Type Here to Get Search Results !

TNPSC SHOUTERS JANUARY CURRENTS AFFAIRS AND GK QUESTIONS 2017 IN TAMIL

TNPSC SHOUTERS JANUARY CURRENTS AFFAIRS 2017 EBOOK

TNPSC SHOUTERS JANUARY CURRENTS AFFAIRS


HI TNPSC SHOUTERS, TODAY WE UPDATED JANUARY CURRENTS AFFAIRS AND GK QUESTIONS 2017 E-BOOK  ..
  • PLEASE PUT YOUR MAIL ID BELOW OUR COMMENTS BOX..OR SEND UR MAIL ID TO tnpscshouters@gmail.com
  • COST : FREE {ONLY FOR OUR FOLLOWERS}
  • JAN 31 ST , WE WILL SEND TO...

TNPSC SHOUTERS JANUARY CURRENTS AFFAIRS

JANUARY CURRENTS AFFAIRS AND GK QUESTIONS 2017
  • தான்சானியா நாட்டிற்கு பரிசோதனை முயற்சியாக ட்ரோன் எனும் ஆளில்லாத விமானங்களின் மூலம் ரத்தம் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்ப இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது
  • ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமை நிர்வாகி எக்கல்ஸ்டோன் நீக்கப்பட்டுள்ளார்
  • தமிழகத்திலேயே முதல்முறையாக நடமாடும் பால் குளிரகம் ஈரோடு மாவட்டத்தில் ( மஞ்சளாநாயக்கனூரில்) தொடங்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் நடைபெற்ற தட்டு எறிதல் போட்டியில் சி.செந்தில்குமார் தங்கம் வென்றுள்ளார்
  • கர்நாடகா மாநிலத்தின் பாரம்பரிய திருவிழாவானா கம்பளா என்ற பெயரில் எருமை பந்தயங்கள் மீண்டும் நடக்க வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது
  • பிலிப்பைன்ஸ் த.நகர் மணிலாவில் நடக்க உள்ள மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் ரோஷ்மிதா பங்கேற்க உள்ளார்
  • சையத் மோடி பேட்மிட்டன் தொடர் லக்னோ உ.பி யில் நடக்கஉள்ளது
  • ஐ கார் என்ற புதிய நவீன புதிய வடிவமைப்பிலான காரை ஆப்பிள் நிறுவனம் 2020ககுள் அறிமுகம் செய்ய உள்ளது
  • கலாக்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்றது
  • இரண்டு நாட்கள் நடைபெற்ற ஒட்டக கண்காட்சி திருவிழா பிகானிரில் நடைபெற்றது
  • பணமில்லா பரிவர்த்தனைக்காக #டிஜிட்டல்_தகியா திட்டத்தை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் துவங்கப்பட்டுள்ளது
  • Global passport index  -இந்தியாவின் தரம் 78
  • டிட்டூ என்ற பெயரில் தொலைக்காட்சி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவையை துவக்கியுள்ளது
  • டோனால்ட் ட்ரம் பதவியேற்றதை தொடர்ந்து Federal Communications Commission ன் தலைவராக அமெரிக்கா வாழ் இந்தியரான அஜித் பாய் நியமிக்கப்ட்டுள்ளார்
  • 850 மெகா வாட்திறன் கொண்ட உலகின்மிகப் பெரிய சோலார்பூங்காவை சீனா நாடு அமைத்துள்ளது
  • ஒரே நேரத்தில் 103செயற்கைகோளை தாங்கிச்செல்லும் PSLV (C37) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில ஏவ உள்ளது
  • கலிபோர்னியாவில் நடக்கும் சர்வதேச Borrego Springs திரைப்படதிருவிழாவில் Saanjh ( ஹிமச்சாலி மொழி) best feature film விருதுக்கு தேர்வாகியுள்ளது
  • ஜனவரி 24 தேசியபெண்குழந்தைகள் தினம்-கருபெருள் : Empowerment of Girl Child
  • ஆலன் பார்டர் பதக்க விருதினை டேவிட் வார்னர் பெற்றுள்ளார்
  • Geospatial World Forum 2017 வரும் ஜனவரி 25வரை ஹைதராபாத்தில் நடக்க உள்ளது
  • இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்தியம் சார்பில் "கடலில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி சென்னை அருகே நடுக்கடலில் ஜனவரி 22ல்  நடைபெற்றது.
    இந்திய கடற்படையிலிருந்து கடலோரக் காவல்படை 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தனியாக பிரிக்கப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில் பிப்.1-ஆம் தேதி கடலோரக் காவல்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 41-வது கடலோரக் காவல்படை தினம் வரும் பிப்.1 அன்று கொண்டாடப்பட உள்ளது.
    இதன் ஒரு பகுதியாக கடலோரக் காவல்படையின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள், படையினரின் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் அறிந்து கொள்வதற்காக "கடலில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி  நடைபெற்றது.

தேசிய பாலார் தூய்மைத் திட்டம்

பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நாட்டின் மாபெரும் தூய்மை திட்டமாக மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2, 2014 அன்று தன் கையில் துடைப்பம் கொண்டு தூய்மை இந்தியா என்ற திட்டத்தை மிகுந்த ஆரவாரத்துடன் தொடக்கி வைத்தார்.மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பாலர் தூய்மைத் திட்டம் குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று தொடங்கப்பட்டது.குழந்தைகளுக்கு பள்ளிகளில் விளையாட்டுகள், பாடல்கள், கதை, உரையாடல்கள் மூலம்
  1. தூய்மையான பாலர் பள்ளிகள்
  2. தூய்மையான சுற்றுப்புறங்கள்
  3. தன்னைத்தானே தூய்மையாக வைத்துக்கொள்வது
  4. தூய்மையான உணவு
  5. சுத்தமான குடிநீர்
  6. தூய்மையான கழிப்பிடங்கள்
போன்ற சுகாதார அறிவை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய பாலர் தூய்மைத் திட்டம் வகுக்கப்பட்டது.


குழுக்கள் (Oct,nov dec and jan 2017)
# ஸ்ரீ ஜெகன் குழு- தெரு நாய்கள் கடித்து மனித உயிர்கள் பலியாவது பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# M L Sharma குழு- CBI முன்னாள் இயக்குநர் இரஞ்சித் சின்ஹாவுக்கு எதிரான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு
# MATA PRASAD  குழு- மின்கடத்துதல்களை சீரமைத்து பொருளாதார கொள்கை அடிப்படையில் மின்சாரம் வழங்குவது தொடர்பான பரிந்துரையை அரசுக்கு வழங்கிய குழு
# K S  வால்டியா குழு- சரஸ்வதி நதியை பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
#  L நரசிம்ம ரெட்டி குழு- இராணுவ வீரர்களுக்கான "One rank One Pension" தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு
# முனியலப்பா குழு- இந்தியாவில் பறவை காய்ச்சல் நிலை பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# ஜீஎஸ் ஜா குழு- காவிரி நதிநீர் பாசனப் பகுதியில் நீர்நிலை குறித்து ஆராய மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு
# K N BASHA குழு- தமிழகத்தில் ஆம்னி பஸ்(Omni bus) கட்டணங்கள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# கைலாஷ் காம்பிர் குழு- இரவில் தங்கும் இடம் இல்லாமல் அவதிப்படுபவர்கள்(Night Shelters) நிலை குறித்து ஆராய உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு
# அமிதாப் கன்ட் குழு- அனைத்து அரசு குடிமகன்களின்(govt citizens) பணபரிவர்த்தனையை டிஜிட்டல் மயமாக்க அமைக்கப்பட்ட குழு
# Ratan P Watal குழு- டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிப்பது பற்றி ஆராய நிதி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு
# சந்திரபாபு நாயுடு குழு- டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிப்பது மற்றும் அதனை பற்றி ஆராய NITI Aayogல் அமைக்கப்பட்ட குழு
# அஜித் மோகன் குழு- இணைய திருட்டு பற்றி ஆராய IAMAIல் அமைக்கப்பட்ட குழு
IAMAI- Internet and Mobile Association Of India

# A K Bajaj குழு- கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# பிரவின் வசிஸ்தா குழு- வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய "பிரவின் வசிஸ்தா" ( Praveen Vashishtha) தலைமையில் மத்திய அரசு தமிழகத்திற்கு குழு ஒன்றை அனுப்பியுள்ளது
# B N Srikrishna குழு-நிறுவனமயப்படுத்துதல் தொடர்பான தீர்ப்புகளை வழங்கும் நடுவர் மைய இயங்கமைப்பை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு
# அஜய் தியாகி குழு- நிதி தகவல் மேலாண்மை மையத்தை(Financial Data Management Centre) அமைப்பது பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு

# ஈஸ்வர் குழு- வருமான வரி சட்டங்களை எளிமையாக்க அமைக்கப்பட்ட குழு

#  Injeti srinivas  குழு- மத்திய விளையாட்டு துறையை மேம்படுத்தவும் விளையாட்டு துறையின் ஆளுமையை நெறிப்படுத்தவும் அமைக்கப்பட்ட குழு
# Sumit Bose குழு- சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பை(Socio economic and  caste census) மத்திய அரசுக்கு சமர்பித்த குழு
# Timothy Gonsalves குழு- IIT களில் 20% பெண்களுக்கு வழங்குவதை பரிந்துரைத்த குழு
# N K Singh குழு- நிதிசார் பொறுப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை மேலாண்மை (Fiscal Respobsiblity and Budget Management-FRBM) பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# திவாலாகி கடனை திருப்பி தர முடியாத நிறுவனங்களை சீரமைக்க Insolvency and Bankruptcy Board Of India 2 குழுக்களை அமைத்துள்ளது
1. கடன் அளிக்கும் சேவையாளர்களுக்கொ ஆலோசனை வழங்க "Mohandas Pai" தலைமையில் ஒரு குழுவும்

2. பெறுநிறுவனங்களின் திவால் பிரச்சினையை முடிவுகட்ட "Uday Kotak" தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது


இன்று தேசிய வாக்காளர் தினம்! 25/1/2017
    ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்தை முன் வைத்து இந்நாளைக் கொண்டாடும்படி தேர்தல் கமிஷன் வலியுறுத்துகிறது.
     அதன்படி, இன்று ஏழாவது தேசிய வாக்காளர் தினத்தின் மையக்கருத்து, "மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல்" என்பதாகும். 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களும், இதுவரை ஓட்டளிக்காத இளைய வாக்காளர்களும், ஓட்டளிக்கும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஊக்குவிக்கிறது தேர்தல் கமிஷன்.
      வாக்காளர் பட்டியலில் பெயர் இணைத்து ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், பள்ளிகள் தோறும் பல்வேறு போட்டிகளும், சிந்திக்க வைக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
       இன்றைய தினத்தை முன்னிட்டு ‘Dehradun Votes’ என்ற செயலியும் ப்ளே ஸ்டோரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


2017 ஆம் ஆண்டிற்கான இஸ்லாமிய கலாச்சார நகரங்கள்
முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஆசிய, அரபு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து, ஆண்டுதோறும் ஒரு நகரத்தை இஸ்லாமியர்களின் கலாச்சார தலைநகராக அறிவிக்க வேண்டும் என கடந்த 2011ஆம் ஆண்டு ISESCO அமைப்பினால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஆசியாவின் கலாச்சார தலைநகராக ஈரானில் உள்ள மஷாட்டும், அரபு நாடுகளில் இருந்து ஜோர்தான் தலைநகர் அம்மானும், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து உகண்டா தலைநகர் கம்பாலாவும் முஸ்லீம்களின் கலாச்சார நகரங்களாக தேர்வு.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தானியங்கி பேருந்து சேவையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
(130 மீட்டர் தொலைவிற்கு இயங்கும் இந்த தானியங்கி பேருந்தில் 10 பயணிகள் வரை பயணிக்க முடியும். )

★ செய்தி சிதறல்கள் ★ 

01) சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க "சமாதான்' என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

02) 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் எதிர்நோக் கும் கற்றல் திறன்களை மதிப்பிடு வதற்கான அளவுகோல்களை வரைமுறைப்படுத்தும், ‘கற்றல் திறன் மதிப்பிடல் திட்டம்’ அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
03) ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள, சண்டிபூர் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, அதிநவீன, 'பினாகா ராக்கெட் மார்க் 2' நேற்று (24-01-17) சோதனை முறையில் ஏவப்பட்டது. ராணுவ பயன்பாட்டில், எதிரியின் இலக்கை துல்லியமாக கணிப்பது, இலக்கை மாற்றுவது உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளில் இவ்வகை ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகிறது.
04) மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் மூலம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நடமாடும் பால்குளிரகம் தமிழ்நாட்டிலேயே ஈரோடு மாவட்டத்தில்  முதன் முதலாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
05) 850 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய சூரிய மின் ஆலையை கிங்காய் (Qinghai province) மாகாணத்தில் சீனா அமைத்துள்ளது.

செய்தி துளிகள் 
01) 28th Dantan Gramin Mela ,  குடியரசுத்தலைவரால்  மேற்கு வங்கத்தில்  ஜனவரி 19ல்  துவக்கி வைக்கப்பட்டுள்ளது..
02) ம.பி. மாநில முதல்வரால் ஆனந்தம் திட்டம்  துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி வறியோர்க்கு   , வசதி படைத்தோரிடம் பெற்று  உதவுவது ஆகும். இதற்காக ஆனந்த்  என்ற  துறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது..
03) Jackself என்ற தன்னுடைய படைப்புகளுக்காக பிரிட்டனின்  Jacob Polley, 2016 T S Eloit பரிசு  வென்றுள்ளார்..
04) 2017 டெல்லி ஓபன் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தஜிகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த Farrukh Amonatov வென்றுள்ளார்..
05)  Pro Wrestling League 2017 தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் ராயல்ஸ் அணி  , ஹரியானா  ஹேம்மர்ஸ் அணியை  தோற்கடித்து சாம்பியன்  பட்டம்  வென்றுள்ளது..
06) International Symposium on Medicinal and Aromatic plants of India மாநாடு டெல்லியில் நடைபெற்று  முடிந்துள்ளது.
Cashless Island  --  Karang
இந்தியாவில்  ரொக்க பரிவர்த்தனை இல்லாத முதல்  தீவு  என்ற  பெருமையை மணிப்பூர்  மாநிலம் லோக்டக் ஏரியில் அமைந்துள்ள "  கரங் ( Karang ) " தீவு பெற்றுள்ளது

செய்தி துளிகள் 
==============
.
1) மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ். ஜெய்சங்கரின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

[ வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக்காலம் வரும் 28-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.]
.
2) மத்திய பொருளாதாரத் துறைச் செயலர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம்  3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

[ இவரது  பதவிக்காலம் வரும் மார்ச் 31ம் தேதி நிறைவடைகிறது. தற்போது மே 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ]
.
3) நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் தொடர்புடையவர்களைச் சந்தித்துப் பேசியதாக சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தற்போதைய சிபிஐ இயக்குநர்அலோக் குமார் வர்மா   தலைமை வகிப்பார்.
.
4) அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமா அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வரும் உத்தரவில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அதிபராகப் பதவியேற்றதும் டிரம்ப் கையெழுத்திட்ட முதல் உத்தரவு இதுவாகும்.

GK QUESTIONS

  • ஆரோக்யா மித்ரா கூட்டத்தொடர் நடந்தஇடம் = சிலிச்சர்(அஸாம்)
  • ஜி20 விவாசயத்துறை அமைச்சர்களுக்கான மாநாடு நடந்த இடம்=பெர்லின் ஜெர்மனி
  • மலேசியா மாஸ்டர் க்ரான்ட்பிக்ஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் = சாய்னா நெய்வால்
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் எத்தனையாவது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது =121
  • உலகின் மிக புதுமையான நிறுவனம் 2016 பட்டியலில் முதலிடம் பெற்ற நிறுவனம் = (1) ஆப்பிள் inc. (2) கூகுல்



01) இந்தியாவின் முதல் சூரிய சக்தி படகு ,  " ஆதித்யா " வேம்பநாடு ஏரியில் ( கேரளா )    இயக்கப்பட்டுள்ளது.

02) இந்தியாவின் முதல் பெண்கள் இலக்கிய திருவிழா ( Gender Literature Festival ) ஏப்ரல் மாதம் பாட்னாவில் நடைபெற உள்ளது.
03) ஏர்டெல் பேமண்ட் வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கு இட்டு வைப்புகளுக்கு 7.25% வட்டி வழங்குகிறது.
04) ம.பி.மாநில அரசு பணமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்க Digital Dakia or Digital Post Man என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.
05) 1st Asia Pacific Broadcasting Union International Dance Festival, ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
06) மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சார்பில் SEZ India என்ற அலைபேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது.
07) Nagaland health Project க்காக உலக வங்கி  48 மில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் நிறைவு காலம் -  மார்ச் 31 / 2023
08) 58வது இந்தியா , சர்வதேச ஆடைகள் கண்காட்சி ( India International Garment Fair ) புதுடெல்லியில் நடைபெற்று முடிந்துள்ளது.
09) உலக பொருளாதார அமைப்பின் சார்பிலான , Inclusive Development Index 2017 (IDI) இந்தியா 60வது இடம் வகிக்கிறது.
10) visa free score ன் படி இந்திய பாஸ்போர்ட் 46 மதிப்பெண்களுடன் 78வது இடம் வகிக்கிறது. ஜெர்மனி, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகியன முதல் மூன்று இடத்தில் உள்ளன.

விருதுகள் - 2016

1.இந்தியாவில் மனித உரிமைக்காக போராடி வரும் வழக்கறிஞரும் தமிழருமான ஹென்றி திபேன், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பின் 8-வது மனித உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2.தெற்காசிய இலக்கியத்துக்கான டி.எஸ்.சி. விருது “ஸ்லீப்பிங் ஒன் ஜூபிட் டர்” எனும் நாவலை எழுதிய இந்தியாவின் அனுராதா ராய் வென்றுள்ளார்.
3.நீர்ஜா பானட் விருது பெங்களூருவை  சார்ந்த  சமூக  ஆர்வலரான சுபாஷினி வசந்த் அவர்களுக்கு வழங்கப்ப்பட்டுள்ளது
4. 2015 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான கி.வீரமணி விருது  -பீகார் முதல்வர்  நிதிஷ்குமார்
5. 2015 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது  - சஞ்சய் சுப்ரமணியம்
6. 2015 ஆம் ஆண்டிற்கான கோஸ்டா  நாவல் விருது - கேட் அட்கின்சன்
7. 2015 ஆம் ஆண்டிற்கான  ஹரிகிருஷ்ணா  தேவிஸ்ரீ  பால  சாகித்ய விருது  - பாலகிருஷ்ணா கார்தே 
8. 2015 ஆம் ஆண்டிற்கான  ஹரிகிருஷ்ணா  தேவ சார  பால  சாகித்ய விருது -பாலகிருஷ்ணாகார்க்
9. புற்றுநோய்  மருத்துவ  சிகிச்சையில் சிறப்பாக செயலாற்றியதற்காக  இங்கிலாந்து ராணியிடம் இருந்து நைட்வுட்  விருதினை இந்திய வம்சாவளியை சார்ந்த ஹரிபால் சிங் பெற்றார்
10. மின் ஆளுமைக்கான தேசிய விருது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வென்றுள்ளது
11. அமெரிக்க அறிவியல் பதக்கம்" = அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி ராகேஷ்  கே.ஜெயின் அறிவியல் பதக்கத்துக்கு தேர்வு
12. இந்திய வம்சாவளியை சார்ந்த ராகுல் தாக்கர் அவர்களுக்கு திரைபடங்களில்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்காக  "ஆஸ்கர் விருது " வழங்கப்பபட்டது
13. மத்திய அமைச்சர் வெங்காய நாயுடுவிற்கு "ஸ்காச் வாழ்நாள் சாதனையாளர்  விருது(scotch lifetime achievement award) வழங்கப்பட்டது
14.நூர் இனாயத் கான் பரிசு  (noor inayat khan prize) இந்தியாவை சார்ந்த கல்லூரி மாணவியான  "கீதாக்சி அரோரா "விற்கு வழங்கப்பட்டது   
15. வாழ்நாள் சாதனையாளருக்கான வி.சாந்தாராம் விருது   - நரேஷ் பேடி

16."ஆர்யபட்டா விருது" - விஞ்ஞானி அவினாஷ் சந்தர் பெற்றுள்ளார்(இந்திய அக்னி ஏவுகணை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்த இவரை "இந்தியாவின் அக்னி ஏவுகணை மனிதர் என அழைப்பர் )
  17."சர்வதேச ஆசிரியர் விருது 2016" = பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஹனன் அல் ஹரோப் தேர்வு
  
  18."உலக சமஸ்கிருத விருது" = தாய்லாந்து இளவரசி மகாசக்ரி சிரின்தோர்ன் தேர்வு
  
  19.கோல்டன் ரீல் விருது" = "இந்தியாவின் மகள்" என்ற ஆவணப்படத்திற்காக இவ்விருதைப் பெற்றவர்இரசூல் பூக்குட்டி
  
   20."தமிழக அரசின் நெசவாளர் விருது" = காஞ்சிபுரத்தை சேர்ந்த பாபு என்பவர் பெற்றுள்ளார்
   
   21."ஆர்டர் ஆப் பிரெண்ட்ஷிப்"விருது = கூடங்குளம் வளாக இயக்குநர் ஆர்.எஸ் சுந்தர் அவர்கள் தேர்வு

22.பிரெஞ்சு திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு  திரைப்படத்திற்கான விருது இந்திய இயக்குனர் "கனுபெல் "இயக்கிய  "டிட்லி " திரைப்படத்திற்கு  வழங்கப்பட்டது
23.மிஸ் ஆசியா அழகி பட்டத்தை இந்தியாவின்  "ரேவதி சேத்ரி " வென்றார்
24.பசுமை பத்திர முன்னோடி (Green Bond award ) விருது  யெஸ் வங்கிக்கு வழங்கப்பட்டது
25.ஜெர்மனியின் "cross of the order of merit "விருது இந்திய வேதியியல் அறிஞரான கோவர்தன மேத்தாவிற்கு வழங்கப்பட்டது
26.ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் குழந்தைகள் பிரிவில் சிறந்த குறும்படமாக மலையாள திரைப்படம் ஓட்டல் (ottal ) திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது
27.இந்திய ஆடை வடிவமைப்பாளரான "மனீஸ்  அரோரா" அவர்களுக்கு பிரெஞ்ச் நாட்டின் செவாலியர் விருது வழங்கப்பட்டது
28.அமெரிக்காவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான ரெமி விருது தமிழ்த்திரைபடமான "கனவு வாரியம் " படத்திற்கு வழங்கப்பட்டது
29.பீம்சன் ஜோசி விருது சாரங்கி வித்துவானான பண்டிட் ராம் நாராயணனுக்கு வழங்கப்படுகிறது
30.பிரெஞ்சு அரசின்  செவாலியர் விருது  இந்திய வம்சாவளியை சார்ந்த இஸ்மாயில் முகமது அவர்களுக்கு வழங்கப்பட்டது
31.88 வது ஆஸ்கார் விருதுகள் :-சிறந்த திரைப்படம்=Spot light ,சிறந்த நடிகர்  = leonardo dicaprio(movie:The Revenant  ) 
சிறந்த நடிகை :=பிரியி லார்சன் (படம் :Room ) அதிகபட்சமாக 6 ஆஸ்கார் விருதுகளை வென்ற படம் =மேட் மேக்ஸ்

32.பேரிடர் காலங்களில் இராணுவத்தின் சேவை மற்றும் உதவிகள் புரிந்ததற்காக புகழ்பெற்ற "இஸ்ரேல் விருது "டேவிட் சுல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டது
33.யுனெஸ்கோவின் பத்திரிக்கை சுதந்திர விருது  (Unesco or  guillermo cano world press freedom prize 2016) அசர்பெகிஸ்தான் நாட்டின் கடிஜா இஸ்மாயிலோவா அவர்களுக்கு வழங்கப்பட்டது
34.இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அவர்களுக்கு golden indian of the year 2016 விருது வழங்கப்பட்டது
35.தேசிய அறிவுசார் உடைமை விருது கரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்திற்கு வழங்கப்பட்டது
36.தேசிய சிறப்பு புவியியல்  அறிவியல் விருது வண்டல் தொழிநுட்பத்தில் சிறப்பாக செயலாற்றியதற்காக  அசோக்குமார் சிங்வி என்ற பேராசிரியர்க்கு  வழங்கப்பட்டது
37.நாடக பிரிவிற்கான 2016 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது மேனுவல் மிரண்டா என்பவர் எழுதிய "ஹாமில்டன் " என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது
38.ஜார்ஜ் க்ரியர்சன்  விருது (george grierson award) ஹிந்தி மொழி வளர்ச்சிக்கு உதவிய சீனா பேராசிரியர்  "ஜி புபிங்" என்பவருக்கு வழங்கப்பட்டது
39.சிறந்த கற்பனை படைப்பு பிரிவிற்கான     2016 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது வியட் தான் நிகுயென்  என்பவர் படைத்த "தி சிம்பதைசர்" என்ற படைப்பிற்கு வழங்கப்பட்டது
40.2015 ஆம் ஆண்டின் பிகாரி புரஸ்கார் விருது கவிஞர்  பகவதி லால் வியாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது
41.2016 ஆம் ஆண்டிற்கான கிரேட் லண்ட்பெக்  ஐரோப்பிய மூளை ஆராய்ச்சி விருது (grete lundbeck european brain research prize இவ்விருதை மூளை விருது என்றும் அழைப்பர் ) இங்கிலாந்தை சார்ந்த timothy bliss,graham collingridg,richard morris ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது
42.47 வது தாதா சாகிப் பால்கே   விருது = இந்தி நடிகரும் இயக்குனருமான மனோஜ்குமார்
43.சுற்றுலா துறையின் ஆஸ்கார் எனப்படும் "தங்க நகர வாயில் விருது" புதிய உலகம் என்னும் சுற்றுலா குறும்படத்தை சிறப்பாக எடுத்ததற்காக 
கேரளா சுற்றுலா துறைக்கு அவ்விருது வழங்கப்பட்டது

44.கணித நோபல் பரிசு என போற்றபடும் 2016 ஆம் ஆண்டிற்கான ஏபெல் விருதை  இங்கிலாந்து நாட்டின் andrew wiles அவர்களுக்கு வழங்கப்பட்டது
45.ஒட்டு மொத்த அளவில் அதிக உற்பத்தி திறனுக்கான பரிசை "மத்திய பிரதேசம் விருது வென்றது .குறிப்பிட்ட பயரில் சிறப்பான உற்பத்தி பிரிவில் தமிழகம் தானியம் பிரிவில் பரிசை வென்றது
46.புதுமை விருது 2016 (innovation award 2016) =டாக்டர் ஸ்ரீசென்டு டி
47.2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டப்ளின் இலக்கிய விருதுபெற்ற நூல் = Family Life - அகில் சர்மா
48.பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கை சார்ந்த பெண் மனித உரிமை போராளியான  "தபசும் அத்னான் " அவர்களுக்கு "நெல்சன் மண்டேலா -கிரகா மச்சேல் புதுமை விருது (nelson mandela graca machel innovation award) வழங்கப்பட்டது
49.2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த பண வங்கி விருது (banknote of the year award 2015) நியூசிலாந்து நாட்டின் 5 டாலர் மதிப்புடைய பணத்திற்கு வழங்கப்பட்டது
50.சர்வதேச தாவர ஊட்டச்சத்து அறிஞர் விருதை(international plant nutrition scholar award) பெற்ற இந்தியர் = அசோக் குமார், கரக்பூர் இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்
51.பிரான்சு நாட்டின் உயரிய விருதான order of arts and letters honours of france எனும் விருது காந்திஜி யின் பேத்தியான தாரா காந்தி பட்டாசார்ஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது
52.2016 ஆம் ஆண்டிற்கான ஹிருதயாத் மங்கேஷ்கர் விருது விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது
53.2015 ஆம் ஆண்டின் சரஸ்வதி சம்மன் விருது ,எழுத்தாளரும் பெண் கவிஞருமான  "பத்மா சச்தேவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது ."சித்-சேதே " என்ற வாழ்க்கை வரலாற்று நாவலுக்காக வழங்கப்பட்டது
54.fbb femina miss india 2016 = டெல்லியை சார்ந்த பிரியதர்ஷினி சட்டர்ஜி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
55.ஜப்பான் நாட்டின் உயரிய விருதான order of rising sun gold and silver விருது முன்னால் பாராளுமன்ற உறுப்பினரான  நந்த கிஷோர் சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது
56.இந்தியாவில் சிறந்த கிராம பஞ்சாயத்து விருது தெலுங்கான மாநிலத்தின் கரிம்நகர் மாவட்ட பாலுமல்லுபள்ளி பஞ்சாயத்து பெற்றது
57.மாஸ்டர் தினாநாத் மங்கேஷ் கர்  வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல ஹிந்தி நடிகர் ஜிதேந்த்ரா அவர்களுக்கு வழங்கப்பட்டது

பொது அறிவு

தமிழகத்தின் சிறப்புப் பெயர் பெற்ற இடங்கள்:
1. தென்னிந்தியாவின் (கலாச்சார) நுழைவு வாயில் – சென்னை
2. தமிழ்நாட்டின் டெட்ராயிட் – சென்னை
3. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் – தூத்துக்குடி
4. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
5. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் – தஞ்சாவூர்
6. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல்
7. தமிழ்நாட்டின் ஹாலிவுட் – கோடம்பாக்கம்
8. தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் – சிவகாசி
9. தமிழ்நாட்டின் புனித பூமி – இராமநாதபுரம்
10. தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி – நாகப்பட்டினம்
11. தமிழ்நாட்டின் இயற்கை பூமி – தேனி
12. தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி – சிவகங்கை
13. தமிழ்நாட்டின் நெசவாளர்களின் இல்லம் – கரூர்
14. தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம் – காஞ்சிபுரம்
15. தமிழ்நாட்டின் கோழிப்பண்ணை மாவட்டம் – நாமக்கல்
16. தென்னிந்தியாவின் ‘காசி’ – இராமேஸ்வரம்
17. மலை வாழிடங்களின் ராணி – ஊட்டி
18. மலை வாழிடங்களின் இளவரசி – கொடைக்கானல்
19. மலைகளின் ராணி – ஊட்டி
20. மலைகளின் இளவரசி – வால்பாறை
21. ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு
22. குதிரை சந்தை – ஈரோடு
23. மஞ்சள் சந்தை – ஈரோடு
24. ஜவுளிச் சந்தை – ஈரோடு
25. பட்டு நகரம் – காஞ்சிபுரம்
26. முத்து நகரம் – தூத்துக்குடி
27. தென்னாட்டு கங்கை – காவேரி
28. கோயில் நகரம் – மதுரை
29. தூங்கா நகரம் – மதுரை
30. விழாக்களின் நகரம் – மதுரை
31. கோயில்களின் நகரம் – காஞ்சிபுரம்
32. கோட்டைகளின் நகரம் – வேலூர்
33. மலைக்கோட்டை நகரம் – திருச்சி
34. கல்லில் கவிதை – மாமல்லபுரம்
35. தொழில் நகரம் – விருதுநகர்
36. முக்கடல் சங்கமிக்கும் நகரம் – கன்னியாகுமரி
37. இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ள மாவட்டம் – நாகப்பட்டினம்
38. தென்னிந்தியாவின் ‘ஸ்பா’ – குற்றாலம்
39. கீழை நாடுகளின் ‘ஏதென்ஸ்’ – மதுரை
40. கலாச்சாரத்தின் தலைநகரம் – தஞ்சாவூர்
41. கீழை நாடுகளின் ‘ஸ்காட்லாந்து’ – திண்டுக்கல்
42. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் – கன்னியாகுமரி
43. இந்தியாவின் பின்னலாடை நகரம் – திருப்பூர்
44. தென்னிந்தியாவின் அணிகலன் – ஏற்காடு
45. புவியியலாளர்களின் சொர்க்கம் (Geologist Paradise) – சேலம்
46. போக்குவரத்து நகரம் – நாமக்கல்
47. முட்டை நகரம் – நாமக்கல்
48. தொல்பொருளியலின் புதையல் நகரம் (Treasure Trove of Archeology) – புதுக்கோட்டை
49. அண்ட நடனத்தின் இருப்பிடம் (Seat of Cosmic Dance) – சிதம்பரம் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel