Type Here to Get Search Results !

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS DECEMBER 2017 TAMIL PDF


உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதியில் கால்பதித்தது இந்திய அணி
  • உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜெர்மனியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
  • பிரான்ஸின் மார்சைல் நகரில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியை போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்தியா எதிர்கொண்டது.
சர்வதேச கடல்சார் அமைப்பு கவுன்சில் தேர்தலில் இந்தியா வெற்றி
  • சர்வதேச கடல்சார் அமைப்பு கவுன்சில் தேர்தலி்ல் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) நாடுகளுக்கிடையே கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது.
  • இந்த அமைப்பின் கவுன்சில் தேர்தல் நேற்று நடந்தது. முன்னதாக இந்தியா மீண்டும் வெற்றி பெறுவதற்கான பிரசாரத்தினை மத்திய அமைச்சர் நிதின்கட்காரி லண்டனில் நடந்த சர்வதேச கடல்சார் அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார். பின்னர் கவுன்சில் தேர்தலில் பி -பிரிவில் இந்தியா 144 ஓட்டுகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றது. ஜெர்மன் 146 ஓட்டுகள் பெற்று முதலிடம் பெற்றது.
முதலீடுகளை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி மார்ச் மாதத்துக்குள் கடன் வட்டி குறைக்க வேண்டும்
  • ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதில் கடன் வட்டி மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், குறுகியகால கடன்களுக்கான வட்டி 6 சதவீதமாக தொடரும்் என அறிவித்தது. 
  • பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் பண வீக்கம் குறையாததால் இந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுத்தது. இந்நிலையில், வரும் 5 தேதி ரிசர்வ் வங்கியின் அடுத்த சீராய்வு அறிக்கை வெளியாக உள்ளது. இதில் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.
  • கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக குறைந்திருந்தது. சில்லரை விலை பண வீக்கத்தை அடிப்படையாக கொண்டே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. இது கடந்த ஜூனில், 1.54 சதவீதமாக இருந்தது. 
  • ஆகஸ்டில், 3.36 சதவீதமாக அதிகரித்து, செப்டம்பரில், 3.28 சதவீதமாக குறைந்தது. எனினும், ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை. அக்டோபரில், சில்லரை பணவீக்கம், 3.58 சதவீதமாக உயர்ந்துள்ள போதும், அது, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 4 சதவீத வரம்பிற்குள் தான் உள்ளது 
  • பண வீக்கத்தை 4 சதவீதத்தில் வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அப்போதுதான் அத்யாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்கும். அதே நேரம் முதலீடுகளை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதால் வட்டி குறைப்பு முடிவை ரிசர்வ் வங்கி எடுக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.
உலகின் பிரமாண்ட லித்தியம் பேட்டரி
  • உலகின் மிகப்பெரிய, 100 மெகாவாட் லித்தியம் பேட்டரி, தெற்கு ஆஸ்திரேலியாவின் மின் தொகுப்பில், நேற்று இணைக்கப்பட்டது.
  • அமெரிக்காவில், மின் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, 'டெஸ்லா' நிறுவனத்தின் தலைவர், எலன் மஸ்க்.இவர், தெற்கு ஆஸ்திரேலிய அரசுக்கு, உலகின் மிகப்பெரிய, 100 மெகாவாட் லித்தியம் பேட்டரியை சப்ளை செய்யும் ஆர்டரை, செப்., இறுதியில் பெற்றார். 
  • இதையடுத்து நேற்று, தெற்கு ஆஸ்திரேலியாவின், ஜேம்ஸ் டவுன் நகரில் உள்ள மின் தொகுப்புடன், பேட்டரி இணைக்கப்பட்டது. இது, மின் வெட்டு காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு, 30 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டது.
  • ஆஸ்திரேலியாவின் மின் தேவையில், காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி பெரும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, புயலின் போது, தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எய்ட்ஸ் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்

  • உயிர்கொல்லியான எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது என்றும், ஒவ்வொரு மணி நேரமும் 12 எய்ட்ஸ் நோயாளிகள் உயிரிழந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
  • உலக எய்ட்ஸ் தினமான இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் எய்ட்ஸ் நோய் துறை நிபுணரான குட்டிகுப்பாலா சூர்ய ராவ் பங்கேற்று பேசினார்.
  • உயிர்கொல்லியான எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதாக குறிப்பிட்ட அவர் சுமார் 4 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நமது நாட்டில் ஒவ்வொரு மணி நேரமும் 12 எய்ட்ஸ் நோயாளிகள் உயிரிழந்து வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.
  • எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போதிய தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது வருத்தத்துக்குரிய விஷயம் என்று தெரிவித்த அவர், போதிய நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளாததால் 60 சதவீதம் எய்ட்ஸ் நோயாளிகள் பலியாகும் அவலம் நேர்வதாகவும் குட்டிகுப்பாலா சூர்ய ராவ் குறிப்பிட்டுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நகரம் இதுதான்?
  • பாலியல் வன்முறை சம்பவங்கள் பற்றி தேசிய குற்ற ஆவண மையம் (NCRB) வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
  • கடந்த ஆண்டு சண்டிகரில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 60 சதவிகிதம் சிறுமிகள் என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 69 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சண்டிகரில் நடந்துள்ளன. இதில் 41 பேர், 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். 35 பெண்கள் டீன் - ஏஜ் வயதினர். 
  • 2015-ம் ஆண்டு நடந்த பாலியல் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கைக்கும் 2016-ம் ஆண்டு நடந்துள்ள சம்பவங்களின் எண்ணிக்கைக்கும் அதிக வித்தியாசமில்லை. 2015-ம் ஆண்டு 68 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். இதில் மைனர்கள் 5 பேர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 69 ஆகியுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி சலில் எஸ்.பரேக்
  • கேப்ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாலி எஸ்.பரேக் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாகவும் (சி.இ.ஓ) நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
  • "சர்வதேச அளவிலான தேடலில் தகுதியானவராகக் கிடைத்திருக்கிறார் பரேக். அவரையே நாங்கள் பெருமையுடன் தேர்வு செய்திருக்கிறோம்" என்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஊதியக்குழு மற்றும் பரிந்துரைக் குழுவின் தலைவராக உள்ள கிரண் மஜூம்தார்-ஷா.
  • சலில் எஸ்.பரேக் மும்பை ஐ.ஐ.டியில் பி.டெக் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து அமெரிக்காவில் உள்ள கர்னல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதுநிலை பட்டங்களையும் பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (2018-2022) இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக அவர் செயல்படுவார்.
ஜி.எஸ்.டி.,யில் பதிவு: தமிழகத்தில் 6 லட்சம் பேர்
  • தமிழகத்தில் இதுவரை, ஆறு லட்சம் வணிகர்கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு, ஏராளமான வணிகர்கள், பதிவு செய்து வருகின்றனர். 
  • மதிப்புக் கூட்டு வரி எனும், 'வாட்' அமலில் இருந்தபோது, மாதத்திற்கு, 10 ஆயிரம் பேர், பதிவு செய்வர். ஆனால், ஜி.எஸ்.டி., வந்த பின், மாதத்திற்கு, 20 ஆயிரம் பேர் வரை பதிவு செய்கின்றனர். அதற்கு, ஜவுளித்துறை, பெரிய ஓட்டல்கள் உள்ளிட்ட சில துறைகள், ஜி.எஸ்.டி.,யின் கீழ் வந்திருப்பதே காரணம்.
  • மாநில வணிக வரித்துறையில், இதுவரை, மூன்று லட்சம் வணிகர்கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ளனர். இதே எண்ணிக்கையில், மத்திய, ஜி.எஸ்.டி., துறை அலுவலகத்திலும், வணிகர்கள் பதிவு செய்துள்ளனர். அதனால், இதுவரை, தமிழகத்தில், ஆறு லட்சம் வணிகர்கள் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும், 2.5 கோடி வணிகர்கள், ஜி.எஸ்.டி., குடையின் கீழ் வந்துள்ளனர்.
மாட்டிறைச்சி தடை அறிவிப்பாணையைப் திரும்பப் பெற்ற மத்திய அரசு
  • இறைச்சிக்காகப் பசு மாடு, காளை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லக் கூடாது என்று மத்திய அரசு மே மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
  • மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாட்டிறைச்சித் தொடர்பான அறிவிப்பாணையில் திருத்தம் கொண்டுவர உள்ளதாக மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆசியாவில் 50 சதவீத மூத்த குடிமக்களுக்கு பென்சன் இல்லை
  • ஆசியாவில் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 50 சதவீத முதியவர்களுக்கு பென்சன் இல்லை என்று சர்வேதச தொழிலாளர் அமைப்பு நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது. உலக மக்கள் தொகையில் 29 சதவீதம் பேர் சமூக பாதுகாப்பு திட்டங்களை அனுபவிக்கின்றனர்.
  • போதுமான பென்சன் வழங்கவில்லை என்றால் முதியவர்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள். 2017-2022ம் ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்த பிலிபைன்ஸ் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளு க்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு அங்கிகாரம் அளித்துள்ளது.
சிகரெட்டை விட ' டோல்ப்ரீ நம்பர்': மத்திய அரசு திட்டம்
  • புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்களுடன் டோல்ப்ரீ நம்பரை அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • புகையிலை பொருட்கள், சிகரெட் பயன்படுத்துவோரை எச்சரிப்பதற்காக, அந்த பொருட்களின் பாக்கெட்கள் மீது எச்சரிக்கை புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் இதுவரை அச்சிடப்பட்டு வருகிறது. இத்துடன் இனி, புகையிலைக்கு அடிமையானவர்களை மீட்கபதற்கான டோல்ப்ரீ நம்பர் ஒன்றையும் அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
  • 1800 227787 என்ற டோல் நம்பர் தேசிய புகையிலை தடுப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த எண்ணை பயன்படுத்தி இலவசமாக புகைக்கு அடிமையானவர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைகளை பெற முடியும். மேலும் புகையிலையால் ஏற்படும் நோய்கள், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் புகையிலை பொருட்களின் பாக்கெட்கள் மீது அச்சிடவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சலுகைகளை தியாகம் செய்த சீனியர் சிட்டிசன்கள்: ரயில்வேக்கு ரூ.40 கோடி மிச்சம்
  • மூத்த குடிமக்கள் பலர் தங்களுக்கான சலுகைகளை விட்டுத்தந்ததால் ரயில்வேத் துறை 40 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது.
  • 60 வயதைக் கடந்தவர்களுக்கு ரயில்களில் 50% கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரயில்வேத் துறைக்கு ஆண்டுதோறும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் கூடுதல் செலவாகிறது. இந்நிலையில் மூத்த குடிமக்கள் சலுகை பெற விரும்பாத முதியவர்கள் அதை முன்பதிவு படிவத்தில் குறிப்பிடலாம் என ரயில்வேத் துறை குறிப்பிட்டிருந்தது. 
  • மேலும் கட்டணச் சலுகையில் 50 சதவிகிதத்தை விட்டுத்தரவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி கடந்த 3 மாதங்களில் 14 லட்சம் பேர் சலுகைகளை முழுமையாகவும் பகுதியளவிலும் விட்டுத்தந்துள்ளனர்.
நாயக்கர் கால சதிகல் ஆரணியில் கண்டுபிடிப்பு
  • திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில், 18ம் நுாற்றாண்டை சேர்ந்த சதிகல்லை, தொல்லியல் ஆய்வாளர், பிரியா கிருஷ்ணன் கண்டெடுத்துள்ளார். 
  • கணவன் இறந்ததும் மனைவி உடன் கட்டை ஏறும் பழக்கம், இதற்கு, சதி என்று பெயர். அவ்வாறு உடன்கட்டை ஏறிய பெண்களின் கற்பை போற்றும் வகையில், அவர்களின் உருவத்துடன் அமைக்கப்பட்ட கற்களுக்கு, சதி கற்கள் என்று பெயர். 
  • ஆரணி, பெரியபாளையம் செல்லும் வழியில், லட்சுமி நாராயண சுவாமி, நாகாத்தம்மன் கோயில் உள்ளது. அங்குள்ள சிலைகளுடன், அரச மரத்தின் பின்புறம், மூன்றடி சதி கல்லும் உள்ளது. இதில், தாடியுடன் உள்ள வீரன் ஒருவன், தன் கையில் வாளும், இடையில் குறுவாளும் ஏந்தி உள்ளான். 
  • அவன் இருபுறமும், இரு மனைவியர் உள்ளனர். அவர்கள், காதணி, கழுத்தணியுடன், கையில் அல்லி மலர் ஏந்தி உள்ளனர். நாயக்கர் கால கலை அம்சத்துடன் உள்ள இந்த சிற்பம், மிக நேர்த்தியாக உள்ளது
இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட ஈரான் துறைமுகம்
  • இந்தியாவின் நிதி உதவியுடன், அண்டை நாடான ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம், பயன்பாட்டுக்கு வந்தது.நிலப்பகுதிகளால் சூழப்பட்ட, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு, பாகிஸ்தான் வழியாகவே இந்தியாவில் இருந்து, கடல் வழி வர்த்தகம் நடந்து வந்தது.
  • ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு, பாகிஸ்தான், அனுமதி தர மறுத்தது. சீனாவின் உதவியுடன், பாகிஸ்தானின் கவாடர் துறைமுகம் அமைக்கும் பணி துவங்கியது.
  • இதையடுத்து, ஈரானில் ஓமன் வளைகுடா பகுதியில், அரபிக் கடலை ஒட்டியுள்ள சபாஹர் பகுதியில், துறைமுகம் அமைக்கும் பணியை, இந்தியா துவக்கியது. இதற்காக, 3,300 கோடி ரூபாய் நிதி உதவியும் அளித்தது.அதில், 2,200 கோடி ரூபாய் செலவிலான சபாஹர் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்தன. 
  • அதை, ஈரான் அதிபர், ஹாசன் ரூஹானி நேற்று துவக்கி வைத்தார்.இதன் மூலம், 25 லட்சம் டன்னாக இருந்த இந்தத் துறைமுகத்தின் கையாளும் திறன், 85 லட்சம் டன்னாக உயருகிறது.இந்த துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் கீழ், புதிதாக, ஐந்து கப்பல் தளங்கள் கட்டப்பட்டு உள்ளன. 
  • இதன் மூலம், இந்தியப் பெருங்கடல் வழியாக, ஆசிய நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான துாரம் வெகுவாகக் குறைந்துள்ளது.
  • ரஷ்யாவில் இருந்து திரும்பும் வழியில், வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ், நேற்று முன்தினம் தெஹ்ரானுக்கு சென்றார். அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து, அந்நாட்டு அதிபருடன் அவர் ஆலோசனை நடத்தினார். நேற்று நடந்த துவக்க விழாவில், இந்தியா, கத்தார், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்
  • அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்த அவருக்கு போட்டியாக இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஏற்கனவே கடந்த நவம்பர் 20ந்தேதி நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்குத்தண்டனை! - மத்தியப்பிரதேசத்தில் மசோதா நிறைவேற்றம்

  • மத்தியப் பிரதேசத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்குத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
  • மத்தியப்பிரதேச சட்டமன்றத்தில், இதற்கான மசோதாவை முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவுகான் கொண்டுவந்தார். இந்த சட்டத்தின்படி. குறைந்தபட்சத் தண்டனையே வாழ்நாள் முழுவதும் சிறைதான். பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 
  • அதன்படி, பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்தால், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டால் 7 வருடங்கள் வரை சிறைத்தண்டனையுடன் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பெண்ணுடன் பாலுறவு கொண்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை நிச்சயம்.
இரண்டு எம்பிக்கள் தகுதிநீக்கம்: துணை ஜனாதிபதி அதிரடி உத்தரவு
  • தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
  • ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்கள் இருவரது ராஜ்யசபா எம்பி பதவியை நீக்க வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லோக்சபா தலைவர் ஆர்.சி.பி.சிங், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் அளித்தார் 
  • இந்த புகார் மீது விசாரணை நடத்திய துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 10-ன் கீழ் சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகிய இருவரையும் தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். இந்த தகுதிநீக்க அறிவிப்பு நேற்று ராஜ்யசபாவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு தடை
  • 2018ல் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சுவிட்சர்லாந்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
  • சரியாக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். இது லீப் வருடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து இரண்டு வருட இடைவெளியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சிறிய அளவில் நடக்கும்.
  • 2018ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் 'பியோங்சாங்' என்ற இடத்தில் நடக்கிறது. தற்போது இந்த குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
  • ரஷ்யாவை சேர்ந்த சில வீரர்கள் ஒலிம்பிக் கமிட்டியின் சில விதிமுறைகளை மீறியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ரஷ்ய வீரர்களிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்ட்டது.
  • இதையடுத்து ரஷ்யா ஒலிம்பிக் கமிட்டி மீது அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது. அதே சமயத்தில் ரஷ்யாவை சேர்ந்த தவறு செய்யாத வீரர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவும் வகை செய்து கொடுத்துள்ளது.
  • ஆனால் அந்த வீரர்கள் ரஷ்ய குடிமகன் என்ற பெயரில் இல்லாமல், தனி நபராக போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என்று ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.
வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது 'ஆகாஷ்' ஏவுகணை
  • இந்தியாவின் 'ஆகாஷ்' சூப்பர்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  • இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஆகாஷ் சூப்பர்சானிக் ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. தரையிலிருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல ஆகாஷ் ஏவுகணை, ஒடிசா மாநிலம் பலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது.
  • இந்த ஏவுகணைச் சோதனை, ஆளில்லாத குட்டி விமானத்தை வானில் இலக்காக வைத்து செலுத்தப்பட்டது. ஆகாஷ் ஏவுகணையும் குட்டி விமானத்தை வெற்றிகரமாகத் தாக்கியது. இந்தச் சோதனையை ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி நேரில் பார்த்து இத்திட்டத்தின் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
  • இந்த ஏவுகணையின்மூலம் 55 கி எடைகொண்ட ஆயுதங்களைப் பொருத்தி அனுப்பலாம். ஒரே நேரத்தில் பல திசைகளிலும் சுழன்று, வானில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கும் திறன் நிறைந்தது ஆகாஷ் ஏவுகணை.
கேரளா : மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் துவக்கம்
  • இந்தியாவின் மிகப் பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
  • கேரள அரசு மின் வாரியம் வயநாடு பகுதியில் உள்ள பனசுரா சாகர் அணையில் மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது இந்த அணையின் நீரில் சூரிய ஒளி மின் தகடுகள் மிதக்க விடப்பட்டுள்ளன. அந்த தகடுகளில் விழும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுக்கப்படும்.
  • இந்த மின் உற்பத்தி நிலையம் 500 கிலோ வாட் திறன் உடையது ஆகும். இதில் 1938 சூரிய ஒளித் தகடுகள், ஒரு 500 கிலோ வாட் டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் 17 இன்வர்ட்டர்கள் உள்ளன. இவ்வாறு நீர்நிலைகளில் சூரிய தகடுகள் மிதக்க விடப்பட்டு மின் உற்பத்தி தயாரிக்கும் நிலையங்களில் இதுவே இந்தியாவின் மிகப் பெரியதாகும்.
இனி டெல்லியில் கிரிக்கெட் போட்டிகளுக்கு 'நோ'
  • காற்று மாசுபாடு குற்றச்சாட்டு எழுந்ததால் இனி இரண்டு ஆண்டுகளுக்கு டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாது என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
  • இந்தியா-இலங்கை மோதிய டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் சில நாள்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்றது. இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை வீரர்கள், சுவாசிக்கச் சிரமப்பட்டதாகக் கூறப்பட்டது. டெல்லியில் ஏற்பட்ட காற்றுமாசு காரணமாக இலங்கை வீரர்கள் முகமூடியுடன் களத்தில் இறங்கி விளையாடினர். 
  • இலங்கை வீரர்களின் புகார்கள் மீதான நடவடிக்கையாக, "இனி வரும் காலங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தும்போது காற்று மாசு கணக்கில் கொள்ளப்படும். 2020-ம் ஆண்டு வரை இனி டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடக்காது" என்ற அறிவிப்பை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியல் - தாஜ் மஹாலுக்கு 2-வது இடம்
  • யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் தாஜ் மஹாலுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
  • உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். மொகலாய மன்னன் ஷாஜகான், தனது மனைவியின் நினைவாக கட்டியது தாஜ்மகால்.
  • உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் தாஜ்மஹால் அமைந்துள்ளது.
முதலிடத்தில் அங்கோர்வாட்
  • இந்நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் ஆன் லைனில் உலக அளவில் யுனஸ்கோ கலாசாரம் மற்றும் இயற்கை பாரம்பரிய இடங்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் முதல் இடத்தை கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோவில் பிடித்தது.
சிவகங்கையில்10 ம் நூற்றாண்டு புத்தர் சிலை
  • சிவகங்கை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 10 ம் நுாற்றாண்டு புத்தர் சிலையை தொல்லியல் துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்து உள்ளது.
  • சிவகங்கை மாவட்டத்தில் மகிபாலன்பட்டி, இளையான்குடி, பிரான்மலை, குன்றக்குடி, திருக்களாக்குடி, பூலாங்குறிச்சி, திருமலை, அனுமந்தங்குடி உள்ளிட்ட இடங்களில் சமணர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளன. புத்த மதத்தினர் வாழ்ந்ததாக கூறப்பட்டாலும், அதற்கான அடையாளம் கண்டுபிடிக்காமல் இருந்தன.
  • தற்போது சிவகங்கை அருகே மல்லல் புஞ்சை காட்டு பகுதியில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கற்சிலையான இது 10 ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. அமர்ந்தபடி தியான நிலையில் புத்தர் உள்ளார். மூன்றடி உயரமும், இரண்டே கால் அடி அகலமும் கொண்டது. 
  • புத்தர் சிலைக்கான அடையாளங்கள் உள்ளன. புத்தர் சிலைகள் பொதுவாக தியான நிலையில் தான் இருக்கும். இது பத்தாம் நுாற்றாண்டைச் சேர்ந்தது.
கார்டு பரிவர்த்தனையை ஊக்குவிக்க கட்டணங்கள் மாற்றி அமைப்பு
  • பணமதிப்பு நீக்க நடவடிக்கைக் கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை 80 சதவீதம் அதிகரித்ததுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் பணமற்ற பரிவர்த்தனை மதிப்பு 1,800 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • கடந்த அக்டோபர் வரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது ஏறக்குறைய கடந்த நிதியாண்டின் பரிவர்த்தனை அளவாகும். மத்திய அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது. 
  • இதில் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் மூலம் நடைபெறும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மிக முக்கிய பங்கு வகிப்பவை. எனவே, இதற்காக எம்டிஆர் எனப்படும் வணிக தள்ளுபடி கட்டணத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. 
  • டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைக்காக இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனை ஆண்டு வர்த்தகம் 20 லட்சம் வரை உள்ள சிறு வணிகர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் அல்லது அதிகபட்சம் 200, கியூ ஆர் கோடு முறையில் கட்டணத்தை பெற 0.3 சதவீதம் அல்லது அதிகபட்சம் 200, 20 லட்சத்துக்கு மேல் ஆண்டு வர்த்தகம் உள்ள வணிகர்களுக்கு 0.9 சதவீதம் அல்லது அதிகபட்சம் ₹1,000 கியூஆர் கோடு முறையில் பணம் பெற 0.8 சதவீதம் என நிர்ணயித்துள்ளது. 
  • இது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த உச்சவரம்புக்கு மேல் வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. ஏற்கெனவே இருந்த கட்டணத்தை விட இது குறைவு. கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்கத்துக்கு பின்னர் டிசம்பரில் இந்த கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் பரிவர்த்தனை கட்டணமாக 1,000 வரை 0.25%, 1,000 முதல் 2,000 0.5% என இருந்தது.
டிராவில் முடிந்த டெல்லி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் உலகச் சாதனையைச் சமன்செய்த விராட் படை
  • இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
  • 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.
  • இலங்கை தொடர் வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடரில் வென்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்திய அணி சமன் செய்தது. 
  • ஆஸ்திரேலிய அணி, இந்தச் சாதனையைக் கடந்த 2005 முதல் 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் படைத்தது. கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி, சமீபத்தில் அதே இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வொயிட் வாஷ் செய்தது. 
  • இதன்மூலம் தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்ற இந்திய அணி, தற்போதையத் தொடரிலும் வென்று ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்தது. 
கலப்பு திருமணத்திற்கு தலா 2.5 லட்சம்: மத்திய அரசு அறிவிப்பு!
  • மத்திய அரசு தலித் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு சுமார் ரூ.2.5 லட்ச ரூபாய் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை 2013 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் பெயர் ”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்” என்பதாகும். இத்திட்டத்தில் சில வரைமுறைகளை வைத்திருந்தனர். 
  • இத்திருமணத்தில், ஒருவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும். ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கக்கூடாது. திருமணம் செய்து கொண்ட ஓராண்டிற்குள் இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும் என்ற நிபந்தனைகள் இருந்தன.
  • இதையடுத்து, தலித் கலப்பு திருமணம் செய்யும் எல்லா தம்பதிகளுக்கும் எந்த நிபந்தனைகளும் இன்றி ரூ.2.5 லட்சம் உதவி தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: அமெரிக்கா அறிவிப்பு
  • இஸ்ரேல் நாட்டின் தலைநகராக தற்போதுவரை ஜெருசலமே இருந்து வருகிறது. ஆனால், அதை அதிகாரப்பூர்வமாக ஐநா அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக இஸ்ரேல் பல்வேறு பிரச்சினை களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க அமெரிக்கா முடிவு செய்து இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வெளியிட்டு உள்ளார்.
  • மேலும் இஸ்ரேலின் 'டெல் அவிவ்' என்ற நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்திற்கு மாற்றப்போவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
  • இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரபு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் டிரம்பை எச்சரித்துள்ளனர். சவுதி அரேபியாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
பிரம்மாண்டமான அம்பேத்கர் சர்வதேச மையம்: மோடி நாளை திறக்கிறார்
  • டெல்லியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
  • கடந்த 1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவாக டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையம் அமைப்பதற்கு தேசிய கமிட்டி பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு அம்பேத்கர் சர்வதேச மையத்துடன் அம்பேத்கர் தேசிய பொது நூலகம் அமைக்க முடிவு செய்து அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது.
  • இதனையடுத்து அம்பேத்கர் சர்வதேச மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2015-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி நடைபெற்றது. பிரதமர் நரேதிர மோடி அடிக்கல் நாட்டினார்.
  • கடந்த இரண்டு வருடங்களாக இதற்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நாளை திறப்பு விழா நடைபெறவுள்ளது. பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். நாளை காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. டெல்லி ஜன்பத் சாலையில் இந்த மையம் உள்ளது.
  • இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களை பதிவிட்டுள்ளார். அதில் பிரம்மாண்டமான வடிவமைப்பு, அம்பேத்கர் சிலை என படங்கள் உள்ளன. மேலும், இந்தக் கட்டடத்தை அம்பேத்கருக்கு சமர்பிக்க உள்ளதாக அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். நவீன புத்தர்கால கலை வடிவத்துடன் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மனிதகுலத்தின் கலாசாரா பாரம்பர்ய நிகழ்வு கும்பமேளா! யுனெஸ்கோ அங்கீகாரம்
  • கும்பமேளா, மனிதகுலத்தின் கலாசார பாரம்பர்ய நிகழ்வு என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது.
  • அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும், ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையிலும், நாசிக்கில் கோதாவரிக் கரையிலும், உஜ்ஜயினியில் க்ஷிப்ரா நதிக்கரையிலும் கும்பமேளா நிகழும். 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுவர்.
  • உலகில் அதிகம்பேர் கூடும் ஆன்மிக நிகழ்வாக கும்பமேளா கருதப்படுகிறது. இந்த நிலையில், கலாசார பாரம்பர்ய நிகழ்வாக கும்பமேளாவை யுனெஸ்கோ அமைப்பு தற்போது அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், மதம் சார்ந்து மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் வரிசையில் கும்பமேளாவும் இணைந்துள்ளது. 
  • அந்தவரிசையில், போஸ்ட்வானா, கொலம்பியா, வெனிசுலா, மங்கோலியா, மொராக்கோ, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் தற்போது சேர்ந்துள்ளது. 
தகவல் ஆணையர்கள் இன்று பதவியேற்பு: அரசிதழில் உத்தரவு வெளியீடு
  • தமிழ்நாடு தகவல் ஆணையாளர்கள் நியமனம் தொடர்பான உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்டுள்ளார்.
  • தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷீலா ப்ரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று, தகவல் ஆணையாளர்களாக எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்குமார், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோர் நியனம் செய்யப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் ஸ்வர்ணா குறிப்பிட்டுள்ளார்.
இளம் வயதில் மேன் ஆஃப் தி மேட்ச் 16 வயதில் சாதித்த ஆப்கானிஸ்தான் அறிமுக வீரர்
  • அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப் ஜர்தான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
  • இந்தப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் அறிமுகமான 16 வயது இளம் வீரர் முஜீப் ஜர்தான், 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 
  • அவரது சிறப்பான பந்துவீச்சு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுத்தந்தது. இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் இளம்வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையை ஜர்தான் படைத்தார். அதேபோல், 21-ம் நூற்றாண்டில் பிறந்து சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
ஐந்தாவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருதைவென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon d'Or விருதை போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறார்.
  • கால்பந்து அரங்கில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் இந்த விருது முக்கியமானது. 32 வயதான ரொனால்டோ ஏற்கெனவே, இந்த விருதை 2008, 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வென்றிருந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை முந்தி சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றிருக்கிறார் ரொனால்டோ. 
  • இதன்மூலம், அதிக முறை (5) இந்த விருதை வென்ற மெஸ்ஸியின் சாதனையையும் அவர் சமன் செய்திருக்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற விழாவில் ரொனால்டோவுக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. 
  • இந்தாண்டு விருதுக்கான 30 வீரர்கள் கொண்ட பட்டியலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இரண்டாம் இடமும், பிரேசில் வீரர் நெய்மர், மூன்றாம் இடமும் பிடித்தனர்.
நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மாற்றுத்திறனாளி பெண்
  • இந்தியாவைச் சேர்ந்த காஞ்சனமாலா பாண்டே என்ற மாற்றுத்திறனாளி பெண்மணி மெக்ஸ்சிகோவில் நடைபெற்ற உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். காஞ்சனமாலா பாண்டே(26) நாக்பூரைச் சேர்ந்தவர். 
  • பார்வை குறைபாடுடைய இவர் ரிசர்வ் வங்கியில் பணி புரிந்து வருகிறார். மெக்ஸிகோவில் நடைபெற்ற 200 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார். 
  • உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தகுதி பெற்ற ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையை காஞ்சனமாலா பெற்றுள்ளார். ஊனத்தை ஒரு பிரச்சனையாக கருதவில்லை என்றும் தன்னுடைய விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே இந்த வெற்றிக்கு காரணம் என காஞ்சனமாலா பாண்டே கூறியுள்ளார்.
10 ஸ்மார்ட் சிட்டி பட்டியிலில் ஈரோடு மற்றும் திண்டுக்கல் நகரங்கள்
  • 10 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு மற்றும் திண்டுக்கல் நகரங்கள் இடம் பெற்றுள்ளது. பரிந்துரை பட்டியலில் ஈரோடு, திண்டுக்கல் நகரங்கள் இடம் பெற்றுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட 15 இடங்களில் 10 நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்கிறது. 
  • நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 90 நகரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசி 10 நகரங்கள் விரைவில் அறிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அடுத்து மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
`வாசினார்' கூட்டமைப்பில் இணைந்த இந்தியா!
  • ஆயுதம் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள நிபந்தனைகள் விதிக்க உருவாக்கப்பட்ட 'வாசினார்' கூட்டமைப்பில் புதிதாக இந்தியா இணைந்துள்ளது.
  • ஆயுதம் மற்றும் அதன் தொழில்நுட்பங்களை வல்லரசுகள் நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதைத் தடுப்பதற்காகவும் அதில் கட்டுப்பாடுகள் கொண்டு வரவும் சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்புதான் 'வாசினார்'. இந்த 'வாசினார்' கூட்டமைப்பில் தற்போது 42 வது நாடாக இந்தியா இணைந்துள்ளது.
  • அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அர்ஜெண்டினா உள்ளிட்ட 41 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்தக் கூட்டமைப்பின் மாநாடு சமீபத்தில் ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் இந்தியா இணைவதற்கான அனுமதியை இதர நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அனுமதி அளித்தன. 
  • என்.எஸ்.ஜி எனப்படும் அணு ஆயுத விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா இணைய தொடர்ந்து சீனா எதிர்ப்பு தெரிவித்துவரும் வேளையில் வாசினார் கூட்டமைப்பில் இந்தியா இணைய தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இது சீனாவுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருந்தாலும் இந்தியா விரைவில் என்.எஸ்.ஜி-யில் சேர இதன் மூலம் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயிருள்ள குழந்தை இறந்ததாக அறிவித்த டில்லி மேக்ஸ் மருத்துவமனை செயல்பட தடை! கெஜ்ரிவால் அரசு அதிரடி
  • தலைநகர் டில்லியில் உள்ள பிரபல மேக்ஸ் மருத்துவமனையில் உயிருடன் இருந்த குழந்தை இறந்ததாக கூறி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • ஆனால், அந்த குழந்தை உயிருடன் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை செய்ய டில்லி மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
  • இந்நிலையில், கவனக்குறைவாக செயல்பட்ட அந்த மருத்துவமனையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து கெஜ்ரிவால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • டில்லியில் உள்ள சாந்திதேவி என்னும் இளம்பெண் பிரசவத்துக்காக டில்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது. பிறந்த குழந்தையின் எடை 400 கிராம் இருந்ததாம்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: முதல் நாளில் ஐந்து பதக்கங்கள் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்
  • பத்தாவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் ஐந்து பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தியுள்ளனர்.
  • பத்தாவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் வாகோ சிட்டி நகரில் நேற்று தொடங்கியது.
  • இந்தப் போட்டியில் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவில் இந்தியா ஐந்து பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
  • ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் வெண்கலப் பதக்கமும், அதே பிரிவில் ஜூனியர்களுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கமும், அணிகளுக்கான மூன்று பிரிவுகளில் இந்தியாவின் மூன்று அணிகள் வெள்ளிப் பதக்கமும் வென்றன.
  • இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் ரவி குமார், தீபக் குமார், ககன் நரங் ஆகியோர் தகுதிபெற்றனர். இதில் ரவி குமார் 225.7 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.
  • இதனிடையே ரவி, தீபக், ககன் அடங்கிய குழு, அணிகளுக்கான பிரிவில் 1876.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது.
  • மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் அணி பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மோத்கில், மேக்னா சஜ்ஜனார், பூஜா காட்கர் ஆகியோர் குழு 1247 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது.
  • இதேபோல் ஜூனியர் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா 0.1 புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்து வெள்ளி வென்றார்.
  • இதனிடையே, அணிகளுக்கான பிரிவில் அர்ஜூன், தேஜாஸ், சன்மூன் சிங் பிரார் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி, 1867.5 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது.
விளம்பரத்துக்காக 3,755 கோடி ரூபாய் செலவுசெய்த மத்திய அரசு
  • மூன்று ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்துக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு 3,755 கோடி ரூபாய் செலவு செய்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரியவந்துள்ளது.
  • மூன்றரை ஆண்டுகளில் மின்னணு ஊடகங்களுக்கு மட்டும் விளம்பரத்துக்கு 1,656 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், டிஜிட்டல் சினிமா, இணையதளம், சமூக வானொலி, டி.வி ஆகியவை அடங்கும்.
  • அச்சு ஊடகங்களுக்கு மட்டும் 1,698 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. போஸ்டர், புக்லெட் போன்றவைகளுக்காக 399 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. விளம்பரத்துக்காக ஒதுக்கப்பட்ட பணத்தின் மதிப்பு, நிறைய முக்கிய அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையைவிட அதிகம் என்பது குறிப்பிட்டது. 
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்த பிரச்னை ஐக்கிய நாடுகள் சபை நிராகரிப்பு
  • இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா ஜெருசலேமை அங்கீகரித்ததை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்தது.ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 
  • இந்த நிலையில் ஐநாசபையின் பாதுகாப்பு சபை நேற்று கூடியது இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்ததால், சிறப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா உணர்ந்தது.
  • அந்த கூட்டத்தில் ஜெருசலேம் விவகாரம் குறித்து இஸ்ரேலியர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். இறுதி நிலை உடன்படிக்கை பாலஸ்தீனியர்கள் முன்னணி இருக்க வேண்டும்  என 5 ஐரோக்கிய நாடுகள் தெரிவித்தன.
  • ஐரோப்பிய யூனியனில் ஒரு தெளிவான மற்றும் ஒன்றுபட்ட நிலை உள்ளது. இது ஒன்றே இஸ்ரேலுக்கு இடையிலான முரண்பாட்டிற்கு ஒரே உண்மையான தீர்வு என்று நாங்கள் நம்புகிறோம்.
  • பாலஸ்தீனம் இரு நாடுகளின் அடிப்படையிலானது. பாதுகாப்புக் குழு கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட ஒரே அறிக்கை ஐரோப்பிய அறிக்கை, கூட்டம் கூட்டு அறிக்கையோ அல்லது தீர்மானமோ இல்லாமல் முடிந்தது.
கல்லூரியில் திறன் மேம்பாடு, அறிவியல் ஆராய்ச்சி மையம் தொடக்கம்
  • சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் ராஜீவ் சர்மா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 
  • குன்றத்தூரை அடுத்த காட்டரம்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியும், சீனாவின் டியான்ஜின் மாநிலத்தின் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்தியுள்ளன. 
மத்திய அரசின் ஹெலிகாப்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் தொழிற்சங்கம்
  • மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பவான் ஹான்ஸ், ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 300 ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்ட அகில இந்திய விமான போக்குவரத்த ஊழியர் சங்கம் செயல்பட்டு வருகிறது.
  • இந்நிறுவனத்தில் மத்திய அரசின் 51 சதவீத பங்குகளை வாங்க இந்த தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தை விற்பனை செய்யும் ஏலத்தில் கலந்துகொள்ள தொழிலாளர்களுக்கும் வழிவகை உள்ளது. இது நடந்தால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பரிமாற்றமாக இது இருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.
உலக ஹாக்கி லீக் போட்டிகள்: ஆஸ்திரேலியா சாம்பியன், இந்தியாவுக்கு வெண்கலம்
  • இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற அர்ஜெண்டினா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் போட்டியில் மோதின. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடிய நிலையில் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா தங்கம் வென்றது. எனவே இந்த போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு வெள்ளி கிடைத்தது
  • இந்த நிலையில் மூன்றாவது இடத்திற்கான நடந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி 2-1 என்ற கோல்கணக்கில் வென்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினர்.
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் 45% மக்கள் லஞ்சம் கொடுதுள்ளதாக ஆய்வில் தகவல்
  • இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 45 சதவீத பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 37% பேர் ஊழல் உயர்ந்துள்ளது என்றும் 14 சதவீத பேர் ஊழல் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். 
  • 45% பேர் ஊழலில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த சர்வே 11 மாநிலத்தில் நடைபெற்றது. கரப்ஷன் வாட்ச்டாக் என்ற நிறுவனம் இந்த சர்வேவை நடத்தியுள்ளது. 
ஏப்ரல் - நவம்பர் வரை நேரடி வரி வசூல் ரூ.4.8 லட்சம் கோடி
  • ஏப்ரல் முதல் நவம்பர் வரையான கால கட்டத்தில் நேரடி வரி (Direct Tax) வசூல் ரூ.4 லட்சத்து 81 ஆயிரம் கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
  • ஏப்ரல் முதல் நவம்பர் வரையான கால கட்டத்தில் நேரடி வரிக்கான வசூல் மொத்தம் ரூ.4 லட்சத்து 81 ஆயிரம் கோடி ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 14.4% அதிகம்.
ஐந்தில் ஒரு பங்கு குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சைக்கு கடன்
  • நாட்டில் 5-ல் ஒரு பங்கு குடும்பத்தினர் மருத்துமவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக கடன் வாங்குவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • கிராமபுறங்களில் வசிக்கும் ஏழை மக்களில் 65 சதவீதம் பேர் தங்களது வருவாய் சேமிப்பிலும் 27 சதவீத மக்கள் கடன் வாங்கியும் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். அதே போல் 68 சதவீதம பணக்காரர்கள்தங்களது வருவாய் சேமிப்பிலும் ,23 சதவீதம் பேர் கடன் வாங்கியும் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். 
  • ஒரு சதவீத கிராம மக்கள் தங்களது சொத்துக்களை விற்று மருத்துவசிகிச்சை பெறுகின்றனர். கிராமம், நகர்புறங்களை சேர்ந்த 5 சதவீதம் பேர், நண்பர்கள் உறவினர்களின் உதவி மூலம் செலவுகளை மேற்கொள்கின்றனர். 
  • அதே நேரத்தில் இமாச்சல் பிரதேசம் , ஜம்முகாஷ்மீர்,உத்தரகண்ட், கேரள மாநிலங்களில் மருத்துத்திற்கான செலவு தொகைகள் குறைவாக உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தி. காங்., லிருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ., அங்கீகாரம்
  • திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் இந்திய அரசியல் சட்டம் 10வது அட்டவணை வழங்கியுள்ள வழிமுறைகளின்படி பா.ஜ., உறுப்பினர்களாக அங்கீகரிப்பதாக திரிபுரா சட்டசபை சபாநாயகர் தெரிவித்தார்.
  • திரிபுரா சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருந்த 6 பேர், கடந்த ஆண்டு திரிணமுல் காங்கிரசில் சேர்ந்தார்கள். பின்னர் அங்கிருந்து விலகி கடந்த ஏப்ரல் மாதம் பா.ஜ.வில் இணைந்தனர். பின்னர் தங்களை பா.ஜ., எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகர் ரமேந்திர சந்திர தேப்நாத்திடம் மனு அளித்தனர்.
  • அதன்படி,இந்திய அரசியல் சட்டம் 10வது அட்டவணை வழங்கியுள்ள வழிமுறைகளின்படி ஆய்வு செய்த சபாநாயகர், 6 எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜ., உறுப்பினர்களாக அங்கீகரித்தார். 6 உறுப்பினர்களும் திரிணமுல் காங்கிரசுடனான உறவுகளை முறித்துக்கொண்டு பா.ஜ.,வில் இணைந்திருக்கும் நிலையில், அவர்களை பா.ஜ., உறுப்பினர்கள் என அங்கீகரிப்பது என அவர் முடிவு செய்துள்ளதாக சட்டசபை செயலாளர் மஜூம்தார் தெரிவித்தார்.
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு 'ஏரறிஞர்' விருது; மூன்று பல்கலைகள் இணைந்து வழங்கின
  • வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, மூன்று பல்கலைகளின் சார்பில், 'ஏரறிஞர்' என்ற விருதை, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வழங்கினார்.
  • வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, தமிழ்நாடு மீன்வள பல்கலை மற்றும் தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலை ஆகியன இணைந்து, வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, 'ஏரறிஞர்' என்ற பட்டம் வழங்கின.
திருப்பத்தூர் அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் கண்டெடுப்பு
  • திருப்பத்தூர் அருகே உள்ள நந்திபெண்டா எனுமிடத்தில் கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
  • வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள வெலக்கல்நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் தூய நெஞ்சகக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார், சமூக ஆர்வலர் முத்தமிழ் மற்றும் ஆய்வு மாணவர் எல்வின் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள ஆய்வினை மேற்கொண்டனர். 
  • அப்போது, வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட நந்திபெண்டா என்னும் சிற்றூரில் கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் ஒன்றைக் கண்டறிந்தனர். 
  • அந்த நடுகல்லானது தலா 5 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்ட நான்கு பலகைக் கற்களால் அமைக்கப்பட்ட கற்திட்டையினுள் அமைக்கப்பட்டுள்ளது. நடுகல் இடம் பெற்றுள்ள பலகைக் கல்லில் வீரன் ஒருவன் தனது வலது கையில் வாளும் இடது கையில் வில்லும் ஏந்தியவாறு உள்ளார். அவனது நெற்றியில் திலகமாகப் பிறைக்குறி காணப்படுகிறது. 
  • கழுத்திலும் கைகளிலும் அணிகலன்களை அணிந்துள்ளான். இடையில் கச்சையும் அதனோடு சிறு கத்தியும் வைத்துள்ளார். அருகில், வீரன் உயிர்நீத்தவுடன் அவனோடு தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட பெண்ணுருவமும் இடம்பெற்றுள்ளது. அப்பெண் அவனது மனைவியாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. 
  • இந்த நடுகல்லினை இவ்வூரார் படவீட்டம்மன் என்கின்றனர். அதாவது படைவீட்டம்மன் என்ற பெயர்தான் காலப்போக்கில் மருவி படவீட்டம்மன் என்றாகியுள்ளது. 
நீட் பயிற்சி மையங்கள் துவங்குவது தொடர்பான அரசாணை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்
  • நீட் பயிற்சி மையங்கள் துவங்குவது தொடர்பான அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • தற்போது பல இணையதளங்கள் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நீட் பயிற்சி அளிப்பதாக விளம்பரப்படுத்தி வருகின்றன.
  •  இந்தப் பயிற்சியில் விடியோ வழி பாடம், ஆன்லைன் டியூஷன், தேர்வுக் குறிப்பு, லைவ் சாட் எனப்படும் பயிற்றுநருடனான நேரடி உரையாடல், பயிற்சித் தேர்வு, கடந்த ஆண்டுகளின் கேள்வித் தாள்கள், மாதிரி கேள்வித் தாள்கள், கண்டிப்பாக இடம்பெறும் என்று கருதப்படும் வினா-விடைகள் ஆகியவை அடங்கும். 
  • இந்த வகை பயிற்சிக்கு குறைந்தபட்சம் ரூ.9,500 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும் என்று அறிவிப்புகள் கூறுகின்றன. 
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசாணையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. ரூ.20 கோடியில் 412 ஒன்றியங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக் கிளைகளின் பெயர்கள், ஐஎப்எஸ்சி குறியீடுகள் மாற்றம்
  • நாட்டின் பல்வேறு நகரங்களில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது 1,300 வங்கிக் கிளைகளின் பெயர் மற்றும் 'ஐஎப்எஸ்சி' எனப்படும் அடையாள குறியீட்டு எண்ணை மாற்றி உள்ளது. 
  • நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான வங்கியான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன், அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் உள்ளிட்ட 5 வங்கிகள் இந்த ஆண்டு ஏப்ரலில் இணைக்கப்பட்டன.  
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன், துணை வங்கிகள் இணைந்த பிறகு, நிர்வாக வசதிக்காக பல்வேறு வங்கிகளை இணைத்துள்ளோம். இதனால் 1,300 வங்கிக் கிளைகளின் பெயர்கள் மற்றும் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் அடையாள 'ஐஎப்எஸ்சி' எண்ணும் மாற்றப்பட்டுள்ளது. 
  • புதிய ஐஎப்எஸ்சி குறியீட்டு எண்கள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
சவுதியில் அடுத்த ஆண்டு முதல் சினிமா தியேட்டர் தொடங்க அனுமதி
  • 2018ம் ஆண்டு முதல் சினிமா தியேட்டர்கள் தொடங்க அனுமதி வழங்கப்படும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
  • சவுதியில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. எனினும் சமீப காலமாக சவுதி அரசர் சல்மான், இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் இதில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.
  • கடந்த செப்டம்பரில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான விதிமுறை 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 1980ம் ஆண்டுகளில் திரையரங்குகள் மூடப்பட்டன. 35 ஆண்டுகளுக்கு பின்னர் சினிமா தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சவுதி விலக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
  • காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 
  • இதனால் ராகுல் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.கடந்த 17 ஆண்டுகளாக காங்., தலைவராக சோனியா இருந்து வந்தார்.
  • தற்போது ஒருமனதாக ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் டிசம்பர் 16 ம் தேதி கட்சியின் 87 வது தலைவராக பதவியேற்க உள்ளார். நேரு குடும்பத்தில் இருந்து, காங்., கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் 6வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • மோடி வாழ்த்து காங்., தலைவராக ராகுல் தேர்ந்தேடுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய தொழிலக உற்பத்தி 2.2 சதவீதமாக சரிவு
  • இந்திய தொழிலக உற்பத்தி (ஐஐபி) விகிதம் சென்ற அக்டோபரில் 3 மாதங்களில் காணப்படாத அளவுக்கு 2.2 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஐஐபி விகிதம் 4.2 சதவீதமாகவும், நடப்பு ஆண்டு செப்டம்பரில் 4.14 சதவீதமாகவும் காணப்பட்டதாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தயாரிப்பு மற்றும் சுரங்கத் துறையின் செயல்பாடுகள் முடங்கியதையடுத்தும், நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி பின்னடைவைக் கண்டதுமே இந்த சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 
  • நடப்பு 2017-18ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத கால அளவில் இந்திய தொழிலக உற்பத்தி வெறும் 2.5 சதவீத அளவுக்கே அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் இது 5.5 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. 
நாடு முழுவதும் ஒரே நீட் வினாத்தாள் : சி.பி.எஸ்.சி
  • நீட்தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என சி.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாகவும், தமிழத்திற்கு வழங்கப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக பதலிளிக்குடி படி சி.பி.எஸ்.சி.,க்கு கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில் சி.பி.எஸ்.சி., அளித்த பதிலில் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்தான் நாடு முழுவதும் வழங்கப்படும் என்றும் தேர்வு தொடர்புடைய பிற குளறுபடிகள் கலையப்படும் என்றும் இது வரும் 2018 ஆண்டு முதல் நடை முறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் நவம்பரில் கடுமையாக அதிகரிப்பு
  • சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் நவம்பரில் கடுமையாக அதிகரித்துள்ளது. அக்டோபரில் 3.58 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் நவம்பரில் 4.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
  • பருவம் தவறிய மழையால் பயிர்கள் அழிந்ததால் உணவுப் பொருட்கள் வில்லை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.உணவுப் பொருட்கள் விலை உயர்வால் ரிசர்வ் வங்கி கணிப்பையும் விஞ்சி பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. 
சமூக சேவை: நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அன்னை தெரசா நினைவு விருது
  • சமூக பங்களிப்புக்காகவும், சமூக நீதிக்காகவும். சமூக சேவைக்காகவும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது.
  • நடிகை பிரியங்கா சோப்ரா சமூக காரணங்களுக்கான பங்களிப்பை வழங்கி வருவதால், அவருக்கு ஹார்மனி அறக்கட்டளையின் சார்பாக அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு
  • உடுமலை சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடி உத்தரவிட்டது. மேலும், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், மூவரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • 6 பேருக்கு தூக்கு தண்டனை: வழக்கில் கைது செய்யப்பட்ட அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்னகுமார் ஆகிய மூவரைத் தவிர, மற்ற அனைவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தார் நீதிபதி. அதையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், தமிழ் கலைவாணன், மைக்கேல் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 9-ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். 
கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
  • பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள, 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல், கடற்படையில் இன்று முறைப்படி இணைந்தது. மும்பையில் நடந்த விழாவில், பிரதமர், நரேந்திர மோடி இதை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
  • நம் கடற்படையின் முதல் நீர்மூழ்கி கப்பலான, கல்வாரி, 1967ல் இணைக்கப்பட்டது. 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த அது, 1996ல், படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடற்படைக்கு, ஆறு ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
  • இதன்படி, பிரான்ஸ் நாட்டின், 'டி.சி.என்.எஸ்.,' நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், மும்பையைச் சேர்ந்த மசாகான் கப்பல் கட்டும் நிறுவனம், புதிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது. முதல் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானங்கள் முடிந்து, மூன்று மாதங்களாக பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது.
  • மிகவும் வெற்றிகரமாக முடிந்த இந்த சோதனைகளுக்குப் பின், 'கல்வாரி' என, பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல், கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. மும்பையில், இன்று நடக்கும் விழாவில், பிரதமர், நரேந்திர மோடி இதை அர்ப்பணித்து வைத்தார். ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடற்படை தளபதி, சுனில் லம்பா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பலம் அதிகரிப்பு மிகவும் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ள இந்த நீர்மூழ்கி கப்பலை, ரேடாரால் கண்காணிக்க முடியாது.
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிதான வட்டெழுத்து கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிப்பு
  • தொல்லியல் ஆய்வின்போது கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிதான வட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது என்று பேராசிரியை பிரியா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
  • "திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு எதிரில் பழமை வாய்ந்த சிற்றாறு பாய்கிறது. இந்த சிற்றாறு படித்துறைக்கு அருகில் மண்டபம் ஒன்று காணப்படுகிறது. அதனுள் சிவலிங்கமும் சிறிய நந்தி ஒன்றும் உள்ளது.
  • மண்டபத் தூணில் ஒருவர் வணங்கிய நிலையில் உள்ள புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மண்டபத்தின் இடது புறத்தில் ஆறு பாயும் பகுதியில் நடராஜர் புடைப்பு சிற்பமும், பசு சிவலிங்கத்துக்கு பால் சொரிவது போல் புடைப்பு சிற்பமும், ஒரு ஆண் வணங்கும் நிலையில் ஒரு சிற்பமும், இரண்டு பெண்கள் சிற்பமும் புடைப்பு சிற்பங்களாக காணப்படுகின்றன. அவை நீரால் தேய்ந்துள்ளது.
  • ஆற்றின் மதகு ஒன்றிலும், கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அரிதான பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு இரண்டு காணக் கிடைக்கிறது.
  • மீதி கல்வெட்டுகள் அனைத்தும் 13 மற்றும் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இந்த சுவரிலும் மதகிலும் காணப்படும் கல்வெட்டுகள் மூலமாக சுந்தரபாண்டியனின் மெய் கீர்த்தியும், தேவதானம், இறையிலி, பிரம்ம தானம் போன்ற நிலதானம் பற்றியும், வெட்டி, பாட்டம், அந்தராயம், புரவரி, கடமை காரிய வாராச்சி ஆகிய வரிகள் குறித்தும் இடம் பெற்றுள்ளன.
  • நல்லூர், குறிச்சி, மதுரோதய நல்லூர், பனையூர் என்ற ஊர் பெயர்களும், பல்லவராய சுந்தரபாண்டிய பேரேரி, விக்ரம பாண்டி பேரேரி போன்ற ஏரிகள் பற்றியும், விரத முடித்தான், அரையன், நடுவிநங்கை போன்ற குடிமக்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
  • நடுவிநங்கை என்ற பெண்மணி நந்தாவிளக்கு ஒன்றும், ஆடு ஐம்பது ஆகியவற்றைத் தானமளித்ததையும் கல்வெட்டு தெரிவிப்பதால் அந்தக் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்தமையும், பெண்கள் தம் விருப்பத்துடன் தம் சொத்துகளை அறச்செயல்களுக்கு பயன்படுத்தியமையும் அறிய முடிகிறது" என்று அவர் தெரிவித்தார்.
ஆதாரை இணைக்க மார்ச் 31 வரை அவகாசம்: புதிய அறிவிப்பு
  • ஆதார் எண்ணுடன், பான் எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
  • மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் தொடர்ந்து பெற ஆதார் எண்ணை கட்டாயம் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது.
எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்
  • எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் மீதான வழக்கை விசாரிக்க, 12 சிறப்பு கோர்ட் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
  • மேலும், இந்த சிறப்பு கோர்ட்களை மார்ச் 1 முதல் ப பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், இங்கு எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும். சிறப்பு கோர்ட்கள் அமைக்க மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி பணியை தொடர வேண்டும் எனவும், ஒராண்டிற்குள் வழக்குகளை விசாரித்து சிறப்பு கோர்ட்கள் தீர்ப்பு வழங்கலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
  • தமிழகம், ஆந்திரா, பீஹார், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு கோர்ட் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுதும் 1,581 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடியுங்கள்: சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
  • சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் ராணுவ வீரர்களுக்கு ஊழியர்கள் சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
  • சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்கள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்க பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் கடந்து செல்லும்போது அவர்களுக்கு எழுந்து நின்று சல்யூட் அடிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • மேலும் சுங்கச்சாவடியில் உள்ள சீனியர் அதிகாரிகள்தான் ராணுவ வீரர்களின் அடையாள அட்டை போன்றவற்றை சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. நாட்டிற்கு ராணுவ வீரர்கள் அளித்து வரும் தியாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக சுங்கச்சாவடி ஊழியர்கள், ராணுவ வீரர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசுவாதாகும் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த அறிக்கையை விடுத்துள்ளது. இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. 
  • இதில் எப்படி ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று சல்யூட் அடிப்பது என்று கேள்வி எழுப்புகின்றனர். இதனால் பயணிகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள்.
டெங்கு பாதிப்பில் தமிழகம் முதலிடம்
  • நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்தில் 21ஆயிரத்து 350 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளானதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • நாட்டில் தமிழகத்தில் தான் அதிகளவு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 21,350 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 
  • கடந்த 2014ம் ஆண்டு 2,804 பேரும், 2015ம் ஆண்டு 4,535 பேரும் 2016ம் ஆண்டு 2,531 பேரும் தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.நாடு முழுவதும் 1,50,482 பேரும், கேரளாவில் மட்டும் 19,695 பேரும் டெங்குவால் பாதிக்கபட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தலாக்கை ஒழிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய, நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 
  • அத்துடன், இஸ்லாமிய பெண்களின் வாழ்வை பாதிக்கக்கூடிய முத்தலாக் முறையை நீக்க சட்டம் இயற்றலாம் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், அதற்கான மசோதாவின் அம்சங்கள் குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முத்தலாக் முறையை நீக்கும் மசோதாவுக்கு கூட்டத்தின் முடிவில் ஒப்புதலும் அளிக்கப்பட்டது. 
வெளிநாட்டு எலக்ட்ரானிக் பொருட்களின் சுங்க வரி இரு மடங்காக உயர்வு: மத்திய அரசு
  • வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் டிவி, செல்போன்களுக்கான போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கான சுங்க வரியை இரு மடங்காக மத்திய அரசு உயர்த்தி அறிவித்து உள்ளது.
  • வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கிருந்து எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வருவது வழக்கம். விலை குறைவாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து டிவி, டேப்டாப், மொபைல் போன்ற போன்றவற்றை எடுத்து வருவார்கள்.
  • இந்நிலையில், இதற்கான சுங்க கட்டணத்தை 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக அதிரடியாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் அடிப்படையில் உள்நாட்டு தொழில் வளர்ச்சியை பெருக்க வேண்டும் என்ற நோக்கில், வெளிநாட்டு பொருட்களுக்கு வரியை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக நரேந்தர் பத்ரா தேர்வு; பொதுச் செயலராக ராஜீவ் மேத்த தேர்வு
  • சர்வதேச வலைகோல் பந்தாட்டத்தின் கூட்டமைப்பின் தலைவராகப் பதவி வகித்துவரும் நரேந்தர் பத்ரா (56), இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அந்த சங்கத்தின் பொதுச் செயலராக ராஜீவ் மேத்தா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஆசிய டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் அனில் கன்னா விலகிக் கொண்டார்.
  • இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில், இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் வீரேந்தர் பாஷ்யாவும் போட்டியிட இருந்தார். எனினும், பின்னர் விலகிக்கொள்வதாக அவர் அறிவித்தார்.
  • அதனையடுத்து டெல்லியில் நேற்று நடைபெற்ற பொது குழுக் கூட்டத்தில் நரேந்தர் பத்ரா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
500 ச.மீ-க்கு மேலான கட்டடங்கள் பதிவு செய்வது கட்டாயம்
  • தமிழகத்தில் 500 சதுர மீட்டர் நிலப் பரப்புக்கு மேல் அல்லது 8 குடியிருப்புகளுக்கு மேல் கட்டடம் கட்டுபவர்கள் தமிழ்நாடு கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து சேவையில் ஜன., 1 முதல், 'இ - வே' ரசீது
  • சரக்கு போக்­கு­வ­ரத்­திற்­கான, ‘இ – வே’ ரசீது நடை­முறை, ஜன., 1 முதல், அம­லுக்கு வர உள்­ளது.ஜி.எஸ்.டி.,யில், ஒரு மாநி­லத்­திற்கு உள்­ளா­கவோ அல்­லது மாநி­லங்­க­ளுக்கு இடை­யிலோ, 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேற்­பட்ட மதிப்­புள்ள சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு, ‘இ – வே’ ரசீது அவ­சி­யம். சரக்கு சப்­ளை­யர், ‘ஆன் லைன்’ மூலம் இந்த ரசீதை தயா­ரித்து, அதன் நகலை, சரக்­கு­டன் அனுப்ப வேண்­டும். 
  • இத­னால், ஒரு சரக்கு எந்த இடத்­தில் இருந்து, யார் மூலம், யாரை சென்­ற­டை­கிறது என்­பதை, வரி அதி­கா­ரி­கள், ‘ஆன் லைன்’ மூலம் சுல­ப­மாக கண்­கா­ணிக்­க­லாம்.
  • வரி ஏய்ப்பை தடுக்­கும் இத்­திட்­டம், 2018 ஜன., 1 முதல், அம­லுக்கு வர உள்­ளது. இன்று, மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி தலை­மை­யில், ஜி.எஸ்.டி.,கவுன்­சில் கூட்­டம், ‘வீடியோ கான்­ப­ரன்­சிங்’ மூலம் நடை­பெற உள்­ளது.அப்­போது, ‘இ – வே’ ரசீது அமல்­ப­டுத்­து­வது குறித்து முடி­வெ­டுக்­கப்­படும் என, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.
மத்திய அரசு அதிரடி முடிவு... - 2020ம் ஆண்டுக்குள் மண்ணெண்ணை மானியம் ரத்து
  • வரும் 2020ம் ஆண்டுக்குள் மண்எண்ணெய் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, சவுபாக்கியா ஆகிய திட்டங்கள் மூலம் பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கி மண்எண்ணெய் பயன்பாட்டை மத்திய அரசு குறைத்து வருகிறது.
  • இந்த நிதியாண்டில் மண்எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஒட்டுமொத்த மானியமாக ரூ. 9 ஆயிரத்து 79 கோடி வழங்கியுள்ளது.
  • மண்எண்ணெய் மானியத்தைப் பொருத்த வரை கடந்த 2016-17ம் நிதி ஆண்டில் ரூ.7 ஆயிரத்து 595 கோடியாக இருந்த நிலையில், இந்த நிதி ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 500 கோடியாக குறைந்துள்ளது. இந்த மானியம் குறைவு என்பது, மக்கள் மத்தியில் மண்எண்ணெய் பயன்பாட்டை குறைத்து இருப்பதையே காட்டுகிறது.
  • ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’, திட்டம் மூலம் வீடுகளுக்கு 95 சதவீதம் சமையல் எரிவாயு சிலிண்டரும் ‘சவுபாக்கியா’ திட்டம் மூலம் 100 சதவீதம் வீடுகளுக்கு மின் இணைப்பும் வழங்க முடியும்.மண்எண்ணெய் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருவதால், வரும் 2020ம் ஆண்டுக்குள்மண்எண்ணெய்க்கான மானியத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பொலிவுறு நகரங்கள் திட்டம்: புதுவைக்கு ரூ. 98 கோடி ஒதுக்கீடு
  • பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ், புதுவைக்கு முதல்கட்டமாக ரூ. 98 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, இத்திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.
  • மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பொலிவுறு நகரங்கள் திட்டப் பட்டியலில் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது. இதற்காக ரூ. 1,850 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன
  • பொலிவுறு நகரில் மொத்தம் 63 தனித் தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 
  • இந்த நிலையில், பொலிவுறு நகரப் பணிகளுக்காக மத்திய அரசு முதல்கட்டமாக வழங்க வேண்டிய ரூ. 200 கோடியில் ரூ. 98 கோடியை வழங்கியுள்ளது. 
  • கடற்கரை செயற்கை மணல் பரப்புத் திட்டம்: இதனிடையே, புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணல் பரப்பை உருவாக்கும் திட்டம் மார்ச் மாதம் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
  • செயற்கை மணல் பரப்பை உருவாக்க, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகமும், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ரூ. 25 கோடியில் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. தலைமைச் செயலகம் எதிரே கடலில் கூம்பு வடிவிலான அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. 
  • முதல்கட்டமாக, கடலில் 200 மீட்டர் நீளத்துக்கு கருங்கற்கள் கொட்டப்பட்டு இடம் சமன் செய்யப்பட்டது. இதையடுத்து, கான்கிரீட் கட்டைகள் தயாரிக்கப்பட்டு பதிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக கடலில் 50 மீட்டர் தொலைவில், தண்ணீரில் மூழ்கக் கூடிய இரண்டு தடுப்புச் சுவர்களை உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
  • இதற்காக, அலையின் வேகத்தைக் குறைக்கும் வகையில், கய்சன் ரீப்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீரில் மூழ்கக்கூடிய ஒவ்வொரு ரீப்புகளும் 125 மீட்டர் நீளத்திலும், 100 மீட்டர் அகலத்திலும் அமைய உள்ளன.
தமிழகத்தில் பிரசவகால இறப்பு விகிதம் குறைந்துள்ளது
  • தமிழகத்தில் பிரசவகால இறப்பு விகிதத்தைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
  • இப்பணியில் இந்திய மருத்துவர்கள் சங்கமும், யுனிசெஃப் அமைப்பும் அரசுக்கு உதவியாக உள்ளன. இதனால், மருத்துவமனைகளில் பிரசவ கால இறப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
சவுதியில் வாகனம் ஓட்ட பெண்களுக்கு அனுமதி
  • ரியாத், சவுதி அரேபியாவில், டிரக்குகள், மோட்டார் சைக்கிள்களை இயக்க, பெண்களுக்கு அனுமதி வழங்கி, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
  • வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், டிரக்குகள், மோட்டார் சைக்கிள்களை, பெண்கள் இயக்க முடியாத கடுமையான சட்டம் அமலில் இருந்தது. இந்நிலையில், அந்த தடைகளை நீக்கி, மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். 
  • அதன்படி, அடுத்த ஆண்டு, ஜூன் முதல், சவுதி அரேபியாவில், டிரக்குகள், மோட்டார் சைக்கிள்களை, பெண்கள் இயக்க முடியும்.மன்னரின் புதிய உத்தரவுப்படி, அடுத்த ஆண்டு ஜூன் முதல், டிரக்குகள், மோட்டார் சைக்கிள்களை, பெண்களும் இயக்கலாம். பெண்கள் இயக்கும் வானகங்களுக்கு, தனி, 'நம்பர் பிளேட்' இருக்காது.
  • வாகனம் இயக்குவதில், ஆண், பெண் பாகுபாடு கிடையாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ.2 ஆயிரம் வரை கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு கட்டணம் ரத்து
  • ரூ. 2 ஆயிரத்துக்கும் குறைவாக கிரெடிட், டெபிட் கார்டுகள், ‘பிம்’, ‘யு.பி.ஐ.’ ஆப்ஸ் மூலம் செய்யப்படும்டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு எம்.டி.ஆர். (மெர்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட்) கட்டணம் வசூலிக்கப்படாது. ஜனவரி 1ந்தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு இது கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்த கட்டணத்தை அரசே ஏற்றுக்கொண்டு வங்கிகளுக்கு செலுத்தும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 512 கோடி செலவாகும்.
ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப ஸ்டார் இந்தியா தொலைக்காட்சியுடன் ரூ.16 ஆயிரத்து 347 கோடிக்கு ஒப்பந்தம் - பிசிசிஐ
  • அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு ஸ்டார் இந்தியா தொலைக்காட்சியுடன் ரூ.16 ஆயிரத்து 347 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ராகுல் ஜோரி தெரிவித்தார்.
  • "இந்திய அணி அடுத்த ஐந்து வருடங்களில் உள்ளூரில் மட்டும் 27 டி-20 போட்டிகள் உள்பட 81 போட்டிகளில் விளையாடும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுளளது. மேலும், 26 டி20 போட்டிகள் வெளிநாடுகளில் நடைபெறும். டி-20 போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல், இந்த காலகட்டத்தில் 37 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட வழிவகை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 19 டெஸ்ட் உள்ளூரிலும், 18 டெஸ்ட் போட்டிகள் வெளிநாடுகளிலும் நடைபெறும்.
  • அடுத்த வருடம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு ஸ்டார் இந்தியா தொலைக்காட்சியுடன் ரூ.16 ஆயிரத்து 347 கோடி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
கங்கையில் 'பிளாஸ்டிக்' பொருள்கள் பயன்படுத்தத் தடை
  • கங்கை நதி அருகே பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை விதிப்பதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
  • கங்கையில் பக்தர்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டுச்செல்வதால், கங்கை நதியும் அதன் கரையும் அதிக அளவில் மாசுபடுகிறது. 
  • இதனால், சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும், கங்கை நதியின் சுற்றுச்சூழலைக் காக்க, நதியிலும் நதிக்கரையிலும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் எம்.சி. மேத்தா மனுத்தாக்கல் செய்தார்.
  • இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர்குமார், கங்கை நதி மற்றும் நதிக்கரையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதாக உத்தரவிட்டார். 
  • மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில், கங்கை நதி ஓடும் புனித ஸ்தலங்களான ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் மெல்லிய பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கத்திகள், கப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தவும் நீதிபதி தடை விதித்தார்.
தேசிய துப்பாக்கி சுடுதல்: பஞ்சாப் வீராங்கனை அஞ்சும் முட்கிலுக்கு ஐந்து தங்கங்கள்

  • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனிநபருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் பஞ்சாப் வீராங்கனை அஞ்சும் முட்கில் தங்கம் வென்றுள்ளார்.
  • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் தனிநபர் பிரிவில் 457.6 புள்ளிகளுடன் அஞ்சும் முட்கில் முதலிடம் பிடித்தார்.
  • இந்தப் போட்டியின் அணிகளுக்கான பிரிவிலும் முட்கில் தங்கம் வென்றதையடுத்து இப்போட்டியில் இதுவரை அவர் வென்ற மூன்று தங்கத்தையும் சேர்த்து, அவரது மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
  • இதனிடையே, 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் அணிகளுக்கான பிரிவில் அஞ்சும் முட்கில், தில்ரீன் கில், அவ்னிஷ் கெளர் சித்து ஆகியோர் அடங்கிய பஞ்சாப் அணி 1730 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றியது.
  • மகாராஷ்டிரம் 1714 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும், கேரளம் 1711 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றன.
ஆதாரை தவறாக பயன்படுத்திய ஏர்டெல் மீது நடவடிக்கை

  • ஆதார் எண்ணை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி டிஜிடல் வங்கிக் கணக்கை தொடங்கிய ஏர்டெல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • ஆதார் எண்ணின் மூலம் ஏர்டெல் ஈ கே ஒய் சி (Electronic know your customer) உரிமத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரஙகளை எடுத்துள்ளது. அதன் மூலம் ஏர்டெல் பேமெண்ட் வங்கி என்னும் தங்கள் வங்கிகளில் அவர்களை இணைத்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய ரூ. 47 கோடி பணத்தை தங்கள் ஏர்டெல் பெமெண்ட் வங்கி கணக்குகளுக்கு மாற்றி உள்ளது.
  • அது மட்டுமின்றி சமையல் எரிவாயு மானியம் உட்பட பல பண வருவுகளும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் வைக்கப்படாமல் ஏர்டெல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆதார் ஆணையத்துக்கு இது குறித்து பல புகார்கள் சென்றுள்ளன. ஆதார் ஆணையம் விசாரணை நடத்தியதில் இது உண்மை என தெரிந்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ள இ கே ஒய் சி உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்கும் பணியை ஏர்டெல் நிறுவனம் தற்போது செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
வெள்ளி வென்றார் சிந்து

  • உலக சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் பைனலில் தோற்ற இந்திய வீராங்கனை சிந்து, வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார். துபாயில், உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. 
  • இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-3' இந்தியாவின் சிந்து, 2வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுசி மோதினர். இம்முறை லீக் போட்டியில், யமாகுசிக்கு எதிராக சிந்து வெற்றி பெற்றிருந்ததால், பைனலில் சுலபமாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 
  • இந்நிலையில் முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 12-21 எனக் கோட்டைவிட்டார். பின், வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் கடைசி வரை போராடிய சிந்து 19-21 என இழந்தார். ஒரு மணி நேரம், 34 நிமிடம் வரை நீடித்த போட்டியில், சிந்து 21-15, 12-21, 19-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து 2வது இடம் பிடித்து, வெள்ளி வென்றார்.
காமன்வெல்த் போட்டியில், இந்திய வீரர் சுஷில்குமாரும், வீராங்கனை சாக்ஷி மாலிக்கும் தங்கம் வென்று அசத்தினர்.

  • காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவருகின்றன. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில், இந்திய அணியின் சார்பில் மொத்தம் 60 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். 
  • நேற்று நடைபெற்ற 74 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவின் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் சுஷில்குமார், தென்னாப்பிரிக்க வீரர் ஜொகனஸ் பெட்டுரசை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய சுஷில்குமார், தென்னாப்பிரிக்க வீரருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் 8-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றார். இது, காமன்வெல்த் போட்டிகளில் சுஷில்குமார் வெல்லும் ஐந்தாவது தங்கப்பதக்கமாகும்.
  • அதேபோல பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் நியூஸிலாந்து வீராங்கனை டைலா டுவைன் போர்டை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய சாக்ஷி மாலிக், நியூஸிலாந்து வீராங்கனைக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றார். இதையடுத்து, 62 கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி மாலிக் தங்கம் வென்றார்.
வேறு தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு மொபைல் எண்ணை மாற்றும் செலவை ரூ.4ஆக குறைக்க டிராய் திட்டம்
  • மொபைல் எண்ணை மாற்றாமலேயே வேறு நிறுவன சேவைக்கு மாறும் (எம்என்பி) செலவை ரூ.4 ஆக குறைக்க டிராய் திட்டமிட்டுள்ளது.
  • இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மொபைல் எண்ணை மாற்றாமலேயே வேறு நிறுவனத்துக்கு மாறும் நடைமுறை (எம்என்பி) அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் இருந்து இதுவரை வேறு நிறுவன சேவைக்கு எண்ணை மாற்றக்கோரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. 
  • தற்போது இவ்வாறு சேவையை மாற்றுவதற்கு அதிபட்ச கட்டணமாக 19 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்என்பி கோரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த கட்டணத்தை சுமார் 80 சதவீதம் குறைத்து 4 ஆக நிர்ணயிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வலியுறுத்தியுள்ளது. 
  • தற்போது எம்என்பி செயல்பாட்டுக்கான செலவுகளும் குறைந்துள்ளன. இதற்கேற்ப கட்டணத்தையும் குறைக்க வேண்டியுள்ளது. எனவே இந்த கட்டணத்தை 4ஆக நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்துள்ள டிராய், இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. 
ரூ. 8 ஆயிரம் கோடி கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிப்பு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
  • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம்வரை ரூ. 7 ஆயிரத்து 961 கோடி கருப்புபணத்தை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
  • மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்ட வந்ததற்கு பின், கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்தஆண்டு மார்ச் மாதம் வரை, ஏறக்குறைய 900 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் ரூ.900 கோடிக்கு சொத்துக்கள், கணக்கில் வராத ரூ. 7 ஆயிரத்து 961 கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
  • தேசிய குற்ற ஆவண அறிக்கையின் விவரங்கள் படி, ரூபாய்நோட்டு தடைக்குப் பின், ரூ.18.70 கோடி கள்ளநோட்டுகள் இந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி வரை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.15.70 கோடியாக மட்டுமே இருந்தது.
பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 ஆகக் குறைப்பு: ஏஐசிடிஇ நடவடிக்கை
  • நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆசிரியர், மாணவர் விகிதத்தை 1:20 ஆகக் குறைத்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 மாணவ-மாணவியருக்கு ஓர்ஆசிரியர் என்ற இந்த அறிவிப்புக்கு பொறியியல் கல்லூரிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன. 
  • நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஒவ்வோர் ஆண்டும் ஏஐசிடிஇயிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக, ஒவ்வோர் ஆண்டும் ஏஐசிடிஇ அனுமதிக் கையேட்டை (வழிகாட்டி புத்தகம்) வெளியிடும். 2018-19 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட அனுமதிக் கையேட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகளை ஏஐசிடிஇ வெளியிட்டிருக்கிறது. 
  • தகுதியான, தரமான பேராசிரியர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:15 என்ற அளவிலிருந்து அதாவது 15 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற அளவிலிருந்து மேலும் குறைக்க வேண்டும் என பொறியியல் கல்லூரிகள் சார்பில் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கையை ஏஐசிடிஇ இப்போது ஏற்றுள்ளது. இனி பொறியியல் கல்லூரிகளில் 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (1:20) என்ற அளவில் இருந்தால் போதும் என ஏஐசிடிஇ அறிவித்திருக்கிறது.
  • கல்லூரிக் கணினி ஆய்வகங்களில் 6 மாணவர்களுக்கு ஒரு கணினி (1:6) அல்லது மடிக் கணினி இடம் பெற்றிருக்க வேண்டும், அதோடு நூலகம், கழிவறை, புகார் மையம் என பிற அனைத்து வசதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளபடி இடம்பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
  • இணையதளத்தில் கட்டண விவரம்: கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட மாணவர்களிடம் வசூலிக்கப்படும் பிற அனைத்துக் கட்டணங்களின் விவரங்கள் அந்தந்த கல்லூரி இணையதளங்களில் வெளியிடப்பட வேண்டும். அதோடு, சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏஐசிடிஇ எச்சரித்துள்ளது.
  • இடங்கள் பாதியாகக் குறைய வாய்ப்பு: பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது தெரியவந்தால், அந்தக் கல்லூரியின் அங்கீகரிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை அளவு பாதியாகக் குறைக்கப்பட்டு விடும். ஒருவேளை கல்லூரியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருந்தால், அந்தப் படிப்புகளுக்கு 2018-19 கல்வியாண்டில் அனுமதி மறுக்கப்படும் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
தனியார், சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம்.மும்பை உயர்நீதிமன்றம்
  • தனியார், அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மகாராஷ்டிரா அரசு நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கட்ட அம்மாநில அரசின் இந்த உத்தரவு இந்த கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மேலும், அவர்கள் கூறுகையில், ''மாநிலம் முழுவதும் தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்ய ஒரே சீரான நடைமுறை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது'' என்றனர்.
சரக்குகளை எடுத்துச் செல்ல பிப்ரவரி முதல் இ-வே பில் கட்டாயம் - ஜிஎஸ்டி ஆணையம்
  • 2018 பிப்ரவரி முதல் மாநிலங்களுக்கிடையே சரக்குகளை எடுத்துச்செல்வதற்கு ஈ-வே பில் எனப்படும் மின்னணு ரசீது கட்டாயம் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் இருந்த வாட் வரி விதிப்பு முறையில் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கு சரக்குகளை அனுப்புவதற்கு ஜே.ஜே என்னும் படிவத்தையும், கூடவே சரக்குகளுக்கான பட்டியலையும் (Stock Transfer Note) அனுப்பும் நடைமுறையை கையாண்டுவந்தனர்.
மின்னணு ரசீது - இ வே பில் முறை
  • இதனை உணர்ந்தே ஜிஎஸ்டி ஆணையமும் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையில் நடக்கும் சரக்கு பரிமாற்றத்திற்கு மின்னணு ரசீது (E-Way Bill) கட்டாயம் என்று அறிவித்துள்ளது. 
ஜூனியர் சர்வதேச குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 11 பதக்கங்கள்; சிறந்த அணி விருதும் இந்தியாவுக்கே
  • ஜூனியர் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய ஆடவர்கள் 6 தங்கங்கள், 4 வெள்ளிகள், ஒரு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்கள் வென்று போட்டியின் "சிறந்த அணி' விருதை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தனர்.
  • ஜூனியர் சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் பாவேஷ் கட்டாமனி 52 கிலோ எடைப் பிரிவில் ஜெர்மனியின் லாùஸக் சாடெக்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். அத்துடன், இந்தப் போட்டியின் "சிறந்த வீரர்' என்ற விருதையும் அவரே தட்டித் சென்றார்.
  • அதேபோன்று, 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அக்ஷய் 3-2 என்ற கணக்கில் நூலிழையில் டென்மார்க்கின் நிகோலாய் டெர்டெரியானை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.
  • மற்றொரு வீரரான விஜய்தீப் 63 கிலோ எடைப் பிரிவில் நெதர்லாந்தின் பிரயன் வோஸனை வீழ்த்தி தங்கத்தை வென்றார்.
  • மற்றொரு பிரிவில் ஜெர்மனியின் ஜான் கெர்ஹாசரை வென்று, இந்தியாவுக்கு 4-வது தங்கம் வென்று தந்தார் ஐஷ் பனு.
  • இதேபோல 75 கிலோ பிரிவில் போட்டியிட்ட வினித், பிரான்ஸின் ரஃபேல் மோனியை வென்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
  • மற்றொரு ஆட்டமான 80 கிலோ பிரிவில் களம் கண்ட லக்ஷய் சாஹர், ஜெர்மனியின் ராஸி அல்-ஜெயினையும் வென்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
  • இந்த நிலையில், 48 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் ஃபிராங்க்ளின் வோமோவிடம் வீழ்ந்து வெள்ளி வென்றார் இந்திய வீரர் அனில்.
  • அதேபோல 50 கிலோ பிரிவில் போட்டியிட்ட ஸ்வப்னில் 2-3 என்ற கணக்கில் இங்கிலாந்தின் ரீஸ் தீஹானிடம் தோல்வி கண்டார்.
  • 54 கிலோ எடைப் பிரிவில களம் கண்ட அமன், 0-5 என்ற கணக்கில் பிரான்ஸின் பெனிக் மெல்குமியானிடமும், 80 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவில் சதேந்தர், இங்கிலாந்தின் வில்லியம் ஹோவிடமும் வீழ்ந்து வெள்ளியுடன் திரும்பினர்.
  • மற்றொரு பிரிவான 66 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆகாஷ், ஸ்லோவேனியாவின் காஷி சாதிக்கிடம் வீழ்ந்து வெண்கலம் வென்றார்.
  • இப்படி, ஜூனியர் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய ஆடவர்கள் 6 தங்கங்கள், 4 வெள்ளிகள், ஒரு வெண்கலம் வென்று இப்போட்டியின் "சிறந்த அணி' விருதை இந்திய அணிக்கு பெற்றுத் தந்தனர்.
ஒகி நிவாரண நிதி: தமிழகத்திற்கு ரூ.280 கோடி அறிவிப்பு
  • ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு வந்தார். 
  • ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.325 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
ஒரு ஆண்டில் 2 முறை நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் - மத்திய அரசு
  • நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் 2019ம் ஆண்டு முதல் ஒரு ஆண்டில் இரு முறை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • ''மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒரு ஆண்டில் 2 முறை நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் 2019ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது'' என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திரா குஸ்வாகா லோக்சபாவில் தெரிவித்தார்.
  • மாணவர்கள் தங்களது திறனை கொண்டு வர போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும். மாவட்டம் அளவிலான தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை தான் முடிவு செய்யும்'' என்றார்.
  • தேசிய தேர்வு வாரியம் தன்னாட்சி அந்தஸ்து கொண்டதாக இருக்கும். தேர்வுகளை நடத்த ஒரு முறை மானியமாக மத்திய அரசு ரூ. 25 கோடி வழங்குகிறது. அதன் பின்னர் அந்த அமைப்பு சுய நிதி ஆதாயம் மூலம் செயல்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திறந்தநிலை பல்கலை.,ல் பெற்ற எம்பில், பிஎச்டி பட்டம் செல்லும்
  • தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பெற்ற எம்பில் மற்றும் பிஎச்டி பட்டம் செல்லும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் நேரடிமுறையில் பெறப்பட்ட எம்பில், பிஎச்டி பட்டம் செல்லும். அரசு, அரசு சார் நியமனம், பல்கலை., கல்லூரிகளில் பணி நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றிற்கு இந்த பட்டங்கள் செல்லும். 
  • முதலில் யூஜிசி அங்கீகரித்த பல்கலை.,யில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பின்னர் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் முழு நேர அல்லது பகுதி நேரத்தில் சேர்ந்து ஆய்வு பட்டம் பெற வேண்டும். 
ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம்: லோக் சபாவில் மசோதா நிறைவேற்றம்
  • நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.எம்-களுக்கு தன்னாட்சி வழங்கப்பட லோக் சபா மசோதா நிறைவேற்றியுள்ளது.
  • ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய நாட்டின் முக்கிய நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள பல முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. இவற்றில் ஐ.ஐ.எம் நிறுவனங்களுக்குத் தன்னாட்சி வழங்குவது தொடர்பான மசோதா கடந்த ஜுலை மாதம் நாடாளுமன்றத்தின் லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 
  • நேற்று இது தொடர்பாக லோக் சபாவில் நடந்த விவாதத்தில் ஐ.ஐ.எம்-களுக்குத் தன்னாட்சி வழங்கும் அதிகாரத்துக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • நாட்டில் உள்ள அனைத்து ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களுக்கும் முதுகலை மற்றும் ஆய்வுப் பட்டம் வழங்குவதற்கு அனுமதியும் சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளன. இனி ஐ.ஐ.எம் நிறுவனங்களுக்கான குழு உறுப்பினர்கள் யாரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினர்கள் பதவியில் நீடிக்க முடியாது. 
  • அத்தனை நிறுவனங்களின் மொத்த வரவு செலவுகளும் இனி இந்திய அரசுக் கணக்காளர் கணக்கீடு செய்த பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவும் இம்மசோதா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும்
  • குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
  • குஜராத்தில் தேர்தல் நடந்து கொண்டு இருந்ததால் அம்மாநிலத்திற்கு எந்த விதமான நலத்திட்டங்களும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறது.
  • அதன்படி குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
  • இதற்காக வதோதராவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இந்த பணிகளை 2018 இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டு இருக்கிறது.
இந்திய வனச்சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • இந்திய வனச்சட்ட திருத்த மசோதா 2017 மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடந்த மக்களவை கூட்டத்தில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 
புலம் பெயர்ந்தோர் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் - ஐ.நா அறிக்கை
  • பிறந்த நாட்டை விட்டு வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துள்ளோர் பட்டியலில் 1.7 கோடி பேருடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • உலகம் முழுவதும் பலர், தாங்கள் பிறந்த நாட்டை விட்டு, வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்வது, 15 ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளது. புலம் பெயரும் நாடுகளில் மக்கள் தொகை அதிகரிக்கிறது.
  • கடந்த 2000 - 15 வரையிலான காலத்தில் வட அமெரிக்காவின் மக்கள் தொகையில், 42 சதவீதம் புலம் பெயர்ந்தவர்களாக உள்ளனர்.
  • பல்வேறு காரணங்களுக்காக பிறந்த நாட்டை விட்டு மற்றொரு நாட்டுக்கு புலம் பெயர்வதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த, 1.7 கோடி பேர், வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அதில் 50 லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் உள்ளனர். 
  • ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 30 லட்சம் பேர், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கு, தலா, 20 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்குலாப்பிற்கு சாகித்ய அகாடமி விருது - யூமா வாசுகிக்கு மொழி பெயர்ப்பு விருது

  • 'காந்தள் நாட்கள்' கவிதை தொகுதிக்காக, மறைந்த எழுத்தாளர், இன்குலாப், மொழிபெயர்ப்பு நாவலுக்காக, யூமா வாசுகி ஆகியோர், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
  • இந்திய அளவில், இலக்கியத்திற்கான சிறந்த கவுரவமாக, சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள, 24 மொழிகளிலும் சிறந்த படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் விருதும், ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது. 
  • இந்த ஆண்டுக்கான விருதுகள், நேற்று டில்லியில் அறிவிக்கப்பட்டன. மறைந்த எழுத்தாளர், இன்குலாப்பின், 'காந்தள் நாட்கள்' கவிதை தொகுப்பு நுாலுக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 
  • ராமநாதபுரம், கீழக்கரையில் பிறந்த இன்குலாப்பின் இயற்பெயர், சாகுல் அமீது. சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லுாரியில் புகுமுக வகுப்பு, மதுரை தியாகராசர் கல்லுாரியில், இளங்கலை தமிழ் பயின்றுள்ளார். 
  • சென்னை, புதுக் கல்லுாரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆரம்ப காலத்தில், தி.மு.க., ஆதரவாளரான இவர், கீழ்வெண்மணி தலித்கள் படுகொலை சம்பவத்திற்கு பின், மார்க்சிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
  • இரண்டு கட்டுரை தொகுப்புகள், ஆறு நாடக தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நுாலும் படைத்துள்ளார். இவர், 2016 டிச., 1ல், உடல்நலமின்றி காலமானார். 2016ல் இவரது பெயர், சாகித்ய அகாடமி விருது பட்டியலில் இருந்தது. 
  • கடைசி நேரத்தில், வண்ணதாசன் பெயர் தேர்வு செய்யப்பட்டது.இந்த ஆண்டு, இன்குலாப்பிற்கு, அவரது இறப்பிற்கு பின் வழங்கப்படுகிறது.கீழ்வெண்மணியில் தலித் விவசாயிகள், 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மிகவும் மனம் நொந்தவர் எழுதிய, 'மனுசங்கடா நாங்க மனுசங்கடா...
  • 'உன்னப் போல அவனப் போல, எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா...' என்ற கவிதை, அவரது படைப்புகளில் முக்கியமானது. 
  • மொழிபெயர்ப்பு விருது : சாகித்ய அகாடமியின், இந்த ஆண்டு மொழி பெயர்ப்பு விருது, மலையாளத்தில், ஓ.வி.விஜயன் எழுதிய, 'கசாக்கின் இதிகாசம்' என்ற நாவலை, தமிழில் மொழி பெயர்த்த எழுத்தாளர்,யூமா வாசுகி என்ற மாரிமுத்துவிற்கு வழங்கப்படு கிறது.
  • இவர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். கும்பகோணம், ஓவியக் கல்லுாரியில், 1990ல் படிப்பு முடித்தவர். 50க்கும் மேற்பட்ட பதிப்புகடந்த, 1969ல் மலையாளத்தில் வெளியான, 'கசாக்கின் இதிகாசம்' 50க்கும் மேற்பட்ட பதிப்புகளை கண்டுள்ளது.
  • அதை, அதன் இயல்பு மாறாமல், யூமா வாசுகி மொழி பெயர்த்துள்ளார்.யூமா வாசுகி கூறுகையில், ''அந்த நாவலை, சில ஆண்டுகளுக்கு முன் வாசித்தேன். காலச்சுவடு பதிப்பகத்தினர், மொழி பெயர்த்து தர கேட்டனர். இதற்காக, ஒராண்டாக முயற்சித்தேன். ''பாலக்காடு அருகே கசாக் எனும் கிராமத்து மக்களின் கதையாகும்.

  • கிராமப்புற சொல்லாடல்கள் நிறையவே இருந்தன. அவற்றை புரிந்து, மொழி பெயர்த்தேன்,'' என்றார்.
2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை

  • 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்துடெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.
ஜவுளி துறை திறன் மேம்பாட்டு திட்டம்: அரசு ஒப்புதல்

  • ஜவு­ளித் துறை­யில், 1,300 கோடி ரூபாய் ஒதுக்­கீட்­டில், புதிய திறன் மேம்­பாட்டு திட்­டத்தை செயல்­ப­டுத்த, மத்­திய அமைச்­ச­ரவை குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. இதன் மூலம், அமைப்பு சார்ந்த ஜவு­ளித் துறை மற்­றும் அதன் துணை பிரி­வு­களில், அதிக வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும்.
  • பின்­ன­லாடை, நெசவு ஆகி­யவை நீங்­க­லாக, அமைப்பு சார்ந்த ஜவு­ளித் துறை­யின் அனைத்து பிரி­வு­களும், புதிய திறன் மேம்­பாட்டு பயிற்சி திட்­டத்­தில் பயன்­பெ­றும். இதில், ஜவுளி பிரி­வு­களில், 10 லட்­சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்து, சான்­றி­தழ் வழங்­கப்­படும். 
  • அதில், 1 லட்­சம் பேர், பாரம்­ப­ரிய ஜவுளி பிரி­வு­களில் பயிற்சி பெறு­வர்.திறன் பயிற்சி முடிந்து, சான்­றி­தழ் பெற்ற பயிற்­சி­யா­ளர்­களில், 70 சத­வீ­தம் பேருக்கு, வேலை­வாய்ப்பு வழங்­கப்­படும். 
  • தேவை அதி­க­முள்ள பிரி­வு­களில், திறன் பயிற்­சி­யும், பாரம்­ப­ரிய பிரி­வு­களில் திறனை மேம்­ப­டுத்­திக் கொள்­வ­தற்­கான பயிற்­சி­யும் வழங்­கப்­படும்.குறிப்­பாக, துவக்க நிலை பணி­கள், மேற்­பார்வை, நிர்­வ­கித்­தல் மற்­றும் தொழில்­நுட்­பம் சார்ந்த பயிற்­சி­கள் அளிக்­கப்­படும்.
  • இதற்­காக, ஜவுளி ஆலை­கள், தொழில்­நுட்ப மையங்­கள் ஆகி­ய­வற்­று­டன், பயிற்­சி­யு­டன், பணி அமர்த்­து­வ­தற்­கும் ஒப்­பந்­தம் செய்து கொள்­ளப்­படும். கைத்­தறி, கைவி­னைப் பொருட்­கள், சணல், பட்டு உள்­ளிட்ட பாரம்­ப­ரிய பிரி­வு­க­ளுக்கு, சிறப்பு திட்­டத்­தில் பயிற்சி அளிக்­கப்­படும்.
  • திறன் மேம்­பாட்டு பயிற்சி முடித்­த­வர்­கள், தொழில் துவங்க, ‘முத்ரா’ திட்­டத்­தில் கடன் வழங்­கப்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.70 சதவீதம்:ஜவு­ளித் துறை­யில், ஆயத்த ஆடை­கள் பிரி­வில், பெண்­களின் பங்­க­ளிப்பு பெரும்­பான்­மை­யாக உள்­ளது. கடந்த, 12வது திறன் மேம்­பாட்டு திட்­டத்­தில், பயிற்சி பெற்ற, 10 லட்­சம் பேரில், 70 சத­வீ­தம் பேர் பெண்­கள்.
தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.666 கோடி நன்கொடை

  • தூய்மை இந்தியா திட்டத்துக்கு கார்பரேட் நிறுவனங்களும், தனிநபர்களும் 2014ம் ஆண்டு முதல் இப்போதுவரை ரூ.666 கோடிக்கும் அதிமாக நன்கொடை வழங்கியுள்ளதாக மத்திய அரசு சார்பில் லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.
  • தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்றும் விதத்தில் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து சமூக பொறுப்புணர்வு நிதியாக கடந்த 2014-15ம் ஆண்டில் ரூ.15,961.19 லட்சமும், 2015-16ம் ஆண்டில் ரூ.25,324.64 லட்சமும், 2016-17ம் ஆண்டில் ரூ.24,504.86 லட்சமும் பெறப்பட்டுள்ளது. 
  • 2017-18ம் ஆண்டில் இதுவரை ரூ.877.01 லட்சம் பெறப்பட்டுள்ளது. செலவு:2014ம் ஆண்டு முதல் இப்போது வரை வசூலான ரூ.666 கோடியிலிருந்து, ரூ.633.98 கோடி தூய்மை இந்தியா திட்டத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா. சபையில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

  • ஜெருசலேம் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 127 நாடுகள் வாக்களித்துள்ளன.
  • சர்ச்சைக்குரிய ஜெருசலேமை தமது நாட்டின் தலைநகராக பிரகடனப்படுத்தியது இஸ்ரேல். இதற்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
  • ஆனால் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அத்துடன் டெல் அவிவ்- நகரத்தில் உள்ள தமது நாட்டின் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவோம் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
  • அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜெருசலேம் ஆதரவு நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
  • ஐ.நா.வின் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக- அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா உட்பட 127 நாடுகள் வாக்களித்தன. இஸ்ரேல் உட்பட 8 நாடுகள்தான் அமெரிக்காவை ஆதரித்தன.
  • ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தால் நிதி உதவியை ரத்து செய்வோம் என மிரட்டிப் பார்த்தார் டிரம்ப். ஆனால் உலக நாடுகள் டிரம்ப்பின் மிரட்டலை பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்புப் பண முதலீடு : விவரங்கள் பகிர இந்தியா - சுவிஸ் ஒப்பந்தம்

  • சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்யப்பட்ட இந்திய கறுப்புப் பண விவரங்களைப் பெற சுவிட்சர்லாந்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  • இந்தியக் கறுப்புப் பணம் பெருமளவில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவின் பெரிய தொழிலதிபர்கள், பிரபல அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்கள் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 
  • பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் இந்திய மக்களுக்கு தலைக்கு ரூ. 15 லட்சம் அளவுக்கு தர முடியும் என தெரிவித்திருந்தார்.
  • அதில் "இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன் படி இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கிகளில் செய்யப்பட்டுள்ள முதலீடு பற்றிய விவரங்கள் வரும் ஜனவரி 1 முதல் இந்தியாவுக்கு வழங்கப் படும். முதலீடுகள் பற்றிய விவரங்கள் உடனுக்குடன் அதுவாகவே (Automatically) இந்திய அரசுக்கு வந்து விடும்." எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம்: 5,350 நிறுவனங்களுக்கு சலுகை

  • ‘மத்­திய அர­சின் சலு­கை­களை பெற, 5,350 ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள், தொழில் கொள்கை மற்­றும் ஊக்­கு­விப்பு துறை­யால், அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு உள்ளன’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.
  • இந்­தி­யா­வில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு, ‘ஸ்டார்ட் அப் இந்­தியா’ திட்­டத்­தில், பல சலு­கை­களை வழங்கி வரு­கிறது. இந்த சலு­கை­களை பெற, 5,350 ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள், தகுதி உடை­யவை என, தொழில் கொள்கை மற்­றும் ஊக்­கு­விப்பு துறை தெரி­வித்­துள்­ளது. 
  • இந்த நிறு­வ­னங்­கள் மூலம், 40 ஆயி­ரம் பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைத்­துள்­ளது.நிதி பெறும் திட்­டத்­தில், 75 ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள், 337.02 கோடி ரூபாய் பெற்­றுள்ளன. 
  • மேலும், வரு­மான வரி சட்­டத்­தில் இருந்து, 74 ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு, வரி விலக்கு அளிக்­கப்­பட்டுள்­ளது. ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்­கான நிதி­யம், 2015 – 16 நிதி­யாண்­டில், இந்­திய சிறு தொழில் மேம்­பாட்டு வங்­கிக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்­ளது.2016 – 17ல், 100 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்டு உள்­ளது. 
நடப்பு 2017ம் ஆண்டில்... 153 புதிய பங்கு வெளியீடுகளில் ரூ.75,400 கோடி திரட்டி சாதனை

  • இந்­திய பங்­குச் சந்­தை­களில், இந்­தாண்டு, 153 புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 75,400 கோடி ரூபாய் திரட்­டப்­பட்டுள்­ளது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.பிரிட்­ட­னைச் சேர்ந்த, ‘எர்­னஸ்ட் யங்’ நிறு­வ­னம், சர்­வ­தேச அள­வில், நடப்­பாண்டு மேற்­கொள்­ளப்­பட்ட, புதிய பங்கு வெளி­யீ­டு­கள் குறித்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:
  • உல­க­ள­வில், இந்­தாண்டு புதிய பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, வர­வேற்பு காணப்­பட்­டது. இதில், இந்­தியா, மத்­திய கிழக்கு மற்­றும் ஆப்­ரிக்க பிராந்­தி­யத்தை உள்­ள­டக்­கிய, இ.எம்.இ.ஐ.ஏ., நாடு­களில், இந்­திய பங்­குச் சந்­தை­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­களில், அதிக நிதி திரட்டி சாதனை படைத்­துள்ளன.
  • மும்பை பங்­குச் சந்­தை­யான, பி.எஸ்.இ., சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான, எஸ்.எம்.இ., பங்­குச் சந்தை ஆகி­யவை, 17 புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், சாதனை அள­வாக, 550 கோடி டாலர் திரட்டி உள்ளன. இது, ரூபாய் மதிப்­பில், 35,750 கோடி­யா­கும். 
  • இதில், மிக அதிக தொகையை திரட்­டிய நிறு­வ­னம் எனும் சிறப்பை, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன் ஆப் இந்­தியா பெற்­றுள்­ளது. இந்­நி­று­வ­னம், புதிய பங்கு வெளி­யீடு வாயி­லாக, 11,050 கோடி ரூபாய் திரட்டி உள்­ளது.இந்­தி­யா­வில், அர­சி­யல் சூழல் ஸ்தி­ர­மாக உள்­ளது.
  • மத்­திய அரசு, சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து மேற்­கொண்டு வரு­வது, முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் நம்­பிக்­கையை விதைத்­துள்­ளது. இத­னால், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் வர­வேற்பை பெற்று வரு­கின்றன. 
  • இந்­தாண்டு, சாதனை அள­வாக, புதிய பங்கு வெளி­யீ­டு­களும், அவற்­றின் மூலம் திரட்­டிய தொகை­யும், நாட்­டின் பொரு­ளா­தார வலி­மையை பறை­சாற்­று­கின்றன. 
  • அத்­து­டன், முத­லீட்­டா­ளர்­கள் இடையே, பங்கு முத­லீ­டு­களில் அதி­க­ரித்து வரும் ஆர்­வத்­தை­யும் எடுத்­துக் காட்­டு­கின்றன.மூலதன சந்தை:இந்­நி­லை­யில், அமெ­ரிக்க அரசு மேற்­கொள்ள உள்ள வரி சீர்­தி­ருத்­தங்­களின் எதி­ரொ­லி­யாக, இந்­திய மூல­த­னச் சந்தை, மேலும் வலு­வான வளர்ச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
  • மூல­த­னச் சந்­தை­யின் எழுச்­சி­யும், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யும், வரும் மாதங்­களில், வள­ரும் நாடு­களின் பங்கு முத­லீ­டு­களில், இந்­தி­யாவை முன்­னி­லைப்­ப­டுத்­தும். இந்­தாண்டு, வள­ரும் நாடு­களின் புதிய பங்கு வெளி­யீ­டு­களில், இந்­தி­யா­வின் மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­கள், 74 சத­வீத வளர்ச்­சியை கண்­டுள்ளன.
  • இ.எம்.இ.ஐ.ஏ., நாடு­களில், அதி­கம் புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்­ட­தில், தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் முத­லி­டம் பிடித்­துள்ளன. அடுத்து, தொழில் மற்­றும் நிதித் துறை நிறு­வ­னங்­கள் உள்ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.வாய்ப்பு:இந்­தி­யா­வின் புதிய பங்கு வெளி­யீட்டு சந்தை, 2018ல் நன்கு இருக்­கும்.
  • தற்­போ­துள்ள பங்­கு­களின் மதிப்பு, ஏற்­க­னவே முத­லீடு செய்து உள்­ளோ­ருக்கு, மேலும் முத­லீடு செய்­யும் வாய்ப்பை வழங்­கும் வகை­யில் உள்­ளது. எனி­னும், பங்­குச் சந்­தை­யில் காளை­யின் ஆதிக்­கம் நீடிப்­பது, பழைய மற்­றும் புதிய பங்கு விற்­ப­னை­யின் சரி­ச­ம­மான வளர்ச்­சியை பொறுத்­துள்­ளது,.
நாடு முழுவதும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது : வனத்துறை அமைச்சகம்
  • நாடு முழுவதும் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1,706 ஆக இருந்த புலிகள் 2014 வரை 2,226 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2010 வரை 163 புலிகள் இருந்த நிலையில் 2014 கணக்கெடுப்பின் படி 229 ஆக உயர்ந்துள்ளது. 
100 ஆண்டுகளில் முதல் முறையாக ஒத்திவைக்கப்பட உள்ள இந்திய அறிவியல் மாநாடு
  • ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடப்பது வழக்கம். இந்த மாநாட்டில், இந்தியா முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள், தங்களுடைய ஆராய்ச்சிகுறித்து கருத்தரங்கில் விவாதிப்பார்கள். 
  • ஜனவரி முதல் வாரத்தில், 105-வது அறிவியல் மாநாடு ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலையில் நடைபெற இருந்தது. மாநாடு நடக்க 10 நாள்களே உள்ள நிலையில், 'தற்போது ஒஸ்மானியா பல்கலையில் அறிவியல் மாநாடு நடத்துவதற்கான சூழல் இல்லை என பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்திருக்கிறார். 
உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வழங்க குடியரசுத் தலைவர் உத்தரவு
  • உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்த்து வழங்கும்படி நீதிபதிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
  • ராமேஸ்வரம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆளுநர் மாளிகையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் சந்தித்தார். 
  • அப்போது பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் இனி தமிழில் மொழி பெயர்த்து வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்காக சட்டப் புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் உறுதியளித்துள்ளார்.
கடந்த நிதி ஆண்டில் வருமானவரி கட்டியோர் எத்தனை பேர் தெரியுமா?
  • கடந்த, 2015 - 16 நிதி ஆண்டில், 2.06 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர். இது, மொத்த மக்கள் தொகையில், 1.7 சதவீதம்தான்.
  • முந்தைய ஆண்டில், 3.65 கோடியாக இருந்த வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை, 2015 - -16 வருமான வரி கணக்கு ஆண்டில், 4.07 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
  • இதில் வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை, 1.91 கோடியில் இருந்து, 2.06 கோடியாக உயர்ந்துள்ளது.அதே நேரத்தில், மொத்த வரி வருவாய், 1.91 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 1.88 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது
  • வருமான வரி கணக்கு ஆண்டு, 2015 - 16ல், 120 கோடி மக்கள் தொகையில், 3 சதவீதம் பேர் மட்டுமே கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அதில், 2.01 கோடி பேர், ஒரு ரூபாய் கூட வரியாக செலுத்தவில்லை. 9,690 பேர், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தினர்
  • ஒரே ஒருவர் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல், அதாவது, 238 கோடி ரூபாயை வரியாக செலுத்தினார்.
என்.ஜி.ஓ.க்கள் வெளிநாட்டு நிதியுதவி பெற வங்கி கணக்கு கட்டாயம்..மத்திய அரசு
  • தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவியை பெற ஒரு மாதத்துக்குள் கட்டாயம் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று உள்துறை தெரிவித்துள்ளது.
  • தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற சட்டத்தில் வழிவகை உள்ளது. இந்த நிதியுதவி தேச நலனுக்கு எதிராக பயன்படுத்துவது கிடையாது என்பதை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதியுதவியை ஒரு வெளிநாட்டு வங்கி உள்பட 32 இந்திய வங்கிகள் மூலம் பெறும் வகையில் ஒரு மாதத்திற்குள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ பேசுகையில், ''வீதி மீறல்கள் தொடர்பாக 2011 மற்றும் 2017ம் ஆண்டுகளில் 18 ஆயிரத்து 868 தன்னாவ தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2015&16ம் ஆண்டில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதியுதவி 17 ஆயிரத்து 773 கோடி ரூபாயாகும். இது 2016-17ம் ஆண்டில் 6 ஆயிரத்து 499 கோடி ரூபாயாக குறைந்துள்ளது'' என்றார்.
கழிவுநீர் அகற்றும் பணியில் இவ்வளவு உயிரிழப்பா?: தமிழகம் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்
  • கழிவுநீர் சுத்திகரிப்பின் போது உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • நாடு இந்தியா முழுவதும் கழிவு நீர் சுத்திகரிப்பின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 144 பேர் உயிரிழந்ததாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • தமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 59 பேரும் உத்திரப் பிரதேசத்தில் 52 பேரும், பஞ்சாபில் 32 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு எந்தவித விழிப்புணர்வு திட்டங்களும் தற்போது வரை உருவாக்கப்படவில்லை எனவும் மத்திய தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருக்கு இனி தனி லோகோ
  • இந்தியாவில் முதல் முறையாக நகருகென தனி லோகோ வெளியிடப்படுவது முதல் முறையாகும்.கலை,இலக்கியம்,பண்பாட்டை குறிக்கும் வகையில் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
  • அதே சமயத்தில் வெளிநாட்டு பயணிகளை கவரும் வகையில்,பெங்களூரு தனி கவனம் பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டு உள்ளது
  • Be &you என்ற கான்செப்ட் அடிப்படையாகக் கொண்டு லோகோ உருவாகப் பட்டுஉள்ளது.ரெட் மற்றும் ஒயிட் கலரில் லோகோ கொடுக்கப்பட்டு உள்ளது
  • அதேபோன்று, லோகோவில் பாதி ஆங்கிலத்திலும்,பாதி எழுத்துக்கள் கன்னடத்திலும் வித்தியாசமாக வடிவமைக்கப் பட்டு உள்ளது
20 ஆண்டுகளுக்கு பின் உலக பொருளாதார மாநாட்டில் இந்திய பிரதமர்
  • சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரி மாதம் நடக்க உள்ள உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து செல்ல உள்ளார்.
  • ஆண்டுதோறும் நடக்கும் இந்த மாநாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பிரதமர் யாரும் கலந்து கொண்டதில்லை. இதனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போகும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற உள்ளார். 
தமிழக நீர்பாசன திட்டங்களுக்கு கடன் வழங்க உலக வங்கியுடன் ஒப்பந்தம்
  • தமிழக நீர்ப்பாசன திட்டங்கள் நவீனமயமாக்கலுக்காக உலக வங்கி ரூ.2,035 கோடி கடன் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
  • இந்த திட்டத்தின்படி, தமிழகத்தில் சுமார் 4,800 நீர்ப்பாசன குளங்கள், 477 தடுப்பணைகள் அதிக நீரை தேக்கி வைக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். இதனால், தமிழகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள். 
  • இவர்களில் பெரும்பாலானோர் சிறு, குறு விவசாயிகள் என்பதால், அவர்கள் நீர் மேலாண்மையை மேம்படுத்தி, சீதோஷ்ணநிலையை தாங்கும் தொழில் நுட்பத்தை பின்பற்ற வழிவகை உருவாகும்.
  • மேலும், தற்போது பகுதி அளவு நீர்ப்பாசனம் நடந்து வரும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில், இத்திட்டத்தால், முழுஅளவில் நீர்ப்பாசனம் நடைபெறும் என்று பொருளாதார விவகார துறை கூடுதல் செயலாளர் சமீர் குமார் காரே தெரிவித்தார்.
நவம்பரில் ரூ.80,808 கோடியாக குறைந்தது ஜிஎஸ்டி வசூல்
  • கடந்த நவம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.80,808 கோடியாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • நவம்பரில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியான ரூ.80,808 கோடியில், ரூ.7,798 கோடி ரூபாய் மாநிலங்களுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.
  • அது தவிர, ரூ.13,089 கோடி மத்திய ஜிஎஸ்டியாகவும், ரூ.18,650 கோடி மாநில ஜிஎஸ்டியாகவும், ரூ.41,270 கோடி ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஜூலை மாதம் ரூ.95,000 கோடியாகவும், ஆகஸ்ட் மாதம் ரூ.91,000 கோடியாகவும் இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் ரூ92,150 கோடியாக உயர்ந்தது.
  • எனினும், அது கடந்த அக்டேபர் மாதம் ரூ.83,000 கோடியாகக் குறைந்து, தற்போது நவம்பர் மாதத்தில் மேலும் ரூ.80,808 கோடியாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 7 நதிகள் மாசடைந்துள்ளன ! மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வறிக்கை
  • தமிழகத்தில் 7 நதிகள் கடுமையாக மாசு அடைந்துள்ளன. நாடு முழுவதும் 275 நதிகள் மாசு அடைந்துள்ளன என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
  • தமிழகத்தில் உள்ள முக்கிய நதிகளான காவிரி, பாலாறு, பவானி, தாமிரபரணி, மணிமுத்தாறு உள்ளிட்டவை தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்துள்ளதை வாரியம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த நதிகள் அனைத்துமே விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகின்றன.
எல்லை மேம்பாட்டு பணிகள்: 167 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • அண்டை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஒன்பது மாநிலங்களில், எல்லை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, 167 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
  • அண்டை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களில், எல்லை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக, எல்லை பகுதி மேம்பாட்டு திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 
  • அதன்படி, சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிக்கு, 10 கி.மீ., தொலைவுக்குள் உள்ள கிராமங்களில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, புதிய தொழில்நுட்ப பயிற்சி, இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி, எல்லை சுற்றுலா திட்டங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாலை வசதிகள் இல்லாத பகுதிகளில், ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைப்பது போன்ற பணிகளும், இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
  • அண்டை நாடுகளுடன், 17 மாநிலங்கள் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இத்திட்டத்தில், ஆறு மாநிலங்களுக்கு ஏற்கனவே, 174 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இந்நிலையில், மேலும் ஒன்பது மாநிலங்களுக்கு, 167 கோடி ரூபாயை, மத்திய உள்துறை அமைச்சகம், தற்போது ஒதுக்கி உள்ளது.
குழந்தை திருமணத்தில் தமிழகம் முதலிடம்: அதிர்ச்சி தகவல்
  • நாட்டிலேயே குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
  • கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 55 வழக்குகள் பதிவாகி இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 
  • அதிகபட்சமாக 2015ஆம் ஆண்டில் 77 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 51 வழக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் இடத்தில் உள்ள மேற்கு வங்கத்தில் 41 வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • அருணாச்சல பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், சண்டிகர், லட்சத்தீவு, கோவா ஆகிய மாநிலங்களில் ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • அதே சமயம் கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 326 வழக்குகள் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த இரு ஆண்டுகளை காட்டிலும் அதிகம் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு குறைகிறது: அமைச்சகம் அறிக்கை
  • தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • அதில், நாடு முழுவதும் இந்தாண்டு மட்டும் 31,453 பேர் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆந்திரா, தெலங்கானாவில் 6,429 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிராவில் 5,585 பேரும், கர்நாடகாவில் 4,803 பேரும் இந்தாண்டு எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தமிழகத்தில் 2,375 ஆக குறைந்துள்ளது. இதன்படி எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பசி பட்டியலில் இந்தியாவுக்கு 100-வது இடம்
  • சர்வதேச பசி பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளதாக சர்வதேச உணவுகொள்கை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 97-வது இடத்தில் இருந்தது. 
  • ஏழைகளின் பசியை போக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்: சென்செக்ஸ் 34,000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு
  • இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 34,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 254.33 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 76.71 புள்ளிகள் உயர்ந்து 34,087.32 புள்ளிகளாக உள்ளது. 
  • சுகாதாரம், மின்சாரம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1.75 புள்ளிகள் அதிகரித்து 10,533.25 புள்ளிகளாக உள்ளது.
ஒக்கி புயல் பாதிப்பு: மத்திய அரசு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.133 கோடி ஒதுக்கீடு
  • தமிழகத்தில் ஒக்கி புயலால் உண்டான பாதிப்புகளை சீர் செய்யும் பொருட்டு, இடைக்கால நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • கடந்த மாத இறுதியில் தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை ஒக்கி புயல் தாக்கியது. இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்துடன் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்த மீனவர்கள் பலர் கரை திரும்பவில்லை. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ இறப்பு அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
  • அதனைத் தொடர்ந்து ஒக்கி புயலால் உண்டான பாதிப்புகளை சீர் செய்யும் பொருட்டு மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு ரூ.13520 கோடி நிவாரணம் கேட்டு கோரிக்கை வைத்திருந்தது. பின்னர் பாதிப்புகளை பார்வையிட குமரி வந்திருந்த பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.280 கோடி முதல்கட்டமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பாக வசிக்கும் நகரில் நம்பர் 1 சென்னை
  • நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் பெருநகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரத்தில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
  • நாட்டில் உள்ள 6 பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரத்தில் சென்னை முதலிடம் வகிக்கிறது. சென்னயில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  • 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் 544 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 லட்சம் பெண்களில் 15 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பதாக மத்திய குற்ற ஆவணங்கள் காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 1 லட்சம் பெண்களில் 182 பர் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • பாதுகாப்பான நகரம் பட்டியல் சென்னை முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதே போன்று கொல்கத்தா 3வது இடத்திலும் பெங்களூரு 5வது இடத்திலும் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மோசமான நகராமாக டெல்லி உள்ளதாக குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது: தமிழக அரசு
  • தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மாவட்டந்தோறும் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து, தமிழகம் முழுவதும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தனியார் பஸ்களுக்கு 'பெர்மிட்' வழங்குவதில் புதிய மாற்றம் - மத்திய அரசு
  • நாட்டில் இப்போது மாநிலத்துக்கு மாநிலம் பஸ்களுக்கு பெர்மிட் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை கலைந்து, ‘ஒருநாடு, ஒரு பெர்மிட், ஒரே வரி’ எனும் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • மாநிலங்கள் அவைக்கான 24 பேர் கொண்ட தேர்வுக்கு குழு மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதாவில் இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் கடந்த வாரம் மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டன.
  • ஒரு பஸ்ஸின் உரிமையாளர் ஒருவர் 5 தென் மாநிலங்களில் ‘பெர்மிட்’ பெற்றால் கூட ஆண்டுக்கு ரூ. 42 லட்சம் மட்டுமே கட்டணமாக செலுத்துகிறார்கள். ஆனால், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் ெநடுஞ்சாலைத் துறையின் அளித்த தகவலின்படி, ‘ஒரு நாடு, ஒரு பெர்மிட், ஒரே வரி’ என்ற திட்டத்தை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டால் அவற்றின் வருவாய் அதிகரிக்கும்.
  • அதேசமயம், ஒரு பஸ்ஸின் உரிமையாளர் ஒரு மாநிலத்தில் மட்டும் பெர்மிட் பெற்று பல பஸ்களை இயக்குவது தடுக்கப்படும்
கழிவறை கட்டாயம்
  • மேலும், மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின்படி, நீண்ட தொலைவு செல்லும் பஸ்களில் கண்டிப்பாக கழிவறை இருக்க வேண்டும். 
உடலில் கேமிரா
  • போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசார், ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தங்கள் உடலில் கேமிராக்களை பொருத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும். 
  • இதன் மூலம், சாலை விதிகளை மீறுவோர், மீறும் வாகனங்களை எளிதாக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
  • குறிப்பாக போக்குவரத்து கண்காணிப்பில் உள்ள அதிகாரிகள், போலீசார், லஞ்சம் பெறுவது கட்டுப்படுத்தப்படும்.
ஆன்-லைனில் ஓட்டுநர் உரிமம்
  • மேலும், ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்பவர்கள்(எல்.எல்.ஆர்.) ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஓ
  • ட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பம் செய்பவர் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, தேரிவிட்டால் சான்றிதழை வாங்க ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வரத்தேவையில்லை, பயிற்சி பெறும் நிறுவனத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்
வரும் ஜனவரி 1 முதல் கேரளாவில் அரசு நிர்வாகத் துறை அமைப்பு
  • ஜனவரி 1 முதல் கேரளா அரசு நிர்வாகத்துறை அமைக்கப்பட உள்ளது. அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் வகுப்பதில் முழுமையாக ஈடுபடும். 
  • இளைஞர்கள் நிர்வாகத்துறையில் பங்கேற்க வகை செய்யும் இந்தத் துறையால் அரசின் அதிகார மையத்துக்கு ஒரு புது ரத்தம் பாய்ச்சப்படும். தற்போது அதிகம் படித்தவர்களில் பலர் எழுத்தராகவே பணி புரிகின்றனர். அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
  • தற்போது ஒவ்வொரு துறையும் பணிபுரியும் முறை இதனால் மாற்றப்பட்டு மேலும் முன்னேற்றம் அடைய உதவும். ஊழியர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் திறமையானவர்கள் முன்னேற முடியும். இந்தத் துறையில் பணி புரிய மூன்று முறைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். 
  • முதலாவது நேரடியாக பணி அமர்த்துவது. இதன் படி கல்வி தகுதியுள்ள 21 வயது முதல் 32 வயதுள்ள இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இரண்டாம் முறை அரசில் பணி புரியும் 40 வயதுக்குட்பட்ட பணியாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப் படுவார்கள். 
  • மூன்றாவது முறை அரசாணை பெற்ற (Gazetted offucers) ஐம்பது வயதுக்குட்பட்ட அதிகாரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" எனக் கூறி உள்ளார்.
தேசிய துப்பாக்கி சுடுதல்: அரியாணாவின் அனிசா செய்யது தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்
  • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியாணாவின் அனிசா செய்யது தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
  • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட அனிசா, இறுதிச்சுற்றில் 33 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
  • இதனிடையே, ஜூனியர் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மானு பேக்கர் தங்கம் வென்று அசத்தினார். அவரை உள்ளடக்கிய அணி ஜூனியர் சிவிலியன் அணிகளுக்கான பிரிவிலும் தங்கம் வென்றது. இது, மானு பேக்கர் இந்தப் போட்டியில் வெல்லும் 10 மற்றும் 11-வது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதேபோன்று ஜூனியர் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அரியாணாவின் சிங்கி யாதவ், இறுதிச்சுற்றில் 31 புள்ளிகளை எட்டி தேசிய சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார்.
  • அதே மாநிலத்தைச் சேர்ந்த கெளரி ஷியோரன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும், மகாராஷ்டிரத்தின் சயி அசோக் காட்போல் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.
தெற்கு ரயில்வேயில் அமலுக்கு வந்தது பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை
  • தெற்கு ரயில்வேயில் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு 'பயோ மெட்ரிக்' (விரல் ரேகை) வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வந்தது.
  • 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவேடு முறை இந்திய ரயில்வேயின் நான்கு மண்டலங்களில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள பல்வேறு தொழிற் சங்கங்கள் இந்த முறைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் இந்த வருகை பதிவேடு முறை நவம்பர் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். 
  • ஆதார் எண் அடிப்படை: ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட, 'பயோ மெட்ரிக்' தொழில்நுட்பம் மூலம், ஊழியர்கள் வருகையைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ரயில்வேயில் மேற்கொள்ளப்படவுள்ளது.
  • வருகைப் பதிவேடு இணையதளம்: ஊழியர்களின் அன்றாட வருகைப் பதிவேட்டை, அனைவரும் காணும் வகையில், www.attendance.gov.in என்ற இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், பயோ மெட்ரிக் முறையில் 1.30 லட்சம் ஊழியர்களின் வருகைப் பதிவேட்டு விவரம் இடம் பெறும்.
மூங்கில் மசோதா நிறைவேற்றம்
  • மூங்கிலை மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கும் மசோதா, லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
  • இதையடுத்து குரல் ஓட்டெடுப்பில் இந்த மசோதா நிறைவேறியது. மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால் மூங்கிலை வெட்டுவதற்கான தடை நீங்குவதால், பழங்குடியின மக்களின் வருவாய் அதிகரிக்கும்.
யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த சென்னை பெண்மணி
  • சென்னையை சேர்ந்த பெண் தொடர்ந்து தொடர்ச்சியாக 6 நாட்கள் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சோந்தவா கவிதா பரணிதரன். 
  • இவருக்கு சிறு வயதிலிருந்தே யோகா மீது ஆர்வம் இருந்துள்ளது. பல யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார். யோகாவில் கின்னஸ் சாதனை படைக்க முடிவு செய்த கவிதா தொடர்ச்சியாக மாரத்தான் யோகா செய்வதனெ முடிவு செய்தார்.
இருப்புத் தொகை பராமரிக்காததால் எஸ்.பி.ஐ வங்கி அபராதம் வசூலி : மத்திய அரசு தகவல்
  • குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காததால் எஸ்.பி.ஐ வங்கி ரூ.1771.77 கோடி அபராதம் வசூலித்துள்ளது. 
  • 2017-18-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.1771.77 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா : மக்களவையில் அறிமுகம் செய்தார் ஜே.பி.நட்டா
  • தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அடமைச்சர் ஜே.பி.நட்டா அறிமுகம் செய்து வைத்தார். இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்று மாற்றம் கொண்டு வரப்படுகிறது. 
  • இந்த மசோதா மூலம் போதிய அளவில் தரமான மருத்துவ நிபுணர்கள் இருப்பதை மருத்து ஆணையம் உறுதி செய்யும். 
எய்ட்ஸ் நோய் தொற்று இல்லாத யூனியன் பிரதேசம் புதுச்சேரி
  • புதுச்சேரியை எய்ட்ஸ் நோய் தொற்று இல்லாத யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக சுகாதார இயக்குநர் ராமன் தெரிவித்தார். 
உலக விரைவு செஸ் சாம்பியன் பட்டம் : 14 ஆண்டுகளுக்குப் பின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி
  • உலக விரைவு செஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றி உள்ளார்
  • சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் உலக விரைவு செஸ் சாம்பியனுக்கான போட்டி நடை பெற்றது. இதில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற போட்டியில் மேக்னஸ் கார்ல்செனை விஸ்வநாதன் ஆனந்த் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
  • நேற்று நடந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் விளாதிமீர் ஃபெடொசீவை தோற்கடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இந்தப் போட்டியில் இவர் 29 நகர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் இவர் சுமார் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பிரிட்டன்: பாரம்பரிய ஆற்றலை விஞ்சிய பசுமை ஆற்றல் உற்பத்தி
  • பசுமை ஆற்றல் உற்பத்தியில் புதிய உச்சங்களை பிரிட்டன் தொட்டு இருப்பதாக, அந்த நாட்டின் தேசிய மின்சார விநியோக அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
  • புதுபிக்கத்தக்க ஆற்றல்களான காற்றாலை மின்சாரம், சூரியசக்தி மின்சாரம் ஆகியவை அந்நாட்டின் மின்சார தேவையில் இந்த ஆண்டு முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. அதாவது நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஆற்றலைவிட, காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் தயாரிக்கப்பட்ட ஆற்றலின் அளவு அதிகம்.
  • தொழிற்புரட்சி காலத்திலிருந்து, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் முதல் முதலாக நிலக்கரி இல்லாமல் தயாரிக்கப்பட்ட ஆற்றலைக்கொண்டு, அதாவது மாற்று ஆற்றலைக் கொண்டு ஒரு நாள் முழுவதும் பிரிட்டன் இயங்கியது.
அதிக வாராக்கடன் நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம்
  • வங்கி வாராக்கடன் அதிகமுள்ள நாடுகளில், இந்தியா, 5வது இடத்தை பிடித்துள்ளது.'பிரிக்ஸ்' நாடுகளின் வங்கி துறையில், அதிகளவில் வாராக்கடனுடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயின் உள்ளிட்ட, பி.ஐ.ஐ.ஜி.எஸ்., நாடுகளில், அதிக வாராக்கடனில், இந்தியா, 5வது இடத்தில் உள்ளது. 
  • இப்பட்டியலில், முதல் நான்கு இடங்களில், கிரீஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், இத்தாலி ஆகியவை உள்ளன. இந்தியாவின் வாராக்கடன் விகிதம், 9.85 சதவீதமாக உள்ளது. 
  • இது, அடுத்துள்ள ஸ்பெயின் நாட்டின், 5.28 சதவீதத்தை விட, 4 சதவீதம் அதிகமாகும்.ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், தென் கொரியா, பிரிட்டன் ஆகியவை, மிகக் குறைந்த வாராக்கடனை வைத்துள்ளன. இவற்றின் வாராக்கடன், 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 
  • அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வாராக்கடன், 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நடுத்தர வாராக்கடன் பிரிவில், ஐரோப்பிய நாடுகள் சிலவும், பிரேசில், இந்தோனேஷியா, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, துருக்கி ஆகிய வளரும் நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
ஆசியாவின் வேலையில்லா திண்டாட்டத்தில் இந்தியாவுக்கு 12வது இடம்
  • ஆசியாவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.
  • ஆசியாவில் உள்ள 37 நாடுகளில் வேலையில்லாத மக்கள் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. 2017ம் ஆண்டில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 3.6 சதவீதமாகும். பூடானில் 2.4 சதவீதம், நேபாள் 3.2 சதவீதம், பாகிஸ்தானில் 5.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.
  • சவுதி அரேபிய நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகளவில் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் வேலையில்லாத் திண்டாட்டம் 3.8 சதவீதமாகவும், சவுதி அரேபியாவில் 5.5 சதவீதமாகவும் உள்ளது.
  • இலங்கை 4.6 சதவீதத்துடன் 17வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 5.3 சதவீதம், ஓமன் அதிகப்படியாக 16.9 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து ஏமன் 16 சதவீதம், ஜோர்டான் 14.9 சதவீதம் என்ற நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் கழிப்பறை வசதி இல்லை
  • தமிழகத்தில் 25 மாவட்டங்களில் உள்ள மக்களில் பலர் இன்னும் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடங்கள் குறித்து நாடு முழுவதும் மத்திய சுகாதாரத்துறை களப்பணி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோவை, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்கள் மட்டுமே பெரும்பாலும் கழிப்பறை வசதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • 25 மாவட்டங்களில் மக்கள் இன்னனும் சரியான கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் உத்தரகாண்ட், சிக்கிம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது.
  • இதையடுத்து அதற்கான சட்டம் கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இதையடுத்து முத்தலாக்கை சட்டவிரோதம் என அறிவிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 15ம் தேதி ஒப்புதல் அளித்தது. 3 முறை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வோருக்கு கிரிமினல் குற்றமாக கருதி 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • இறுதியாக, முத்தலாக்கை தடை செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் குரல் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டன. 
  • இதனையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். மாநிலங்களவையில் நிறைவேறிய பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும்.
தனுஷ்கோடி புனரமைப்பு ரூ.1.36 கோடி ஒதுக்கீடு

  • புயலால், 53 ஆண்டுகளுக்கு முன் உருக்குலைந்த சுற்றுலா பகுதியான தனுஷ்கோடி புனரமைப்புக்கு, 1.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வரலாற்று சிறப்பு மிக்க தனுஷ்கோடி நகரம்,1964 டிச., 22ல் வங்க கடலில் ஏற்பட்ட புயலின் கோரதாண்டவத்தால் உருக்குலைந்தது. பெரும் பகுதி கடலுக்குள் சென்றது.
  • அழிவின் எச்சங்களாக உள்ள மாதா கோவில், ரயில் நிலையம், துறைமுகம் பகுதி, தபால் நிலையம் உள்ளிட்ட பகுதிகளை பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளன.
  • அங்கு சுற்றுலா பயணியரின் வசதிக்காக கார் பார்க்கிங், பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. இதற்காக சுற்றுலாத்துறை சார்பில், 1.36 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

  • கடனைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • வாராக்கடன் பிரச்னையைக் கையாள மத்திய அரசு பல்வேறு முயற்சிகளையும், அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திவால் சட்டத் திருத்தத்தை கடந்த நவம்பரில் மத்திய அரசு கொண்டு வந்தது. 
  • இந்த அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இதற்கு மாற்றாக திவால் சட்டத் திருத்த மசோதாவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் தாக்கல் செய்தார். 
  • இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வாராக்கடன் நிறுவனங்களின் சொத்துகள் ஏலம் விடப்படும்போது, அந்த நிறுவனங்கள் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது. 
  • கடன் மோசடி செய்த நிறுவனங்கள் நிறுவன அமைப்புகளைப் பயன்படுத்தி, தங்களிடம் உள்ள நிதியை வேறு வகையில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இந்தச் சட்டம் மூலம் அபராதமாக ஒரு லட்சம் மூலம் ரூ.2 கோடி வரை விதிக்கலாம். 
  • மசோதாவைத் தாக்கல் செய்து மக்களவையில் பேசிய அமைச்சர் அருண் ஜெட்லி, 'வாராக்கடன் உருவாகக் காரணமானவர்கள், பின்வாசல் வழியாக கம்பெனி நிர்வாகத்தை கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது' என்றார். இந்த மசோதா மாநிலங்களவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

ஜி.எஸ்.டி., இழப்பீடு : மாநிலங்களுக்கு ரூ.24,500 கோடி மத்திய அரசு அளிப்பு

  • ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.24,500 கோடியை வரி இழப்பீடாக அளித்துள்ளது.
  • ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பீட்டை சரி செய்வதாக மத்திய அரசு ஏற்கனவே உறுதியளித்திருந்தது. அதன்படி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட ஜூலை முதல் அக்டோபர் வரையிலான 4 மாத காலத்தில் ரூ.24,500 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 
  • கர்நாடகா அதிகபட்சம் இதில் அதிகபட்சமாக கர்நாடகம் ரூ.3,271 கோடி இழப்பீடு பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக குஜராத் ரூ.2,282 கோடியும், பஞ்சாப் ரூ.2,098 கோடியும் பெற்றுள்ளன. பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம்
  • திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 60 மாணவர்கள் படிக்கும் வகையில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். வேடசந்தூர் வருவாய் வட்டத்தைப் பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும். 
  • திண்டுக்கல் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை திண்டுக்கல் மாநகராட்சி, 7 பேரூராட்சிகள் மற்றும் 816 ஊரக குடியிருப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். 
  • வேடசந்தூர் பேரூராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில் வடிகால்கள் அமைக்கப்படும். குஜிலியம்பாறை ஒன்றியம், ஆர்.பில்லமநாயக்கன் பட்டியிலும், வடமதுரை ஒன்றியம், புத்தூரிலும் புதிய கால்நடை கிளை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
  • வேடசந்தூர் ஒன்றியம், ரெங்கநாதபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.11.68 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும். 
  • மேலும், ரூ.28.5 கோடி மதிப்பீட்டில் டிப்ளமேட் ஆப் நேஷனல் போர்டு(டிஎன்பி) மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்குவதுடன், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். காந்தி கிராமத்தில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளி அமைக்கப்படும். 
  • ரூ.82.5 லட்சம் மதிப்பீட்டில் வளர் இளம் பருவத்தினர் பாதுகாப்புத் திட்டம் ஏற்படுத்தப்படும். அம்மையநாயக்கனூர் சமுதாய சுகாதார நிலையத்தில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி, பழனி அரசு மருத்துவமனைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.8.22 லட்சம் செலவில் டயாலிசிஸ் கருவி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • திண்டுக்கல்- குஜிலியம்பாறை- கரூர் சாலையில் உள்ள ரயில்வே கடவு பாதையில், ரூ.16.18 கோடி செலவில் சுரங்கப்பாதை கட்டப்படும்.
  • திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி: திண்டுக்கல் நகருக்கு 19.25 கி.மீ நீளத்திற்கு புற வழிச்சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. நில எடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
ரூ.5,000 கோடி கடன் கோரும் மின்வாரியம்
  • துாத்துக்குடி, விருதுநகரில் அமைய உள்ள பிரமாண்ட துணை மின் நிலையங்களுக்கு, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து, 5,000 கோடி ரூபாய் கடன் கேட்க மின் வாரியம் முடிவுசெய்துள்ளது.திருவள்ளூர், விழுப்புரம், கோவை, விருதுநகரில், 765 கி.வோ., திறனில், துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. 
  • அதில், விருதுநகரில் அமைய உள்ள துணை மின் நிலையத்திற்காக, தமிழக அரசின் வாயிலாக, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து, மின் வாரியம், கடன் கேட்க முடிவு செய்துள்ளது.
  • திருவள்ளூர், விழுப்புரம், கோவையில் அமைக்கும் துணை மின் நிலையங்களுக்கு, மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' போன்ற நிறுவனங்கள், கடன் வழங்க உள்ளன.
  • விருதுநகரில், 4,000 கோடி ரூபாய் செலவில், 765 கி.வோ., பிரமாண்ட துணை மின் நிலையம்; துாத்துக்குடியில், 1,000 கோடி ரூபாய் செலவில், 400 கி.வோ., துணை மின் நிலையம் மற்றும் அதற்கான வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன் கேட்கப்பட உள்ளது. கடன் ஒப்புதல் கிடைத்ததும், கட்டுமான பணிகள் துவங்கப்படும்.
உலக யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவி
  • முதுகுளத்தூர் அருகே உள்ளது பொசுக்குடிபட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி சித்திரைசாமியின் மகள் காமாட்சி (22). இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக் கழகத்தில் முதுநிலை யோகா முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 
  • காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் தூத்துக்குடியில் நடந்த தேசிய யோகா போட்டிகளில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து தாய்லாந்தில் நடந்த சர்வதேச யோகா போட்டியிலும், காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியிலும் வெள்ளி பதக்கஙகளை வென்றுள்ளார்.
  • துபாய் அபுதாயில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற மாணவி காமாட்சி முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார். காலத்தால் கிடைத்த இந்த உதவியின் மூலம் மாணவி காமாட்சி தங்க பதக்கம் வென்று தான் அன்று சொன்னைதை நிறைவேற்றியிருக்கிறார்.
குற்றங்களை விசாரிக்க சிறப்பு அமர்வுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல்
  • பத்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • பத்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்து வரும் குற்றவியல் வழக்குகளை வரும் ஜனவரி 6 ஆம் தேதி விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குகள் குறித்த பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும். 
  • எனவே 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து வழக்குரைஞர்கள் மற்றும் வழக்காடிகள் தெரியபடுத்தலாம். நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க வழக்குரைஞர்களும் வழக்காடிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel