TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் நியமிக்கப்பட உள்ளார். அவரது பெயரை தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூன் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த தலைமை நீதிபதியை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு இன்று அவர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தில், நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹரை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி கூறியுள்ளார்.
இதன் மூலம் 44-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் ஜெகதீஷ் சிங் கேஹர். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜனவரி 4-ம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். ஜனவரி 4-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அவர் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் சீக்கிய நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் என்பது குறிப்பிடத்தக்கது.