குரூப் 1 தேர்வுக்கான வயது உச்ச வரம்பை உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

  • குரூப் 1, 1ஏ, 1பி தேர்வு எழுதுவோருக்கான வயது உச்ச வரம்புகளை உயர்த்துவதாக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
  • அதன்படி, குரூப் 1 தேர்வு எழுதும் ஒதுக்கீடு பிரிவினரான எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, டிஎன்சி பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35ல் இருந்து 37 ஆக உயர்த்தப்படுகிறது.
  • இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைத் தவிர்த்து இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது.
  • தமிழகத்தில் டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
  • இதற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்ற அறிவிப்பை ஏற்று முதல்வர் பழனிசாமி இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், கிராமப்புற மாணவர்கள் பலர் பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel