ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.
இன்றைய பதிவில் அடைமொழியால் குறிக்கப்படும் முக்கிய நூல்கள் பார்ப்போம்.
1. திருவள்ளுவப் பயன், தமிழ் வேதம், தமிழ்மறை, உத்தரவேதம் - திருக்குறள்
2. முத்தமிழ் காப்பியம், முதல் காப்பியம், குடிமக்கள் காப்பியம், உரையிட்ட பாட்டுடைச் செய்யுள், மூவேந்தர் காப்பியம் - சிலப்பதிகாரம்
3. இரட்டைக் காப்பியம் - சிலப்பதிகாரம், மணிமேகலை
4. ஐம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி
5. ஐஞ்சிறுங் காப்பியம் - நாககுமார காவியம், உதயண குமார காவியம், சூளாமணி, யாசோதா காவியம், நீலகேசி
6. காம நூல், மண நூல் - சீவகசிந்தாமணி
7. கம்பசித்திரம், இராமாவதாரம், கம்ப நாடகம், இராம காதை, இராமசரிதம் - இராமாயணம்
8. நெடுந்தொகை - அகநானூறு
9. திருத்தொண்டர் புராணம் - பெரிய புராணம்
10. பாவைப்பாட்டு - திருப்பாவை
11. தமிழர் வேதம் - திருமந்திரம்
12. முதல் இலக்கணம் - அகத்தியம்
13. சிற்றதிகாரம் - நன்னூல்
14. கூத்தாற்றுப்படை - மலைபடுகடாம்
15. பதிணென் கீழ் கணக்கு - 18 நீதி நூல்கள்
16. பதிமென் மேல் கணக்கு - பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்
17. திணை இலக்கியம் - சங்க இலக்கியம் (நூல்கள்)
18. புலவராற்றுப்படை - திருமுருகாற்றுப்படை
19. கூத்தராற்றுப்படை - மலைபடு கடாம்
20. முதற்பரணி - கலிங்கத்துப் பரணி
21. பிள்ளைப்பாட்டு - பிள்ளைத்தமிழ்
22. உழத்திப்பாட்டு - முக்கூடற்பள்ளு
23. குறத்திப்பாட்டு - திருக்குற்றாலக் குறவஞ்சி
24. பாவைப்பாட்டு - திருப்பாவை
25. பஞ்ச காப்பியம் - ஐம்பெருங்காப்பியம்
26. தமிழ்மொழியின் உபநிடதம் - தாயுமானவர் பாடல்கள்
27. போர்க் காவியம் - தகடூர் யாத்திரை
28. இசைப்பா - திருவிசைப்பா
29. ஆதி உலா - திருக்கயிலாய ஞான உலா
30. தெய்வ உலா - திருக்கயிலாய ஞான உலா
31. குட்டித்தொலைகாப்பியம் - தென்னூல் விளக்கம்
32. சின்னூல் - நேமி நாதம்
33. குட்டித் திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி