- 'தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,235 இடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, 23 வகை தேர்வுகள் புதிதாக நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,யின் சார்பில், ஆண்டுதோறும், தேர்வு திட்டமிடல் அறிக்கை வெளியிடப்படும்.
- 2017ல், 12 ஆயிரம் இடங்களுக்காக, 24 வகை தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, 18 தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள, ஆறு தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளன.இந்நிலையில், புதிய ஆண்டில் நடத்தப்படும் தேர்வு விபரம் அடங்கிய திட்டமிடல் அறிக்கையை, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் அறிவித்தார்.
- இதன்படி, 3,235 காலி இடங்களை நிரப்ப, 23 தேர்வு கள் புதிதாக நடத்தப்பட உள்ளன. அதிகபட்சமாக, 'குரூப் - 2' நேர்முக தேர்வு உள்ள பதவிக்கு, 1,547 இடங்கள் நிரப்பப்பட உள்ளன
3,235 அரசு பணியிடங்களை நிரப்ப 23 வகை தேர்வுகள் நடத்த திட்டம் - DOWNLOAD TNPSC ANNUAL PLANNER 2018 PDF
January 07, 2018
0
Tags