Type Here to Get Search Results !

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS NOVEMBER 2017 TAMIL PDF





மனித உரிமை ஆணையத்துக்கு 2 புதிய உறுப்பினர்
  • மனித உரிமைகள் ஆணைய சட்ட விதிகளின்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ் தமிழக மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' விருது
  • திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பாரம்பரியத்துக்கான 'யுனெஸ்கோ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீரங்கம் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானது. இக்கோயிலுக்கு ஐ.நா., சபையின் கீழ் செயல்படும் உலகின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாக்கும் அமைப்பான 'யுனெஸ்கோ'வின் சார்பில் 'ஆசிய- பசிபிக் மெரிட்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இக்கோயில் சர்வதேச நிதி உதவியுடன் பழமை மாறாமல் புதுப்பித்து 2015ல் திருப்பணி செய்ததன் அடிப்படையில் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இவ்விருது பெறும் முதல் தமிழக கோயில் என்ற பெருமை பெறுகிறது.கலாசார மரபுகளைப் பாதுகாக்க, பாரம்பரிய கட்டடங்களை மீட்டெடுக்க மற்றும் பராமரித்து வருபவர்களை ஊக்குவிக்க, ஆண்டுதோறும், யுனெஸ்கோ போட்டிகளை நடத்துகிறது.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்டமாக நடத்தப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்டமாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டு நடத்தப்பட்ட பாரம்பரிய விருது போட்டிக்கு ஆசியபசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஈரான், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளிலிருந்து 43 பாரம்பரிய கட்டடங்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
  • இதில் 31 கட்டடங்கள் பழைமை வாய்ந்தது என்ற பிரிவிலும், 12 கட்டடங்கள் புதிய வடிவமைப்புகளைக் கொண்டது என்ற பிரிவிலும் இடம்பெற்றிருந்தது. இவற்றில் 16 கட்டடங்கள் இந்த ஆண்டுக்கான பாரம்பரிய விருதுகளைப் பெற்றுள்ளன.ஆசிய பசிபிக் மெரிட் பிரிவில் இந்தியாவில் இருந்து ஸ்ரீரங்கம் கோயில், மும்பையின் ராயல் பாம்பே ஒபுரா ஹவுஸ் மற்றும் கிறைஸ்ட் சர்ச் ஆகிய மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம்
  • மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நிறுவப்பட உள்ள, வீர சிவாஜி சிலை உயரத்தை, 689 அடியாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், உலகின் மிகவும் உயரமான சிலையாக, அது திகழ உள்ளது.சீனாவில் உள்ள, வசந்த கால கோவிலில் உள்ள புத்தர் சிலை, 682 அடி உயரம் உடையது. 
  • இதுவே, உலகில் அதிக உயரமுடைய சிலையாக உள்ளது. மும்பை கடலோரப் பகுதியில் மராட்டிய மன்னர், வீர சிவாஜியின் சிலையை , 630 அடி உயர சிலை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. தற்போது அதன் உயரம், 689 அடியாக உயர்த்தப்படுகிறது. இதற்கு, சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.
  • குதிரை மீது அமர்ந்திருக்கும் சிவாஜியின் சிலை அமைக்கும் பணி, 2018 ஜனவரியில் துவங்கி, 2021க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு, 3,000 கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த சிலை அமைப்பதற்கு, மஹாராஷ்டிரா கடலோர மண்டல நிர்வாக ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • மும்பையின் கடலோரத்தில், 15.96 ஏக்கர் பரப்பு நிலத்தில், இந்த சிலை நிறுவப்பட உள்ளது. அந்த வளாகத்தில், கோவில், மருத்துவமனை, சிவாஜியின் வாழ்க்கையை குறிக்கும் வகையில், ராய்காட் கோட்டை வடிவில், அருங்காட்சியம் உள்ளிட்டவை அமைய உள்ளன.
குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்க தடை! தேர்தல் ஆணையம்
  • குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின் படி குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சிறைத் தண்டனை முடிந்த பிறகு, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது.
  • இதை ரத்து செய்து, குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவினை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய அம்சங்களாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும், 4 சதவிகித சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 12வது இரட்டை சதம் புஜாரா புதிய சாதனை
  • முதல் தர கிரிக்கெட்டில் புஜாரா அடிக்கும் 12வது இரட்டை சதம் இது. இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அதிக இரட்டைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விஜய் மெர்சண்டை (11) முந்தி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். 
  • இப்பட்டியலில் விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் 10 இரட்டை சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். 159 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள புஜாரா 42 சதம், 43 அரைசதம் விளாசி உள்ளார். 
  • ஆசியாவில் முதல் தர போட்டியில் அதிக இரட்டை சதம் (13) அடித்த பெருமையை இலங்கையின் சங்கக்கரா பெற்றுள்ளார். அவரது சாதனையை புஜாரா விரைவில் முந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
காரைக்கால் ஜிப்மர் கிளை உள்கட்டமைப்பு பணிக்கு ரூ.497 கோடி ஒதுக்கீடு
  • ஜிப்மர் காரைக்கால் கிளைக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.497.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காரைக்கால் ஜிப்மர் வளாகத்தில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய சுகாதார துறையின் ரூ.491.7 மதிப்பு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கல்வி பிரிவு, குடியிருப்பு, செவிலியர் விடுதி ஆகியவை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • ஜிப்மர் கிளை புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இதன் விரிவாக்கத்திற்கு புதுச்சேரி அரசு காரைக்கால் கோவில்பத்து பகுதியில் 41.47 ஏக்கர் மற்றும் காமராஜ் சாலையில் 38.14 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளது.
  • இந்த பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. புதுச்சேரி பொதுப் பணி துறைக்கு சொந்தமாக அரசலாறு பகுதியில் உள்ள கட்டடத்தையும் ஜிப்மருக்கு வழங்கப்படுகிறது. 
  • அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நிர்வாக வசதிகளுக்கு என ரூ. 30 கோடியை ஜிப்மர் செலவிடுகிறது. இந்த கட்டுமான பணிகள் முடிந்துவிட்டால் காரைக்கால் கிளையில் தற்போது எம்பிபிஎஸ் பயிலும் 50 மாணவர்கள் என்ற எண்ணிக்கை 100ஆக உயரும்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உதவித் தொகை ரூ.54 ஆயிரமாக அதிகரிப்பு
  • மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களின், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆண்டு கல்வி உதவித்தொகை ரூ. 30 ஆயிரத்தில் இருந்து ரூ.54 ஆயிரமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • 7-வது ஊதியக்குழுவில் அளிக்கப்பட்ட பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களின் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2,250யை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
  • ஒரு குடும்பத்தில் தாய், தந்தை இருவரும் மத்திய அரசு ஊழியராக இருந்தால், அதில் ஒருவர் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், இதர படிகள் 25 சதவீதம் ஆண்டுதோறும் தானாக உயர்த்தப்படும், அதேசமயம், அகவிலைப்படி திருத்தப்பட்டதன் அடிப்படையில் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • மேலும், குழந்தைகள் விடுதியில் தங்கிபடித்தால், விடுதி கட்டணத்தில் மாதத்துக்கு ரூ.6,250 மானியமாகத் தரப்படும். இந்த சலுகைகளைப் பெற குழந்தைகள் படிக்கும் கல்வி நிலையத்தில் இருந்து ஒரு சான்றிதழைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் அளித்தல் போதுமானது.
2017ம் ஆண்டின் பிரபல ஆங்கிலச் சொல் என்ன?
  • அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் பதிவுகளில் பலமுறை குறிப்பிடப்பட்டு, அவரது பதிவுகளின் அடையாளமாகவே மாறிவிட்ட அந்தச் சொல்: 'ஃபேக் நியூஸ்' (fake news).
  • பொய்ச் செய்தி என்று பொருள் தரும் அந்த ஃபேக் நியூஸ் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் டிரம்ப் மட்டுமல்லாமல் உலகமே ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது இப்போது. 2017ம் ஆண்டில் மட்டும் இச்சொல்லைப் பயன்படுத்துவது 365 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2017ம் ஆண்டுக்கான பிரபல சொல்லை தேர்வு செய்வதற்காகத் தயாரிக்கப்பட்ட போட்டிச் சொற்பட்டியலில் அரசியலின் செல்வாக்கு அதிகம் இருந்தது.
  • ஆன்டிஃபா (Antifa) மற்றும் எக்கோ சேம்பர் (Echo Chamber) ஆகிய சொற்களும் பிரபல சொற்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
உலகின் சக்திவாய்ந்த பெண்களில் பிரியங்கா சோப்ரா 'போர்ப்ஸ் பத்திரிகை' பட்டியல் வெளியீடு
  • உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் குறித்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் சந்தா கோச்சா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட 5 இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • சர்வதேசவில் வெளியும் போர்ப்ஸ் பத்திரிகை உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் குறித்த பட்டியலை நேற்று வெளியிட்டது. 
  • ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் சந்தா கோச்சா 32-வது இடத்திலும், எச்.சி.எல். கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷினி நாடார் மல்கோத்ரா 57-வது இடத்திலும், அதைத் தொடர்ந்து பயோகான் நிறுவனத்தலைவர் மஜூம்தார்ஷா 71-வது இடத்திலும் உள்ளனர்.
  • இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் தலைவர் ஷோபனா பாட்டியா 92-வது இடத்திலும், ஹாலிவுட், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.
  • இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்திரா நூயி 11-வது இடத்திலும், அமெரிக்க இந்திய பெண் நிக்கி ஹாலே 43-வது இடத்திலும் உள்ளனர்.
  • உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் தொடர்ந்து 12-வது ஆண்டாக தேர்வாகியுள்ளார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே 2-வது இடத்திலும், பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெர்ல் சான்ட்பெர்க் 4-வது இடத்திலும், ஜி.இ. நிறுவனத்தின் சி.இ.ஓ. மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர்.
  • இந்த ஆண்டு பட்டியலில் 23 புதிய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்19-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாடுகளிடையே முன்னேறும் இந்தியா
  • தொழில் செய்வதற்கான சூழலில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதுவும் ஒரே வருடத்தில்! தொழில் துறையில் சிறந்துவிளங்கும் நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும்.
  • கடந்த வருடப் பட்டியலில் 130 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 100 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. விரைவில் 50 வது இடத்தை எட்டிப்பிடிக்கும் என நம்பலாம்.
பெண்கள் பாதுகாப்பு: 10வது இடத்தில் தமிழகம்
  • இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ள நகரங்கள் குறித்து எடுக்கப்படட ஆய்வில் கோவா முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 10 வது இடத்தில் உள்ளது. 
  • ஆய்வு முடிவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பட்டியல் அதில், கோவா முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், கல்வியில் 5வது இடத்திலும், சுகாதாரத்தில் 6வது இடத்திலும், வறுமையில் 8 வது இடத்திலும் உள்ளது.
  • பெண்கள் பாதுகாப்பில் மற்ற மாநிலங்களின் நிலை:2வது இடம்- கேரளா3வது இடம்- மிசோரம்4வது இடம்-சிக்கிம்5வது இடம்- மணிப்பூர்6வது இடம் -இமாச்சல பிரதேசம்7வது இடம் -கர்நாடகா8வது இடம் - பஞ்சாப்9வது இடம்-மகாராஷ்டிரா10வது இடம்- தமிழகம்11வது இடம்-தெலுங்கானா12வது இடம்-ஆந்திரா13வது இடம்- உத்தர்கண்ட்14வது இடம்-நாகாலாந்து15வது இடம்-சத்தீஸ்கர்16வது இடம்-குஜராத்17வது இடம்-திரிபுரா18வது இடம்-மேற்கு வங்கம்19வது இடம்-அரியானா20வது இடம்-ஜம்மு காஷ்மீர்21வது இடம்- மேகாலயா22வது இடம்-ராஜஸ்தான்23வது இடம்-ஒடிசா24வது இடம்-அசாம்25வது இடம்-மத்திய பிரதேசம்26வது இடம்- அருணாச்சல பிரதேசம்27வது இடம்-ஜார்க்கண்ட்28வது இடம்-டில்லி29வது இடம்-உத்தர பிரதேசம்30வது இடம்- பீஹார் 
  • கல்வியில் சிறந்த மாநிலங்கள்: இமாச்சல பிரதேசம், சிக்கிம், பஞ்சாப், மகாராஷ்டிரா, கோவாமோசமானவை: டில்லி, அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேகாலயா, மத்திய பிரதேசம் சுகாதாரத்தில் சிறந்தவை: கேரளா, தமிழகம், சிக்கிம், கர்நாடகா, ஆந்திராமோசம்: பீஹார், அரியானா, ஜார்க்கண்ட், மேகாலயா, உ.பி., வறுமை: சிறந்தவை: மணிப்பூர், மிசோரம், தமிழகம், தெலுங்கானா, ஆந்திராமோசம்: பீஹார், உ.பி., ஜார்க்கண்ட், காஷ்மீர், அசாம்.
'என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு'
  • சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களில், வட மாநிலம் தொடர்பான வரலாறு அதிகம் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக ராஜராஜசோழன் ஆட்சி, கம்போடியா, வியட்நாம் வரை விரிந்து கிடந்தது என்கின்றனர். 
  • ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகளை நாம் இங்கு விருப்ப மொழியாக படிக்கும்போது, வட மாநிலங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விருப்ப பாடமாக இடம் பெறச்செய்ய வேண்டும். வள்ளுவரின் திருக்குறள் உலகத்திற்கே பொதுவானது. 
  • அதில் எந்த சூழலுக்கும் ஏற்ற கருத்துக்கள் உள்ளன. திருக்குறள் மற்றும் வள்ளு வரின் வரலாறு குறித்த, என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டத்தில் இடம்பெற அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
பாடகர் இயேசுதாஸுக்கும், நடிகை காஞ்சனாவுக்கும் கர்நாடகாவின் உயரிய விருது
  • பாடகர் இயேசுதாஸுக்கும், நடிகை காஞ்சனாவுக்கும் கர்நாடக அரசின் உயரிய விருதான ராஜ்யோத்சவா விருதை கர்நாடக முதல்வர் சித்தராமய்யா வழங்கி கௌரவித்தார்.
  • கர்நாடக மாநிலம் உருவானதை நினைவுகூறும் வகையில் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது ராஜ்யோத்சவா விருது. பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • கர்நாட மாநிலம் உருவாகி 62 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்த 62 பேருக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கி கர்நாடக அரசு கௌரவித்தது.
  • இதில் திரைப்படத் துறையிலிருந்து பின்னணி பாடகர் கே.ஜே.இயேசுதாசும், பழம்பெரும் நடிகை காஞ்சனாவும், இந்த விருதை பெற்றனர்.
  • ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமான காஞ்சனா, தமிழ், மற்றும் கன்னடத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பதும், கே.ஜே.யேசுதாஸ் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பிரகாஷ் நஞ்சப்பா தங்கம் வென்று அசத்தல்
  • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரகாஷ் நஞ்சப்பா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
  • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பிரகாஷ் நஞ்சப்பா தங்கம் வென்றுள்ளார்.
  • இறுதிச் சுற்றில் அவர் 222.4 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
  • அதே பிரிவில் போட்டியிட்ட இதர இந்தியாவின் அமன்பிரீத் சிங் வெள்ளி பதக்கம் வென்றார். ஜிது ராய் வெண்கல பதக்கம் வென்றனர்
  • அதேபோன்று ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் பிரோன் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் சுரேஷ் குசாலே 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
தொலைதூர ( அஞ்சல் வழி) கல்வி குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
  • தொலைதூர வழிக்கல்வி மூலம் தொழில்நுட்ப படிப்புகளை நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இது குறித்த வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை விதித்தது. மேலும் இது தொடர்பாக பஞ்சாப் - அரியானா மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
  • இரண்டு வருடங்களுக்கு முன் பஞ்சாப் - அரியானா மாநில உயர்நீதிமன்றம், "கணிப்பொறி அறிவியல் படிப்பை கல்லூரி சென்று படித்தவர்களும், தொலைவழிக் கல்வியில் படித்தவர்களையும் சமமாக கருத முடியாது" என உத்தரவு பிறப்பித்திருந்தது.
  • அதே நேரம், "தொலைதூர கல்வியில் தொழில்நுட்ப கல்விகளை படிக்கலாம்" என்று ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த்து. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்
  • அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்ற பின், இந்தியாவுக்கான அமெரிக்கத் துாதராக இருந்த, ரிச்சர்ட் வர்மா, ராஜினாமா செய்தார். 
அமெரிக்க பெடரல் வங்கி தலைவராகிறார் ஜெரோம்
  • அமெரிக்க பெடரல் வங்கி புதிய தலைவராக ஜெரோம் பவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக தற்போது ஜெனட் ஏலன் உள்ளார். இவரது பதவிக்காலம் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. 
ஜனவரி முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்
  • தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரையுடன் கேரட் அளவையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • மேலும், ஹால்மார்க் முத்திரையுடன் எத்தனை கேரட் தங்கத்தில் நகை செய்யப்பட்டுள்ளது என்பதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். 14 கேரட், 18 கேரட், 22 கேரட் என 3 பிரிவுகளில் இது மேற்கொள்ளப்படும்'' என்றார்.
35 ஆயிரம் நிறுவனங்களின் பதிவு ரத்து..! மத்திய அரசு அதிரடி
  • பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, 17 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்து, திருப்பி எடுத்த 35 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்துசெய்துள்ளது.
  • கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, மக்களிடம் இருந்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டன. இந்த நேரத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்து, மீண்டும் திருப்பி எடுத்துள்ளன. அதில், ஒரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் மட்டும் 2,484 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு திரும்பி எடுக்கப்பட்டுள்ளது.
  • நவம்பர் 8-ம் தேதிக்கு முன்னர், இந்த வங்கிக் கணக்கில் மைனஸில் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. இதைப்போல மற்றொரு நிறுவனம் 2,134 வங்கிக் கணக்குகள் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த 35,000 நிறுவனங்களின் பதிவையும் மத்திய அரசு ரத்துசெய்துள்ளது. 
  • இந்த நிறுவனங்கள்மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதுகுறித்து அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • மேலும், இந்த நிறுவனங்களின் பெயரில் சொத்துகளைப் பதிவுசெய்ய அனுமதிக்கக்கூடாது என மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டி ருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத 2.24 லட்ச நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 
  • அதில், போலி நிறுவனங்கள் என்று அடையாளப்படுத்தப்படும் நிறுவனங்கள்குறித்த தகவலை அரசு ஆவணங்களிலிருந்து நீக்கவும் நடவக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 3 ஆண்டுகளாக, தங்கள் நிறுவனத்தின் வருமானக் கணக்குகளைத் தாக்கல்செய்யத் தவறிய 3.09 லட்சம் இயக்குநர்களையும் மத்திய அரசு தகுதிநீக்கம் செய்திருப்பதாக, நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பங்கனபள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு
  • ஆந்திரத்தின் முக்கிய அடையாளமாகத் திகழும் பங்கனபள்ளி மாம்பழம் உள்ளிட்ட மேலும் ஆறு பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது அனைவருக்கும் தித்திப்பான செய்தியாக அமைந்துள்ளது.
  • புவியியல் ரீதியில் ஒரு பகுதியில் இயற்கையாக விளையும் சிறந்த வேளாண் பொருட்களுக்கு இந்திய காப்புரிமை அலுவலகம் புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கைவினைப் பொருட்கள் மற்றும் ஆலை தயாரிப்புகளுக்கும் இந்த குறியீடு வழங்கப்படுகிறது.
  • புவிசார் குறியீடு என்பது குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தையும், தனித்துவத்தையும் உலக அரங்கில் கொண்டு சேர்க்கிறது. இதனால், இந்தக் குறியீட்டைப் பெறுவதற்கு மாநிலங்களுக்கிடையே போட்டி அதிகம். 
  • டார்ஜீலிங் தேயிலை, திருப்பதி லட்டு, காங்ரா ஓவிய பாணி, நாகபுரி ஆரஞ்சுப்பழம், காஷ்மீர் பஷ்மினா உள்ளிட்டவை இதுவரையில் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளன.
  • மேற்கு வங்கத்தின் துலபஞ்சி அரிசி, கோவிந்தபோக் அரிசி, தெலங்கானாவின் போச்சம்பள்ளி சேலைகள், ஆந்திரத்தின் துர்கி கற்சிற்பங்கள், எட்டிகோப்பக்கா பொம்மைகள், நாகாலாந்தின் சக்சேசாங் சால்வைகள் ஆகியவையும் நடப்பு ஆண்டில் புவிசார் குறியீட்டை பெற்றுள்ளதாக இந்திய காப்புரிமை அலுவலக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 2016-17 இல் 33 பொருள்கள் புவிசார் குறியீட்டை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா சாம்பியன்; உலகக்கோப்பை தொடருக்கும் தகுதி
  • மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, சீன அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
  • இறுதியில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டு சீன அணியை 5-4 கோல் கணக்கில் வீழ்த்தி ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 13 வருடங்களுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. சமீப காலங்களில் இந்திய மகளிர் அணியின் பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
  • இது மகளிர் அணிக்கு இரண்டாவது ஆசிய கோப்பையாகும். இதற்கு முன் 2004 -ம் ஆண்டு ஆசிய கோப்பையைக் கைப்பற்றி இருந்தது. இதன்மூலம் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட தகுதி பெற்றது. வாழ்த்துகள் கேர்ள்ஸ்.
ரிலையன்ஸ் மொபைல் சேவை டிசம்பர் 1ம் தேதி முதல் நிறுத்தம்
  • கடும் நஷ்டத்தில் சிக்கிய ஆர்காம் எனப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அதன் அனைத்து வகை மொபைல் சேவைகளை அடுத்த மாதம் 1ம் தேதி முதல் நிறுத்திக் கொள்கிறது. அதன் வாடிக்கையாளர்கள் வேறு மொபைல் சேவை நிறுவனங்களுக்கு இந்தாண்டு கடைசி வரை மாறி கொள்ளலாம். 
  • 4 ஜி டேட்டா சேவைகளை மட்டுமே தொடர்ந்து ஆர்காம் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இன்போகாம் என முன்பு அழைக்கப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன் (ஆர்காம்) நிறுவனம் திருபாய் அம்பானியால் உருவாக்கப்பட்ட ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் 2004ம் ஆண்டு முதல் ஜிஎஸ்எம் வகை நகர்பேசி சேவை, சிடிஎம்ஏ வகை நகர்பேசி சேவை, கம்பிவழி இணையம், கம்பியில்லா இணையம், இணையவழி தொலைக்காட்சி ஆகிய சேவைகளை வழங்குகிறது. 
  • இதன் மொத்த கடன் ரூ.44,000கோடியை தொட்டது. வர்த்தகத்தை வலுப்படுத்த ஏர்செல்ஸ், டாடா டொகோமோ போன்ற நிறுவனங்களுடன் இணைக்க முயன்றது. பல்வேறு சட்ட சிக்கல்காரணமாக அவை ரத்தாகின. மேலும்,முகேஷ் அம்பானியின் ஜியோ வரவு காரணமாக பாதிப்பு பெருகியது. 
  • இதையடுத்து,இந்நிறுவனம் அளித்து வந்த 2ஜி மற்றும் 4ஜி ேசவை௳ளை இம்மாதம் 30 ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இவை ஆந்திரம், அரியானா, மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ( கிழக்கு, மேற்கு),தமிழகத்தில் 8 தொலைத் தொடர்பு வட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. 
  • இம்மாதம் 30ம் தேதிக்கு பிறகு 4 ஜி டேட்டா சேவைகளில் மட்டுமே ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட உத்தரவில், நாட்டில் உள்ள அனைத்து மொபைல் சேவை நிறுவனங்கள், ஆர்ஐஎல் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 31ம் தேதி வரை அதன் வாடிக்கையாளர்கள் மாறிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மொத்தம் 20 பதக்கங்கள்; அதில் ஆறு தங்கம்.
  • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு ஆறு தங்கங்கள் உள்பட 20 பதக்கங்கள் பெற்று நிறைவு செய்துள்ளது.
  • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளான நேற்று ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் மூன்று பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் சத்யேந்திர சிங் தங்கமும், சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளியும் வெற்றிப் பெற்றனர்.
  • சத்யேந்திர சிங் 454.2 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சஞ்சீவ் ராஜ்புத் 453.3 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் டேன் சாம்சன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
  • ஆடவருக்கான 'டிராப்' பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் பீரேந்தீப் சோதி, அதில் 4-வது இடம் பிடித்தார்.
  • இந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்க: என மொத்தம் 20 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
நிதித்துறைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார் ஹஸ்முக் அதியா
  • மத்திய நிதித்துறைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார், ஹஸ்முக் அதியா. இவர், இந்திய வருவாய்த்துறைச் செயலாளராகப் பணியாற்றிவந்தார். இவரது பதவி உயர்வுக்கான உத்தரவை, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை பிறப்பித்துள்ளது. 
  • மத்திய நிதித்துறைச் செயலாளராக இருந்த அசோக் லவாசா ஓய்வுபெற்றுவிட்டதால், நிதித்துறைச் செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. இந்நிலையில், அப்பதவிக்கு அதியா நியமிக்கப்பட்டிருக்கிறார். மத்திய அரசின் நியமனக் கமிட்டி இவரது பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி குழுவில் உறுப்பினராக பிரவீண் கண்டேல்வால் நியமனம்
  • மத்திய அரசின் ஜிஎஸ்டி குழு உறுப்பினராக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (சிஏஐடி) தலைமை இயக்குநர் பிரவீண் கண்டேல்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • மத்திய நிதி அமைச்சர் ஒப்புதலின்பேரில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் குழுவில், ஆரகியா சென்குப்தா (ஆராய்ச்சி இயக்குநர், சட்டக் கொள்கை ஆய்வு மையம்), வினோத் ஜெயின்(பட்டயக் கணக்காளர்), அனுஜ் சஹாய் (இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி), ஓம் பிரகாஷ் மிட்டல் (லகு உத்யோக் பார்தி தலைவர்) ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக சிஏஐடி தெரிவித்துள்ளது.
பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை முழுமையாக நீக்கிய தனியார் வங்கி
  • இந்திய தனியார் வங்களில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை முழுமையாக நீக்கியுள்ளது.
  • மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை முழுமையாக நீக்கியுள்ளது. ஆனால் காசோலை மீதான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
  • இந்த கட்டண நீக்கம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. சேமிப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்குகள் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் IMPS பரிவர்த்தனைகளுக்காக கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஜெ., மரணம் விசாரணை: வழக்கறிஞர் நியமனம்
  • ஜெ., மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை கமிஷனின் வழக்கறிஞராக ரஞ்சன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி, விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். 
  • கமிஷன் செயல்பட, சென்னை, எழிலகம் அருகே, பசுமை தீர்ப்பாயம் இயங்கும், கலாஸ் மஹால் கட்டடத்தின் முதல் மாடியில், இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
  • 'ஜெ., மரணம் குறித்தும், மருத்துவமனையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், விபரம் அறிந்தவர்கள், நவ., 22க்குள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, தகவல்கள் அளிக்கலாம்' என, நீதிபதி, ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். 
  • விசாரணையை முடித்து, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கும்படி, அரசு அறிவுறுத்தி உள்ளது.விசாரணை கமிஷன் அலுவலகத்தில், துணை செயலர் அந்தஸ்திலான அதிகாரி உள்ளிட்ட, நீதித் துறை மற்றும் பொதுத் துறை ஊழியர்கள், 10 பேர் நியமிக்கப்பட்டுஉள்ளனர். இந்த சூழ்நிலையில், வழக்கறிஞராக ரஞ்சன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் மேயராக சீக்கியர் ரவீந்தர் தேர்வு
  • அமெரிக்காவின், நியூஜெர்ஸி மாகாணம், ஹோபோகென் நகர மேயர் தேர்தலில், சீக்கியரான, ரவீந்தர் பல்லா வெற்றி பெற்றுள்ளார்.அமெரிக்காவின், நியூஜெர்சி மாகாணம், ஹோபோகென் நகர் மேயர் தேர்தல் நடந்தது. 
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, சீக்கியரான, ரவீந்தர் பல்லாவுக்கு ஆதரவு தெரிவித்தார். ரவீந்தர் பல்லாவை தவிர, மேலும் ஐந்து பேர், தேர்தலில் போட்டியிட்டனர்.
  • மேயர் தேர்தலில், ரவீந்தர் பல்லா வெற்றி பெற்றார். ஹோபோகென் நகர மேயராக பொறுப்பேற்க உள்ள, முதல் சீக்கியர் என்ற பெருமை, ரவீந்தருக்கு கிடைத்து உள்ளது.
ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்... மேரி கோம் தங்கம் வென்றார்
  • ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் மேரிகோம் தங்கம் வென்றார். 48 கிலோ எடைப்பிரிவில் வட கொரியாவின் ஹியாங் மி கிம்மை வீழ்த்தி பதக்கம் வென்றார்.
  • ஆசிய குத்து சண்டை போட்டியில் மேரி கோம் தங்கம் வெல்வது இது 5வது முறையாகும்.
தேசிய பாட்மின்டன்: செய்னா சாம்பியன்
  • தேசிய பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செய்னா நேவல், சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், சிந்துவை தோற்கடித்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.
  •  இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-2' சிந்து, 11வது இடத்தில் உள்ள செய்னா நேவல் மோதினர். முதல் செட்டை செய்னா 21-17 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் இருவரும் மாறி, மாறி, புள்ளி எடுத்தனர். 
  • ஆனால், போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்திய செய்னா 27-25 என கைப்பற்றினார். 53 நிமிடம் நீடித்த போட்டியில் செய்னா 21-17, 27-25 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், மூன்றாவது முறையாக (2006,07,17) கோப்பை வென்றார்.
தேசிய சீனியர் பாட்மிண்டன்: பிரணாய் சாம்பியன்
  • மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-வது தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
  • இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்தை 21-15, 16-21, 21-7என்ற செட் கணக்கில் ஹெச்.எஸ். பிரணாய் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
  • தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பிரணாய் முதல்முறையாக வென்றுள்ளார்.
பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
  • இந்தியாவின் பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னையையும் இணைத்து யுனெஸ்கோ கவுரவித்துள்ளது. இதற்கு முன் இந்தியாவின் பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் ஜெய்பூர் மற்றும் வாரணாசி ஆகியவை மட்டுமே இடம்பெற்றிருந்தன. 
  • யுனெஸ்கோ கவுரவம் : பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற கலைகளின் வளர்ச்சிக்காக பங்காற்றி வரும் நகரங்களுக்கு யுனெஸ்கோ இந்த கவுரவத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னையையும் சேர்க்கக் கோரி மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டிஸ் நெட்வொர்க் இடம் பரிந்துரை செய்தது. 
  • இதனை ஏற்றுக் கொண்ட சிசிஎன், சென்னையை பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் இணைத்துள்ளது. இதுவரை இந்த பட்டியலில் 54 நாடுகளைச் சேர்ந்த 116 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 
'பற்ற வைக்கப்பட்ட தீயுடன் ஓடும்' யானைகளின் புகைப்படத்திற்கு சர்வதேச விருது
  • தங்களுக்கு தீ வைத்த ஒரு குழுவிடமிருந்து தப்பியோடும் இரண்டு யானைகளின் புகைப்படம் வனவிலங்கு புகைப்பட போட்டியொன்றில் முதன்மையான பரிசை வென்றுள்ளது.
  • மனிதர்கள் - யானைகள் இடையிலான மோதல்கள் நிறைந்த இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பிப்லாப் ஹஸ்ரா என்பவர் எடுத்த அப்புகைப்படத்தில் தன் காலில் பற்றி எரியும் தீயுடன் யானைக்குட்டி ஒன்று, மற்றொரு யானையுடன் சேர்ந்து தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறது.
  • பிப்லாப் ஹஸ்ரா இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது, "ஊளையிடும் ஒரு ஆடவர் கூட்டம்" இரண்டு யானைகளை நோக்கி "எரியும் தார் பந்துகள் மற்றும் பட்டாசுகளை" எறிந்ததாக அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இனி "பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது: யுஜிசி உத்தரவு
  • "பல்கலைக் கழகம்' என்ற பெயரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் இனி பயன்படுத்தக் கூடாது. உடனடியாக நீக்கிவிட வேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
  • உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், நாடு முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் பெயர்களில் "பல்கலைக் கழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றன. இது யுஜிசி சட்டப் பிரிவு 23-க்கு எதிரானதாகும். 
  • அதன்படி, நாடு முழுவதும் உள்ள 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அவற்றின் பெயரில் "பல்கலைக் கழகம்' என்பதைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. 
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளும் ஏடிஎம்களும் குறைக்கப்படும் : நிதி ஆயோக் அதிரடித் தகவல்
  • நிதி ஆயோக் தலைவர் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் ஏடிஎம்மின் எண்ணிக்கை கணிசமாக குறைப்படும் என கூறி உள்ளார்.
  • மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு நிதி ஆயோக் ஆகும். இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் ஆவார். 
  • சர்வதேச அளவில் மொபைல் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் நாடாக இந்தியா உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் 100 கோடி பயோமெட்ரிக் அதிக அளவிலான மொபைல்கள் மற்றும் அனேகமாக அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் உள்ளன.
இஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் எச்சரிக்கை கருவிகள்
  • ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, இஸ்ரோ உதவியுடன் எச்சரிக்கை விடுக்கும் கருவிகளை பொருத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. எச்சரிக்கை கருவி இந்தியாவில் சுமார் 7,200 ஆளில்லா ரயில்வே கிராஸிங்குள் உள்ளன.
மணிலாவில் பிரதமர் மோடி பெயரில் வயல்வெளி அரிசி ஆய்வகம்
  • பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிரதமர் மோடி பெயரில் வயல்வெளி அரிசி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. தனது பெயரில் அமைக்கப்பட்டுள்ள அரிசி ஆய்வகத்தை மோடி திறந்து வைத்தார்.
  • லாஸ் பனோஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்திற்கு 2 அரிசி ரகத்தை மோடி பரிசளித்தார். 
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
  • இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் பயன் பெறுவர். இதுவரை இப்பயிற்சிக்காக இணையதளம் வாயிலாக 73 ஆயிரம் மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் இத்திட்டமானது இவ்வாண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
  • இப்பயிற்சி மையத்தினை, ஒன்றியத்திற்கு ஒரு மையம் என்ற வீதத்தில் தமிழ்நாட்டில் மொத்தமாக 412 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இன்றைய தினத்தில் முதல் கட்டமாக 100 மையங்களில் இப்பயிற்சி தொடங்கப்படுகிறது. மிக விரைவில் மீதமுள்ள 312 மையங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
  • பள்ளிகளில் பெறும் கல்விச் செயல்பாடுகளில் எவ்விதத் தேக்கமும் அடையா வண்ணம், மாணவர்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், பொதுத் தேர்வு முடிவடைந்த பிறகு தினந்தோறும் இதே நேரத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா-பிலிப்பைன்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். பின்னர் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி சந்தித்தார்.
  • பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டியுடனான சந்திப்பு குறித்து வெளியுறவு விவகாரங்களுக்குான பிரதிநிதி ப்ரீத்தி சரண் கூறியது, இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு சிறப்பான ஒன்றாக இருந்தது. 
  • 36 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய பிரதமர் பிலிப்பைன்ஸ் சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்துள்ளார். இரு நாடுகளிடையே ராணுவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்றார்.
யோகா பயிற்சி வகுப்பு நடத்த சவூதி அரேபியா அரசு அனுமதி
  • லைசன்ஸ் பெற்று யோகா பயிற்சி வகுப்பு நடத்த சவூதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை சவுதி அரசு அங்கீகரித்துள்ளது. 
ராஜஸ்தான் போலீசில் முதல் முறையாக காவலர் பணிக்கு திருநங்கை நியமனம்
  •  ராஜஸ்தான் போலீசில் கான்ஸ்டபிள் பணிக்கு முதல் முறையாக திருநங்கை ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களுக்கு பிறகு காவலர் பணிக்கு கங்காகுமாரி நியமிக்கப்பட்டார். 
ஜிஎஸ்டி..! தமிழகம் பிடித்த இடம் என்ன தெரியுமா ?
  • ஜிஎஸ்டி -க்கு பெருத்த எதிர்ப்பு தமிழகத்தில் இருந்தாலும், அதற்கு நிகராக ஜிஎஸ்டி செலுத்துவதில் பெரும்பாலோனோர் பதிவு செய்துள்ளனர்
  • ஜி.எஸ்.டி மூலம் வருவாய் ஈட்டுவதில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார்
  • ஜிஎஸ்டி - ஐ பொறுத்தவரை தமிழகத்தில் 89 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி., செலுத்த பதிவு செய்துள்ளதாகவும், தொடரந்து, இன்னும், 11 சதவீதம் பேர் பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்
மாமல்லபுரம் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு
  • மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழக அரசு விண்ணப்பத்தை ஏற்று புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் சிற்பங்களுக்கு மத்திய புவிசார் குறியீடு பதிவகம் சிறப்பு அங்கீகாரம் ஆகும். 
  • உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் பாரம்பரியப் பண்புகள், தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு, தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம், காஞ்சிபுரம் பட்டு ஆகியவைகளுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. 
  • மதுரை மல்லி, தஞ்சாவூர் ஓவியங்கள், காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, சிறுமலை வாழை, கோவை வெட் கிரைண்டர் உட்பட 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழகம் 2ஆம் இடத்தில் இருக்கிறது.
  • தமிழகத்தில் இருந்து மேலும் 26 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2010, 2011, 2014 ஆகிய 3 ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பொருளுக்குக்கூட புவிசார் குறியீடு வழங்கப்படவில்லை. 
  • புவிசார் குறியீடு மையத்தில் 3 ஆண்டுகளைக் கடந்தும் ஈரோடு மஞ்சளுக்கான விண்ணப்பம், பரிசோதனை நிலையிலேயே இருக்கிறது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் பொறுப்பேற்றார்

  • இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நியமிக்கப்பட்டுள்ள, கென்னத் ஜஸ்டர், 62, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், விரைவில் இந்தியா வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. 
மேற்கு வங்கத்துக்கு ரசகுல்லா புவிசார் குறியீடு

  • ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெறுவதில் ஒடிசா, மேற்கு வங்கம் இடையே போட்டி ஏற்பட்டது. ரசகுல்லா தங்களுக்குதான் சொந்தம் உரிமை கொண்டாடிய ஒடிசா, 2015 முதல் ரசகுல்லா திவாஸ் கொண்டாட்டங்களை தொடங்கியது. இதுபோல் கொல்கத்தாவும் சொந்தம் கொண்டாடியது. 
  • அதில் ரசகுல்லாவை கடந்த 1868ம் ஆண்டு மேற்கு வங்காளத்தின், கொல்கத்தா நகரின் வடக்கு பகுதியில் நொபின் சந்திர தாஸ் என்பவர் இனிப்பு கடை நடத்திவந்துள்ளார். அவர் தான் அறிமுகப்படுத்தி உள்ளார். 
  • இது பாலில் தயாரிக்கப்படும் இனிப்பு. உருண்டை வடிவில் பந்து போன்று மென்மையான இந்த ரசகுல்லாவை நொபினின் வாரிசுகள் இன்றும் வடக்கு கொல்கத்தா நகரில் கடையில் விற்கின்றனர் என கூறியிருந்தனர். மனுவை விசாரித்த புவிசார் குறியீடு பதிவகம் மேற்கு வங்க மாநிலத்துக்கு ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது. 
குழந்தைகள் தினம்.. வீர தீர செயல் புரிந்த குழந்தைகளுக்கு குடியரசு தலைவர் விருது

  • குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீர தீர செயல்புரிந்த, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.
  • இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 16 குழந்தைகளுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த ஆகாஷ் மனோஜ் என்கிற மாணவருக்கும், கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்வஸ்திக் பத்மா என்கிற மாணவருக்கும் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட்டது.
  • காஷ்மீரைச் சேர்ந்த மாண்வி ஜாய்ரா வாசிம் என்பவருக்கு கலையில் சிறந்து வழங்கியதற்காகவும் விருது வழங்கப்பட்டது. மேலும் வீர தீர செயல் புரிந்ததற்காக கர்நாடகாவைச் சேர்ந்த வைஷாக் என்கிற சிறுவனுக்கும், நிதின் என்கிற சிறுவனுக்கும் வழங்கப்பட்டது. 
  • இதில் வைஷாக் என்கிற சிறுவன் தனது உறவினர் ஒருவரைத் தாக்க வந்த மலைப்பாம்பிடம் போராடி அவரைக் காப்பாற்றியதற்காகவும், நிதினுக்கு பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட தனது தங்கைக்கு உரிய நேரத்தில் முதலுதவி செய்து காப்பாற்றியதற்காகவும் வழங்கப்பட்டது.
  • தீக்ஷிதா மற்றும் அம்பிகா சகோதரிகளுக்கு கழிவு நீர் குழாயில் மாட்டிக் கொண்ட சிறுவனைக் காப்பாற்றியதற்கும், ஜூனைரா ஹரம் என்கிற மாணவிக்கு தண்ணீர் தொட்டியில் விழுந்தவரைக் காப்பாற்றியதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு விருதும், 10000 ரூபாய் ரொக்கமும் பட்டயமும் பரிசாக வழங்கப்பட்டது.

கர்நாடகா மூட நம்பிக்கை எதிர்ப்புச் சட்டம் அமுல்!
  • கர்னாடகா சட்டசபையில் மூட நம்பிக்கை எதிர்ப்பு சட்ட மசோதா வெகு நாட்களாக அமுலுக்கு வராமல் இருந்து வந்தது. அந்த மசோதாவை பா ஜ க கடுமை ஆக எதிர்த்து வந்தது. அதில் குறிப்பிட்ட பல நம்பிக்கைகளில் பிராமணர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் உருண்டால் புண்ணியம் என்பதும் ஒன்றாகும் 
  • இதில் 16 நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவை
1. பேய் ஓட்டுதல், சூனியம், நரபலி, மனோவசியம், மற்றும் கெட்ட மந்திர நடவடிக்கைகள்

2. தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொள்ளும் வேண்டுதல்கள்

3. சிறு குழந்தைகளை ஆணிப் படுக்கையில் வீசி எறிதல்

4. பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் வரச் செய்தல்

5. அனைவர் முன்னிலையில் பாலியல் செய்கைகளை செய்ய சொல்லுதல்

6. மிருகங்களை கழுத்டை அறுத்துக் கொல்லுதல்

7. அலகு குத்திக் கொள்ளுதல்

8. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதை தடுப்பது

  • மேற்கூறிய குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் இதை செய்வோருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சமாக ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என அந்தச் சட்டம் கூறுகிறது.

மருத்துவர்களின் ஓய்வு வயதை உயர்த்தியது கேரளா அரசு

  • மருத்துவர்களின் ஓய்வு வயதை உயர்த்தியுள்ளது கேரளா அரசு. சுகாதாரத் துறையில் இதுவரை 56 ஆக இருந்த ஓய்வு வயது, தற்போது 60 ஆகவும், மருத்துவ கல்வித் துறையில் 60 ஆக இருந்த ஓய்வு வயது, தற்போது 62 ஆகவும் உயர்த்தப்படும். 
  • பொது சுகாதார சேவையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரளா முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
 குச்சுபுடி கலைஞருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
  • பிரபல குச்சுபுடி கலைஞர் ஷைலஜாவுக்கு 'பாரதிய வித்யா பவன்' சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. சென்னையில் வரும் சனிக்கிழமை (நவ.19) நடைபெறும் விழாவில் ஷைலஜாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விருதை வழங்குகிறார்.
  • சென்னையைச் சேர்ந்த ஷைலஜா பரதநாட்டியம், குச்சுபுடி போன்ற பாரம்பரிய நாட்டியக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். குச்சுபுடி நடனக் கலைக்கு கடந்த 40 ஆண்டுகளாக இவர் ஆற்றி வரும் சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான நடன நிகழ்ச்சிகளை நடத்தியவர். 
  • வெளிநாட்டு மாணவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குச்சுபுடி நடனக் கலையைப் பயிற்றுவித்தவர். பாரதிய வித்யா பவன் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் முதல் குச்சுபுடி நடனக் கலைஞர் ஷைலஜா என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத பகுதிக்கு ராஜாவாக அறிவித்துக் கொண்ட இந்தியர்

  • ஆப்ரிக்க நாடுகளான எகிப்து மற்றும் சூடானுக்கு இடையே, 2,060 சதுர கி.மீ., பரப்பளவு உள்ள எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத நிலப் பகுதிக்கு சென்றுள்ள இந்தியரான சுயாஷ் தீட்சித், 24, அந்தப் பகுதியை தனக்கு சொந்தம் என்று கூறியுள்ளார். 
  • அதற்கு, தீட்சித் ராஜ்ஜியம் என்றும் பெயரிட்டு, தன்னை அதன் மன்னராகவும் அறிவித்துக் கொண்டுள்ளார். 5.10 லட்சம் ஏக்கர் ஆப்ரிக்க நாடுகளாக எகிப்து மற்றும் சூடான் எல்லையில் அமைந்துள்ளது பிர் தாவில் என்ற, 2,060 சதுர கி.மீ., பரப்பளவு உள்ள பகுதி. 
  • எகிப்து, சூடான் இடையே, 1899ல் நிலப்பரப்பு நிர்ணயிக்கப்பட்டபோது, உலகில் மக்களே வசிக்காத அந்தப் பகுதியை இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடவில்லை.அதையடுத்து, 5.10 லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த நிலப் பகுதி, எந்த நாட்டுக்கும், யாருக்கும் சொந்தமில்லை என்று வரையறுக்கப்பட்டது. 
  • மிகுந்த மோசமான வானிலை, முழுவதும் பாலைவனம், கற்கள் நிறைந்த இந்தப் பகுதியை, 'மனிதர்கள் வாழலாம். ஆனால் யாருக்கும் உரிமை கிடையாது' என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மொபைல் நம்பருடன் ஆதாரை இணைக்க ஓடிபி வசதி!
  • அதை போக்கும் வகையில், மொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ள புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • மொபைல் நம்பருடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம் அடுத்த வருடம் பிப்ரவரி 6ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டியதிருப்பதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. 
சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை
  • சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
  •  முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என, பல படிநிலைகளில் வெற்றி பெறும் தேர்வாளர்களுக்கு, அதன் பின், பயிற்சி அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்படுகின்றனர்.இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றம் செய்யவும், தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்யவும், பஸ்வான் கமிட்டி, ஆக., 2016ல், யு.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரைத்தது. 
  • இந்த அறிக்கையை ஆராய்ந்த, யு.பி.எஸ்.சி., மார்ச்சில், தன் தரப்பு பரிந்துரை அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வைத்தது.இந்நிலையில், பஸ்வான் கமிட்டி, யு.பி.எஸ்.சி., அறிக்கைகளின் அடிப்படையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகள் மற்றும் தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உயிரினங்கள் வாழும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு
  • பூமி தவிர்த்து அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய இடம் பற்றிய தேடல் தொடருகிறது. நமது பால்வெளி மண்டலத்தின் மூலையில் சிறிய சிவப்பு நட்சத்திரம் ஒன்று உள்ளது. 
  • பூமியின் அளவுடைய கிரகம் ஒன்று அதனருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை வானியியலாளர்கள் நேற்று அறிவித்துள்ளனர்.இந்த கிரகத்தில் திரவ வடிவிலான நீர் இருக்க கூடும். அதனால் வாழ்வதற்கான சூழல் உள்ளது.
  • அந்த சிவப்பு நட்சத்திரத்தின் பெயர் ராஸ் 128. இந்த நட்சத்திரத்தினை ஒரே ஒரு கிரகம் சுற்றி வருகிறது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.இதற்கு முன் டிரேப்பிஸ்ட் 1 என்ற சிவப்பு நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அது பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவு கொண்டது. 
  • பூமியின் அளவு கொண்ட 7 கிரகங்கள் அதனை சுற்றி வருகின்றன.ஆனால் மற்ற நட்சத்திரங்களை போன்று இல்லாமல் ராஸ் 128 மிக அமைதியான, கதிரியக்க சிதறல்கள் எதுவும் இல்லாதது. கதிரியக்க சிதறலானது உயிரினங்கள் கிரகத்தில் வாழ்வதற்கான சூழலை தொடங்குவதற்கு முன்பே முற்றிலும் அழித்து விடும்.
  • இது பூமியில் இருந்து 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.ராஸ் 128 நட்சத்திரத்தில் இருந்து அதனை சுற்றி வரும் கிரகம் 4.5 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. இது சூரியன் மற்றும் பூமிக்கு இடையேயான 93 மில்லியன் மைல்கள் என்ற தொலைவை விட மிக குறைவு.
  • சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ள புதன் கிரகம் கூட சூரியனில் இருந்து 36 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது.பூமி மற்றும் சூரியன் இடையேயான தொலைவை ஒத்து, சிவப்பு நட்சத்திரம் மற்றும் புதிய கிரகம் இடையேயான தொலைவு அமைந்து இருந்தால் அது மிக குளிராக இருக்கும்.
  • ஆனால் ராஸ் 128ஐ மிக நெருங்கிய நிலையில் புதிய கிரகம் உள்ளது. அதனால் திரவ நீருக்கு தேவையான வெப்பம் உறிஞ்சப்படுகிறது. இந்த திரவ நீர் வாழ்வதற்கு தேவையான பொருள், என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஜி.எஸ்.டி.யின் கீழ் தேசிய ஆணையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ஜி.எஸ்.டி. வரி சலுகையை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு கடிவாளம் போட புதிய ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, ஜூலை, 1ல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது இந்த வரி விதிப்பு முறையால் சில எதிர்ப்புகள் ஏற்பட்டதையடுத்து கடந்த 14-ம் தேதி 178 பொருட்களுக்கான வரியை 28 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டு வரி விதிப்பு முறை மாற்றியமைக்கப்பட்டது.
  • இந்நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பின்னர், முன்பு விற்பனை செய்யப்பட்டதை விட அதிக விலைக்கு சில நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் வரி சலுகையை பயன்படுத்தி லாபமீட்டும் நிறுவனங்களை கண்காணிக்க , ஜி.எஸ்.டி.யின் கீழ் தேசிய அளவிலான ஆணையம் (NAA) ஒன்றை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இதன்படி இந்த ஆணையத்திற்கு மத்திய அரசின் செயலாளர் அளவிலான உயர் அதிகாரி தலைவராகவும், , மத்திய, மாநிலங்களில் இருந்து தலா நான்கு தொழி்ல்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பாக செயல்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு : இந்தியாவிற்கு முதலிடம்
  • சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்திற்கும், பெரும் கேடு விளைவிக்கக் கூடிய கந்தக டை-ஆக்சைடை, அதிகளவில் காற்றில் கலக்கச் செய்வதில், உலகிலேயே இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்த விபரம் வெளியாகியுள்ளது. 
  • 65 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1952-ம் ஆண்டு கந்தக டை-ஆக்சைடு காற்றில் பெருமளவு கலந்து மாசுபட்டதால், லண்டனில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்று சகோதரிகள் 
  • தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்களது எடைப் பிரிவில் எதிராளியை வீழ்த்தி சகோதரிகளான வினேஷ் போகத் மற்றும் ரீது போகத் தங்கம் வென்றுள்ளனர்.
  • தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ரயில்வே அணி சார்பில் போட்டியிட்டார் வினேஷ் போகத். இவர் 55 கிலோ எடைப் பிரிவில் அரியாணாவின் மனீஷாவை எதிர்கொண்டார். 
  • அதேபோன்று 50 கிலோ எடைப் பிரிவில் ரிது போகத், நிர்மலாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் நிர்மலாவை வீ
பிரௌட் மூமண்ட்: தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் புதிதாக மூன்று தேசிய சாதனைகள்...
  • தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்று வருகிறது.
  • இந்தப் போட்டியில் புதிதாக எட்டப்பட்ட மூன்று தேசிய சாதனைகள்: "18 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கான உயரம் தாண்டுதலில் அரியாணாவின் ருபீனா யாதவ் 1.81 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.
  • "14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் பீகாரின் அவினாஷ் குமார் 6.79 மீட்டர் தாண்டி சாதனை படைத்தார்.
  • "16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கான ஈட்டி எறிதலில் அரியாணாவின் ஜோதி 41.24 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
நம்ம தமிழகத்தின் 'மாநில மீன்' எது தெரியுமா?
  • இப்போது மாநிலத்துக்கு ஒரு மீன் மாநில மீனாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அயிரை மீனை தமிழகத்தின் மாநில மீனாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • கேரளாவில் கறி மீனும், தெலங்கானாவில் முரல் மீனும் அந்த மாநில மீன்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகம் அயிரை மீனை தமிழகத்தின் மாநில மீன் என்று அறிவிக்க முடிவு செய்துள்ளது.
ஏலத்தில் சாதனை படைத்த லியோனார்டோ டாவின்சி வரைந்த 'இயேசுநாதர்' ஓவியம்
  • லியோனார்டோ டாவின்சியால் வரையப்பட்டது என்று நம்பப்படும் 500 ஆண்டுகள் பழமையான இயேசுநாதர் ஓவியம் ஒன்று நியூயார்கில் நடந்த ஏலத்தில் 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
  • இந்த ஓவியம் சல்வேட்டர் முண்டி, அதாவது உலகின் ரட்சகர் என்று அழைக்கப்படுகிறது.கிறிஸ்டின் ஏல அறையில் இதுவரை எந்த கலைப்படைப்பும் பெறாத ஏலத்தொகையையும் மற்றும் ஆரவாரம் மற்றும் கைத்தட்டல்களை இந்த ஓவியம் பெற்றுள்ளது.
  • 1519ல் உயிரிழந்த லியோனார்டோ டாவின்சியின் 20க்கும் குறைவான ஓவியங்களே தற்போது மிஞ்சியுள்ளன.1505 ஆம் ஆண்டிற்கு பிறகு வரையப்பட்டதாக கருதப்படும் இந்த சல்வேட்டர் முண்டி மட்டும்தான் தனியாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா: டூ லெட் தமிழ்ப்படம் சிறந்த படமாக தேர்வு
  • மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் டூ லெட் என்று தமிழ்ப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • சிறந்த படமாக தேர்வான டூ லெட் தமிழ் திரைப்படத்தை செழியன் இயக்கியுள்ளார். 30 நாட்களில் வாடகைக்கு புது வீடு தேட வேண்டிய கட்டாயத்திலுள்ள குடும்பத்தை பற்றிய படம் டூ லெட் ஆகும்.
முதலிடத்தை பிடித்த தமிழகம்

  • உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக சகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
  • தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் கோவை அரசு மருத்தவமனைக்கு ஜெயிக்கா என்கிற திட்டத்தில் 280 கோடி நிதி வழங்கப்பட்டுஅதிநவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
  • தமிழகம் முழுவதும் ரூ.23 கோடியே 50 லட்சம் மதிப்பில் 837 செல் கவுண்டர்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ரத்தத்தில் உள்ள வெள்ளை, சிவப்பு அணுக்களை குறைந்த நேரத்தில் கணக்கிட முடியும்.
500 கிராமங்களுக்கு இலவச 'வை-பை' இணையதள வசதி - கர்நாடக அரசு அதிரடி

  • கர்நாடக மாநிலத்தில் 500 கிராமங்களுக்கு இலவச வை-பை இணையதள வசதியை நேற்று முதல் முறைப்படி முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு தொடங்கி உள்ளது.
  • மொத்தம் 2600 கிராமங்களுக்கு இலவச வை-பை இணையதள வசதி செய்துதரப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து இருந்த நிலையில், முதல்கட்டமாக 500 கிராமங்களுக்கு வழங்கியுள்ளது.
  • பாரத்நெட் திட்டத்தின் மூலம் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மூலம், 90 சதவீத கிராமங்களுக்கு இலவச இணையதள வை-பை வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமே உண்மையானது: தேர்தல் ஆணையம்

  • நிதிஷ்குமார் தலைமையில் இயங்கும் பிரிவே உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
  • ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் நிதிஷ் குமாருக்கே அதிக எம்எல்ஏக்கள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் அதற்கு அங்கீகாரம் அளிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், தாங்களே உண்மையான ஐக்கிய ஜனதா தளம் எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு சென்றார். 
  • இரு தரப்பும் தங்களுக்குள்ள ஆதரவு குறித்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருந்தன. இந்நிலையில் நிதிஷ்குமார் தலைமையில் இயங்கும் பிரிவே உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. 
இந்தியாவின் முதலீட்டு தர மதிப்பீட்டை உயர்த்தியது மூடிஸ் நிறுவனம்

  • சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ், கடத்த 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவின் இறையாண்மை பத்திரத் தரமதிப்பீட்டை அதிகரித்துள்ளது.Getty Images
  • கடந்த ஓராண்டில் இந்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கோள் காட்டியுள்ள இந்நிறுவனம், நீண்ட கால அடிப்படையில் அவை பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளது.
  • நிலையானது என்பதைக் குறிக்கும் 'BAA3' எனும் மதிப்பீட்டில் இருந்து இந்தியாவை, நேர்மைறையானது என்று குறிக்கும் 'BAA2' என்று தரம் உயர்த்தியுள்ளது. முதலீட்டுக்கான இரண்டாவது குறைவான தர மதிப்பீட்டிலிருந்து இந்தியா உயர்ந்து தற்போது, இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் நிலைக்கு நிகராக உள்ளது.
வீடுகளுக்கு டிஜிட்டல் முகவரி: மத்திய அரசு திட்டம்

  • இந்தியாவில் , அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு டிஜிட்டல் முகவரி திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 6 இலக்க குறியீடு'பைலட் திட்டம்' என்ற பெயரில் அஞ்சல் துறை சார்பில் மேப் மை இந்தியா என்ற தனியார் நிறுவனம் செயல்படுத்தும் திட்டத்தின்படி, நாடு முழுதும் உள்ள அசையா சொத்துகளுக்கு மின்னணு முறையில் விலாசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  • வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றிற்கு 3 இலக்க பின்கோடடை சேர்த்து, 6 இலக்க ஆல்பா நியமரிக் டிஜிட்டல் குறியீடு வழங்கப்படும். சோதனை முயற்சிஇவ்வாறு அசையா சொத்துகளும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டதும், அவற்றின் பெயர், உரிமையாளர் பெயர், வரி விவரங்கள், மின்சாரம், குடிநீர் மற்றும் காஸ் குறித்த விவரங்களும் அதனுடன் சேர்க்கப்படும். 
  • இதன் மூலம் அனைத்து விவரங்களும் ஒற்றை தளத்தில் கொண்டு வர முடியும். இந்த 6 இலக்க குறியீட்டை கூகுள் மேப்பில் பதிவிட்டால், அது செல்ல வேண்டிய இடத்தை தெளிவாக காட்டிவிடும். சோதனை முயற்சியாக டில்லி மற்றும் நொய்டாவின் சில இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

உணவு தானிய உற்பத்தியில் பீகார் சாதனை

  • உணவு தானிய உற்பத்தியில் பீகார் மாநிலம் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து இந்த மாநிலத்தின் வேளாண்துறை முதன்மை செயலாளர் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: 2016-17 ஆண்டில் மாநிலத்தின் ஒட்டு மொத்த உணவு தானிய உற்பத்தி 185.69 லட்சம் டன்கள். 
  • இதற்கு முன்பு 2012-13 ஆண்டில் 178.29 லட்சம் டன் உற்பத்தி பெரிய சாதனை அளவாக இருந்தது. இதை தற்போதைய உற்பத்தி முறியடித்துள்ளது. இதுபோல், மக்காச்சோளம் உற்பத்தி 38.46 லட்சம் டன்களாக உள்ளது. இது ஒரு ஹெக்டேருக்கு 53.35 குவிண்டால் உற்பத்தியாகியுள்ளது. 
  • இதற்கு முன்பு மக்காச்சோளம் 2012-13ல் 27.56 லட்சம் டன் உற்பத்தியாகி இருந்தது. ஒரு ஹெக்டேருக்கு 39.75 குவிண்டால் கிடைத்தது. ஒவ்வொரு இந்தியரின் உணவுத்தட்டிலும் பீகார் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற முதல்வர் நிதிஷ்குமாரின் இலக்கு 2022ல் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியர்களின் கருப்பு பணம்: தகவல் தர சுவிஸ் பார்லி., ஒப்புதல்
  • சுவிட்சர்லாந்து நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணம் குறித்த தகவல்களை தர சுவிஸ்.,பார்லி ஒப்புதல் வழங்கி உள்ளது.இந்தியர்களின் பெரும்பாலானோர் சுவிஸ்வங்கியில் கருப்பு பணம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் சுவிட்சர்லாந்து அரசு இந்திய அரசுடன் பரிமாறிக்கொண்டது.
  • இதற்காக இருநாடுகளிடையே போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு கடந்த ஜூலையில் தான் அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது.தொடர்ந்து அந்நாட்டின் பார்லி.,யின் கீழ்சபை கடந்த செப்டம்பா் மாதத்தில் தான் ஒப்புதல்வழங்கியது.
  • மேலும் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறுவதற்காக வரும் 27-ம் தேதி கூட உள்ள அந்நாட்டின் பார்லி.,மேல் சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 
  • 2019-ம் ஆண்டு முதல் அமல் இதன் மூலம் வரும் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில் கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாக கூறி இருந்தார்.
'ஸ்மார்ட் சிட்டி'களுக்கு உலக வங்கி கடன் தமிழகத்துக்கு கிடைக்கிறது ரூ.360 கோடி
  • 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், தேர்வான நகரங் களின் மேம்பாட்டுக்கு, 3,300 கோடி ரூபாய் வரை கடன் வழங்க, உலக வங்கி முன் வந்துள்ளது. இதில், தமிழகத்துக்கு, 360 கோடி ரூபாய் கிடைக்க உள்ளது.தமிழகத்தில், 12 மாநகராட்சிகள் உட்பட, நாடு முழுவதும், 100 நகரங்கள், 'ஸ்மார்ட் சிட்டி' களாக மேம்படுத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. 
  • பட்டியல் தயாரிப்பு மக்கள் தொகை திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட, பல்வேறு நிர்வாக திறன் அடிப்படை யில், இந்த நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, தமிழகத்தின், 10 நகரங்கள் உட்பட, நாடு முழுவதும், 90 நகரங்களின் பட்டியல் முறைப்படி அறிவிக்கப் பட்டுள்ளது.
  • மீதமுள்ள, 10 நகரங்களுக்கான பட்டியல் அறிவிக்கும் போது, தமிழகத்தின், இரு நகரங்களும் இடம் பெறும். இவ்வாறு பட்டியல் இடப்பட்டநகரங்களில், எந்தெந்த நகரங்கள் விரைவாக, சிறப்பு முதலீட்டு நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி உள்ளன என, ஆராயப்பட்டு வருகிறது. 
  • அதன் அடிப்படையில், புதிய தரவரிசை பட்டியலையும் மத்திய அரசு தயாரித்து வருகிறது. இதை, இறுதி செய்வதற்கான கூட்டம், டில்லியில், சமீபத்தில் நடந்தது. இதில், நகரங்களின் தர வரிசை இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
  • முதற்கட்ட பட்டியலில் இடம் பெறும் நகரங்களுக்கு, உலக வங்கி கடன் பெறுவதற்கான வழிவகை செய்யப்படும்.இதன்படி, முதல்கட்டமாக, உலகவங்கியிடம் இருந்து, 3,300 கோடி ரூபாய் கடன் கிடைக்க உள்ளது. 
  • இதில், எந்தெந்த நகரங்களுக்கு, எவ்வளவு தொகை ஒதுக்குவது என, மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் உயர் அதிகார குழு ஈடுபட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு 84% அதிகரிப்பு
  • ரொக்க பணப் பரிமாற்றத்தை ஒழித்து, டிஜிட்டல் பண பரிமாற்றத்துக்கு மக்களை மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பணப்பரிமாற்றம் பழக்கம் மக்களிடையே கணிசமாக அதிகரித்துள்ளது. 
  • இதில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளின் பயன்பாடு அதிகமாகி இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட கடந்தாண்டு நவம்பரில், இந்த கார்டுகளின் மூலம் ரூ.40 ஆயிரத்து 130 கோடி பரிமாற்றம் நடந்தது. 
  • ஆனால், இந்தாண்டு நவம்பரில் இதன் பயன்பாடு ரூ.74 ஆயிரத்து 090 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டை விட 84 சதவீதம் அதிகமாகும். ஐரோப்பியாவை சேர்ந்த 'வேர்ல்டுலைன்' என்ற ஆய்வு நிறுவனம், ரிசர்வ் வங்கியை மேற்கோள்காட்டி இந்த புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளது. 
  • பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் கடந்தாண்டு நவம்பரில் இந்த கார்டுகளை பயன்படுத்தி மக்கள் ரூ.20 கோடியே 30 லட்சம் பணப்பரிமாற்றம் செய்தனர். இந்தாண்டு நவம்பரில் இது 37 கோடியே 80 லட்சமாக உயர்ந்துள்ளது. 
  • கடந்தாண்டை காட்டிலும் இது 86 சதவீதம் அதிகமாகும் என்று இந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. மும்பையில் இந்த அமைப்பின் தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் சந்தானி நேற்று கூறுகையில், ''பணமதிப்பிழப்பு நடவடிக்கை முன்பு எவ்வளவுக்கு ரூபாய் நோட்டுகளின் புழக்கம் இருந்ததோ, அதே அளவுக்கு இப்போது ரூபாய் நோட்டுகளின் புழக்கம் தாராளமாக உள்ளது. 
  • இருந்தாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தங்களின் அன்றாட செலவுக்கு கூட பணமில்லா பரிமாற்றத்துக்கு மக்கள் மாறியுள்ளனர். கடைகளில் செய்யப்படும் சிறிய செலவுக்கு கூட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்'' என்றார்.
  • 'கடந்த 2014, ஆகஸ்டில் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்துக்கு கீழ் வங்கிகளில் சாதாரண மக்களும் வங்கி கணக்கை தொடங்கிய போதோ டெபிட் கார்டுகளின் பயன்பாடும் அதிகரிக்க தொடங்கி விட்டது. 2017, செப்டம்பர் நிலவரப்படி, நாடு முழுவதும் தற்போது 85 கோடியே 30 லட்சம் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. 
  • இதில், கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சமாகும். டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 81 கோடியே 98 லட்சமாகும். 2015ம் ஆண்டை விட டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை தற்போது சராசரியாக 22 சதவீதம் அதிகமாகி இருக்கிறது. 
  • கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 2016 முதல் இன்றைய நாள் வரை, 24 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் அளவு 31 சதவீதம் அதிகமாகி இருக்கிறது' என்றும் வேர்ல்டுலைன் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
  • அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஷிஃபாலி ரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 38 வயதான ஷிஃபாலி ரங்கநாதன் சியாட்டிலில் பொதுப்போக்குவரத்துக்கான கொள்கை வகுக்கும் கூட்டமைப்பின் செயல் இயக்குநராகப் பணியாற்றிவந்தார். தற்போது சியாட்டில் நகர துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • ஷிஃபாலியின் தந்தை பிரதீப் ரங்கநாதன். தயார் செரில். ஷிஃபாலி நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு கான்வென்ட் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
  • அதன்பின்னர் அண்ணா பல்லைக்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். 2001-ம் ஆண்டில் அமெரிக்கா சென்று அங்குள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார்.
  • படித்துக்கொண்டிருக்கும்போதே அவருக்கு அரசு வேலைக்கு அழைப்பு வந்துள்ளது. சியாட்டில் போக்குவரத்துக் கொள்கை வகுப்புக் கூட்டமைப்பில் இயக்குநராக வேலைக்குச் சேர்ந்த அவர் 2014-15-ம் ஆண்டில் செயல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், துணை மேயர் கௌரவம் அவரைத் தேடி வந்துள்ளது. 
திறந்தவெளி கழிப்பிடம்... இந்தியா முதலிடம்... ஆய்வில் அதிர்ச்சி
  • நாடு முழுவதும் 73 கோடி பேர், சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகள் கழிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது. கழிவறை வசதி இல்லாததால் 35 கோடி பெண்கள் பாதுகாப்பற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும்ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 'வாட்டர் எய்டு' எனப்படும், சர்வதேச தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
  • தனிநபர் சுகாதாரம் மற்றும் கழிவறை பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர்.
  • சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்போர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன்! வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்
  • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக சமீபத்தில் வெளியான திட்டங்கள் மற்றும் மொபைல் செயலிகள்
1. Operation Durga- ஹரியானா
2. Anti Romeo Squad- UP
3. Anti Majnoo Squad- மத்திய பிரதேசம்
4. I feel safe app- டெல்லி போலிஸ்
5. HIMMAT app- டெல்லி
6. Suraksha App- பெங்களூர்
7. அம்மாவின் அரண்- தமிழ்நாடு(ADMK)
8. Pink Hoysalas- பெங்களூர்
இராணுவப் போர் பயிற்சிகள்(Military)1. Ex Maitree- India & Thailand
2. Ex-Nomadic Elephant- India & Magnolia
3. Ex-Suriya Kiran- India&Nepal (Uthrakand)
4. Ex-Al Nagah-li- India & Oman (Himachael Pradesh)
5. Ex-KHANJAR-IV- India & Krgystan
6. Ex-EKUVERIN- India & Maldives
7. Ex-Sarvatra Prahar- இந்திய இராணுவத்தின் வருடாந்திர பயிற்சி(Nashik)
கப்பற்படை பயிற்சிகள்(Naval)1. Ex-AUSINDEX-17- India & Australia
2. Ex-Varuna- India & France
3. Ex-INDRA- India & Russia
4. Ex-KONKAN- India & UK
5. TROPEX-17- இந்திய கப்பற்படையின் வருடாந்திர பயிற்சி
விமானப்படை(Air Force)
1. Ex-BRIDGE-IV- India & Oman(Gujarat)
கடலோர காவற்படை (Coastal Guard)1. COPRAT- India & Indonesia
மற்ற நாடுகளின் பயிற்சிகள்
1. Ex- Sagarthmala Friendship 2017- India & Nepal(Military)
2. Ex-Foal Eagle War- US & South Korea
3. Ex-Grand Prophet- ஈரான் இராணுவத்தின் ஏவுகணை பயிற்சி
4. Ex-Aman-17- Pakistan
மனிதநேய உதவி மற்றும் பேரீடர் மீட்பு  பயிற்சிகள்(HADR Exercise)
1. Siam Bharth 17- India & Thailand- மனிதநேய உதவி மற்றும் பேரீடர் மீட்பு பயிற்சி
2. KARAVALI KARUNYA- இந்திய படைகளின் பேரீடர் மீட்பு பயிற்சி கர்நாடக மாநிலம் "Karvar" கப்பற்படை தளத்தில் நடைபெற்றது
பிற பயிற்சிகள்
1. தேசிய பேரீடர் மேலாண்மை முகமையின்  முதல் காட்டுத்தீயணைப்பு பயிற்சி "உத்ரகாண்ட்" மாநிலத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றம்..! வரைவு தொகுப்பு நூல்கள் வெளியீடு
  • தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.
  • தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க கடந்த மே 22-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த முனைவர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் 'கலைத்திட்ட வடிவமைப்புக் குழு' உருவாக்கப்பட்டது. 
  • 'தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017' உருவாக்கம் தொடர்பாக கடந்த ஜூலை 20 முதல் 22-ம் தேதி வரை 3 நாள்கள் பல்வேறு துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 நபர்கள் பங்குபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. 
  • கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கணிதம் மற்றும் அறிவியல், மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்கள், மதிப்பீட்டு முறை வடிவமைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய புலங்கள் சார்ந்து கலைத்திட்ட வடிவமைப்பு துணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது வெளியிடப்படும் பாடத்திட்டத்தை உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் படித்துப்பார்த்து, தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை www.tnscert.org என்ற இணையதளம் வழி பதிவேற்றம் செய்யலாம். 
  • மேலும், கடிதம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்படும் கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்படும். இதர மொழிப்பாடங்களுக்கான வரைவு பாடத்திட்டம் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் பெறப்பட்டு இன்னும் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யுனிசெப் அமைப்பின் நட்சத்திர அட்வகேட்டாக த்ரிஷா தேர்வு
  • குழந்தைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக யுனிசெப் அமைப்பின் நட்சத்திர அட்வகேட்டாக நடிகை த்ரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலை, இலக்கியம், நிர்வாக துறைகளில் உள்ள பிரபலங்களை யுனிசெப் அமைப்பு ஆண்டு தோறும் தேர்வு செய்து நட்சத்திர அட்வகேட் அந்தஸ்தை வழங்கி வருகிறது. 
  • இந்த ஆண்டு நடிகை த்ரிஷா அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளார். இதற்காக அவர் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். நடிகை த்ரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார்.
  • விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். அண்மையில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பரத்தில் த்ரிஷா நடித்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷாவின் சமூக ஈடுபாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் 'யுனிசெஃபின் பிரபல தூதர்' என்ற பதவியை அவருக்கு வழங்கியுள்ளனர்.
உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுர கடற்கரை கோவிலுக்கு இலவச அனுமதி
  • உலக பாரம்பரிய வாரத்தையொட்டி தொல்லியல் துறை பராமரிக்கும் புராதன சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.
  • உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை வரும் 25 ஆம் தேதி வரை இலவசமாக மக்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னமாக கடற்கரை கோயில், கலங்கரை விளக்கம், 5 ரதம் உள்ளிட்டவை காண ரூ.30 செலுத்த வேண்டும். ஆனால் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி இந்த புராதானச் சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதித்து தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி மீண்டும்தேர்வு
  • சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி தேர்வாகியுள்ளார். வெற்றி ஐ.சி.ஜே., எனப்படும் சர்வதேச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பதவிக்கு இந்தியா - பிரிட்டன் நாடுகளை சேர்ந்தவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 
  • இந்தியா சார்பில் நீதிபதி தல்வீர் பண்டாரியும், பிரிட்டன் சார்பில் கிறிஸ்டோபர் கிரீன் வுட்டும் களத்தில் உள்ளனர். சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட, ஐ.நா., பொது சபையிலும், பாதுகாப்பு குழுவிலும் அதிக உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற முடியும். 
  • முதல் சுற்று தேர்தலில் பண்டாரி வெற்றி பெற்றார். வாபஸ் இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமை அலுவலகத்தில் நேற்று(நவ.,20) நடந்த கடைசி கட்ட தேர்தலில், பண்டாரிக்கு ஆதரவாக பொது சபையில் 183 ஓட்டுகளும், பாதுகாப்பு சபையில் 15 ஓட்டுகளும் கிடைத்தன.
  • தொடர்ந்து பிரிட்டன் சார்பில் களமிறங்கிய கிறிஸ்டோபர் கிரீன் வுட்டை திரும்ப பெற்று கொள்வதாக அந்நாடு அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவின் தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • வாழ்த்து ஐ.நா.,வுக்கான பிரிட்டன் தூதர் மேட்யூ ரைக்ரோப்ட் கூறுகையில், ஐ.நா., பொது சபை மற்றும் பாதுகாப்பு சபையின் நேரத்தை தொடர்ந்து வீணடிப்பது தவறு என்ற முடிவுக்கு வந்துள்ளோம். நீதிபதி பண்டாரிக்கு வாழ்த்துகளை தெரிவிதது கொள்கிறோம். சர்வதேச அளவிலும், ஐ.நா.,விலும் இந்தியாவுடன் இணைந்து பிரிட்டன் பணியாற்றும்.
இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்த இந்தியா..!
  • 3,250 கோடி ரூபாய் செலவில், இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்துசெய்துள்ளது.
  • இந்திய ராணுவத்துக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க, கடந்த 2014-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தைப் பெற இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ரபேல் நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த ரேதியான் லாக்கீட் மார்ட்டின் நிறுவனமும் போட்டியிட்டன. 
  • ரபேல் நிறுவனம் தயாரிக்கும் 'ஸ்பைக்' ஏவுகணைகள், உலகம் முழுவதும் 26 நாடுகளின் ராணுவங்களால் பயன்படுத்தப்படுவதால், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தை சமாளிக்க 'ஸ்பைக்' ஏவுகணைகளே உகந்தவை என்று இந்திய ராணுவம் கருதியது. இவை, இரவிலும் பகலிலும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகள் ஆகும்.
  • எனவே, ரபேல் நிறுவனத்திடமே சுமார் 8 ஆயிரம் 'ஸ்பைக்' ஏவுகணைகளையும், 300 லாஞ்சர்களையும் வாங்க முடிவுசெய்யப்பட்டது. இது, 3,250 கோடி ரூபாய் மதிப்புக்கு திட்டமிடப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்தப் பேரத்தை ராணுவ அமைச்சகம் நேற்று ரத்து செய்தது. 
  • அதற்குப் பதிலாக, உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் (டி.ஆர்.டி.ஓ.) டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கி வழங்கும் பொறுப்பை ஒப்படைத்தது.
  • இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள், இந்த ஏவுகணைகளை வடிவமைத்து தருமாறு கேட்டுக்கொண்டது. இந்த பேரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், 'மேக் இன் இந்தியா' திட்டப்படி, ஏவுகணைத் தொழில்நுட்பங்களை இந்தியாவிடம் பகிர்ந்துகொள்ளுமாறு இந்தியா அறிவுறுத்தியதை இஸ்ரேல் நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
  • பல ஆண்டுகளாக, எந்த இந்தியப் பிரதமரும் இஸ்ரேலுக்குச் செல்லாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூலை மாதம் அங்கு சென்றார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலான உறவு வளர்ந்துவந்தது. இந்தச் சூழ்நிலையில், ஏவுகணைப் பேரம் ரத்துசெய்யப்பட்டதால், இருநாட்டு உறவு பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில், லக்னோவில் மசூதி: வக்பு வாரியம் யோசனை

  • அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என மத்திய ஷியா வக்பு வாரியம் யோசனை தெரிவித்துள்ளது.
  • உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. 
  • இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்தது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து இந்த வழக்கில் அடுத்த நகர்வாக, ஷியா வக்பு வாரியம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளும் யோசனையை தெரிவித்துள்ளது.
  • இது தொடர்பாக, ஷியா முஸ்லிம் வக்பு வாரிய தலைவர் சையத் வாஷிம் ரிஸ்வி கூறும்போது, 'பல்வேறு தரப்பிடமும் ஆலோசித்த பின் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டிக்கொள்ளலாம், பாபர் மசூதியை, லக்னோவில் கட்ட வேண்டும் என்ற திட்டத்துக்கு தயாராகி உள்ளோம். அமைதி மற்றும் சகோதரத்தை உறுதிசெய்யும் தீர்வாக இந்த திட்டம் அமையும் என்று நம்புகிறோம்' என கூறிஉள்ளார்.
ஆராய்ச்சி மையங்களை மூட மத்திய வேளாண் அமைச்சகம் திட்டம்: 103 மையங்களை 60 ஆக குறைக்க வாய்ப்பு
  • தமிழகத்தில் 3 வேளாண் ஆராய்ச்சி மையங்கள் மூட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இறால் ஆராய்ச்சி மையம் முதலில் மூடப்படும் சூழல் உருவாயுள்ளது. ஆராய்ச்சி மையங்கள் மூடுவது குறித்து வரும் 27ம் தேதி முடிவெடுக்கிறது மத்திய வேளாண் அமைச்சகம். 
  • கோவை சர்க்கரை ஆராய்ச்சி மையத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. நாடு முழுவதும் 103 ஆராய்ச்சி மையங்களை வேளாண்துறை நடத்தி வருகிறது. 103 மையங்களை 60 ஆக குறைக்க வேளாண்துறை பரிந்துரை செய்துள்ளதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள்: தமிழக அரசு முடிவு
  • தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை சம்பவம் நீண்ட கால பிரச்னையாக உள்ளது. அத்துடன் சமீபத்தில் மணல் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டதால், ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. 
  • இந்நிலையில் மணல் கடத்தலை தடுப்பது மற்றும் ஆன்லைன் மணல் விற்பனையின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
  • சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
  • அதில், கரூரில் 8 குவாரிகள், நாகையில் 4 குவாரிகள் என மொத்தம் 70 குவாரிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மணல் தட்டுப்பாட்டைப் போக்குவது தொடர்பாக அப்போது தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ. மரணம் குறித்த வழக்கை விசாரிக்க கூடுதல் அதிகாரம் வேண்டும். அரசுக்கு கடிதம் எழுதிய நீதிபதி ஆறுமுகசாமி
  • ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன், நாளை தன் பணியை தொடங்க உள்ள நிலையில் உயர் பதவியில் இருப்போரையும் விசாரிக்க வசதியாக, கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
  • இதைத் தொடர்ந்து விசாரணை கமிஷன் சார்பில், 'ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விபரங்கள் தெரிந்தோர், உறுதிமொழி பத்திர வடிவில், நவம்பர் மாதம் ., 22க்கு முன் அளிக்கலாம் என, விசாரணை கமிஷன் சார்பில் அறிவிக்கப்பட்டது.
  • இதுவரை விசாரணை கமிஷனுக்கு, 70 கடிதங்கள் வந்துள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆனுார் ஜெகதீசன், ஜெ., அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி ஒருவர் உட்பட, பலர்பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
  • இந்நிலையில் நாளை முதல் ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை தொடங்க உள்ள நிலையில் , லண்டனிலிருந்து வந்த டாக்டர் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர் என, அனைவரையும் விசாரிக்க வேண்டி உள்ளது.
  • இதையடுத்து உயர் அதிகாரிகளையும் விசாரிக்கும் வகையில் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கக் கோரி, விசாரணை கமிஷன் சார்பில், அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது: மத்திய உள்துறை அமைச்சகம்
  • விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 
  • விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து புதுச்சேரி அமைச்சரவை அனுப்பிய கோப்பை நிராகரித்து மத்திய உள்துறைக்கு கிரண்பேடி கடிதம் அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்தலாக்கை தடுக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
  • முத்தலாக்கை தடுக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 முறை தலாக் கூறுவதை தடுக்கும் புதிய சட்டம் இயற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த சட்டத்தை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்த தொடரில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. 
அயோத்தி பிரச்னைக்கு தீர்வு... சமரச முடிவு... ஷியா வக்பு வாரியம் அறிவிப்பு
  • 'அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அயோத்தியில் ராமர் கோவிலும், லக்னோவில் மசூதியும் கட்டலாம்' என்று உ.பி., ஷியா வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய தொழில்நுட்பத்துறையில் அதிக அளவில் பணி புரியும் பெண்கள்
  • இந்தியாவில் தொழில்நுட்பட்துறையில் அதிக அளவில் பெண்கள் பனி புரிவதாக தகவல்கள் வந்துள்ளன.
  • இந்த கணக்கெடுக்கில், "உலகம் முழுவதும் எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவில் தொழில்நுட்பத்துறையில் பெண்கள் அதிகம் பணி புரிகின்றனர். தொழில்நுட்பத்துறையில் பணி புரியும் பெண்கள் இந்தியாவில் 34% உள்ளனர். 
  • அதாவது இந்தியாவில் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் 39 லட்சம் ஊழியர்களில் 13 லட்சம் பேர் பெண்கள் ஆவார்கள். அடுத்தபடியாக அமெரிக்காவில் 30% உள்ளனர்.
ஜிம்பாப்வே ராணுவம் அதிரடி : அதிபர் முகாபே ராஜினாமா
  • அதிபர் பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் பார்லி.,யில் துவங்கிய நிலையில், தென் ஆப்ரிக்க நாடான, ஜிம்பாப்வேயின் அதிபர் பதவியில் இருந்து, ராபர்ட் முகாபே, 93, நேற்றுராஜினாமா செய்தார்.
  • ஜிம்பாப்வேயின் பிரதமராக, 1980ல் பொறுப்பேற்ற முகாபே, பின், அதிபரானார். 37 ஆண்டு களாக அவர் அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார்.நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஊழலை எதிர்த்து, பல மாதங்களாக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Abbreviations Govt Schemes and Yojanas
1. UDAY : Ujwal Discom Assurance Yojana

2. PMMY : Pradhan Mantri Mudra Yojana

3. PMJDY: Pradhan Mantri Jan Dhan Yojana

4. PMJJBY : Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana

5. PMSBY : Pradhan Mantri Suraksha Bima Yojana

6. APY : Atal Pension Yojana

7. KVP : Kisan Vikas Patra

8. SBA : Swachh Bharat Abhiyan

9. PMSAGY : Pradhan Mantri Sansad Adarsh Gram Yojana

10. AMRUT : Atal Mission For Rejuvenation & Urban Transformation
11. NGM : Namami Ganga Yojana
12. HRIDAY : Heritage City Development & Augmentation Yojana
13. MUDRA : Micro Units Development & Refinance Agency
14. SETU : Self Employment & Talent Utilization
15. NPS : National Pension Scheme
16. PMKVY : Pradhan Mantri Kaushal Vikas Yojana
17. PMKSY : Pradhan Mantri Krishi Sinchai Yojana
18. BBBP YOJANA : Beti Bachao, Beti Padhao Yojana
19. SSY : Sukanya Samriddhi Yojana
20. PMFBY : Pradhan Mantri Fasal Bima Yojana
21. PMGSY : Pradhan Mantri Gram Sadak Yojana
22. PMUY: Pradhan Mantri Ujjwala Yojana
22. DGK : DailyGKZone Telegram Channel
23. PMGKY : Pradhan Mantri Garib Kalyan Yojana
24. DICGC : Deposit Insurance and Credit Guarantee Corporation
25. TEC INDIA : Transform Energise And Clean India
26. PACS : Primary Agriculture Credit Societies
27. CPI : Consumer Price Index
28. WPI : Wholesale Price Index
29. CAD : Current Account Deficit
30. KVKs : Krishi Vigyan Kendras
31. MSMEs : Micro, Small and Medium Enterprises
32. CBS : Core Banking Solution
33. CORE : Centralized Online Real Time Exchange
34. LTIG : Long Term Irrigation Fund
35. MIF : Micro Irrigation Fund
36. NAM : National Agricultural Market
37. DIDF : Dairy Processing and Infrastructure Development Fund
38. MGNREGA : Mahatma Gandhi National Rural Employment Guarantee Act
39. PMAY : Pradhan Mantri Awaas Yojana
40. NRDWP : National Rural Drinking Water Programme
41. SWAYAM : Study Webs of Active Learning for Young Aspiring Minds
42. PMKK : Pradhan Mantri Kaushal Kendra
43. SANKALP : Skill Acquisition and Knowledge Awareness For Livelihood Promotion Programme
44. STRIVE : Skill Strengthening for Industrial Value Enhancement
45. MSK : Mahila Shakti Kendra
46. NHB : NATIONAL HOUSING BANK
47. RRSK : Rashtriya Rail Sanraksha Kosh
48. M-SIPS : Modified Special Incentive Package Scheme
49. EDF : Electronic Development Fund
50. TIES : Trade Infrastructure for Export Scheme
2018-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக கொண்டாட ஐ.நா.,வுக்கு மத்திய அரசு கடிதம்
  • 2018-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக கொண்டாட ஐநாவுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறுதானியங்கள் பெரிதும் பயன்படுகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
  • மேலும் சிறுதானியங்கள் ஆண்டாக கொண்டாடினால் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்காக மகிளா சக்தி கேந்திரா என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக மகிளா சக்தி கேந்திரா என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி முன்னேற்றத்திற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15-வது நிதி ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அருண்ஜெட்லி
  • 15-வது நிதி ஆணையத்தை அமைக்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
சுகோய் போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாகப் பாய்ந்தது பிரமோஸ்!
  • சுகோய் விமானத்திலிருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவும் சோதனை வெற்றி பெற்றுள்ளது.
  • இந்திய விமானப்படையில் உள்ள சுகோய்-30 எம்.கே.ஐ ரக போர் விமானம் அதிக எடைகொண்ட ஏவுகணைகளைச் சுமந்து சென்று ஏவும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டன. பிரமோஸ் ஏவுகணை 2.5 டன் எடை கொண்டது. 
  • சுகோய் ரக போர் விமானத்திலிருந்து பிரமோஸ் ஏவுகணையை ஏவும் சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. சுகோய் விமானத்தில் பாய்ந்த பிரமோஸ் ஏவுகணை வங்காள விரிகுடா கடலில் இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது. இதையடுத்து, பிரமோஸ் ஏவுகணை முப்படைகளிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே தரைப்படை, கப்பற்படையில் பிரமோஸ் ஏவுகணை இடம்பெற்றுள்ளது.
  • இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சுகோய் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரித்துள்ளது'' எனக் கூறியுள்ளது.
  • முப்படைகளிலும் பிரமோஸ் ஏவுகணை பயன்பாட்டுக்கு வந்துள்ளது மைல்கல் சாதனையாகும்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி தொடங்கும்.. மத்திய அரசு அறிவிப்பு
  • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு தற்போது குடியரசு தலைவர் பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
  • எல்லாவருடமும் சரியாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். இதுவரை வருடம் தவறாமல் இந்த கூட்டத்தொடர் சரியாக நடந்து வந்து இருக்கிறது.
  • இந்த ஆண்டு நடக்க வேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் குறித்த எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடமால் காலம் தாழ்த்தி வந்தது. பாஜகவின் இந்த காலதாமதத்திற்கு குஜராத் தேர்தலும் ஒரு காரணம் எனப்பட்டது.
  • இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்த்தப்பட்டது. அதில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சரியாக டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்கும் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
  • டிசம்பர் 15-ம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர் ஜனவரி 5-ம் தேதி வரை நடக்கும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவு தற்போது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும் முறையில் புதிய மாற்றம்!
  • தமிழக அரசின் பொது விநியோகத் துறையின் கீழ் வரும் ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும் முறையில் புதிய மாற்றம் கொண்டு வந்து தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • தமிழக அரசின் நுகர்பொருள் வாணிகத் துறைக்கு இந்திய உணவுக்கு கழகத்திடம் இருந்து அரிசியானது 70:30 என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அதாவது 70% புழுங்கல் அரிசியும், 30% பச்சரிசியும் வழங்கப்படுகிறது. எனவே இதே விகிதத்திலேயே நுகர்வோருக்கும் வழங்குமாறு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
  • இதன் மூலம் இனி குடும்ப அட்டையின் மூலம் 20 கிலோ அரிசி பெறும் ஒரு வாடிக்கையாளருக்கு அதில் 14 கிலோ புழுங்கல் அரிசியும், 6 கிலோ பச்சரிசியும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தூய்மை இந்தியா திட்டம்: மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலுக்கு மேலும் ரூ. 10 கோடி
  • தேசிய அளவில் தூய்மை இந்தியா திட்டத்தில் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் வரும் 2019 ஆம் ஆண்டு வரை இடம்பெறும் வகையில் திட்டப்பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரூ.10 கோடிக்கு திருக்கோயில் பகுதியை அழகுபடுத்தும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. 
  • தேசிய அளவில் மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை தூய்மை இந்தியா திட்ட புனிதத் தலங்கள் மேம்பாட்டுத் திட்டப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு கடந்த 2016-17 ஆம் ஆண்டுக்கான தூய்மை இந்தியா புனிதத் தல விருதும் வழங்கப்பட்டுள்ளது. 
  • புனிதத் தலத்துக்கான தூய்மை இந்தியா விருதுக்கு சிறப்பு நிதிகள் வழங்கப்படும் என்பதால் அதன் மூலம் திருக்கோயில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்துதரப்படும். 
  • ஏற்கெனவே மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலைச் சுற்றி பாலித்தீன் பைகளுக்குத் தடை, நவீன குப்பைத் தொட்டிகள், ரயில்வே நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக வரும் வகையில் பாரம்பரிய நடை பாதை, நவீன மின்னணு கழிப்பறைகள் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 
  • இந்த நிலையில் தூய்மை இந்தியா திட்ட ஆண்டு ஆய்வுக்கூட்டம் புதுதில்லியில் செவ்வாய், புதன்கிழமைகளில் (நவ.21, 22) நடைபெற்றன. இதில் மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் மற்றும் நகர்நல உதவி அலுவலர் டாக்டர் கே.பார்த்திபன் ஆகியோர் பங்கேற்றனர்.
  • தூய்மை இந்தியா திட்டத்தின் படி மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் 2016-17 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டப் பணிகள் குறித்து மத்திய குடிநீர் மற்றும் தூய்மைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதனடிப்படையில் வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் வரை திருக்கோயிலில் தூய்மை இந்தியா திட்ட புனிதத் தல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள சிறப்பு நிதி அளிக்க முடிவாகியுள்ளது. 
  • சிறப்பு நிதி மூலம் ரூ.10 கோடியில் திருக்கோயில் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளை அழகுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன.
  • திருக்கோயிலைச் சுற்றிய சித்திரை வீதிகளில் ஏற்கெனவே உள்ள பூங்காவை மேலும் அழகுபடுத்துவது, கிழக்குப்பகுதியில் உள்ள மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் பூங்காவில் நுழைவு வாயில் அமைப்பது, அப்பகுதியில் பெண் பக்தர்களுக்கு ஆடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதிகளை செய்துதருவது ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
  • திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக நடமாடும் மருத்துவமனை வசதியை ஏற்படுத்தவும் தூய்மை இந்தியா திட்டத்தில் நிதி அளிக்கப்படுகிறது. சிறப்பு நிதி திட்டத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியில் ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்தப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. 
ஆதார் இணைத்தால் போதும்'டிஜிட்டல்' விமான பயணம் அடுத்த ஆண்டு நடைமுறை
  • விமான டிக்கெட்டுடன் ஆதார் இணைத்து எளிதான நடைமுறையுடன் விமான பயணம் மேற்கொள்ள புதிய திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. 
  • மத்திய அரசு 'டிஜிட்டல் பயணம்' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன்படி விமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே ஆதார் எண் இணைக்க வேண்டும். டிக்கெட்டில் உள்ள பார்கோடில் இந்த தகவல்கள் அனைத்தும் இடம்பெறும். 
  • இதன்பிறகு பயண நாளில் விமான நிலையத்துக்கு செல்லும்போது பயணிகளிடம் வழக்கமான பரிசோதனை நடைமுறைகள் இருக்காது. பயணிகளுக்கென பிரத்யேகமாக மின்னணு நுழைவு வாயில் இருக்கும். 
  • இதில் பார்கோடை ஸ்கேன் செய்து, பயோ மெட்ரிக் முறையில் தங்கள் அடையாளத்தை பயணிகள் பதிவு செய்ய வேண்டும். இதன்பிறகு நுழைவாயில் கதவு தானாக திறந்து கொள்ளும். 
  • இது பயணத்தை சுலமாக்குவதோடு, விரைவான நடைமுறையாகவும் இருக்கும். பரிசோதனை முயற்சியாக இந்த திட்டம் கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் விஜயவாடாவில் மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்பிறகு நாடு முழுவதும் விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
வருமான வரி சட்டம் திருத்த குழு அமைப்பு
  • ஐம்பது ஆண்டு பழமையான வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இதில் மத்திய நேரடி வரிகள் ஆணைய உறப்பினர் அர்பிந்த் மோடி ஒருங்கிணைப்பாளராக இருப்பார். 
  • இவருடன் சார்டர்ட் அக்கவுன்டன்ட் கிரிஷ் அஹூஜா, ராஜீவ் மெமானி, மான்சி கேடியோ உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள். முதன்மை பொருளாதார ஆலோசகர் அர்விந்த சுப்பிரமணியன் ஆலோசனை வழங்குவார். இந்த குழு தனது அறிக்கையை 6 மாதங்களில் சமர்ப்பிக்க உள்ளது.
திவால் சட்டத்திருத்தம்; அவசர சட்டத்திற்கு ஒப்புதல்
  • ‘‘திவால் சட்டத் திருத்தம் தொடர்பான அவசர சட்டத்திற்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது,’’ என, மத்தியநிதியமைச் சர், அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.வாராக் கடனுக்காக, பலநிறுவ னங்கள் மீது, திவால் சட்டத்தில் நடவடிக்கை எடுக் கப் ப டு கிறது. 
  • இந் நி று வ னங் கள் விற் ப னைக்கு வரும் போது, வாங் கு வோர் குறித்து, திவால் சட் டத் தில் எந்த வரை ய றை யும் செய் யப் ப ட வில்லை. இத னால், திவால் நிறு வ னத்தை, அதன் நிறு வ னரே, குறைந்த விலை யில் மீண் டும் வாங் கும் சாத் தி யம் உள் ளது. இதை தடுக்க, ‘திவால் சட் டத் தில் திருத் தம் செய்ய வேண் டும்’ என, 14 உறுப் பி னர் கள் கொண்ட குழு, மத் திய அர சுக்கு பரிந் து ரைத்து உள் ளது.
  • இதை யேற்று, திவால் நிறு வ னத்தை, பணம் இருந் தும் வேண் டு மேன்றே கடனை திரும் பச் செலுத் தா மல் இருந்த நிறு வ னர் கள், மோசடி வழக் கில் சிக் கிய நிறு வ னர் கள் ஆகி யோர் வாங்க தடை செய் யும் விதி, திவால் சட் டத் தில் சேர்க் கப் பட்டு உள் ளது. ‘திவால் சட் டத் தி ருத் தம் தொடர் பான அவ சர சட் டத் திற்கு, பார் லி மென் டின் குளிர் கால கூட் டத் தொ ட ரில் ஒப் பு தல் பெறப் படும்’ என, அருண் ஜெட்லி தெரி வித் தார்.
தோல், காலணி துறை வளர்ச்சிக்கு ரூ.2,600 கோடி ஊக்க திட்டம்
  • மத் திய அரசு, தோல் மற் றும் காலணி துறைக்கு, 2,600 கோடி ரூபாய் மதிப் பி லான ஊக் கத் திட் டத்தை, விரை வில் அறி விக்க உள் ளது. ஜவு ளித் துறையை தொடர்ந்து, தோல் மற் றும் காலணி துறைக் கும், 2,600 கோடி ரூபாய்க்கு ஊக் கத் திட் டம் தயா ரிக் கப் பட்டு உள் ளது. 
  • வரி மற் றும் வரி சாரா சலு கை களை கொண் ட தாக, இந்த திட் டம் இருக் கும். தோல் மற் றும் காலணி துறை, ஏரா ள மான வேலை வாய்ப் பு களை உரு வாக் கக் கூடி யது. இத் துறை, ஒரு கோடி ரூபாய் முத லீட் டில், 250 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வல் லது. தற் போது, இத் து றை யில், 30 லட் சம் பேர் நேரடி வேலை வாய்ப்பை பெற் றுள் ள னர்.இந் திய தோல் மற் றும் கால ணி கள் ஏற் று ம திக்கு, சீனா போட் டி யாக விளங் கு கிறது.
  • அக் டோ ப ரில், தோல் மற் றும் தோல் பொருட் கள் ஏற் று மதி, 9 சத வீ தம் சரி வ டைந்து, 37 கோடி டால ராக குறைந் துள் ளது. இந் நி லை யில், மத் திய அர சின் ஊக் கத் திட் டம் அம லுக்கு வந் தால், தோல் மற் றும் காலணி துறை யில் வேலை வாய்ப்பு பெரு கும்; ஏற் று ம தி யும் அதி க ரிக் கும். இவ் வாறு அவர் கூறி னார்.
ஒரே பைக்கில் 58 பேர் பயணம்: இந்திய ராணுவர்கள் சாதனை
  • ஒரு பைக்கில் எத்தனை பேர் செல்லலாம். இரண்டு அல்லது மூன்று நபர்கள் செல்வது வழக்கம். மிக அரிதாக சில சமயம் நான்கு நபர்களும் செல்வதுண்டு. இந்த நிலையில் ஒரே பைக்கில் 58 பேர் பயணம் செய்து ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 
  • இந்திய ராணுவத்தின் சரக்கு பிரிவை கையாளும் டொர்னேடோஸ் என்ற குழுவினர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர். பைக்கில் பயணம் செய்யும் வீரர்களின் எடையை சரிசமமாக பரவ செய்து மூன்று பேர் இணைந்து இந்த பைக்கை ஓட்டியுள்ளனர்.
  • ஏற்கனவே 19 வகையான சாதனையை கையி வைத்துள்ள இந்த டொர்னேடோஸ் குழுவினர்களின் 20வது சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் உறுப்பு தான பதிவுக்கு 'மொபைல் ஆப்' அறிமுகம்
  • உடல் உறுப்பு தானம் செய்வதற்கான, புதிய, 'மொபைல் ஆப்' இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில், உடல் உறுப்பு தான இயக்கம், 2008ல் துவக்கப்பட்டது. 
  • இதுவரை, 5,940 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்; 1,058 பேர் உடல் உறுப்புகள் தானம் தர, பதிவு செய்துள்ளனர். தேசிய அளவில், உடல் உறுப்புகள் தானம் தருவதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.
  • இந்நிலையில், உடல் உறுப்புகள் தானம் செய்ய விரும்புவோர், பதிவு செய்வதற்கு, புதிய மொபைல் ஆப், இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்பு தேவைப்படுவோரும், பதிவு செய்வதற்காக, www.transtan.org புதிய இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றை, முதல்வர் பழனிசாமி இன்று, அறிமுகம் செய்கிறார்.
தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு 18வது இடம்: பிரிக்ஸ் தேர்வு
  • சர்வதேசத் தரத்திலான பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு 18வது இடம் கிடைத்துள்ளது என பிரிக்ஸ் வெளியிட்டுள்ளது.
  • இந்தியா, சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் நடத்திய ஆய்வில், 300 பல்கலைக்கழகங்களை சர்வதேசத் தரத்திலானவை என்று தேர்வு செய்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் சென்னை ஐஐடி 18வது இடத்திலும், தில்லி ஐஐடி 15வது இடத்திலும், பெங்களூர் ஐஐடி 10வது இடத்திலும் உள்ளன. சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்விநிறுவனங்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
  • இதனைத் தெரிவித்த பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் வி.எஸ்.சவுகான், முந்தைய நடைமுறைகளை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 
  • மேலும் பல்கலைக்கழகங்களால் நாட்டின் பெருமையை உயர்த்த முடியும் என்பதை அரசும் உணர்ந்திருப்பதாக சவுகான் தெரிவித்தார்.
இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் ஆகா சுப்காங்கி ஸ்வரூப் நியமிப்பு
  • உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுப்காங்கி ஸ்வரூப், கடல் மார்க்கம் விமானத்தில் பறக்க உள்ளார். 
  • கடற்படை ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் பிரிவில் முதல் முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் சுப்காங்கி ஸ்வரூப், ஐதராபாத்தில் உள்ள விமானப் படை பயிற்சி அகாடமிக்கு அனுப்பப்படுவார். 
டெல்லியில் 61வது தேசிய துப்பாக்கி சூடுதல் போட்டி: 4 தங்கப் பதக்கங்களை வென்றார் ஷர்துல் விகான்
  • டெல்லியில் 61வது தேசிய துப்பாக்கி சூடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டபுள் டிராப் பிரிவில் 14 வயது சிறுவனான ஷர்துல் விகான் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். 
  • சீனியர் மற்றும் ஜூனியர் தனி நபர் பிரிவு போட்டியில் ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை: இந்திய வீராங்கனைகளின் அசத்தல் ஆட்டத்தால் இந்தியாவுக்கு ஐந்து பதக்கம் உறுதி...
  • ஐந்தாவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் அன்குஷிதா போரோ, சசி சோப்ரா, ஜோதி குலியா, நேஹா யாதவ் மற்றும் அனுபமா ஆகிய ஐந்து பேருக்குஅரையிறுதிக்கு முன்னேறியதால் பதக்கம் உறுதி செய்யப்பட்டது.
  • ஐந்தாவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி, சைபர் ஸ்பேஸ் -உலகளாவிய மாநாட்டில் இன்று பங்கேற்பு!
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று, டெல்லியில் சைபர்ஸ்பேஸ்( ஜிசிசிஎஸ்) அமைப்பு நிறுவனத்தின் உலகளாவிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். 
  • விண்வெளி உலகின் மிகப்பெரிய மாநாட்டில், உலகளாவிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒன்றாகும். இந்தியாவில் சைபர்ஸ்பேஸ் உலகளாவிய மாநாட்டின் ஐந்தாவது பதிப்பில் கலந்துகொள்வது, வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும்.
இந்தியாவின் முதல்'டிஜிட்டல்' துணை மின் நிலையம்; கோவையில்
  • கோவையில் அமைய உள்ள, இந்தியாவின் முதல், 'டிஜிட்டல்' துணை மின் நிலையத்திற்கான இடத்தை, மின் வாரிய அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
  • மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், 400 கிலோ வோல்ட், 230, 110, 33/11 கி.வோ., திறனுள்ள துணை மின் நிலையங் களுக்கு எடுத்து வரப்பட்டு, உயரழுத்தம் குறைக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறை அதில், 400, 230 கி.வோ., துணை மின் நிலைய ங்கள், அதிக ஏக்கரில் அமைக்கப்படுகின்றன. 
  • கோவை மாவட்டம், செல்வ புரத்தில், 230 கி.வோ.,திறனில், டிஜிட்டல் துணை மின் நிலையம் அமைக்கப்பட இருக்கி றது.
உயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைப்பு - 6 முதல் 53 சதவீதம் வரை குறைத்து மத்திய அரசு அதிரடி
  • இதயநோய், புற்று நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் உட்பட உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலையை , 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • அதில், உயிர் காக்கும் 36 வகை மருந்துகளின் அதிகபட்ச விலையை குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. அதுபோல், உயிர் காக்கும் 15 மருந்துகளின் விலை உச்சவரம்பு குறைக்கப்பட்டது. 
2018 முதல் 'அவசர கால பொத்தானுடன்' மொபைல் போன்: மத்திய அரசு அதிரடி உத்தரவு
  • 2018 முதல் அனைத்து வகையான மொபைல் போன்களிலும் அவசர கால பொத்தானுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.
  • அதையொட்டி நேற்று மத்திய தொலைதொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த ஆண்டு முதல் அனைத்துவகையான மொபைல் போனிலும் ஜிபிஎஸ் வசதியுடன் அவசர கால பட்டன் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
  • ஆபத்து காலத்தில் உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் 'அவசர உதவி பட்டன்' (பேனிக் பட்டன்) வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா - அனைத்து அரசு சேவைகளை பெற புதிய செயலி அறிமுகம்
  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் புதிய அங்கமாக உமாங் (Umang) என்ற செயலியை உலகளாவிய சைபர் ஸ்பேஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார், அனைத்து அரசு சலுகைகள் மற்றும் சேவைகளையும் இந்த உமாங் செயலி முலம் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த புதிய உமாங் செயலியில் 12 மொழிகள் பயன்படுத்த முடியும், அதன்பின்பு மத்திய மாநில மற்றும் அரசு நிறுவனங்களின் சேவைகளை இயக்கும் வசதியுடன் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.
உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி; ஆதார் கட்டாயமாக்கியது அரசு
  • தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளிடம், சாதாரண கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிப்பவர்கள், ஆதார் எண்ணை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • நகரமைப்பு சட்டப்படி, கட்டுமான திட்டங் களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம்,சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி.,க்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில், 4,000 சதுர அடி வரையிலான குடியிருப்புகள், 2,000 சதுர அடி வரையிலான வணிக கட்டடங் களுக்கு அனுமதி அளிக்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர்!
  • உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசாஸ், முதலிடம் பிடித்தார். இத்தனைக்கும் இது ஒரே நாளில் நடந்ததென்றால் நம்பமுடிகிறதா...!
  • இந்நிலையில், ஆன்லைன் ஷாப்பிங்கில் உலகளவில் முதலிடத்தில் இருக்கும் பிரபலமான அமேசான் நிறுவனம் பல சலுகைகளை இந்த பிளாக் ஃப்ரைடே தினத்தில் அறிவித்தது. இது வாடிக்கையாளர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.
  • இதுவே, அமேசான் நிறுவனர் ஜெஃப், உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற வைத்தது. அதுமட்டுமல்லாமல் அவரது மொத்த சொத்து மதிப்பும் 100 பில்லியன் டாலர்கள் உயரக் காரணமாக அமைந்தது.
  • கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸை (90 பில்லியன் டாலர்கள்) விட அமேசான் நிறுவனர் ஜெஃப், 1 சதவீத வளர்ச்சியுடன் (90.6 பில்லியன் டாலர்கள்) முன்னிலைப் பெற்றார்.
  • இருப்பினும் இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டி பரபரப்பாகவே இருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலையின் காரணமாக அமேசான் நிறுவனர் ஜெஃப், உலக பணக்காரர்கள் பட்டியலில் 100 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தை உறுதி செய்தார்.
அந்நிய நேரடி முதலீடு 17 சதவீதம் அதிகரிப்பு
  • நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 17 சதவீதம் அதிகரித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • அந்நிய நேரடி முதலீட்டு விவகாரங்களை கையாண்டு வரும் தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
  • நடப்பு 2017}18 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கால அளவில் இந்தியாவில் 2,535 கோடி டாலர் (சுமார் ரூ.1.65 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட 2,162 கோடி டாலருடன் (ரூ.1.40 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகமாகும். 
  • கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு செப்டம்பர் வரையிலுமாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டு அளவு 51,810 கோடி டாலர் (சுமார் ரூ.33.68 லட்சம் கோடி) என்ற அளவில் உள்ளது.
  • இந்தியாவின் சேவைத் துறை, தொலைத்தொடர்புத் துறை, வர்த்தகத் துறை, கணினி மென்பொருள்}வன்பொருள் துறை மற்றும் மோட்டார் வாகனத் துறை ஆகியவை வெளிநாட்டு முதலீட்டை பெருமளவில் ஈர்ப்பதில் முன்னணியில் உள்ளன. 
  • சிங்கப்பூர், மோரீஷஸ், நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்துதான் அதிக அளவு முதலீடு மேற்கொள்ளப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கப் பத்திரம் வெளியீடு: நவ.27-இல் தொடக்கம்
  • தங்கப் பத்திரம் வெளியீடு வரும் நவ. 27ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலையை மத்திய அரசு ரூ.2,961ஆக நிர்ணயித்துள்ளது.
  • தங்கப் பத்திர வெளியீடு நவ. 27ஆம் தேதி தொடங்கி நவ. 29 ஆம் தேதி வரையில் மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. 999 சுத்த தன்மையைக் கொண்ட இந்த தங்கப் பத்திரத்தின் விலை நவ.22 முதல் நவ.24ஆம் தேதி வரையில் காணப்பட்ட விலை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.2,961ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையின்படி, ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு ரூ.50 தள்ளுபடி விலையில் தங்கப் பத்திரத்தை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கான தங்கப் பத்திரத்தின் விலை ரூ.2,911ஆக மட்டுமே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நாமக்கலில் பழங்கால வெண்கல சிலை கண்டெடுப்பு
  • நாமக்கல் மாவட்டம் வடவத்தூர் தலமலை அடிவார பகுதியில் 20 கிலோ எடையுள்ள பழங்கால வெண்கல சிலை கண்டெடுக்கப்பட்டது.
  • நாமக்கல் மாவட்டம் வடவத்தூர் தலமலை அடிவார பகுதியில் மருத காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற பூசாரி செந்தில், கோவில் வளாக பகுதியில் அவர் காலில் ஏதோ தட்டுபட்டுள்ளது. 

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை!! ம.பி. அமைச்சரவை ஒப்புதல்

  • 12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • கூட்டு பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை அதிகரிப்பு செய்யும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபஞ்ச அழகியாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டெமி லீ தேர்வு
  • அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது.
  • இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 92 அழகிகள் பங்கேற்றனர்.
  • இறுதிச் சுற்றில் கொலம்பியா நாட்டின் லாரா ((Laura Gonzalez)), ஜமைக்காவின் டேவினா ((Davina Bennett)) மற்றும் தென்ஆப்பிரிக்காவின் டெமி லீ ((Demi-Leigh Nel-Peters)) ஆகியோர் போட்டியிட்டனர்.
  • இதில் தென்ஆப்பிரிக்காவின் டெமி லீ பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை: ஐந்து தங்கங்கள் வென்று இந்திய வீராங்கனைகள் அசத்தல்...
  • உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா வீராங்கனைகள் தங்களது எடைப் பிரிவில் வென்று மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
  • உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்றது. 
  • இதில், 48 கிலோ எடைப் பிரிவில் நீது, 51 கிலோ எடைப் பிரிவில் ஜோதி குலியா, 54 கிலோ எடைப் பிரிவில் சாக்ஷி சௌதரி, 57 கிலோ எடைப் பிரிவில் சசி சோப்ரா மற்றும் 64 கிலோ எடைப் பிரிவில் அங்குஷிதா போரோ ஆகிய வீராங்கனைகள் இறுதிச்சுற்றில் வெற்றிப் பெற்று தங்கம் வென்றனர்.
  • இந்தப் போட்டியில், 81 கிலோ எடைப் பிரிவில் நேஹா யாதவ் மற்றும் 81 கிலோ எடைப் பிரிவில் அனுபமா ஆகிய இரண்டு இந்தியர்கள் ஏற்கெனவே வெண்கலத்துடன் வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, அதன்படி, இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 உயர்ந்துள்ளது.
ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்: முதன்முறையாக தங்கம் வென்ற ஆடவர் இந்தியாவின் கோபி தொனகல்
  • பதினாறாவது ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கோபி தொனகல் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று இப்போட்டியில் தங்கம் வெல்லும் முதல் இந்திய ஆடவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • பதினாறாவது ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடைப்பெற்றது. இப்போட்டியில் பந்தய தூரத்தை 2 மணி 15 நிமிடம் 48 விநாடிகளில் கடந்து இந்தியாவின் கோபி தொனகல் முதலிடம் பிடித்தார்.
  • கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த கோபி, இந்தாண்டு புதுடெல்லி மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் கிளைமாக்ஸ்: இறுதிச்சுற்றில் போராடி தோற்ற சிந்து வெள்ளி வென்றார்
  • ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடித் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று இறுதிச்சுற்று நடைபெற்றது.
  • இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியனான தைவானின் டாய் ஸூ யிங்கை எதிர்கொண்டார் இந்தியாவின் பி.வி.சிந்து.
  • இறுதியில் இந்த ஆட்டத்தில் 18-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வி கண்டார் சிந்து.டாய் ஸூவை 11-வது முறையாக எதிர்கொண்ட சிந்து, அவரிடம் 8-வது முறையாக வீழ்ந்துள்ளார்.
  • இந்த சீசனில் இதுவரை நான்கு போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சிந்து, அதில் 2-ல் தோல்வியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 83,346 கோடியாக சரிவு
  • நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி 83,346 கோடி வசூல் ஆகியுள்ளது என நிதியமைச்சகம் கூறியுள்ளது. ஜிஎஸ்டியில் 95.9 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்துக்காக இந்த மாதம் 26ம் தேதி வரை 50.1 லட்சம் ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • இதன்மூலம் நேற்று வரை 83,346 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் ஜிஸெடி வரி 95,131 கோடியும், செப்டம்பரில் 93,141 கோடியும் வசூலாகியுள்ளது. 
  • இவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்துள்ளது. மாநிலங்கள் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் (27ம் தேதி வரை) மாநில ஜிஎஸ்டியாக 87,238 வசூலித்துள்ளன. 
  • மாநிலங்களுக்கு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மூன்று மாதங்களுக்கு செட்டில்மென்ட் தொகையாக 31,821 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 18,882 கோடி வழங்கப்படுகிறது. 
  • ஜிஎஸ்டியில் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் சட்டப்படி, இழப்பீடு தொகை முழுமையாக வழங்கப்படுகிறது. இந்த வகையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கு 10,806 கோடி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கு 13,695 கோடி வழங்கப்படுகிறது. 
  • மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரி வருவாயாக ஆகஸ்ட் முதல் நேற்று வரை 58,566 கோடி வசூல் ஆகியுள்ளது. இது தவிர ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் 16,233 கோடி கிடைத்துள்ளது. நவம்பருக்கான ஐஜிஎஸ்டி 10,145 கோடி மத்திய ஜிஎஸ்டிக்கு செட்டில்மென்டாக மாற்றப்படுகிறது. வரி செலுத்துவோர் வரி கிரெடிட்டை பயன்படுத்திக்கொண்டதால் இந்த மாத வரி வசூல் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
பங்கு முதலீட்டு லாபம் வழங்கப்படுவதால் பிஎப் வட்டிகுறைக்க மத்திய அரசு திட்டம்
  • தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் உள்ள பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-17 நிதியாண்டில் வட்டி விகிதமாக 8.65 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டில் இந்த வட்டித்தொகை மேலும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • கடந்த நிதியாண்டில் 4.5 கோடி பிஎப் சந்தாதார்களின் கணக்கில் உள்ள பணத்துக்கு வட்டியாக 8.65 சதவீதம் வழங்கப்பட்டது. பிஎப் பணத்தில் முதலீடு செய்த தொகையை எவ்வாறு மதிப்பீடு செய்வது என பெங்களூரு ஐஐஎம் அறிக்கை அளித்துள்ளது. ஐஐஎம் உடன் சேர்ந்து யூனிட்கள் வழங்குவது பற்றி மதிப்பீடு செய்யப்படும். 
நீதிமன்ற உத்தரவால் இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவ மாணவியான தாரிகா பானு
  • இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவக்கல்லூரி மாணவி என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த தாரிகா பானு என்பவர் பெற்றுள்ளார். திருநங்கை என்ற மூன்றாம் பாலினத்தவர் என்ற ஒரே காரணத்தால் 12ஆம் வகுப்பு படிக்கும்போதே பல்வேறு சிக்கல்களை சந்தித்த தாரிகாபானுவுக்கு தேவையான மதிப்பெண் இருந்தும் மெடிக்கல் சீட் தர மறுத்ததை அடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 
  • இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் தாரிகாபானுவுக்கு சீட் கொடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி அவர் விரும்பிய சித்த மருத்துவக்கல்லூரியில் அவருக்கு சீட் கொடுக்கப்படவுள்ளது. 
  • இதனையடுத்து இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவக்கல்லூரி மாணவி என்ற பெருமையை தாரிகாபானு பெறுகிறார். மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு என ஒரு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆசியன் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சாம்பியனானது

  • ஈரானில் நடந்த ஆசியன் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியனானது & மகளிர் பிரிவிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
நாளை ஐதராபாதில் மெட்ரோ சேவையை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
  • தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் உதவியுடன் ஐதராபாதில் மெட்ரோ ரெயில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 
  • ஐதராபாத் மெட்ரோ சேவையை மியாபூர் ஸ்டேஷனில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை 2.25 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இவருடன் தெலுங்கானா மாநில முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு அருங்காட்சியகம்!
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில், அங்குள்ள தமிழரின் பண்பாட்டு அருங்காட்சியகத்தை கலெக்டர் லதா திறந்துவைத்தார். 
  • இந்தப் பல்கலைக்கழகத்தில், தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் பிப்ரவரி 2016-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 
  • இம்மையத்தின் முக்கிய நோக்கம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் தமிழர்களின் ஆதாரங்களைச் சேகரித்தல், அவற்றை ஆவணப்படுத்துதல், காட்சிப்படுத்துதல், தமிழ்க் களஞ்சியத்தை உருவாக்குதல் தமிழ்ப் பண்பாடு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல் ஆகியவை ஆகும். 
  • அருங்காட்சியகத்தில், தமிழர்களின் வீடுகளில் பழங்காலத்தில் பயன்படுத்தியப் பொருள்களான செம்பு, பித்தளை, வெண்கலப்பாத்திரங்கள், பல்லாங்குழி, தாயக்கட்டை, ஏர்க் கலப்பை, மாட்டுவண்டி, கூட்டுவண்டி, மண்குதிரைகள், ஓலைச்சுவடிகள், எழுத்தாணி, இசைக்கருவி, ஆடை, அணிகலன்கள், கல்யாணப் பட்டுப்புடவைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
  • மேலும், பாரதியார், ஒளவையார், இளங்கோவடிகள், கம்பர் மற்றும் சிவகங்கை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் போன்றவர்களின் திருவுருவச்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்களின் ஓவியம் மற்றும் கி.பி.
  • இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறை ஓவியங்கள், சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், தஞ்சைப் பெரியகோயில் ஓவியங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
இந்திய ராணுவத்தில் முதல் முறையாக 'நாட்டு நாய்' சேர்ப்பு - ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணி
  • கர்நாடகத்தில் உள்ள ‘முதோல் ஹவுண்ட்’ என்ற நாட்டு இன நாய் முதல்முறையாக இந்திய ராணுவத்தின் பல்வேறு பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி தனது படையில் ‘முதோல் ஹவுண்ட்’ நாய்களுக்கு என தனிப்பிரிவு வைத்து இருந்துள்ளார். ஆனால், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பின் இந்த வகை நாய் ஒழிக்கப்பட்டு, வெளிநாட்டு நாய்கள் சேர்க்கப்பட்டன.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்திய அணி வெள்ளிப் பதக்கம்
  • ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 
  • அபிஷேக், ஜோதி அடங்கிய அணி இறுதிப் போட்டி வரை சென்று கொரிய அணியிடம் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கோவா திரைப்பட விழா நிறைவு
  • 48-வது சர்வதேசத் திரைப்படத் திருவிழா கோவாவில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா இன்றோடு நிறைவடைகிறது.
  • சர்வதேச திரைப்பட விழாவின் இறுதிநாளான இன்று சிறந்த படங்களுக்கு விருதளிக்கப்படுகிறது. 
  • ராபின் காம்பில்லோ இயக்கிய பிரெஞ்ச் திரைப்படமான '120 பிபிஎம்' கோல்டன் பீக்காக் விருது பெறுகிறது. இந்த விருதுதான் IFFI திரைப்பட விழாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.
  • சிறந்த திரப்படத்திற்கான விருதை வென்ற '120 பிபிஎம்' படத்தில் நடித்த நடிகர் நேஹியல் பெரேஸ் பிஸ்கயார்ட் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.
  • சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதை 'ஏஞ்சல்ஸ் வியர் வொய்ட்' எனும் சீனப் படத்தை இயக்கிய விவியன் க்யூ எனும் பெண் இயக்குநர் பெறுகிறார்.
  • 'டேக் ஆஃப்' மலையாளப் படத்தை இயக்கிய மகேஷ் நாராயனுக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்டு வழங்கப்படுகிறது. ஈராக்கில் பணியாற்றும் இந்தியச் செவிலியர் அனுபவிக்கும் துயரக் காட்சிகளைக் கண்முன்னே நிறுத்தும் திரைப்படம். இந்தப் படத்தில் நாயகனாக ஃபஹத் பாசில் நடித்திருக்கிறார்.
  • சிறந்த நடிகைக்கான சில்வர் பீக்காக் விருதைப் பெறுகிறார் மலையாள நடிகை பார்வதி. 'டேக் ஆஃப்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டின் மதிப்புமிக்க திரையுலக ஆளுமை விருது அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ஸ்மிருதி இராணி, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் வழங்கினர்.
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் : பிரதமர் உத்தரவு
  • தேனியில் நியூட்ரினோ ஆய்வ மையம் அமைக்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 
  • இதனையடுத்து நியூட்ரினோ ஆய்வ மைய திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
  • இத்திட்டத்தை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
67 வயதில் பட்டம் பெற்ற செல்லத்தாய்; வக்கீலாக போகிறார் வரலாறு படைத்த மூதாட்டி
  • தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவில், 67 வயது மூதாட்டி, எம்.ஏ., வரலாறு பட்டம் பெற்றார். கணவனை இழந்த தன்னை, மகள்கள் கைவிட்ட நிலையில், சட்டம் படிக்க உள்ளதாக, அவர் சூளுரைத்தார்.
  • திறந்தநிலை பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழா, சென்னையில், நேற்று நடந்தது. கவர்னர், பன்வாரிலால் புரோஹித், பட்டங்களை வழங்கினார். 16 ஆயிரத்து, 879 பேர், பட்டம் மற்றும் பட்டயங்கள் பெற்றனர். 
  • விருதுநகர் மாவட்டம், சாத்துாரில் பிறந்த செல்லத்தாய், துாத்துக்குடி மாவட்டம், கடம்பூரை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரை, திருமணம் செய்துள்ளார். தங்களின், மூன்று பெண் பிள்ளைகளை, முதுநிலை படிப்பு வரை படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்துள்ளனர்.'சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்தில், கோபாலபுரம் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த செல்லத்தாய், 2009ல், ஓய்வு பெற்றார். 
ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சத்தியன் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்...
  • ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஜி.சத்தியன் தங்கப் பதக்கம் வென்றார்.
  • இது, சத்தியன் வெல்லும் 2-வது முக்கியமான பட்டமாகும். முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியம் ஓபனில் அவர் பட்டம் வென்றிருந்தார்.
  • மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா - மெளமா தாஸ் இனை போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென் கொரியாவின் ஜிஹீ ஜியோன்-ஹேன் யாங் இணையிடம் மோதியது.
  • இதில், 11-9, 6-11, 11-9, 9-11, 9-11 என்ற செட் கணக்கில் தென் கொரிய இணையிடம் வீழ்ந்ததால் இந்திய இணைக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது.
காலாவதியான பேருந்துகள்: இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்
  • இந்தியாவிலேயே அதிக அளவில் காலாவதி பேருந்துகளை இயக்கும் நகரம் எது என்பது குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் துரதிஷ்டவசமாக சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 
  • சென்னை நகரில் உள்ள மாநகர பேருந்துகளில் 73% காலாவதி பேருந்துகள் என்றும், இதனால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அந்த பட்டியலுடன் கூடிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஒரு மாநகர பேருந்தின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்ற நிலையில் சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் 7 ஆண்டுகளையும் கடந்து ஓடுவதால் உடனடியாக புதிய பேருந்துகளை சென்னை போக்குவரத்து கழகம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை பொது மேலாளராக பிரதீப் சிங் கர்லா நியமனம்
  • ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை பொது மேலாளராக பிரதீப் சிங் கர்லா நியமிக்கப்பட்டுள்ளார். 
  • ஜிஎஸ்டி அதீத லாப தடுப்பு ஆணையத்தின் தலைவராக பி.என்.ஷர்மாவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
60,000 பங்க்குகளுடன் உலக அளவில் 3ம் இடத்தில் இந்தியா பெட்ரோல் பங்க் எண்ணிக்கை 6 ஆண்டில் 45% உயர்வு
  • இந்தியாவில் பெட்ரோல் பங்க்குகள் எண்ணிக்கை 6 ஆண்டுகளில் 45 சதவீதம் அதிகரித்து 60,000ஐ எட்டியுள்ளது என இந்திய எண்ணெய் அமைச்சக புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. 
  • கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் எண்ணிக்கை 60,799 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவில் தலா ஒரு லட்சம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. 
புதிய நெல் ரகத்திற்கு 'எம்.ஜி.ஆர் 100' என பெயர் சூட்டிய முதல்வர் பழனிசாமி
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள நெல் ரகத்திற்கு 'எம்.ஜி.ஆர் 100' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரிட்டுள்ளார்.
மேட் இன் இந்தியா 'மித்ரா ரோபோ' அறிமுகம் செய்தார் டிரம்பின் மகள் இவாங்கா
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘ மித்ரா ரோபோ’ வை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
  • சமூக நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மித்ரா ரோபோ , பல்வேறு மொழிகள் பேசும் திறன் உடையதாகவும், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப திறனும் கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூலை முதல் அக்டோபர் வரை ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.6,500 கோடி ரீபண்ட்: நிதியமைச்சகம் தகவல்
  • ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு முதல் நான்கு மாதங்களில் ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.6,500 கோடி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த ஜூலை மாதம் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டது. இதன்பிறகு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி செலுத்திய ஏற்றுமதியாளர்கள் அவற்றை திரும்ப பெற விண்ணப்பித்திருந்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு குடியரசுத்தலைவர் விருது
  • மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், மறுவாழ்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்கு விருது வழங்கப்படுகிறது. 
  • வீரராகவ ராவ் ஏற்கனவே வாக்காளர் விழிப்புணர்வு, தூய்மை பாரதத்துக்கான விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
மக்களவை பொதுச்செயலாளராக சினேகலதா நியமனம்
  • மக்களவை பொதுச்செயலாளராக சினேகலதாவை நியமித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். 
  • முதல் முறையாக மக்களவை பொதுச்செயலாளராக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவை செயலாளருக்கு இணையாக தகுதி பெற்றது மக்களவை பொதுச்செயலாளர் பதவி ஆகும்.
இந்தியாவில் நோய் தீர்க்கும் மருந்துகளே இல்லை; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
  • இந்தியா போன்ற நடுத்தர வருவாய் உள்ள வளரும் நாடுகளில் 10 மருந்துகளில் ஒன்று தரக்குறைவானது அல்லது போலியானவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
  • விற்பனை செய்யப்படும் 10 மருந்துகளில் ஒன்று தரக்குறைவானது அல்லது போலியானவை. இந்த மருந்துகள் நோய்களை குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ தவறி விடுகின்றன. 
  • ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் இழப்பிற்கு காரணமாகவும் உள்ளது. 
  • தரக்குறைவான மற்றும் போலியான மருந்துகள் குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதிக்கின்றன. மலேரியாவுக்கு எதிரான மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகியவற்றில் சுமார் 65% போலியான மருந்துகள். 
  • வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் மருந்துகள் தரமானதாக இருந்தாலும் அது நோய்களை குணப்படுத்துவது இல்லை. 15 ஆண்டுகளுக்கு பிறகு உலகளாவிய மருந்துகள் விற்பனை முதல் தடவையாக 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பு புற்றுநோய் மருந்துகள் முதல் கருத்தடை மருந்துகள் வரை, நுண்ணுயிர் எதிப்பிகள் முதல் தடுப்பூசிகள் வரை எல்லாவற்றையும் உள்ளடக்கி அனைத்து சிகிச்சை பிரிவுகளிலும் தரக்குறைவான அல்லது போலியான மருந்துகள் பற்றிய அறிக்கையை பெற்றுள்ளது.
உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி.. இந்திய வீராங்கனைக்கு தங்கம்
  • உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் பதக்கம் வென்று இருக்கிறது. அமெரிக்காவில் நடந்த இந்த போட்டியில் மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு தங்கம் வென்றார்.
  • இதில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு 48 கிலோ எடை பிரிவு பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இறுதி போட்டியின் முதல் சுற்றில் 85 கிலோ எடையை தூக்கினார். அதற்கு அடுத்த சுற்றில் 109 கிலோ எடையை தூக்கினார்.
  • இதன் மூலம் இரண்டு சுற்றுகளையும் சேர்த்து 194 கிலோ எடையை தூக்கி புதிய உலக சாதனை படைத்து இருக்கிறார். மேலும் அவர் அதிக புள்ளிகள் பெற்று இறுதி போட்டியில் வெற்றபெற்றார். இதன் மூலம் அவர் இந்த போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
  • ஏற்கனவே இவர் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான், ராணுவம் ஒப்பந்தம்
  • ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ராணுவம் - ராஜஸ்தான் அரசு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 
  • கங்காநகர் மாவட்டத்தில் லால் கர்க்-ஜடான் பகுதியில் உள்ள விமான தளத்தை ராணுவம் 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக்கொள்வது என இந்த ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
  • மேலும் ராணுவம் அதன் தேவைக்கேற்ப கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில சிவில் விமான போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பவன் கோயல் தெரிவித்துள்ளார்.
2-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக அதிகரிப்பு
  • இந்த ஆண்டுக்கான(2017) நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் (ஜூலை to செப்டம்பர்) 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஆண்டுக்கான முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதம் அளவுக்கு சரிந்தது. 
  • பின்னர் மத்திய அரசு மேற்கொண்ட பல நடவடிக்கையால் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel