GPS தொழில் நுட்பம்
அன்பார்ந்த TNPSC SHOUTERS சொந்தங்களே, வணக்கம்...
கடந்த 10.03.2016 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வின் மூலம், பி எஸ் எல் வி- சி 32 என்ற ராக்கெட் மூலமாக IRNSS 1-F என்ற செயற்கைக் கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது பற்றி பத்திரிக்கைகளில் பார்த்து இருப்பீர்கள்.
அதனைப்பற்றி நாம் சற்று விரிவாக பார்ப்போம்:
1. IRNSS 1-F செயற்கை கோள் எதற்கு பயன்படுகிறது?:
இந்தியாவின் புவி வழி காட்டி மற்றும், கடல் சார் ஆராய்ச்சிக்காகப் பயன்படுகிறது.
2. இந்த ஒரு செயற்கைக் கோளின் மூலமாக நமது
இலக்கை அடைந்து விடலாமா?
முடியாது. இந்தியாவின் புவி வழி காட்டிக்காக இஸ்ரோ மொத்தம் 7 செயற்கைக் கோள்களை அனுப்ப முடிவு செய்து உள்ளது. இதில் மொத்தம் 5 செயற்கைக் கோள்கள் ஏற்க்கனவே அனுப்பப்பட்டு விட்டன. இந்த IRNSS 1-F என்பது 6 வதாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோளாகும். மேலும் ஒரு செயற்கை கோளை 7 வதாக நாம் அனுப்பும் பட்சத்தில் இந்த திட்டம் முழுமை பெறும்.
3. அப்படி என்றால் IRNSS 1 -F க்கு முன்னதாக இத்திட்டத்தின் மூலம் அனுப்பப்பட்ட செயற்கை கோள்களின் பெயர்களும், அவற்றை சுமந்து சென்ற ராக்கெட்களின் பெயர்களும் என்ன?
Satellite Name: Rocket Name:
i) IRNSS -1 A -- PSLV C-22
ii) IRNSS -1 B -- PSLV C-24
iii) IRNSS -1 C -- PSLV C-26
iv) IRNSS -1 D -- PSLV C-27
v) IRNSS -1 E -- PSLV C-31
3. புவி வழி காட்டி என்று அடிக்கடி கூறுகிறீர்களே அப்படி என்றால் என்ன?
அதாவது நாம் இருக்கும் இடத்தை, அல்லது வாகனத்தில் நாம் செல்ல வேண்டிய இடத்தை அல்லது சென்று கொண்டு இருக்கும் இடத்தை நமது கையில் உள்ள அலைபேசியில் உள்ள GPS Receiver மூலமாக துல்லியமாக அறிந்து கொள்ள உதவும் தொழில் நுட்பமே புவி வழி கட்டி எனப்படும்.
4. சரி. இப்போது நாம் உலகம் முழுவதும் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் GPS தொழில் நுட்பம் எந்த நாட்டின் உடையது?.
இப்போது புவி வழி கட்டிக்காக நாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கும், GPS தொழில் நுட்பம் அமெரிக்காவின் சொந்தமாகும். அமெரிக்க வான் படை இதனை கையாண்டு வருகிறது. ஆனால் GPS வசதியை வைத்து இருக்கும் யார் வேண்டுமானாலும் அதனை சொந்தமாக இலவசமாக கையாண்டு கொள்ளலாம்.
5. GPS தொழில் நுட்பம் பற்றி விரிவாகக் கூறுங்களேன்?
ஆதி காலத்தில் மனிதன் பல்வேறு இயற்க்கை அமைப்புகளை வைத்து தான் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்து கொண்டு இருந்தான். தொடர்ந்து வந்த தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று GPS RECEIVER என்பதனை கண்டு பிடித்து விட்டான். இந்த GPS தொழில் நுட்பத்திற்காக அமெரிக்க மொத்தம் 24 செயற்கை கோள்களை விண்ணின் செலுத்தி உள்ளது. இவற்றின் மூலம் நாம் இருக்கும் இடத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் GPS வசதி இருக்கும். இதன் மூலம் மிக துல்லியமாக 3.5 மீட்டர் தூரத்திற்குள் நாம் எங்கே இருக்கிறோம் என்பதனை கணித்து விடலாம். நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் GPS receiver, கூகுள் மேப்பை பயன்படுத்தி நாம் எங்கே இருக்கிறோம் என்பதனையும், மற்றும் வீதிகளின் வழியாக நாம் செல்லும்போது வழி காட்டியாகவும் பயன்படுகிறது.
மத்திய புவி சுற்று பாதையில் (Medium Earth Orbit), பூமியில் இருந்து, அதாவது பூமியில் இருந்து கிட்ட தட்ட 20,200 கிலோ மீட்டர் உயரத்தில் 24 செயற்கை கோள்கள் தினமும் பூமியை இரண்டு முறை சுற்றி வருகின்றன. இந்த 24 செயற்கை கோள்களே GPS ன் அடிப்படை கட்டமைப்பாகும். இவை சுற்றி வரும் அச்சுக்கள் அடிப்படை அச்சுக்கள் எனப்படும்.
இந்த 24 செயற்கை கோள்களின் சுற்றுப்பாதைகள் எவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கிறது என்றால் பூமியின் எந்த ஒரு இடத்தில நாம் இருந்தாலும் நம்மை 4 செயற்கை கோள்கள் கண்காணித்து கொண்டே இருக்கும்.
6. GPS தொழில் நுட்பம் செயல்படும் முறை சற்று விரிவாகத் தேவை?
i) இந்த GPS செயற்கை கோள்கள் தொடர்ந்து ரேடியோ சமிக்கைகளை பூமியை நோக்கி பரப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த சமிக்கைகளில் அந்த குறிப்பிட்ட செயற்கை கோளின் தற்போதைய இடம், நேரம், அதன் நிலை ஆகியவை துல்லியமாக அடங்கும்.
ii) ஒவ்வொரு GPS செயற்கை கோளும் அணுக் கடிகாரங்களை தன்னில் கொண்டு உள்ளது.
iii) இந்த ரேடியோ சமிக்கைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்.
iv) நமது ஸ்மார்ட் போனில் உள்ள GPS receiver இந்த சமிக்கைகளை பெற்று கொள்ளும். அந்த சமிக்கைகள் வந்து அடைந்த துல்லியமான நேரத்தையும் குறித்துக் கொள்ளும்.
v) இப்படி குறைந்தது 4 செயற்கை கோள்களில் இருந்து வரும் ரேடியோ சமிக்கைகளை அந்த GPS Receiver பெற்று கொண்டால், டிரைலேடரேஷன் என்னும் கணித முறையை பயன்படுத்தி அந்த செயற்கை கோள்களால் குறிப்பிட்ட GPS Receiver உள்ள இடத்தை துல்லியாமக கணிக்க முடியும்.
7.. சரி, GPS தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொண்டோம். அமெரிக்கா வினால் அனுப்பப்பட்ட இந்த GPS செயற்கை கோள்களை போன்று பிற நாடுகள் ஏதேனும் இதே தொழில் நுட்ப வசதிக்காக செயற்கை கோள்களை விண்ணின் செலுத்தி உள்ளனவா?
ஆம். இந்தியா IRNSS எனப்படும் 7 கோள்களை அனுப்ப உள்ளது என்று முன்பே கூறி இருந்தேன். அது தவிர, ரஷ்யா, சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அனுப்ப உள்ளன.
8. அப்படி என்றால் அந்த செயற்கை கோள்களின் பெயர்களைக் கூறுங்களேன்?
GLONASS -- ரஷ்யாவின் முழு உலகிற்குமான இடங்காட்டி..
Galileo -- ஐரோப்பிய ஒன்றியத்தின் இடங்காட்டி. இது 2014 ல் தொடங்கி 2019 ல் முடியும்.
BEIDOU -- சீனாவின் புவி இடங்காட்டி, இது ஆசிய மற்றும் மேற்கு பசுபிக் நாடுகளுக்கு மட்டும் பயன்படும்.
IRNSS -- இந்தியாவின் புவி இடங்காட்டி (இந்திய மற்றும், வடக்கு இந்து சமுத்திர பரப்பிற்கு மட்டும்).
நன்றி.