பாக்ட் எனப்படும் பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனம் கேரள மாநிலம் உத்யோகமண்டலில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் 1943ல் நிறுவப்பட்டது. பாக்ட் நிறுவனம் உரத் தயாரிப்பு, கேப்ரோலாக்டம் உற்பத்தி மற்றும் இன்ஜினியரிங் கன்சல்டன்சி, பாப்ரிகேஷன் எக்விப்மென்ட் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் அப்ரெண்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் மெக்கானிகலில் 11ம், கெமிக்கலில் 11ம், எலக்ட்ரிகலில் 5ம், சிவிலில் 5ம், இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 4ம், கம்ப்யூட்டரில் 4ம் காலியிடங்கள் உள்ளன. டெக்னீசியன் (வொகேஷனல்) அப்ரென்டிசஸ் பிரிவில் ஆபிஸ் செக்ரடரிஷிப்பில் 5ம், அக்கவுன்டன்சி அண்டு ஆடிட்டிங்கில் 5ம், சிவில் கன்ஸ்ட்ரக்சன் அண்டு மெயின்டனென்ஸில் 5ம் காலியாக உள்ளன.
வயது: 01.08.2015 அடிப்படையில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவு விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராகவும், டெக்னீசியன் (வொகேஷனல்) அப்ரென்டிஸ் பிரிவு விண்ணப்பதாரர்கள் 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: கிராஜூவேட் டிரெய்னி பிரிவுக்கு மெக்கானிகல், எலக்ட்ரிகல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை 01.08.2015 அடிப்படையில் கடந்த மூன்று வருடங்களுக்குள் முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் (வொகேஷனல்) அப்ரென்டிஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அக்கவுன்டன்சி அண்டு ஆடிட்டிங், சிவில் கன்ஸ்ட்ரக்சன் அண்டு மெயின்டனென்ஸ், ஆபிஸ் செக்ரட்டரிஷிப் ஆகிய ஏதாவது ஒன்றில் பிளஸ் டூ அளவிலான வொகேஷனல் டிரேடு சர்டிபிகேட் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டைபண்டு: கிராஜூவேட் டிரெய்னிக்கு மாதம் ரூ.4 ஆயிரத்து 984/- மற்றும் டெக்னீசியன் (வொகேஷனல்) டிரெய்னிக்கு மாதம் ரூ.2 ஆயிரத்து 758ம் ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை: தகுதிக்கான படிப்பிற்கு 50 சதவிகிதமும், எழுத்துத் தேர்வுக்கு 50 சதவிகிதமும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 23, 24, 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் விண்ணப்பிக்கும் பிரிவுக்கான தேதியில் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். முழுமையான விபரங்களை இணையதளத்தில் இருந்து அறிந்து அதன் பின்னர் இப்பதவிகளுக்கு தயாராகவும்.
SOURCE : DINAMALAR