Type Here to Get Search Results !

5th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS



5th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்
  • தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 2021-ல் அகழாய்வுப் பணி தொடங்கியது. 
  • இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கு நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டிவைத்து, இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை திறந்துவைத்தார். 
  • ஆதிச்சநல்லூரில் இரு இடங்களில் அகழாய்வு நடைபெற்ற குழிகளுக்கு மேல் கண்ணாடித் தளம் அமைத்து, அங்கு கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
6.4 லட்சம் கிராமங்களை இணைக்கும் பிராட்பேண்ட் சேவை திட்டத்துக்கு ரூ.1.39 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
  • டெல்லியில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , நாட்டில் 6.4லட்சம் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ஆப்டிகல் பைபர் அடிப்படையிலான பிராட் பேண்ட் இணைப்பை வழங்குவதற்காக ரூ.1.39லட்சம் கோடி வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • பாரத்நெட் திட்டத்தின் கீழ் தற்போது வரை சுமார் 1.94லட்சம் கிராமங்கள் பிராட் பேண்ட் இணைப்பை பெற்றுள்ளன. மீதமுள்ள கிராமங்கள் இன்னும் இரண்டரை ஆண்டுகளில் பிராட்பேண்ட் இணைப்பை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • கிராம அளவிலான தொழில்முனைவோர் உடன் இணைந்து அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ஒரு பிரிவான பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் மூலமாக இது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 
  • இதற்கான சோதனை திட்டத்தில் 60ஆயிரம் கிராமங்களில் 3.51லட்சம் இணைப்புக்களை வழங்குவதற்கு 3800 தொழில்முனைவோர் ஈடுபடுத்தப்பட்டனர். 
  • ஒரு மாதத்திற்கான இன்டர்நெட் நுகர்வானது ஒரு வீட்டிற்கு 175ஜிகாபைட் அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • பிஎஸ்என்எல் மற்றும் உள்ளூர் தொழில்முனைவோர் இடையே 50 சதவீத வருவாய் பகிர்வு அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. மாதாந்திர பிராட் பேண்ட் திட்டமானது 
  • ரூ.399ல் இருந்து தொடங்குகின்றது. அரசின் இந்த திட்டத்தின் மூலமாக 2.5லட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தரநிலைப்படுத்துதல் மற்றும் இணக்க மதிப்பீட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 35 நிறுவனங்களுடன் இந்திய தர நிர்ணய நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
  • தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய நிறுவனம், தரநிலைப்படுத்துதல் மற்றும் இணக்க மதிப்பீட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 
  • இந்த நிறுவனங்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சில முக்கிய தேசிய தொழி்நுட்ப நிறுவனங்கள் (என்.ஐ.டி.) அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அடங்கும்.
  • தேசிய மற்றும் சர்வதேச நிலையில் தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து செயல்படுவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு ஆதரவு, தரப்படுத்தல் மற்றும் இணக்க மதிப்பீடு குறித்த நிகழ்வுகளை கூட்டாக ஏற்பாடு செய்வது போன்றவற்றுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
உலக வில்வித்தையில் தங்கம் வென்று அதிதி சாதனை
  • ஜெர்மனியின் பெர்லின் நகரில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 
  • இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் 17 வயதான இந்திய வீராங்கனை அதிதி சுவாமி இறுதிப் போட்டியில் மெக்சிகோவின் ஆண்ட்ரியா பெசெராவை எதிர்த்து விளையாடினார்.
  • இதில் அதிதி சுவாமி 149-147 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
  • அதிதி சுவாமி கடந்த ஜூலை மாதம் அயர்லாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தார். 
  • தற்போது சீனியர் பிரிவில் அவர், உலக சாம்பியன்ஷிப்பில் வாகை சூடி உள்ளார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும், உலக அளவில் இளம் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் அதிதி சுவாமி.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் - இந்திய அணிக்கு தங்கம்
  • உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. 
  • இதில் விளையாடிய இந்திய அணியில் இடம்பிடித்த ஜோதி சுரேகா, அதீதி ஸ்வாமி, பர்னீத் கெளர் ஆகியோர், மெக்சிகோவின் டாஃப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன் மற்றும் ஆண்ட்ரியா பெசெரா ஆகியோர் இறுதிப்போட்டியில் வீழ்த்தினர்.
  • 235-229 என்ற புள்ளி கணக்கில் இந்திய வெற்றி பெற்ற நிலையில், முதல் முறையாக உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel