவ கவனிப்பு வழங்கப்படும். இது வழக்கமான கவனிப்புகளோடு கூடுதலாக வழங்கப்படுவதாகும்.



செயல்படும் விதம்
  • இதற்கென ஏற்படுத்தப்படும் பிரதான் மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ முகாம்களில் ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் தேதி கருவுற்ற பெண்களுக்கு கர்ப்பகால மருத்துவசேவைகள் அளிக்கப்படுகின்றன. 
  • இந்த ஏற்பாட்டினால் ஆறு மாதத்திற்குள் அல்லது ஒன்பது மாதத்திற்குள் கருவுற்ற பெண்களுக்கு ஒரு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஒருமாதத்தின் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகவோ, வேறு விடுமுறை நாளாகவோ இருந்து விட்டால் அதற்கு அடுத்த நாள் முகாம்கள் செயல்படும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel