Monday, 11 December 2017

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து: ஆசிரியர் தேர்வு வாரியம்

  • அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) தற்போது திரும்பப் பெற்றுள்ளது. 
  • ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் நேரடிப் போட்டி எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 7-ஆம் தேதி வெளியானது. 
  • ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகள் மீது தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு மனுக்களின் அடிப்படையில், கடந்த மாதம் வெளியான தேர்வு முடிவுகள் தற்போது திரும்பப் பெறப்படுகின்றன. 
  • அனைத்து தேர்வர்களின் விடைத்தாள் நகல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்படுகிறது. 
  • முரண்பாடுகள் இருந்தால்... இதில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்பட்டால் அதன் விவரங்களை வரும் 18-ஆம் தேதி மாலை 5.30-க்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் மையத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ (ஒப்புகையுடன்) தெரிவிக்கலாம். 
  • அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த பின்னரே திருத்திய சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment