Type Here to Get Search Results !

வி.ஏ.ஓ., தேர்வு தள்ளிவைப்பு ? Why TNPSC VAO Exam was postponed September 2017 ?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான, வி.ஏ.ஓ., தேர்வு, 2 மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, பல்வேறு வகை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி இடங்களில், டி.என்.பி.எஸ்.சி., மூலம், புதியவர்கள் நியமிக்கப்படுகின்றனர். 
இதற்காக, போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் மற்றும் துறை ரீதியான புதிய நியமனம் குறித்து, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஆண்டு தேர்வு திட்ட அறிக்கை வெளியிடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான திட்ட அறிக்கைப்படி, வருவாய் துறையில், வி.ஏ.ஓ., பதவிக்கான, 494 காலி இடங்களை நிரப்ப, செப்., 17ல், எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும்.
இந்த தேர்வுக்கான, அதிகாரபூர்வ அறிவிக்கை, ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், September 3வது வாரமாகியும், இன்னும் அறிவிக்கை வெளியாகவில்லை.இது குறித்து, தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை அணுகிய போது, 'வி.ஏ.ஓ., தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது' என, அதிகாரிகள்தெரிவித்து உள்ளனர்.அதாவது, மாநிலம் முழுவதும், 32 மாவட்டங்களிலும், வி.ஏ.ஓ., காலியிட விபரங்கள் இன்னும், தமிழக அரசிடமிருந்து, டி.என்.பி.எஸ்.சி.,க்கு வரவில்லை.காலியிட விபரம் மற்றும் புதிய நியமனத்துக்கான அனுமதி கடிதம், அரசிடமிருந்து வந்ததும் தேர்வு அறிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
'தற்போதைய நிலவரப்படி, Septmeber இறுதியில் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகவும், November இறுதி வாரத்தில் தேர்வு நடக்கவும் வாய்ப்புள்ளது' என, அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel