Type Here to Get Search Results !

TNPSC SHOUTERS CURRENTS AFFAIRS AND GK QUESTIONS MARCH 2017 IN TAMIL

TNPSC IMPORTANT CURRENT AFFAIRS   IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS   STUDY MATERIALS   MODEL QUESTIONS 
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS   PDF,
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS   STUDY MATERIALS  MODEL QUESTIONS,
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS     GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS    GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS    GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS    GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
·         TNPSC IMPORTANT CURRENT AFFAIRS    VAO    MATERIALS  MODEL QUESTIONS ,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப்-2A/ குருப்2/ VAO/குருப்4 - நடப்பு நிகழ்வு -MARCH -2017




NO OF PAGES :20
SIZE : 1.22 MB
  • MARCH 3- World Wildlife Day( உலக வனஉயிரிகள் தினம்)
  • சர்வதேச அளவில் விருதுகளை பெற்ற "liptic Under my bhurka" என்ற பாலிவுட் படத்துக்கு மத்திய தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது ( இது ஆசிய எழுச்சிப் படம் என விருதை வென்றது.
  • Foal Eagle தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவ பயிற்ச்சி.
  • டெங்கு நோயை தாக்கும் புதிய வகை பாக்டீரியாவான உல்ஃபாசியா எனும் பாக்டீரியாவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் & ஆஸ்திரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழகம் இணைந்து கண்டுபிடிந்துள்ளனர்.
  • "Deendayal Rasoi Yojana"- மத்திய பிரதேச மாநிலம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கும் திட்டம்.- மேலும் 2017ம் ஆண்டில் தீன் தயாள் உபத்தியாவின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்த ஆண்டை "Garib kalyan varsh" ஆண்டாக அனுசரிக்க அம்மாநிலம் முடிவெடுத்துள்ளது.
  • 8 ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத கல்வியை கட்டாயமாக்கியுள்ள மாநில அரசு -அஸ்ஸாம்.
  • சிரியாவில் IS தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க "பல்மிரா" நகரை ரஷ்ய விமானப்படை உதவியுடன் அரசு படையினர் மீட்டுள்ளனர் .
  • ஆசியாவிலேயே முதல்முதலாக சிடி ஸ்கேன் வசதியுடன் கொண்ட ஆம்புலென்ஸ் வசதியை கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.
  • டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக தளவாய் சுந்தரம் நியமனம்.
  • மார்ச் 2017ல் ,ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தினால் உயர்மட்ட விசாரணை அமைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நாடு -மியான்மர்.
  • கடந்த 2015-ல் பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மாநிலங்களிலும் ஸ்மார்ட் காவல் நிலையம் அமைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி அந்திரபிரதேஷ் முதல் மாநிலமாக ஸ்மார்ட் காவல் நிலையம் அமைக்க ஒப்புக்கொண்டது. அதன்படி தற்போது குண்டூர் மாவட்டம் Nagarampalem என்னும் இடத்தில் ஸ்மார்ட் காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
  • தில்லியைச் சேர்ந்த மோஹித் அலாவத் (21) டி-20 கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 300 ரன்கள் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தில்லியில் நடைபெற்ற ஃப்ரெண்ட்ஸ் பிரீமியர் லீக் என்ற கிரிக்கெட் போட்டியில், ஃப்ரெண்ட்ஸ் லெவன் அணிக்கு எதிராக மாவி லெவன் அணி தரப்பில் விளையாடினார். இது அதிகாரப்பூர்வமற்ற கிரிக்கெட் என்ற போதிலும், சர்வதேச மற்றும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை எந்தவொரு வீரரும் 300 ரன்களை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆப்ரிக்க கோப்பை கால்பந்து(2017 Africa Cup of Nations - AFCON) போட்டியில், எகிப்த்தை வீழ்த்தி கேமரூன் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆண்டுக்கான போட்டி Gabon நாட்டின் லிப்ரேவில்லி நகரில் நடந்தது.
  • சோமாலியா நாட்டின் புதிய அதிபராக முன்னாள் பிரதமராக இருந்த முகமது அப்துல்லாஹி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய அதிபர் ஹஸன் ஷேக் முகமதுவை தோற்கடித்து அதிபராக்கியுள்ளார். இவர் சோமாலியா-அமெரிக்கா இருநாட்டு குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சோமாலியா, கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.
  • இந்தியாவின் முதல் சமூக புதுமை படைத்தலுக்கான (Social Innovation) மையம் "காகத்திய சமூக புதுமை படைத்தலுக்கான கண்டுபிடிப்பு மையம் (Kakatiya Hub for Social Innovation) எனும் பெயரில் தெலுங்கானா அரசால் நிசாமாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
  • Be the change: Unite for a better internet என்ற கருப்பொருளுடன் 2017ஆம் ஆண்டிற்கான SAFER INTERNET DAY ஆனது பிப்ரவரி 7-ல் கடைபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு(2016) பிப்ரவரி 9-லும், வரும் ஆண்டு(2018) பிப்ரவரி 6-ல் அனுசரிக்கப்படுகிறது.
  •  உலக சிட்டுக்குருவி நாள் - மார்ச் 20, 2017 - உலக சிட்டுக்குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் நாள் உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது.  2010ஆம் ஆண்டு முதல் மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • ஒரு அணுவில் ஒரு ‘பிட்’- உலகின் மிகச் சிறிய காந்தம் கலிபோர்னியா சான் ஜோன்ஸ் நகரில் உள்ள ஐ.பி.எம். நிறுவனத்தின் அல்மடன் ஆய்வு மையத்தில் ஒற்றை அணுவைக் கொண்ட உலகின் மிகச் சிறிய காந்தத்தை உருவாக்கி அதில் ஒற்றை ‘பிட்’ தகவலைச் சமீபத்தில் பதித்திருக்கிறார்கள்.அணு அளவுக்குத் துல்லியமாகக் காட்டும் ‘நோபல் பரிசு வென்ற’ ஸ்கானிங் டனல்லிங் நுண்ணோக்கி (Scanning tunneling microscope) மூலமாக இதற்குச் செயல்விளக்கம் தந்தனர்.கணினித் தொழில்நுட்பத்தின் மிகச் சிறிய அலகு ‘பிட்’ (Bit) எனப்படுகிறது. இந்த வழிமுறையில் வெறுமனே 0 அல்லது 1 என்கிற எண் மட்டுமே இருக்கும். தற்போதுள்ள வன்தட்டு இயக்கியில் (hard disk drive) ஒரு பிட்டைப் பதிவுசெய்ய 1 லட்சம் அணுக்கள் தேவைப்படுகின்றன. அதிலிருந்து ஒரே ஒரு அணுவிலேயே ஒரு பிட்டைப் பதியும் அளவுக்குப் புதிய தொழில்நுட்பத்தை இந்த ஐ.பி.எம். விஞ்ஞானிகள் வடிவமைத் இருக்கிறார்கள்.
  •  "Vikalp Scheme"- மத்திய இரயில்வே அமைச்சகம் "Vikalp" எனப்படும் புதிய திட்டத்தை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது- இத்திட்டத்தின்படி இரயில் முன்பதிவில் காத்திருப்போர் பட்டியலில்(Waiting List) உள்ள பயணிகளுக்கு அதே டிக்கெட் விலையில் உயர் மதிப்புள்ள இரயில்களான(Premium Trains) இராஜதானி,சதாப்தி போன்ற இரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கும் திட்டம்- இந்த Vikalp திட்டம் "Alternate train accommodation scheme (ATAS)" எனவும் அழைக்கப்படும்- இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் உயர் மதிப்புள்ள இரயில்களில்(Premium Trains) காலியாக உள்ள பர்த்களை நிரப்ப ஊக்குவிப்பதே ஆகும்.
  • பார்த்தா முகாபாத்யா குழு :-உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு நலத்திடடங்கள் போன்றவற்றை வழங்குவதற்கு ஏதுவாக சட்டம் வகுக்க அமைக்கப்பட்ட குழு.
  •  தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவின் புதிய தலைவராக டி.வி.மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக நீதிபதி சிங்காரவேலு தலமையில் இக்குழு செயல்பட்டுவந்துள்ளது.
  • பீகார் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் இலவச வைபை சேவை திட்டத்தை துவக்கி வைத்தார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் .பீகார் தின விழாவை தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 273 கல்லூரிகள் 16 பல்கலைகழகங்கள் மற்றும் 30 கல்வி நிறுவனங்களில் இலவச வைபை சேவையை துவக்கி வைத்துள்ளார்.
  •  2017ம் ஆண்டு: உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இந்தோனேசியாவில் உள்ள 'பாலி' நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • ஆந்திர மாநில விமான நிலையங்களின் பெயர்கள் மாற்றம்!ஆந்திர மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களின் பெயர்களை மாற்றம் செய்ய ஆந்திர சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்பதி விமான நிலையத்தின் பெயரை ஏழுமலையானை குறிப்பிடும் வகையில் 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா விமான நிலையம், திருப்பதி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.விஜயவாடா விமான நிலையத்தின் பெயரை 'நந்தமூரி தாரக ராமாராவ் விமான நிலையம், அமராவதி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டவுள்ளது.
  • உலகின் நம்பர் ஒன் சர்ச் இஞ்சின் நிறுவனமான கூகுள் உலகின் மிகப்பெரிய டேட்டா சயிண்டிஸ்ட் நிறுவனமான கேகுல் (Kaggle) உடன் இணைந்து செயல்படஉள்ளது.
  • துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா, சவூதி அரேபியா ஆகிய 6நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டனுக்கு வரும் போது விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐ-பேடு போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர பிரிட்டன் தடை விதித்துள்ளது.
  • ஓசூரை சேர்ந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவர் ஆகாஷ் மாரடைப்பு ஏற்படுவதை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.
  • இந்தியாவிலேயே சாலை விபத்து அதிகம் நடைபெரும் மாநிலம் - தமிழ்நாடு..
  •  "Human Development Index 2016"-நார்வே இப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.இப்பட்டியலில் இந்தியா 131வது இடம் பிடித்துள்ளது.மொத்தம் 188 நாடுகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதனை "United Nations Development Program" வருடந்தோறும் வெளியிடுகிறது.
  • "Cost of Living Index 2017"- 2017ம் ஆண்டிற்கான cost of living குறியீட்டில் சிங்கப்பூர் நகரம் அதிக செலவுமிக்க நகரமாக(Mostexpensive City) உள்ளது. கஜகஸ்தான் நாட்டில் உள்ள "Almaty" நகரம் குறைந்த செலவுமிக்க நகரமாக உள்ளது.இப்பட்டியலில் 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.3வது இடத்தில் பெங்களுரூம் 5வது இடத்தில் சென்னை மற்றும் மும்பையும் 8வது இடத்தில் டெல்லியும் இடம்பெற்றுள்ளன.இப்பட்டியலை "Economic Intelligence Unit" வெளியிடுகிறது.
  • 123 Tejas ரக விமானங்களை 2024ம் ஆண்டிற்குள் இந்திய விமானப் படைக்கு(IAF) அளிக்க உள்ளதாக பெங்களுரில் உள்ள "The Hindusatan Aeronautics Limited" நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இந்தியாவின் முதல் குறியீட்டு மொழி அதிகராதியினை(Sign language Dictionary) விரைவில் வெளியிட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அகராதி காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கு உதவும் வகையில் புத்தகம் மற்றும் வீடியோ என இரண்டு வடிவிலும் வெளியிடப்படும்.இதனை "Indian Sign Lanuguage Research and Training Centre" மேம்படுத்தி வெளியிட உள்ளது.
  • 23வது காமன்வெல்த் நாடுகள் தணிக்கைத் துறை தலைவர்களின் மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவின் முதல் தீவு மாவட்டமான "மஜீலியை"(Majuli) இந்தியாவின் முதல் கார்பன் நியூட்ரல் மாவட்டம் மற்றும் உயிரி பல்லுயிர் பாரம்பரிய தளமாக மாற்றுவதற்கான திட்டங்களை அசாம் மாநில முதல்வர் "Sarbabanada Sonowal" தொடங்கி வைத்தார்.
  • மணிப்பூர் மாநிலத்தில் கடையடைப்பு மற்றும் முற்றுகைகள் முற்றிலும் இருக்காது என அம்மாநில ஆளுநர் "Najma Hatpulla" உறுதி அளித்துள்ளார்.
  • இராஸ்தான் மாநிலத்தின் முதல் "IT telephony hotline Bhamashah state data centre"ஐ அம்மாநில முதல்வர் "வசுந்தரா ராஜே" ஜெய்ப்பூரில் தொடங்கி வைத்தார்.
  • இந்தியாவைச் சேர்ந்த "வித்யா பிள்ளை" உலக பெண்கள் snooker போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது.
  • மிகஉயர் அதிர்வெண் காற்று சுரங்கப்பாதை(Hypersonic Wind Tunnel) மற்றும் அதிர் சுரங்கப்பாதை(Shock Tuneel) இரண்டும் திருவனந்தபுரத்தில் உள்ள "விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தில்"(VSCC) ISROவால் பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின்(Indian Council of Medical Research-ICMR) இயக்குநர் "Sowmiya swaminathan" ஐநாவின் நுண்ணுயிர் எதிரிப்பு(Antimicrobial Resistance) துணைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
  • பாகிஸ்தான் ஆக்கிரமப்பு காஷ்மிரில் நடைபெற்ற surgical strikeக்கு தலைமை தாங்கி நடத்திய " Major Rohit Suri"க்கு "கீர்த்தி சக்ரா" விருது குடியரசுத் தலவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய விமானப்படையைச் சேர்ந்த "Corporal Gurusevak singh" ற்கு பாதன்கோட் விமானதள தாக்குதலில் உயிரிழந்தற்காக "shaurya Chakra" விருது குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 13 இராணுவ வீரர் பதான்கோட் விமானத்தள தாக்குதலில் உயிரிழந்தற்காக அவர்களுக்கும் "Saurya chakra" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கனடாவைச் சேர்ந்த ஆசிரியர் "Maggie Macdonell"ற்கு இந்த ஆண்டிற்கான "Global teacher prize" வழங்கப்பட்டுள்ளது.
  • 2வது இந்தியா-ஐக்கிய அரபு நாடுகள்(UAE)க்கு இடையேயான உலகமயமாக்கலுக்கான மாநாடு துபாயில் நடைபெற்று முடிந்துள்ளது.இம்மாநாட்டின் Theme: "Resetting Globalisation:Collabrating in a fast Changing Word".

# MARCH 21- The International Day of Forests(உலக காடுகள் தினம்)
- 2017 Theme : "Forests & Energy"

# MARCH 21- World Down Syndrome Day-WDSD(உலக மனநலிவு நோய் தினம்)
# MARCH 21- World Poetry Day(உலக கவிதை தினம்)
# MARCH 21- International Colour Day-ICD(சர்வதேச நிறங்கள் தினம்)
- Theme-“Let’s Celebrate Colours”

# MARCH 21- International Day for the Elimination of Racial Discrimination( சர்வதேச இனபாகுபாடு ஒழிப்பு தினம்)-2017 Theme : "Racial profiling and incitement to hatred, including in the context of migration"

# MARCH 22- World Water Day(உலக நீர் தினம்)- THEME 2017 – "Why Waste Water ?"
  • இக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் நிறுவனம் உலக அளவில் குறைந்த செலவினம் உள்ள 10 நகரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அல்மாட்டி நகரம் முதல் இடத்தையும்,பெங்களூரு நகரம் மூன்றாவது இடத்தையும்,கராச்சி 4-வது இடத்தையும், அல்ஜியர்ஸ் 5-வது இடத்தையும்,சென்னை  6-வது இடத்தையும், மும்பை 7-வது இடத்தையும்,கீவ் 8-வது இடத்தையும்,பச்சாரெஸ்ட் 9-வது இடத்தையும்,டெல்லி 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.இக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் நிறுவனம் உலக அளவில் அதிக செலவினம் ஏற்படுத்தும் 10 நகரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் சிங்கப்பூர் முதல் இடத்தையும், ஹாங்காங் இரண்டாவது  இடத்தையும், ஜுரிச் 3-வது இடத்தையும்,டோக்கியோ 4-வது இடத்தையும்,ஒசாகா  5-வது இடத்தையும், சியோல் 6-வது இடத்தையும்,ஜெனீவா 7-வது இடத்தையும்,பாரிஸ் 8-வது இடத்தையும், நியூயார்க் 9-வது இடத்தையும்,கோபன்ஹேகன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • 2018 ஜனவரியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசில் நடைபெறவுள்ள 5வது பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ண தூதுவராக ஓய்வு பெற்ற பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அமெரிக்காவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக , அமுல் தாப்பர் என்ற அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி & UAE ஆகிய 8 நாடுகளின் பயணிகள் தங்கள் விமான பயணத்தில் லேப்டாப், ஐபேட், கேமரா உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர அமெரிக்கா தடை விதித்துள்ளது.
  • ஜப்பானில் நடைபெற்ற ஆசிய வேகநடை சாம்பியன்சிப் ( Race Walk Championship - 20 Km) போட்டியில் இந்திய வீரர் K.T. இர்பான் வெண்கலம் வென்றுள்ளார்.பெண்கள் பிரிவில் இந்திய வீரங்கனை பிரியங்கா 4வது இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது.
  • அமெரிக்காவின், ஹூஸ்டன் நகர பொதுப்பணி மற்றும் பொறியியல் துறைகளின தலைவராக அமெரிக்க வாழ் இந்தியர் கருண் ஶ்ரீராமா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • Global Teacher Prize Winner 2017  - உலகின் தலைசிறந்த ஆசிரியர் விருது கனடாவின் மேகி மெக்டனால் பெற்றுள்ளார்.
  • உலகளவில் கிராமங்களில் வசிப்பவர்களில் சுத்தமான குடிநீர் இல்லாதவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.இந்திய கிராமங்களில் சுமார் 6.3 கோடி பேர் சுத்தமான குடிநீர் வசதியின்றி இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அதாவது இந்திய மக்கள் தொகையில் 7 % பேருக்குச் சுத்தமான குடிநீர் வசதி இல்லை.உலகம் முழுவதும் மொத்தம் 66.3 கோடி பேர் சுத்தமான குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் பேர் இந்தியாவில் உள்ள கிராமங்களில் வாழ்பவர்கள்.
  • மனிதர்களுக்குச் சமமாக கங்கை, யமுனை ஆறுகள் நடத்தப்பட வேண்டும் என  உத்தரகாண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
  • சமீபத்தில் நியூசிலந்தின் வாங்கனுய் ஆற்றுக்கு மனிதரைப் போலவே  முழு சட்ட உரிமைகளையும் அளிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
  • முற்றிலும் இந்திய தொழில்நுட்பதிலேயே    தயாரிக்கப்பட்ட முதல் புறநகர் மின்சார ரயில்  - " மேதா " - ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மும்பையில் தாதர் மற்றும் போரிவலி  [ மேற்கு ரயில்வே ]   நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட்டது.இதுவரையில் இந்தியாவில் இயங்கும் மின்சார ரயில்களில், ரயிலை முன்னோக்கி நகர்த்தும்  ப்ரொபல்ஷன் சிஸ்டம்  எனப்படும்  உந்துவிசை அமைப்பு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டவையாகத்தான் இருந்து வந்துள்ளது.இந்த உந்துவிசை அமைப்பிற்காக இதுவரையில் கனடாவின் பம்பார்டியர் அல்லது ஜெர்மனியின் சீமன்ஸ் நிறுவனங்களையே இந்தியா இதுவரையில் சார்ந்திருந்தது.தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இந்த  ப்ரொபல்ஷன் சிஸ்டம்   தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரொபல்ஷன் சிஸ்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘மேதா செர்வோ டிரைவ்ஸ்' எனும் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளதால் இந்த ரயிலுக்கு மேதா என பெயரிட்டுள்ளனர்.இந்திய ரயில்வேயின் கீழ் சென்னை ஆவடி அருகே செயல்பட்டு வரும் ஐசிஎஃப் என அழைக்கப்படும் "Integral Coach Factory" தொழிற்சாலையில் இந்த  ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • 2018 ஜனவரியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசில் நடைபெறவுள்ள  5வது பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்  நல்லெண்ண தூதுவராக  ஓய்வு பெற்ற பாகிஸ்தான் வீரர் அப்ரிடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • 2017 ஜனவரியில், இந்தியாவில் நடைபெற்ற பார்வையற்றோர் உலக கோப்பை T20 கிரிக்கெட் போட்டியின் தூதராக ராகுல் டிராவிட் பணியாற்றினார்.
  • உலக அளவில் மிக பிரபலமான திருநங்கைகளுக்காக நடத்தப்படும் மாபெரும் அழகிப் போட்டி தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்றுள்ளது.இதில் 24 வயதாகும் தாய்லாந்தின் ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவாவின் என்பவர் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார்.வெற்றி பெற்றுள்ள ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவாவின் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்.
  • சர்வதேச கழுத்து, முதுகுத் தண்டு ஆராய்ச்சி சங்கத்தின்  (Cervical, Spine Research Society)  தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த சங்கத்துக்கு இந்தியர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்திய தொலைத்தொடர்பு துறையில் இரண்டாம் இடத்தில் உள்ள வோடபோன் நிறுவனமும், மூன்றாமிடத்தில் உள்ள ஐடியா நிறுவனமும் ஒன்றாக இணைந்துள்ளன.புதிய தலைவராக குமாரமங்கலம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ABC of Breast Health  App -- மார்பக புற்றுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்ள உதவும் அலைபேசி செயலி. 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இதனை அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ளார். 
  • Mera i Mobile App  --  கிராமப்புற வாடிக்கையாளர்களின் வசதிக்காக ICICI வங்கி வெளியிட்டுள்ள அலைபேசி செயலி.
  • ஐ.நா. வெளியிட்டுள்ள 2017ம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்.
.
1.நார்வே
2.டென்மார்க்
3.ஐஸ்லாந்து
4.சுவிட்சர்லாந்து
5.பின்லாந்து
6.நெதர்லாந்து
7.கனடா
8.நியூசிலாந்து
9.ஆஸ்திரேலியா
10.ஸ்வீடன்
.
14. அமெரிக்கா 
.
122. இந்தியா 
.
155 மத்திய ஆப்பிரிக்க குடியரசு  ( கடைசி இடம் )

உலகளவில் மகிழ்ச்சியான நாடுகளின் 2016ம் ஆண்டுக்கான  பட்டியலை ஐ.நா., வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் டென்மார்க் முதல் இடத்திலும், சுவிட்சர்லாந்து 2வது இடத்திலும், ஐஸ்லாந்து 3வது இடத்திலும், நார்வே 4 வது இடத்திலும், பின்லாந்து 5 வது இடத்திலும் உள்ளன.ஆஸ்திரேலியா 9 வது இடத்திலும், இஸ்ரேல் 11 வது இடத்திலும், அமெரிக்கா 13வது இடத்திலும் உள்ளன.மொத்தம், 155 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 118 வது இடத்தில் உள்ளது.மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்தியா 10 இடங்கள் பின்தங்கி உள்ளதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சோமாலியா (76), சீனா (83), பாகிஸ்தான் (92), ஈரான் (105), பாலஸ்தீனம் (108), வங்கதேசம் (110) ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கி உள்ளது.
  • இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்றச் சிறந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தை ஹைதராபாத் பிடித்துள்ளது. [ சர்வதேச அளவில் 144 வது இடம் ].புனே 2வது இடம் பிடித்துள்ளது. [ சர்வதேச அளவில் 145 வது இடம் ].பெங்களூரு 3வது இடம் பெற்றுள்ளது. [ சர்வதேச அளவில் 146 வது இடம் ] .நாட்டில் நல்ல உட்கட்டமைப்பு கொண்ட நகரங்களில் மும்பை  முதலிடத்தில் உள்ளது. [ சர்வதேச அளவில் 141 வது இடம் ],அதைத்தொடர்ந்து கொல்கத்தா [ 149 ] , புனே [ 151],  பெங்களூரு [ 179]   உள்ளன.இவைகள் மெர்சர் குவாலிட்டி நிறுவனம் எடுத்த சர்வே - 2017 முடிவுகளாகும்.
  • தற்போது மாநில முதல்வராக பதவி வகிப்பவர்களில் :
        மிக இள வயது முதல்வர்  --  பெமா காண்டு  -- அருணாச்சலபிரதேசம்  (BJP) -- வயது 37  ( 21/08/1979 ),
மிக அதிக வயது முதல்வர்  -- Dr. Shurhozelie Liezietsu  -- நாகாலாந்து  ( நாகா மக்கள் முன்னணி ) -- வயது 80 ( 20/11/1936)

  • டெல்லியில் நடைபெற்ற  விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில்,  மேற்கு வங்க அணியை வீழ்த்தி, தமிழக அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  • சர்வதேச மகிழ்ச்சி தினம் மார்ச் 20ல்  கொண்டாடப்படுகிறது.
  • தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் அசோகமித்திரன் சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 23) உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் அசோகமித்திரனின் உயிர் பிரிந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel