Type Here to Get Search Results !

டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்.சி இந்திய பொருளாதாரம் (TNPSC & UPSC Indian Economy)




பொருளாதாரம் படிக்கும்போது முக்கியமாக நினைவில்கொள்ளவேண்டியது, அந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை. இதைப் பற்றி அன்றாட நிகழ்வுகள் பகுதியிலும் பார்த்தோம். அதேபோல் நடப்பு ஆண்டுக்கான நிதி ஆணையத்தின் (Finance Commission) அறிக்கை, அதன் முக்கிய அம்சங்கள், தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள். நம் நாட்டின் முக்கிய நிதிநிலைக் கொள்கைகள் (Fiscal policy), பட்ஜெட் தொடர்பான கன்சாலிடேட்டடு ஃபண்ட் ஆஃப் இந்தியா (Consolidated Fund of India), கன்டிஜென்சி ஃபண்ட் ஆஃப் இந்தியா (Contigency Fund of India), பப்ளிக் அக்கவுன்ட் ஆஃப் இந்தியா (Public account of India), வரிகள், பற்றாக்குறைகள், உபரிகள் ஆகியவை பற்றிய விவரங்கள் நம் தேர்வுகளுக்கு மிக அவசியம். இப்போது சில முக்கிய வார்த்தைகளுக்கான ஒரு வரி விளக்கங்களைப் பார்க்கலாம்.
மூலதன வரவினம் (Capital Receipts) - அசையா சொத்துகளின் விற்பனை அல்லது அசையா சொத்துகளின்மீது பெறப்படும் கடன். வரவினம் என்றாலும், கணக்குகளைப் பொறுத்தவரை மூலதன வரவினம் `வருவாய்' எனக் கணக்கிடப்படாமல் கடனாகவோ (liability) அல்லது அசையா சொத்தின் இழப்பாகவோதான் மதிப்பிடப்படும். வருவாய் வரவினம் (Revenue Receipts) - பொருள்கள் மற்றும் சேவைகளின் (Goods and services) விற்பனையின் மூலம் ஈட்டப்படும் வருவாயைக் குறிக்கும். கணக்குகளிலும் `வருவாயாக'வே கணக்கிடப்படும்.





மூலதன செலவினங்கள் (Capital expenditure) - அசையா சொத்துகளை உருவாக்குவதற்கு ஏற்படும் செலவுகளைக் குறிக்கும்.
வருவாய் செலவினங்கள் (Revenue expenditure) - மூலதனம் அல்லாத அனைத்துச் செலவினங்களையும் குறிக்கும்.
வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) - வருவாய் செலவினங்கள் வருவாய் வரவினங்களைவிட அதிகமாக இருப்பது.
நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) என்பது, மொத்த வருவாய் மற்றும் மூலதனச் செலவினங்கள், வருவாய் மற்றும் capital வரவினங்களைவிட அதிகமாக இருப்பது.
முதன்மைப் பற்றாக்குறை (primary deficit) என்பது, நிதிப் பற்றாக்குறை(Fiscal deficit)யிலிருந்து செலுத்தப்படவேண்டிய வட்டி இனங்களை (Interest payments) கழிப்பதன் மூலம் ஏற்படும் தொகை.
Deficit Financing - அரசாங்க வரவுகளுக்கும் செலவுகளுக்கும் நடுவே ஏற்படும் பற்றாக்குறையை சரிசெய்ய ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறுவது அல்லது ரிசர்வ் வங்கி புது ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது.
நேரடி வரிகள் (Direct Taxes) - நுகர்வோர் (consumer) நேரடியாக அரசுக்குச் செலுத்துவது. உதாரணம்: வருமான வரி, வீட்டு வரி போன்றவை.
மறைமுக வரிகள் (Indirect Taxes) - நுகர்வோரின் பயன்பாடுகள்/பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான செலவழிப்பிலிருந்து விதிக்கப்படுவது. உதாரணம்: ஜி.எஸ்.டி (GST).
பட்ஜெட்டை பொறுத்தவரையில் மொத்தமாக ஏழு ஆவணங்களை உள்ளடக்குகிறது.
1) நிதி அமைச்சரின் உரை
2) பட்ஜெட்டின் சுருக்கம் (Summary)
3) பட்ஜெட் வரவினம் (Budget receipts)
4. மானிய கோரிக்கை (Demand for Grant)
5) வருடாந்திர நிதிநிலை அறிக்கை.
6) நிதி மசோதா (Finance Bill)
7) பட்ஜெட் செலவினங்கள்.
அதேபோல் பல்வேறு பட்ஜெட் வகைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
உதாரண கேள்வி ( UPSC 2010 ):
இவற்றில் பட்ஜெட் தயாரிப்பு மற்றும் தாக்கல் செய்யும் பொறுப்பு, எந்தத் துறைக்கு உள்ளது?
அ) டிபார்ட்மென்ட் ஆஃப் ரெவின்யூ (Department of Revenue)
ஆ) டிபார்ட்மென்ட் ஆஃப் எகனாமிக் அஃபயர்ஸ் ( Department. Of economic affairs ) (பதில்)
இ) டிபார்ட்மென்ட் ஆஃப் பைனான்ஷியல் சர்வீஸ் ( Department of Financial services )
ஈ) டிபார்ட்மென்ட் ஆஃப் எக்ஸ்பென்டிச்சர் ( Department of expenditure)
அனைத்துவிதமான வரிகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள். நேரடியாகச் செலுத்தக்கூடிய வரிகள், மறைமுகமாகச் செலுத்தக்கூடிய வரிகள் - அவற்றில் மத்திய அரசு விதிப்பது எவை, மாநில அரசு விதிப்பது எவை எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
உதாரண கேள்வி :
இவற்றில் எது மாநில அரசால் விதிக்கப்படும் நேரடி வரி?:
1) தொழில் வரி
2) GST
3) வருமான வரி
4) சேவை வரி
அ) All the above
ஆ) 1, 3
இ) 1 only ( பதில் )
ஈ) 2 only
GST பற்றி முழுமையாகப் படித்துக்கொள்ளுங்கள். முதன்மைத் தேர்வுகளிலிருந்து நேர்முகத் தேர்வு வரை எதிலும் கேட்கப்படலாம். அதேபோல் வருமானவரி உள்பட அனைத்து வரிகளையும் எளிதாகச் செலுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள், கறுப்புப் பண ஒழிப்பு, ஹவாலா உள்ளிட்ட நிதி சார்ந்த குற்றங்களைத் தடுக்க அரசின் முயற்சிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருமானத்துக்கான பல்வேறு ஆதாரங்களுக்கான பட்டியல் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல் நிதி மற்றும் வரி விதிப்பு தொடர்பாக அரசால் உருவாக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகளைப் பற்றிப் படித்துவிடுங்கள்.
உதாரணமாக, விஜய் கேல்கர் கமிட்டி, ராஜா செல்லா கமிட்டி, ரங்கராஜன் கமிட்டி, ஶ்ரீகிருஷ்ணா கமிட்டி போன்றவை. ஒவ்வொரு கமிட்டியிலும் 5-10 முக்கியப் பரிந்துரைகள் இருக்கும். அவை மிக முக்கியம். அதனுடன் சேர்த்து அந்தக் கமிட்டி எப்போது, எதற்காக உருவாக்கப்பட்டது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel