Type Here to Get Search Results !

23rd NOVEMBER CURRENT AFFAIRS 2018 TNPSC SHOUTERS TAMIL PDF




சென்னை உயர்நீதி மன்றத்தின் புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவி ஏற்பு
  • சென்னை உயர்நீதி மன்றத்துக்கு புதிய நீதிபதியாக கர்நாடகாவை சேர்ந்த வினீத் கோத்தாரி இன்று பதவி ஏற்றார். இதன் காரணமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது.
  • கடந்த 11ந்தேதி மத்திய சட்ட அமைச்சகம் நீதிபதிகள் 3 பேரை வெவ்வேறு மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து அறிவித்து இருந்தது. அதன்படி கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி : முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியா முதலிடம்
  • 2019 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்திய பொருளாதாரம் சராசரியாக 7.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. சீனா 6.5 சதவீதத்தை தக்க வைத்துக் கொண்டது.
  • நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (FY19) சீனாவை விட இந்திய பொருளாதாரம் வேகத்தை அதிகரித்து உள்ளது என சில மதிப்பீட்டு நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன.
  • இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதம் மற்றும் 7.9 சதவீதத்திற்கு இடையே மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி 6.5 சதவிகிதம் ஆகும். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரத்தை உருவாக்கும்.
  • இருப்பினும் இந்தியாவின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் முதல் காலாண்டில் சாதனை படைத்ததை விட குறைவாக உள்ளது. மேலும் வளர்ச்சி FY19 இரண்டாம் பாதியில் மேலும் குறைவாக இருக்கும் என ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. முதல் காலாண்டில் 8.2 சதவீத வளர்ச்சியை எட்டியது. இது ஒன்பது காலாண்டுகளில் மிக உயர்ந்ததாகும்.
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 9.8 கோடியாக உயரும் அபாயம்
  • உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 6.92 கோடியாகும். இந்நிலையில், 'Lancet Diabetes & Endocrinology' என்ற மருத்துவப் பத்திரிக்கையில், ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
  • அதன்படி, வயதேறுவது, நகரமயமாக்கல், உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றம், உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி இன்மை போன்ற காரணங்களால் அடுத்த 12 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டில் டைப்2 வகை நீரிழிவினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 40.6 கோடி என்றும், இது, 2030ஆம் ஆண்டில் 51.1 கோடியாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
  • 2030ஆம் ஆண்டில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் மட்டும் இருப்பார்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு: 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பு ரத்து
  • நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டசென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  • நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் அதிகமான அளவில் பிழைகள் இருந்ததாகவும், இதனால் மாணவர்கள் மிகுந்த குழப்பமடைந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீட் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்களில் எழுத்துப்பிழைகள் இருந்ததாகவும், வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
  • இந்த வழக்கில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும், அந்த மதிப்பெண்களை சேர்த்து 2 வாரத்துக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  • அதன்படி,நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  • அப்படி ஒருவேளை கேள்வித்தாளின் மொழிபெயர்ப்பில் ஏதேனும் குழப்பம் இருக்கும்பட்சத்தில் ஆங்கிலத்தில் உள்ள கேள்வித்தாளில் உள்ள கேள்விகளையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தான் 196 கருணை மதிப்பெண்களை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
  • பிளஸ்-2 மாணவர்கள் முழுக்க தமிழில் படித்து இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே அடிப்படை ஆங்கில அறிவு மாணவர்களுக்கு அவசியம்.
  • இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆங்கிலத்தில் உள்ள கேள்விகளையும் சரிபார்த்து விடைகளை எழுதி இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



டெல்லியின் தலைமை செயலராக ஐ.பி.எஸ் அதிகாரி விஜய் குமார் தேவ்
  • டெல்லி மாநிலத்தின் அரசு தலைமை பொதுச் செயலாராகஐ.பி.எஸ் அதிகாரி விஜய்குமார் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐ.பி.எஸ்.-ன் 1987ம் ஆண்டுபிரிவைச் சேர்ந்த விஜய்குமார் தேவ், டெல்லியின் தலைமைதேர்தல் ஆணையராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர்டெல்லி மாநில தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • டெல்லி மாநிலத்தில் தலைமை செயலராக இருந்த அன்ஷு பிரகாஷ், மத்திய தொலைத்தொடர்பு துறையின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பதவிக்குஐ.பி.எஸ் அதிகாரி விஜய்குமார் தேவ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த பத்திரங்கள் மூலம் பத்தாயிரம் கோடி நிதி திரட்ட திட்டம்
  • ஒப்பந்தப் பத்திரங்கள் மூலம் பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது.
  • அந்த வகையில், பங்குச் சந்தைகளை ஒழுங்குபடுத்தும் செபி அமைப்பிடம், விண்ணப்பித்திருக்கிறது. பாரத்மாலா பரியோஜனா திட்டத்திற்கும் இதர செலவுகளுக்கும் இந்த நிதியை பயன்படுத்த உள்ளதாக நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • பாரத்மாலா திட்டத்தின் மூலம், 50 தேசிய வழித்தடங்களை நெடுஞ்சாலைத் துறை உருவாக்கவுள்ளது. நிதிக்காக பெறப்படும் பத்திரங்களின் காலம் நிறைவடைந்த பின்னர், பெற்ற தொகை நெடுஞ்சாலை ஆணைய முதலீட்டாளர்களிடம் திரும்ப வழங்கப்படும்.
  • உணவில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்  உணவில் கலப்படம் செய்வோருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்வதோடு, ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
  • முன்னதாக, மகாராஷ்டிராவில் உணவுக் கலப்படம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோ-அமெரிக்கா எல்லையை மூடப்போவதாக அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
  • மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
  • மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டு ராஸ், கவுதமலா மற்றும் எல்கால் வேடர் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் நுழைகின்றனர்.
  • இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட ஏற்பாடுகள் நடை பெறுகிறது.
  • எல்லையில் 5,800 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முருங்கை விவசாயிகளுக்கு கருத்தரங்கம்
  • முருங்கைக்காக அகில இந்திய அளவில் நடைபெறும் முதல் கருத்தரங்கம் இதுதான். இதற்காக முன்பதிவு செய்வது அவசியம். இதற்கான முன்பதிவுக்கு ஸ்டெல்லா மாரிஸ் மேம்பாட்டு ஆய்வு நிறுவன வலைதளத்தைத் தொடர்புகொள்ளலாம். கருத்தரங்கம், டிசம்பர் 20, 21,22 - ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருக்கும் சிங்கார் இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற உள்ளது. 
  • முருங்கை கண்காட்சி டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை, கன்னியாகுமரி ஸ்டெல்லா மாரிஸ் மேம்பாட்டு ஆய்வு நிறுவன (stella maris institute of development studies) வளாகத்தில் நடைபெற உள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel