Type Here to Get Search Results !

2018 பிரான்சின் மஞ்சள் போராட்டம் ஏன் ? FRANCE’S ‘YELLOW VESTS’ PROTESTS

  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மிக சிறப்பான சீர்திருத்தங்களை கொண்டுவருவேன் என கூறி வாக்கு சேகரித்த இமானுவேல் மேக்ரான் மே மாதம் 2007 ஆம் ஆண்டு அதிபராக தேர்ந்த்டுக்கப்பட்டார். தற்போது பிரான்சில் அவரது அரசுக்கு எதிராகத்தான் மஞ்சள் போராட்டம் வெடித்திருக்கிறது. 
  • பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் மீதான வரியினை தொடர்ந்து அதிகரித்தது தான் மக்களின் போராட்டத்திற்கு மிக முக்கிய காரணம்.
  • நவம்பர் 17 அன்று நகர்ப்புறங்களுக்கு வெளியே மெல்ல துவங்க ஆரம்பித்த போராட்டம் சமூக வலைத்தளங்களின் ஆதரவினால் நகர்ப்புறங்களுக்கும் பரவி வன்முறை அளவிற்கு சென்றுவிட்டது. 
  • தற்போது போராட்ட காரர்களின் கோரிக்கைப்படி பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான வரிவிதிப்பை உயர்த்துகின்ற முடிவினை நிறுத்திக்கொண்டுள்ளது மேக்ரான் அரசு.



தற்போது நடந்த இந்த போராட்டம் மஞ்சள் போராட்டம் என அழைக்கப்பட காரணம் என்ன? 
  • பிரான்ஸ்நாட்டில் வாகனம் ஓட்டும் போது அனைவரும் மஞ்சள் நிறத்திலான ஆடையினை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். சாலையில் வாகன கோளாறு ஏற்பட்டால் சிகப்பு நிறத்திலான முக்கோண வடிவ தடுப்பு வைக்கப்படுவதைப்போல வாகன ஓட்டிகள் மஞ்சள் நிற ஆடையினை அணிந்திருப்பது அவசியம். 
  • தூரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு எளிதில் படும் வண்ணம் இதன் நிறம் இருக்கும். இந்த ஆடையை அணிந்துகொண்டு போராட்டம் நடத்தியதால் தான் மஞ்சள் போராட்டம் என அழைக்கப்பட்டது.



மேக்ரான் அரசு எரிபொருள் மீதான வரியை கூட்ட காரணம் என்ன?
  • இதுகுறித்து கேட்டபோது காற்று மாசை குறைத்து, பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர எண்ணி எரிபொருள்களின் மீதான வரியினை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
  • தற்போதைய போராட்டத்தின் முடிவில் வரிவிதிப்பு நிறுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த போராட்டத்தில் கவனிக்கப்படவேண்டிய சில முக்கியமான விசயங்கள் இருக்கின்றன . எரிபொருள்களின் மீதான வரியினை உயர்த்தியதற்கு மேக்ரான் தலைமையிலான அரசு கூறுகின்ற நோக்கம் 
  • பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்காக என்பது ஏற்கத்தக்கதே. விலையேற்றம் பயன்பாட்டினை குறைக்காது அது மக்களிடம் எதிர்வினையையே உண்டாக்கும் என்பதற்கு இந்த போராட்டமே உதாரணம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel