Type Here to Get Search Results !

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 64

TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
  • TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
  • TAMIL    MODEL QUESTIONS   PDF,
  • TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
  • TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
  • TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
  •  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 64

உச்சநீதிமன்றம்
* உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு- 26 ஜனவரி 1950
* உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லை - இந்தியா
* உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் - புதுதில்லி
* உச்சநீதிமன்றத்துக்கான அதிகாரமளிப்பு - இந்திய அரசியலமைப்பு
* உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கான மேல்மூறையீடு - இந்தியக் குடியரசுத் தலைவர்(தூக்கு தண்டனை உள்பட தண்டனையை நீக்க மட்டும்.
* உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன முறை - நிர்வாக தேர்வு (கோட்பாடுகளுக்கு உட்பட்டது)
* உச்சநீதிமன்றத்தின் குறிக்கோளுரை - அறம் உள்ளவிடத்து வெற்றி உள்ளது.
* தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - பி.சதாசிவம். (19ஜூலை 2013)
** உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகள்:
* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலே அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ நீதிபதியாகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.
* தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களிலோ வழக்கறிஞராகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.
* குடியரசுத் தலைவரின் கருத்தின்படி ஒரு சிறந்த நீதித்துறை அறிஞராக இருத்தல் வேண்டும்.
* உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்போ, குறிப்பிட்ட கால வரம்போ வரையறுக்கப்படவில்லை.
* உச்சநீதிமன்ற மீதிபதி தமது பதவியை தமது 65 வயது நிறைவுற்றாலோ, அல்லது குடியரசுத் தலைவருக்கு பதவி விலகல் கடிதம் அளிப்பதன் மூலமாகவோ, அல்லது பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களித்தவர்களின் மூன்றில் இரு பங்கு ஆதரவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மான்த்தின் அடிப்படையிலோ பதவி நீக்கம் பெறலாம் அல்லது இழக்கலாம்.
* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காலியானாலோ, அல்லது அவர் பணியாற்ற இயலாத சூழ்நிலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வேறு ஒருவரை பணியமர்த்த அதிகாரம் பெற்றுள்ளார்.
* குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தற்காலிகமாக ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிய அழைக்கவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிகாரம் பெற்றுள்ளார்.
* அது போன்று போதிய நீதிபதிகள் இல்லாத சூழ்நிலையில்,உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற ஒருவரை,உச்சநீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியைக தற்காலிகமாகப் பணியாற்றவும் வழி செய்யப்பட்டுள்ளது.
* உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை குற்ற விசாரணை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவருக்கு அளிக்கத்தக்க, லோக்சபையாக இருப்பின் 100 உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு, சபாநாயகரால் ஒப்பளிக்கப்பட்ட தீர்மானமோ, அல்லது இராஜ்ய சபையாக இருப்பின் 50உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு, தலைவரால் ஒப்பளிக்கப்பட்ட தீர்மானமோ நிறைவேற்றப்பட வேண்டும்.
* அத்தீர்மானம் மீன்று நபர்கள் கொண்ட ஒரு குழுவினால் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் ஒரு நீதித்துறை வல்லுநர்) விசாரிக்கப்படும்.
* அக்குழு, குற்றாவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நீதிபதியின் திறமையின்மை அல்லது தவறான நடத்தையை கண்டறிந்து உண்மையெனக் கண்டால் சபைக்குப் பரிந்துரைத்து அறிக்கை அளிப்பர்.
* அதன்பின்பு அத் தீர்மானம் குழுவின் அறிக்கையுடன், டபையில் புகுத்தப்படும்.அத்தீர்மானம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும்,மொத்த உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்போரில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெற்று நிறைவேற்றப்பட்டால்,பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.
* இதன் பிறகு குடியரசுத் தலைவரின் சம்மந்தப்பட்ட நீதிபதியின் பதவி நீக்கத்தை அறிவிப்பார்.
* 1991 - 93ல் ஆர்.இராமசாமி என்ற நீதிபதியின் மீது குற்றவிசாரணை கொண்டு வரப்பட்டு, குழு தனது அறிக்கையில் குற்றத்தை உறுத்ப்படுத்தியது.
* எனினும், அப்போதைய லோக்சபையில் காங்கிரஸ் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமால் புறக்கணித்ததால், போதிய பெரும்பான்மையின்றி, குற்றவிசாரணைத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.
* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தனித்தியங்கு தன்மை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக செயல்படுவதற்கென சில செயல்பாடுகளை அரசியலமைப்பு செயல்படுத்துகிறது. அவை:
* உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளை நியமிக்கும்போது,உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஆலோசித்தே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும்.
* ஒருமுறை நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டால், அவர் திறமையின்மை, தவறான நடத்தை ஆகிய காரணங்களுக்காக மட்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக மட்டுமே, குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
* உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த பின்னர், தமது ஒய்வுக் காலத்திற்குப் பிறகு இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்ற அரசியலமைப்பு தடை விதிக்கிறது. எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதை இந்த விதி தடை செய்யாது.
* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் இந்திய தொகுப்பு நிதியத்தின் செலவினங்களிலிருந்து அளிக்கப்படுவதால், பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பு தேவையில்லை.
* மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும், நிதி நெருக்கடி நிலை தவிர பிற சமயங்களில் குறைக்கப்பட இயலாது.
* உச்சநீதிமன்ற நீதிபதியின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை பாராளுமன்றத்தின், குற்ற விசாரணை தீர்மானம் கொண்வரும் நேரம் தவிர பிற சமயங்களில் விமர்சிக்க இயலாது.
** உச்சநீதிமன்றத்தின் நீதிவரம்பு:
1.Original 2. Writ 3. Appellate 4. Advisory and 5. Revisory Jurisdictions.
** உண்மையான நீதிவரம்பு அதிகாரம் - Original Jurisdiction
* உச்சநீதிமன்றத்தின் மூல வழக்கு விசாரணை வரம்பு என்பது பொதுவாக கூட்டாட்சி குறித்த விசயங்களைக் குறித்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் அதிகாரமாகும்.
* இந்திய அரசாங்கத்திற்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையேயான தகராறுகள்.
* ஒரு புறத்தில் இந்திய அரசும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் மறுபுறத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையேயான தகராறுகள்.
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகள் ஆகிய மூன்று விதமான வழக்குகளிலும் மூலவிசாரணை வரம்பு உச்சநீதிமன்றத்திற்கே உண்டு.
* எனினும் 7வது திருத்தச் சட்டம் 1956-ன்படி, அமலில் இருக்கும் ஒர் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் இந்த விசாரணை வரம்பை விலக்கியிருந்தால், அவற்றின் காரணமாகத் தோன்றும் எந்தவிதமான தகராறுக்கும் இந்த நீதிவரம்பு பொருந்தாது.
* மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர்த்தகராறுகள்,நிதிக்கமிஷனின் ஆய்வுக்கு விடப்பட்ட விஷயங்கள்,ஒன்றியத்திற்கும் மாநிலங்கதளுக்கும் இடையே சிலவகையான செலவுகள், ஒய்வூதியங்கள் போன்றவற்றை சரி செய்து கொள்வது போன்ற சில விசயங்களிலும் உச்சநீதிமன்றத்தின் மூலவழக்கு விசாரணை வரம்பு பொருந்தாது.
** ஆணை வழங்கும் நீதி அதிகார வரம்பு - Writ Jurisdiction
* Art.32ன் படி தனிநபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பான வழக்குகளிலும் மூல விசாரணை வரம்பு உச்சநீதிமன்றத்திற்கு உண்டு.
* அந்த உரிமைகளை நிலை நாட்டுவதற்காக உச்சநீதிமன்றம் பல்வேறு நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கலாம்.
* தன்னுடைய அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நேரிடையாகவே ஒருவர் உச்சநீதிமன்றத்தினை அணுகலாம் என்பது நமது அரசியலமைப்பில் உள்ள தனிச் சிறப்பாகும்.
* உச்சநீதிமன்றத்தின் இந்த பேராணை வழங்கும் அதிகாரத்தைப் பொருத்தவரை, ஒரு தனிநபர் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி அடிப்படை உரிமைகளுக்கான தீர்வினைப் பெற இயல்கிறது என்ற நோக்கின் அடிப்படையில், இது மூல அதிகாரமாக கருதப்படுகிறது.
* ஆனால் மூல அதிகாரம் என்பது முற்றிலும் கூட்டாட்சி குறித்த விசயங்கள் குறித்தே ஆகும்.
** மேல்முறையீட்டு அதிகார நீதிவரம்பு - Appellate Jurisdiction
* உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு விசாரணை வரம்பைப் பொருத்தவரை மூன்று தலைப்புக்களில் காணப்படுகின்றன.
* அரசியலமைப்பு சம்மந்தப்பட்ட வழக்குகள், உரிமையியல் சம்மந்தப்பட்ட வழக்குகளில் ஒர் உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளிக்கும்போது, ஏதேனும் ஒர் வழக்கில் அரசியலமைப்புக்கு விளக்கமுரைப்பதில், அனைத்துத் தரப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட வினா சம்மந்தப்பட்டுள்ளது என்றும், அதனை உச்சநீதிமன்றமே தீர்த்து வைக்க முடியும் என்றும் உயர்நீதிமன்றம் ஒரு சான்றளித்தால், அவ்வழக்குப் பற்றி உச்சநீதின்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
* உரிமையியல் (சிவில்) - ரூ.20000-க்கு மேற்பட்ட மதிப்புடைய உரிமையியல் வழக்குகளில் உயர்நீதிமன்றம், அவ்வழக்கினை உச்சநீதிமன்றம் விசாரிக்கத்தக்கதென்று சான்றளித்தால்,உச்சநீதிமன்றத்தில் அவ்வழக்குகள் மேல்முறையீட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
* இவை தவிர உச்சநீதின்றத்தின் மேல்முறையீட்டு விசாரணை வரம்பை பாராளுமன்றம் விரிவுபடுத்த இயலும்.குற்றவியல் (Criminal) - குற்றவியல் வழக்குகளில்
* ஒர் உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் விடுதலைத் தீர்ப்பை மாற்றி அவருக்கு மரண தண்டணை அளித்தாலும்,
* உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குக் கீழ் நிலையில் உள்ள ஏதேனும் நீதிமன்றத்திலிருக்கும் வழக்கைத் தனக்கு மாற்றிக் கொண்டு, அந்த வழக்கின் விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை அளித்தாலும்,அந்தத்தீர்ப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் மேல் முறையீடு செய்யலாம்.
* ஒர் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு,உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு உகந்த வழக்கு என்று அந்த உயர்நீதிமன்றம் சான்றளித்தால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
** ஆலோசனை வழங்கும் அதிகார நீதிவரம்பு - Advisory Jurisdiction
* Art.143-ன்படி ஆலோசனை வழஹ்கும் நீதிவரம்பை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.
* பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் தொடர்பான அல்லது பொருண்மை சம்மந்தமான வினாவுக்கு உச்சநீதிமன்றத்தின் உச்சநீதிமன்றத்தின் ஆலோசணையைப் பெறுவது உசிதமானது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அவர் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டறியலாம்.
* குடியரசுத் தலைவரிடமிருந்து அப்படிப்பட்ட செய்தி உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டால் நீதிமன்றமும் தேவையான விசாரணைகளை நடத்திய பின்னர் தனது கருத்துக்களைக் குடியரசுத் தலைவருக்கு அறிவிக்கும்.


SEARCHES RELATED TO TNPSC TEST 

  • TNPSC TEST QUESTIONS
  • TNPSC PRACTICE EXAM
  • TNPSC EXAM SOFTWARE
  • TNPSC GROUP2 EXAM
  • TNPSC GROUP 4 EXAM
  • TNPSC GROUP 4 EXAMS
  • TNPSC MODEL QUESTION PAPER

SEARCHES RELATED TO TNPSC MODEL

  • TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION
  • TNPSC MODEL QUESTION PAPER 2014
  • TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2
  • TNPSC MODEL TEST
  • TNPSC MODEL QUESTION PAPERS
  • TNPSC EXAM QUESTION PAPERS
  • TNPSC MODEL ANSWER SHEET
  • TNPSC MODEL QUESTION



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel