இந்தியாவின் மின் பகிர்மானத்தை ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பவர் கிரிட் நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்றது. மின் பகிர்மாணத்தை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கிடையில் கிட்டத்தட்ட 71 ஆயிரத்து 600 கி.மி., அளவு கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள டிப்ளமோ டிரெய்னி - எலக்ட்ரிகல் - எஸ்.டி.டி., மற்றும் டிப்ளமோ டிரெய்னி - சிவில் - எஸ்.டி.டி., காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: டிப்ளமோ டிரெய்னி - எலக்ட்ரிகலில் 11ம், சிவிலில் 4ம் சேர்த்து மொத்தம் 15 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 27.06.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மூன்று வருடம் படிக்கக்கூடிய இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை எலக்ட்ரிகல் அல்லது சிவில் பிரிவில் குறைந்த பட்சம் 70 சதவிகித மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு நாக்பூர், ராய்பூர் மற்றும் புனேயில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/-க்கான டி.டி.,யை 'Power Grid Corporation of India Limited' என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு உரிய இணைப்புகளுடன் அனுப்ப வேண்டும்.
The DGM (HR)/HOP,
Power Grid Corporation of India Ltd.
WRTS-I, Regional Headquarters,
Sampriti Nagar, Nari Ring Road, P.O.
Uppalwadi, Nagpur, Pin Code-440 026 (MH)
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.06.2015
இணையதளமுகவரி: //www.powergridindia.com/_layouts/PowerGrid/WriteReadData/file/career/WR1/2015/6/WR-I_Detail_Advertisement.pd
SOURCE:DINAMALAR