குரூப் -2 கலந்தாய்வுக்கு செல்வோருக்காக . துறைரீதியான தகவல்கள்
1. துணை வணிகவரி அலுவலர் .
சம்பளம் -46700 (மொத்தம்) மற்ற பணிகளை ஒப்பிடும்போது நல்ல அமைதியான பணிச்சூழல். ஜிஎஸ்டி வந்த பிறகு தற்போது நிலைமை இன்னும் நன்றாகவே உள்ளது .
பதவி உயர்வு - அதிகபட்சம் 5 வருடங்களில் வணிகவரி அலுவலர் ஆக(5100 கிரேடு பே ) வாய்ப்பு. உதவி ஆணையர்(5400 கிரேடு பே) பதவிக்கு மேலும் 4 வருடம் ஆகலாம் . மற்ற துறைகளில் இருப்பது போன்று இங்கும் நேரடி நியமனம் மூலம் வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பதவி உயர்வு பிரச்சினை உள்ளது . தற்போது வரை நேரடி நியமனம் மூலம் வருபவருக்கு சாதகமான சூழல் உள்ளது . பெண்களுக்கு ஏற்ற ஒரு பணி. (சார் பதிவாளரை ஒப்பிடும்போது ). துணை ஆணையர் ஆக வாய்ப்பு உண்டு . சிறு வயதில் உள்ளவர்களுக்கு இணை ஆணையர் பதவி உயர்வு வாய்ப்பு உண்டு .
2. சார் பதிவாளர் - கிரேடு-2
சம்பளம் -46700 (மொத்தம்) - குரூப் -2 பதவிக்கான ஒரு மரியாதை இங்கு மட்டுமே உண்டு . நீங்கள் தான் அலுவலக ராஜா/ ராணி . அலுவலகம் உங்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் . பணிச்சுமை உண்டு . பொறுப்புகள் அதிகம் (ஆபீஸ் ஹெட் ).
பதவி உயர்வு - ஏற்கனவே 560 பேர் எஸ் ஆர் (5400 கிரேடு பே system)ஆக உள்ளனர் . டிஆர் ஆக மினிமம் 10 ஆண்டுகள் ஆகும் .
3. தொழிலாளர் உதவி ஆய்வாளர் -
சம்பளம் -46700 . களப்பணி உள்ள ஒரு பதவி . பவர் இருக்கும் ஒரு பதவி . அனைத்து கடைகள் , தொழிலகங்கள் நிர்வாகம் கட்டுப்பாட்டில் வரும் . பணிச்சுமை உண்டு .
பதவி உயர்வு - 6 வருடங்களில் துணை ஆய்வாளர் பதவி .(5100 கிரேடு பே சிஸ்டம் ). அடுத்த 5 வருடம் -உதவி ஆணையர் பதவி உயர்வு .(5400 கிரேடு பே சிஸ்டம் ) இளநிலை வேலைவாய்ப்பு அலுவலரை ஒப்பிடும்போது நல்ல பணி. துணை ஆணையர் வரை செல்ல பதவி உயர்வு உண்டு .
4. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் .
சம்பளம் -46700 . அமைதியான பணிசூழல் விரும்புபவர்கள் தொழிலாளர் துறையை விட இதை தேர்வு செய்யலாம் . மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக குறைந்த பட்சம் 12 வருடம் ஆகும் (5400 கிரேடு பே )
5. உதவி பிரிவு அலுவலர்.டிஎன்பிஎஸ்சி
சம்பளம் -45500 வரை இருக்கும் (மொத்தம் ).
வேலைப்பளு அதிகம் உண்டு . தேர்வு காலங்களில் சனி ஞாயிறு வேலை உண்டு . ஆனால் வேலை இடம் ஒரே இடம் . அடுத்த 6 டு 7 வருடங்களில் பிரிவு அலுவலர் பதவி உயர்வு . (5400 கிரேடு பே ). இணை செயலர் வரை வரலாம் . சென்னை தான் கடைசி வரைக்கும் .
6. உதவி ஆய்வாளர் -உள்ளாட்சி நிதி
சம்பளம் -43500 வரை .
பொறியியல் படித்தவர்களுக்காகவே 78 போஸ்ட் ல் இருந்து 215 ஆக உயர்ந்தது போல் உள்ளது . புண்ணியம் .. துறையில் ஏற்கனவே 350 பேர் நேரடி நியமனம் மூலம் உள்ளனர் . துணை ஆய்வாளர் ஆக குறைந்தது 8 வருடம் ஆகும் (4800 கிரேட் பே ) அடுத்த 10 வருடம் அடுத்த பதவி உயர்வு (5100 கிரேடு பே ) . குரூப் -1 கிடைக்க 25 வருடம் ஆகும் . பீஸ்புல் ஆக இருக்கும் . சில இடங்களில் டெய்லி அலுவலகம் செல்ல தேவை இல்லை . பைல் ஒர்க் வீட்டில் இருந்து பாக்கலாம் .
பணியிடம் சென்னை வாய்ப்பு உண்டு .
குரூப்-1 படிக்க ஏற்ற துறை .லீவு கிடைக்கும் .
7.உதவி ஆய்வாளர் -இந்து அறநிலையத்துறை.
கோவில் நிதி தணிக்கை . பதவி உயர்வுக்கு 10 வருடம் ஆகும் . (4800 கிரேடு பே ). அடுத்த பதவி உயர்வு 4 வருடம் (5100 கிரேடு பே ). அடுத்த பதவி உயர்வுக்கு காலம் தெரியவில்லை . இதை ஒப்பிடும்போது உள்ளட்சி நிதிதி தணிக்கை மிகவும் நல்ல பதவி .பீஸ்புல் ஆக இருக்கும் . சில இடங்களில் டெய்லி அலுவலகம் செல்ல தேவை இல்லை . பைல் ஒர்க் வீட்டில் இருந்து பாக்கலாம் .
பணியிடம் சென்னை வாய்ப்பு உண்டு .
குரூப்-1 படிக்க ஏற்ற துறை . லீவு கிடைக்கும் .
8. கண்காணிப்பாளர் . தொழில் கூட்டுறவு துறை
ஆறு வருடத்தில் தொழில் கூட்டுறவு அலுவலர் பதவி உயர்வு (4900 கிரேட் பே )-அடுத்த 10 ஆண்டுகளில் உதவி இயக்குனர் ஆக வாய்ப்பு (5400 கிரேட் பே ).
9. முதுநிலை ஆய்வாளர் - கூட்டுறவு சங்கங்கள் துறை .
5 வருடங்களில் பதவி உயர்வு வாய்ப்பு (5100 கிரேடு பே ). அடுத்த பதவி உயர்வுக்கு மினிமம் 12 வருடம் ஆகும் . (5400 கிரேட் பே - மாவட்ட பதிவாளர் பதவி). பணிச்சுமை உண்டு .
பணியிடம் சென்னை வாய்ப்பு உண்டு .
10. வருவாய் உதவி ஆய்வாளர்
சம்பளம் -25000 மட்டும் . ஆனால் அடுத்த பதவி உயர்வு 6 வருடங்களில் துணை தாசில்தார். (4800 கிரேடு பே மற்றும் சிறப்பு படிகள் உண்டு ). நல்ல பதவி .மரியாதை உண்டு . மக்கள் பணி செய்ய சிறப்பான பதவி. அடுத்தது தாசில்தார் . 4 வருடம் (5100 கிரேடு பே மற்றும் படிகள் உண்டு . கார் போன்ற வசதிகள் உண்டு ) . அடுத்து உதவி ஆட்சியர் பதவி . மாவட்ட வருவாய் அலுவலர் பதவி வரும்போது சம்பளம் இணை செயலர் க்கு சமமான சம்பளம் . (மாவட்ட ஆட்சியரை விட அதிகம் ).
எஸ்சி பிரிவினர் கு ஐ.ஏ.எஸ் வாய்ப்பு உண்டு . அருந்ததியர் கு உறுதியான வாய்ப்பு உள்ளது .
RELATED TOPICS :
RELATED TOPICS :