Sunday, 17 May 2015

INDIAN HIGH COURT JUDGE PDF IMPORTANT POINTS FOR TNPSC TET TRB EXAM

இந்திய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இந்தியாவின் நீதியாண்மை அமைப்பு அதன் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டதாகும். இதன் படி அமைக்கப்பட்ட 21 இந்திய உயர் நீதிமன்றங்கள் தத்தம் வரம்பிற்குட்பட்ட மாநிலங்களில் நீதிமுறைப் பணிகளை செலுத்துகின்றன.இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகள் இவற்றின் நீதியாண்மையின்கீழ் வருகின்றன. வரையரை உயர்நீதிமன்றங்களுக்கு கீழ் உரிமை இயல் (சமூக நலன்) நீதிமன்றங்கள் (சிவில்), குடும்ப நல நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் (கிரிமினல்) மற்றும் இதர மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. தண்டணை அதிகாரம் உயர்நீதிமன்றங்களின் மூல நீதிமுறைமையின் முதன்மையானது மாநிலத்தின் உரிமை இயல்(சமூக நலன்) நீதிமன்றங்களை உள்ளடக்கியது ஆகும். மற்றும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள், மரண தண்டணை விதிக்கக்கூடிய குற்றங்களை விசாரிப்பதும் அகும். விசாரணை அதிகாரம் கீழ் நீதிமன்றங்களால் வழங்கப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் (writ-ரிட்) அழைப்பாணை மனுக்கள் போன்ற வழக்குகளை இந்திய அரசியல் சட்ட விதி 224-ன் படி விசாரணை செய்யும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உயர்நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 4, அத்தியாயம் 5, விதி 214 ன் படி நிறுவப்பட்டுள்ளன. ஒய்வு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதிகள் இவர்களின் தகுதியாவன இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம், குறைந்த பட்சம் 5 வருடகாலத்திற்காகவது உயர்நீதிமன்றம் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியிருக்கவேண்டும்., அல்லது உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் குறைந்தது 10 வருடங்களுக்காவது பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது மேன்மை வாய்ந்த சட்டநிபுணர் என்று குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றவர் ஆக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் பல சிறப்புகளின் அடையாளமாக சமய வேறுபாடுகளை களைந்த மன்றமாக உள்ளது. பல சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர். இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரும்,(அ) முதன்மை ஆதரவுரைஞர் (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா) இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76 இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களில் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை.\ நடுவண் அரசு வழக்குரைஞர் இவருக்குத் துணைபுரிய நடுவண் அரசு வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் நடுவண் அரசு கூடுதல் வழக்குரைஞர் (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர். தற்பொழுதய இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் திரு மிலன் பானர்ஜி . இவர் 2004முதல் இப்பதவி வகிக்கின்றார். நீதிபரிபாலணை: உச்ச நீதிமன்றம் மூன்று நீதி பரிபாலணைகளை கையாள்கின்றது. மூல நீதிபரிபாலணை, மேல்முறையீட்டு நீதிபரிபாலணை மற்றும் ஆலோசணைக் குழு நீதிபரிபாலணை. மூல நீதிபரிபாலணை : இந்திய அரசு மற்றும் அதன் ஒன்று (அ) ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்கள்,(அ) இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் இடையே ஏற்படுகின்ற சச்சரவுகளை தீர்த்து வைக்கின்றது. கூடுதலாக அரசியல் சாசனப் பிரிவு 32 ல் கூறியுள்ளபடி அந்த்தந்த மாநிலங்களின் அடிப்படை உரிமைகளைகட்டாயப்படுத்துகின்றது. அழைப்பாணை (ரிட்) மனுக்கள், அழைப்பாணை (ரிட்) மூலம் கோரப்படும் ஆட்கொணர்வு மனு (ஏபியஸ் கார்பஸ்) , தடைச்சட்டம் (புரோகிபிசன்), பதவி ஆதிகாரத்தை நிருபிக்கும் ஆணை (கோ வாரண்டோ), மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் செர்டியோரேரி போன்ற ஆணைகளை வழங்க சட்டரீதியான உரிமைபெற்றிருக்கும் நீதிபரிபாலணையைக் கொண்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிபரிபாலணை உயர் நீதிமன்றங்கள் விதி 132 (1), 133 (1) அ 134 களின்படி அவைகளால் வழங்கப்பட்ட உரிமை இயல் (சிவில்-சமூக நலன்) மற்றும் குற்றவியல்தீர்ப்புரைகளை,தீர்ப்பாணைகளை (அ) இறுதி தீர்ப்பாணைகளை உச்ச நீதிமன்றங்களில் அரசியல் விதிக்குட்பட்ட, சட்டவிதிகளுக்குட்பட்ட வழக்குகளை மேல்முறையீடு செய்யப் பரிந்துறைக்கின்றன. உச்ச நீதிமன்றம் சிறப்பு விடுமுறைகளை மேல்முறையீடுசெய்யும் அவகாசகாலமாக இராணுவ நீதிமன்றங்களைத் தவிர பிற நீதிமன்றங்களுக்கு வழங்குகின்றது. பாரளுமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிபரிபாலணத்தின் விரிவாக்கத்திற்காக இதற்கான சிறப்பு அதிகாரம் விதி 1970 கீழ் வழங்கப்பட்டது. ஆலோசனைக்குழு நீதிபரிபாலணை இந்தியக் குடியரசுத்தலைவரின் பேரில் அமைந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143 ன் கீழ் உச்சநீதிமன்றம் சிறப்பு ஆலோசனைக்குழு நீதிபரிபாலணத்தைப் பெற்றுள்ளது. 1. மூலப் பெயர் ஆக்ரா. பின் 1875 ல் அலகாபாத்துக்கு மாற்றப்பட்டது. 2. லாகூர் உயர் நீதிமன்றம் நிலைநாட்டபெபெற்ற ஆண்டு 1919-03-21. நீதிபரிபாலண எல்லைகளின் நீட்சியாக பிரிக்கப்படாத பஞ்சாப் ம்ற்றும் தில்லி வரை கொண்டுள்ளது.. 1947-08-11 ல் பஞ்சாப் உயர்நீதிமன்றம் தனியாகப் பிரிக்கப்பட்டு அதன் அமர்வுகள் இந்திய சுயாட்சி சட்டம், 1947 சிம்லாவில் தொடங்கப்பட்டு அதன் நீதிபரிபாலணை நீட்சிகளாக பஞ்சாப், தில்லி மற்றும் தற்பொழுதய இமாச்சலப் பிரதேசம் மற்றும் அரியானா. 1966 ல் பஞ்சாப் மறு சீரமைப்புக்குப் பிறகு பஞ்சாப்மற்றும் அரியானா உயர்நீதிமன்றமாக செயல்பாட்டைத் துவங்கியது. தில்லி உயர் நீதிமன்றம 1966-10-31 ல் சிம்லாவுடன் நிலைநாட்டப் பெற்றது அதன் இருக்கை சிம்லாவில் இருந்தது. 3. இதன் மூலப் பெயர் அசாம் உயர் நீதிமன்றம் மற்றும் நாகாலாந்து, 1971 ல் வட கியக்கு மறு சீரமைப்பு சட்டம், 1971 ன்படி கௌகாத்தி உயர் நீதிமன்றமாகப் பெயர் மாற்றம் கண்டது. 4. ஸ்ரீநகர் கோடைக்காலத் தலைமையகம், ஜம்மு குளிர்காலத் தலைமையகம். 5. Jump up↑ மூலப் பெயர் மைசூர் உயர் நீதிமன்றம், 1973 ல் கர்நாடகா உயர் நீதிமன்றம் என்று மாற்றம் கண்டது.. 6. திருவாங்கூர்-கொச்சின் உயர் நீதிமன்றமாக ஜூலை 7, 1949, ல் துவங்கப்பட்டது. கேரள மாநிலம் அமைந்த பிறகு, மாநில மறு சீரமைப்பு சட்டம், 1956 ன் படி, திருவாங்கூர்- கொச்சின் உயர்நீதிமன்ற சட்டத்தை நீக்கி கேரள உயர் நீதிமன்றமாக பெயர் மாற்றம் கொண்டது. இதன் நீதீபரிபாலணமும் கேரலாவிலிருந்து லட்சத்தீபம் வரை நீட்சிக் கொண்டது. 7. இந்திய அரசு சட்டம், 1935 ன் மைய அதிகாரத்தின் கீழ் 2-1-1936 அன்று வழங்கப்பட்ட காப்புரிமை பத்திரத்தின்படி உயர் நீதிமன்றம் நாக்பூரில் நிர்மானிக்கப்பட்டது. 1956 ல் மாநில மறு சீரமைப்புக்குப் பின் இந்த உயர் நீதிமன்றம் ஜபல்பூருக்கு மாற்றப்பட்டது. 8. மூலப் பெயர் பஞ்சாப் உயர் நீதிமன்றம், 1966 ல் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றமாக பெயர் மாற்றம் கொண்டது. சமீபத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியில் அமர்த்தப்பட்டவர்கள்:- 1] 05/08/2014 – 04/12/2017 – கல்கத்தா – எஸ்எம்டி.மஞ்சுளா செல்லூர் . 2] 21/04/2014 – 13/04/2017 – டெல்லி –எஸ்எம்டி.கோர்லா ரோகினி . 3] 31/07/2014 – 16/06/2020 – உத்தர்காண்ட் –குட்டியில் மேத்யு ஜோசப். 4] 00/12/2014 – 31/07/2015 – பாட்னா – லிங்கல நரசிம்ம ரெட்டி. 5] 06/08/2014 – 28/02/2015 – ஒரிஸ்ஸா –அமிதவா ராய். 6] 10/07/2014 – 09/06/2016 – மணிப்பூர் – எல்கே.மோகபத்ரா. 7] 26/07/2014 – 25/12/2020 – மெட்ராஸ் – சஞ்சய்கிஷன் கவுல். 8] 01/11/2014 – 06/10/2016 – ஜார்கண்ட் –வீரேந்தர் சிங். மாநிலம் அ யூனியன் பிரதேசம் நீதிமன்றம் நகரம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கல்கத்தா உயர் நீதிமன்றம் கொல்கத்தா அருணாச்சலப் பிரதேசம் கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி ஆந்திரப் பிரதேசம் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஐதராபாத் அசாம் கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி பீகார் பாட்னா உயர் நீதிமன்றம் பாட்னா சத்தீஸ்கர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் பிலாஸ்பூர் சண்டிகார் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் சண்டிகார் தாத்ரா மற்றும் நாகர் அவேலி பம்பாய் உயர் நீதிமன்றம் மும்பை டாமன் மற்றும் டையூ பம்பாய் உயர் நீதிமன்றம் மும்பை தில்லி பிரதேச தேசியத் தலைநகரம் தில்லி உயர் நீதிமன்றம் புது தில்லி கோவா பம்பாய் உயர் நீதிமன்றம் மும்பை குஜராத் குஜராத் உயர் நீதிமன்றம் அகமதாபாத் அரியானா பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் சண்டிகார் இமாச்சலப் பிரதேசம் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் சிம்லா ஜம்மு மற்றும் காஷ்மீர் ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றம் ஸ்ரீநகர்/ஜம்மு ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ராஞ்சி கர்நாடகா கர்நாடகா உயர் நீதிமன்றம் பெங்களூர் கேரளா கேரளா உயர் நீதிமன்றம் கொச்சி இலட்சதீபம் கேரளா உயர் நீதிமன்றம் கொச்சி மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ஜபல்பூர் மகாராஷ்டிரம் பம்பாய் உயர் நீதிமன்றம் மும்பை மணிப்பூர் கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி மேகாலயா கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி மிசோரம் கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி நாகாலாந்து கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி ஒரிசா ஒரிசா உயர் நீதிமன்றம் கட்டாக் புதுவை அ (பாண்டிச்சேரி) மதராஸ் உயர் நீதிமன்றம் சென்னை பஞ்சாப் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் சண்டிகார் இராஜஸ்தான் இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜோத்பூர் சிக்கிம் சிக்கிம் உயர் நீதிமன்றம் காங்டக் தமிழ் நாடு மதராஸ் உயர் நீதிமன்றம் சென்னை திரிபுரா கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி உத்தர்காண்ட் உத்தர்காண்ட் உயர் நீதிமன்றம் நைனிடால் உத்தரப்பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றம் அலகாபாத் மேற்கு வங்காளம் கல்கத்தா உயர் நீதிமன்றம் கொல்கத்தா · முதல் பெண் நீதிபதி முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி 1987 ல் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து சுஜாதா மனோகர், ரூமா பால் பெண் நீதிபதிகளாகப் பதவி வகித்தனர். இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள்[36] வ.எண் முன்னாள் தலைமை நீதிபதிகள் 1 நீதியரசர் எச். ஜே. கனியா 2 நீதியரசர் எம். பி. சாஸ்திரி 3 நீதியரசர் மெர் சந்த் மகாஜன் 4 நீதியரசர் பி. கே. முகர்ஜி 5 நீதியரசர் சுதி இரஞ்சன் தாஸ் 6 நீதியரசர் புவனேஸ்வர் பிரசாத் சின்கா 7 நீதியரசர் பி. பி. கஜேந்திரகட்கர் 8 நீதியரசர் ஏ. கே. சர்க்கார் 9 நீதியரசர் கே. சுப்பா ராவ் 10 நீதியரசர் கே. என. வான்சூ 11 நீதியரசர் எம். இதயத்துல்லா 12 நீதியரசர் ஜே. சி. ஷா 13 நீதியரசர் எஸ். எம். சிக்ரி 14 நீதியரசர் ஏ. என். ராய் 15 நீதியரசர் மிர்சா எமதுல்லா பேக் 16 நீதியரசர் ஒய். வி. சந்திரகுட் 17 நீதியரசர் பி. என். பகவதி 18 நீதியரசர் ஆர். எஸ். பதக் 19 நீதியரசர் இ. எஸ். வெங்கட்டராமய்யா 20 நீதியரசர் எஸ். முகர்ஜி 21 நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா 22 நீதியரசர் கே.என். சிங் 23 நீதியரசர் எம். எச். கனியா 24 நீதியரசர் எல். எம். சர்மா 25 நீதியரசர் எம். என். வெங்கட்டசலய்யா 26 நீதியரசர் ஏ. எம். அகமதி 27 நீதியரசர் ஜே. எஸ். வர்மா 28 நீதியரசர் எம். எம். பன்சி 29 நீதியரசர் ஏ. எஸ். ஆனந் 30 நீதியரசர் எஸ். பி. பரூச்சா 31 நீதியரசர் பி. என். கிர்பால் 32 நீதியரசர் ஜி. பி. பட்நாயக் 33 நீதியரசர் வி.என். கரே 34 நீதியரசர் இராஜேந்திர பாபு 35 நீதியரசர் ஆர். சி. லகோட்டி 36 நீதியரசர் ஒய்.கே. சபர்வால் நீதிப் பேராணைகள் : இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன. ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே, நீதிப் புனராய்வு என்று பெயர். அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் அவசரக் காலங்களில்,இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும். மற்ற சூழ்நிலைகளில், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால், பாதிக்கப் பட்டவர் பின்வரும் நீதிப் பேராணைகள் வழியாக, நீதியை உச்சநீதி மன்றத்திலோ(அரசியலமைப்பு உட்பிரிவு(சரத்து)-32 வழியாக), உயர்நீதி மன்றத்திலோ (உட்பிரிவு-226 வழியாக)பெற முடியும். இதற்கு ஐந்து வகையான நீதிப் பேராணைகள் தீர்வு உள்ளன.அவை 1.ஆட்கொணர் நீதிப்பேராணை,2.கட்டளை நீதிப்பேராணை,3.தடை நீதிப்பேராணை,4.உரிமைவினா நீதிப் பேராணை,5.தடைமாற்று நீதிப்பேராணை என அழைக்கப்படுகின்றன. · 1 ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus) · 2 கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus) · 3 தடை நீதிப்பேராணை (Writ of Prohibition) · 4 உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto) · 5 தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Certiorary) · ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus) : தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை, இல்லையேல் அவரைவிடுதலை செய்ய வேண்டும்.வேறுபாடு:நீதிமன்ற அழைப்பாணை இட்டும் நீதிமன்றம் காவல்துறையினரை, குறிப்பிட்ட நபரை அழைத்து வர ஆணையிடலாம். அவ்வாறு அழைக்கப்படும் நபர் சட்டக் கடமைமீறலைச் செய்தவர் ஆவார். ஆனால், இந்த நீதிப் பேராணை, சட்ட உரிமைக்காக வழங்கப்படுகிறது. கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus) : ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார். தடை நீதிப்பேராணை (Writ of Prohibition) : நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து, அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்பதாகும். உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto) : பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக் கையின் அடிப்படையில், அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும். தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Certiorary: நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச் செயல்முறைகளையும் ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச் செய்வதாகும்.

POLITICAL SCIENCE IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD : POLITICAL SCIENCE,  STUDY MATERIALS , 
POTHU TAMIL MATERIALS TAMIL PDF. 
POLITICAL SCIENCE  TAMIL  MATERIALS,
TNPSC GROUP 2 POLITICAL SCIENCE  MATERIALS , 
TNPSC GROUP 2A POLITICAL SCIENCE STUDY MATERIALS. 
TNPSC GROUP 4 POLITICAL SCIENCE STUDY MATERIALS, 
TNPSC GROUP 7 POLITICAL SCIENCE STUDY MATERIALS ,
TNPSC VAO POLITICAL SCIENCE STUDY MATERIALS .



HIGH COURT JUDGE
















TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment